Tuesday, April 10, 2012

தமிழ் ஸ்டுடியோ - குறும்பட வட்டம் - இரண்டாவது அமர்வு தொடக்க விழா.


தமிழ் ஸ்டுடியோ - குறும்பட வட்டம் - இரண்டாவது அமர்வு தொடக்க விழா.

குறும்படத்திற்காக சென்னையில் தொடங்கப்பட்ட இந்த குறும்பட வட்டம் கிராமப்புற ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும், குறும்படங்கள் பற்றிய விழிப்புணர்வையும், தரமான குறும்பட எடுப்பதற்கான பயிற்சியையும் அளித்து வந்துள்ளது. திரைப்பட மாயையை இதன் மூலம் சிறிதளவாவது உடைத்திருப்போம். தொடர்ந்து ஐம்பது மாதங்கள் நடந்து முடிந்துள்ள குறும்பட வட்டத்தின் இரண்டாவது அமர்வு தொடக்க விழா நடைபெறவுள்ளது. அதுப் பற்றிய விபரங்கள்.

நாள்: 14-04-2012 (சனிக்கிழமை)

இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எக்மோர், சென்னை.

நேரம்: மாலை 6 மணிக்கு

சிறப்பு விருந்தினர்கள்: நடிகர் & எழுத்தாளர் பாரதி மணி, இயக்குனர் மு. களஞ்சியம், ஓவியர் மருது, அருள் எழிலன்


www.thamizhstudio.com


Monday, April 9, 2012

நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க... - தடா அருவிப் பயணம்


நான்காவது ஊர் சுற்றலாம் வாங்க... - தடா அருவிப் பயணம்


நாள்: ஏப்ரல் 8, ஞாயிற்றுக்கிழமை

இடம்: தடா அருவி

கட்டணம்: 200/-

இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள விரும்பும் நண்பர்கள் தங்கள் பெயரை முன் பதிவு செய்துக் கொள்ளவும்.

மேலும் விவரங்களுக்கு: 9840698236

---------------------------------------------------------------------------------------

தடா அருவிப் பயணம்

சென்னைக்கருகில் இருக்கும் இந்த தடா அருவிப் பற்றி முன்னமே நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் தடா அருவிக்கு செல்வதற்கு பதில் புதிதாக கோனே என்கிற அருவிக்கு சென்று திரும்பினோம். தடா, கோனே எல்லாம் ஒரே அருவி என்று சிலர் சொன்னதால். ஆனால் கோனேவும் தடாவும் ஒன்றல்ல இங்கே வந்தப் பிறகு தெரிந்தது. எனவே மீண்டும் தடா அருவிக்கு செல்லும் முடிவில் இருந்தோம். கடந்த வெள்ளியன்று முகநூல் நண்பர் ஹரி பிரசன்னா தடா சென்று வந்தப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தார். அங்கே இப்போது தண்ணீர் இருகிறதா என்பதை ஊர்ஜிதம் செய்துக் கொண்டு தடா நோக்கி பத்மநாபன், புகழ், தியாகராஜன், சிலம்பரசன், சுந்தர், ஸ்ரீ கணேஷ், கார்த்தி, நான் என மொத்தம் எட்டு நண்பர்கள் பயணமானோம்.

சென்னையிலிருந்து கால‌ஹ‌ஸ்தி சாலையில் சுமார் 95 கி.மீட்ட‌ர் தொலைவில் தான் த‌டா உள்ள‌து. த‌டா அருவிக்கு செல்ல‌ வேண்டுமானால் வ‌ர‌த‌ய்யா பாளைய‌ம் சென்று அங்கிருந்துதான் ஒரு குருகிய‌ ரோட்டில் உப்ப‌ல‌ம‌டுகு செக்போஸ்ட் வ‌ழியாக‌ செல்ல‌ வேண்டியிருக்கிற‌து. உப்பல‌ம‌டுகு செக்போஸ்ட்டில் இருந்து சுமார் 10 கி.மீட்ட‌ர் தூர‌ம் காட்டுக்குள் சென்று அதுவும் க‌ர‌டு முர‌டான‌ பாதையில். முன்னர் வாகனங்கள் விடுவதற்கு வசதி இல்லை. ஏதாவது ஒரு வீட்டின் வாசலில்தான் விட்டு செல்ல வேண்டும். ஆனால் இப்போது ஆந்திர சுற்றுலாத் துறை அதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது. வாகனத்தை பார்க் செய்யக் கட்டணம் அறுபது ரூபாய் (காருக்கு). மது வகைகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை. ஆனால் அருவிக்கும் போகும் வழி எங்கும் நிறைய குடிமகன்கள் இருப்பார்கள். பணம் அங்கேயும் பாயும்.

தடா அருவி உண்மையாக ஒரு சாகசப் பயணத்திற்கு வித்திடும் விதமாகவே அமைந்துள்ளது. கோடைக் காலத்தை விட மழைக்காலம் அல்லது மழைக்கு பிந்தையக் காலமே இந்தப் பயணத்துக்கு சிறந்தது. ஆனால் வருடம் முழுக்கவே இங்கு நீர் இருபது இதன் சிறப்பு. அருவி என்றாலும் அங்கே சுனை நீர் இருப்பதாகவே எனக்கு படுகிறது. மிக நீண்ட நெடிய சாகசப் பயணத்திற்கு பிறகே நீங்கள் தடா அருவியை அடைய முடியும். நிறைய குடிமகன்கள் அங்கே குடிப்பதற்காகவே வருகிறார்கள். நல்ல விசயம். யாருக்கு எண்பது எனக்கு தெரியாது. இந்த சாகசப் பயணத்தில் சில பெண்களையும் பார்க்க முடிந்தது.

பெரும்பாலும் அனைவரும் குடும்பத்தோடு வந்து கீழ் நிலையில் தேங்கி இருக்கும் ஓடை போன்ற இடங்களில் குளித்துவிட்டு, அங்கேயே சமைத்து (எல்லாம் அசைவம்தான்) தின்றுவிட்டு ஓய்வெடுத்து விட்டு செல்கிறார்கள். சென்னை மற்றும் சுற்றுப் புற மக்களுக்கு நல்ல இடம்தான் இந்த தடா அருவி. நீங்கள் சாகசப் பயணத்தை விரும்பாதவராக இருந்தால் உங்களுக்கும் அங்கே இடம் உண்டு. நீர் கீழிறங்கி ஆங்காங்கே ஓடையாக தேகி நிற்கிறது. அங்கேயும் சிறு சிறு சல சலப்போடு நீர் ஓடிவருகிறது. சுகமான குளியல் போட்டு விட்டு வரலாம். சொந்த வாகனமே சிறந்தது. மாற்று பேருந்து வசதிகள் அங்கே சுத்தமாக இல்லை. நிச்சயம் மழைக்கு பிந்தையக் காலத்தில் செல்லுங்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.

http://thamizhstudio.com/others_osv_4.php

மேலும் ஒளிப்படங்களைக் காண:
http://www.facebook.com/media/set/?set=a.
408637662493263.127102.100000410998113&type=1