Tuesday, April 5, 2011

கதை சொல்லி - ந. முத்துசாமி (N.Muthuswamy)



கதை சொல்லி - ந. முத்துசாமி (N.Muthuswamy)

இதயா



ஆங்காங்கே நடைபாதைகளில் புதிதாக முளைக்கத் தொடங்கிவிட்டது பச்சை வண்ண வரிக்குதிரை போன்ற தர்பூசணிக் கடைகள். ஒலை வைத்து இளநீர் விற்கும் கடைகளிலும் புதிய இணைப்பாக சிறிது காலத்திற்கு சேர்ந்துள்ளது தர்பூசணி. அடுக்கடுக்காக நேர்த்தியாக அடுக்கப்பட்ட பந்துகள் கண்களை பற்றிக் கொள்ளும். முழுக்காய்கள் வாங்கிச் செல்லா விட்டாலும், கண்களைத் திருப்ப நினைத்தும் கால்கள் நின்று அரிந்து வைக்கப்பட்ட பழங்களைச் சுவைத்துச் செல்லும். சில கடைகளில் அரிந்து வைக்கப்பட்ட காய்கள் சிறிய மேசை மீது வைத்து குழந்தைகளுக்கு மூடும் கொசு வலையால் மூடப்பட்டிருக்கும் அல்லது சில கடைகளில் கண்ணாடியிட்ட,எளிதில் திறக்கக் கூடிய‌ சிறிய அலமாரிபோல் கூண்டு செய்யப்ப‌ட்டு உபயோகப்படுத்தப்படும். வரவிருக்கும் தீராக் கோடையை முன்னறிவிக்கச் செய்கிறது தர்பூசணி பழம். ந.முத்துசாமி கதைசொல்லிக்காக பின் மதியப் பொழுதை ஒதுக்கித் தந்திருந்தார். இந்த முன் கோடையும் பருவ காலங்களினொரு அரூப நிகழ்வாகவே இருக்கிறது.

வரலாறும் தோறும் உலகில் மாற்றங்களைச் செய்வது தனி மனிதர்கள். அவர்கள் எண்ணங்களைச் செய்ய முனைகையில் தோன்றும் முனைப்பே சமூகத்தையும் அதன் இயங்கியலையும் மாற்றி அமைக்கிறது. அதிதீவர கலைஞர்கள் தொடங்கி சர்வாதிகள் வரை இந்த உதாரணத்தை சாதாரணமாகப் பொருத்திப் பார்க்கலாம். ஒரு சமூகத்தின் கூட்டு மனப்பான்மையை உருவாக்க இல்லை உருவகித்த ஒன்றை வழி நடுத்த அம்மனிதலாயே முடியும். அவனே சரித்திரமாகவும் வரலாற்றின் நாயக‌னோ அல்லது வரலாறே தூற்றும் துர்கனாவாகவும் மாறுகிறான். தமிழின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவர் ந.முத்துசாமி. தமிழில் நவீன நாடகப்பள்ளியை தொடங்கியவர் அவர்.

நாடகங்கள் எல்லாம் சினிமாக மாறத் தொடங்கியும், தொலைக்காட்சி வீடுகளில் பயிரிடப் படத் தொடங்கிய பின்னர் மேடை நாடகங்கள் அதன் மூச்சை இழுத்துப் பிடிக்கத் தொடங்கியது. பாதிரியார் வந்து இறுதிப் பிரார்த்தனை செய்து உப்புத் தண்ணீர் தெளித்து செபிக்க வேண்டியது மட்டும் தான் பாக்கி.

நவீன‌ நாடங்களை முன்னெடுத்துச் செல்ல ந.முத்துசாமி அவர்களால் உருவாக்கப்பட்டது கூத்துப்பட்டறை. நடிப்பு என்பது முற்றான தியானத்தைப் போன்றது. நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள் இதை எளிதில் உண‌ரக்கூடும். தன்னை மறந்த நிலை நடிப்பு. தான் இல்லாமல் வேறாகிப் போய், தன் உள்ளே சென்று தன் முனைப்பால் வேறொருவனாக நிகழ்த்திக் காட்டுவது நடிப்பு. நாடகம் முடிந்த கணம் ஒரு நடிகன் ஆழ்ந்த அமைதியை உணர்வான். உலகமே புதிதாகிப் போனது போல் அவன் மனது புத்துணர்ச்சியுடன் இருக்கும். மன இறுக்கங்கள் எல்லாம் தளர்ந்து, அழுக்கெல்லாம் துடைக்கப்பட்ட தெளிந்த மன நிலை கண் முன் நிற்கும்.

நடிப்பென்ப‌து என்பது குழு விளையாட்டில் ஒரு ஆட்டக்காரனை போன்றது. யார் தோற்றாலும் தோல்வி முழுவதும் குழுவையே சாரும். யார் ஒருவன் மட்டும் வென்றாலும் தோல்வி குழுவையே சாரும். நடிப்புப் பயிற்சியும் விளையாட்டைப் போன்ற நெறிமுறைகளைக் கைக்கொண்டதே. ஒரு முழு மனிதனாலே மட்டும் ஒரு சிறந்த நடிகனாக இருக்க இயலும். ஒரு சிற‌ந்த நடிகனும் முழு மனிதனாக இருப்பான். சார்லி சாப்ளின், மர்லின் பிராண்டோ மிகச் சிறந்த உதாரணம்.தமிழில் உச்ச நட்சத்திரங்களைப் போட்டு நாம் குழப்பிக் கொள்ள இங்கு அவசியமில்லை.‌ தமிழில் மிகச் சிறந்த கலைஞர்களையும் நவீன‌ நாட‌க‌ங்க‌ளையும் உருவாக்கும்

more: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_19.php



No comments:

Post a Comment