Wednesday, November 30, 2011

யாவும் உள - உலக இலக்கிய அறிமுக நிகழ்வு




யாவும் உள - உலக இலக்கிய அறிமுக நிகழ்வு

யாவும் உள - 2 (04-12-2011)



பங்கேற்பு: எழுத்தாளர் சிவகாமி IAS

அறிமுகப்படுத்தப்படும் நூல்: Our Lady of Alice Bhatti ( Mohammed Hanif )

நாள்: டிசம்பர் 4, ஞாயிற்றுக் கிழமை

நேரம்: மாலை 4:30 மணிக்கு.

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

தொடர்புக்கு: 9840698236


யாவும் உள நிகழ்ச்சியில் உலக புத்தக அறிமுகம் மட்டுமில்லாமல் நிகழ்வை மேலும் அழகுப்படுத்த நிறைய சின்ன சின்ன விசயங்களை செய்து வருகிறோம். அதில் ஒன்று நிகழ்ச்சி நடக்கும் அறை முழுவதும் இலக்கிய அரங்கம் போல் வடிவமைத்து புத்தகக் குவியல்கள் ஏற்படுத்தி, ஒவ்வொருவரின் இருக்கையிலும் புத்தகங்கள் வைத்து, எங்கு பார்த்தாலும், நவீன, சங்ககால இலக்கிய நூல்கள் விரவிக்கிடக்கும். மேலும், நிகழ்வில் உலக இலக்கிய புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசவரும் எழுத்தாளர்களின் படங்களை ஓவியமாக வரைந்து அதனை அவர்களுக்கு நினைவுப் பரிசாக கொடுத்து வருகிறோம். இதில் ஓவியத்தை மிக அழகாக, தத்ரூபமாக வரைந்துக் கொடுத்து எங்களுக்கு எப்போதும் ஆதரவளிக்கும் ஓவியர் திரு. ஜீவா அவர்களுக்கு இந்நேரத்தில் நன்றியினை தமிழ் ஸ்டுடியோ சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் நிறைய ஆச்சர்யங்கள்... நிகழ்வில். வாருங்கள்.. சந்திப்போம்.

http://koodu.thamizhstudio.com/yaavum_ula_2.php


அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பிர. தீபன்



அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - பிர. தீபன்

விக்ரமாதித்தன் நம்பி

விக்ரமாதித்யனின் கவிதை அனுபவம் - பிர. தீபன்

உண்மைதான்,
மலையின் தலையில் இருக்கிறது.
இதன் ஊற்றுக்கண்
உயரத்தில் உதித்தாலும்
நாடுகளுக்கு ஓடிவரும்
ஆறு இது என்று
நீங்களும் ஒப்புக் கொள்கிறீர்கள்

துணையாறுகள் அங்கங்கே
கொட்டிக் கலந்து
இது ஹோ என்று கோஷிக்க
தங்களை அர்ப்பணிக்கத்தானே
செய்யும்
அங்குதான் இது பேராறு

வாழ்த்தும் வணக்கமும்
வழியெல்லாம் பெற்று
ஓடுகையில்,
கிளைகளாய்ச் சில நதிகள்
பிரிவகையும்
எப்படித் தடுக்க முடியும்?

துணையின்றி கிளையின்றி
உலகூட்டுக என்று நீங்கள்
ஆற்றுக்குச் சொல்கிறீர்கள்
புறப்பட்ட கொஞ்ச தூரத்தில்
மறைந்து போகும் ஆறு

ஒருவேளை
தலையூற்றின் புனிதம் மட்டும்
மிஞ்சலாம்.

-- பிர. தீபன்
(விருட்சம் கவிதைகள் – தொகுதி 1 பக்கம் 98)

கவிதையைப் பற்றிச் சொல்லப்படுகிற எந்த விஷயத்தையும் விட, எந்தக் கருத்தையும் விடக் கவிதை முக்கியமானது.
-- க.நா.சு.

நான்கு பக்கமும் வாசலுள்ள பெரியகோயில் மாதிரியான கவிதை எப்படி வேண்டுமானாலும் பொருள் கொள்ளலாம் தத்தம் மனசு போல, அனுபவத்துக்கேற்ப. நீங்கள் அர்த்தப்படுத்திக் கொள்வதை நான் தவரென்று சொல்லமுடியாது, நான் வேறு பொருள் சொன்னால் நீங்கள் அப்படி இல்லை என்றும் மறுக்க முடியாது. கவிஞர், அதுபோலக் கவிதையாக்கியிருக்கிறார். உண்மையிலேயே, இது நல்ல காரியம் சுவாரஸ்யம் புத்தனுபவம்.

ஊற்றுக்கண்ணிலிருந்து தோன்றும் ஆறு மலையுச்சியில் ஓடிவரும் சமவெளியில் துணையாறுகள் பல கலந்து பேராறு வழியெல்லாம் பெறும் வாழ்த்தும் வணக்கமும் கிளைவிடும் தன்போக்கில்.

துணையில்லாமல், கிளைவிடாமல் உலகூட்டும் என்று எதிர்பார்க்க முடியுமா. அவ்வாறு இருந்தால், புறப்பட்ட கொஞ்ச தூரத்தில் மறைந்து போக நேரும். மிஞ்சுவது, தலையூற்றின் புனிதம் மட்டும்தான்.

கவிக்கூற்று இப்படி முன்வைக்கப்படுகிறது சரிதான். ஆற்றைப்பற்றிச் சொல்வது போல, ஒரு நிரந்தர உண்மையே சொல்கிறார் கவிஞர்.

இந்தக் கவிதை குறித்து யோசிக்கையில், காந்திதான் நினைவுக்கு வந்தார், அவர் வாழ்வுதான் மனத்தில் தோன்றியது கவிதையின் பொருளை எளிதில் உணரமுடிந்தது, அப்போது நம்முடைய கவிதைமரபில் பெரிதும் பேசப்படுவது, பிறிது மொழிதல் அணி. பிறிது மொழிதல் தானே இது.

உத்தியென்று நமக்குப் படுவது, உண்மையிலேயே, சமயங்களில், கருதிச் செய்ததாகக்கூட இல்லாமலிருக்கலாம் சில விஷயங்களைச் சில முறைகளில்தான் சொல்லமுடியும் என்பதும் இருக்கிறது.

கவிஞன் உள்ளத்துள்ளேயே இப்படித் தோன்றியிருக்கலாம், நதிமூலம், ரிஷிமூலம் போலத்தான் கவிமூலமும் கவிதை என்பதுதான் விஷயமே.

பிரதீபன், ஒரு செய்தி சொல்கிறார், அது கவிதையாகவே இருக்கிறது அதுதானே வேண்டும்.

சிந்திக்க வைக்கும் கவிதை கருத்துத் தெரிவிப்பது போல இருந்தாலும், கவிதையாகிவிட்டால் ஒதுக்கிவிட முடியாதுதானே.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதுதான் முக்கியம் உரைகாரன் உரைப்பதல்ல இந்த மாதிரி கவிதைகள் அந்தமாதரிதான்.

கவிதைரசனை ஒரு கைகாட்டிதான் நீங்களாகத்தான் வரவேண்டும்.

http://koodu.thamizhstudio.com/thodargal_18_11.php



Thursday, November 10, 2011

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை திரையிடல்


http://thamizhstudio.com/screening_3.php

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை திரையிடல்

நாள்: 12-11-2011, சனிக்கிழமை
நேரம்: மாலை 4.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)


அலுவலக வரைபடம் ( படத்தின் மீது சொடுக்கி பெரிதாக பார்க்கவும் )

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு
கனவுராஜ ரத்னா8 நிமிடங்கள்
பூமித்தாயின் சுமைகள்சஞ்சய் ராஜ்குமார்15 நிமிடங்கள்
இளநீர்Dr. சிவபாத சுந்தரம்8 நிமிடங்கள்


http://thamizhstudio.com/screening_3.php

Wednesday, November 9, 2011

படப்பெட்டி இதழ் 1 - ஜூன் 2005

தமிழில் வெளிவந்த மாற்று ஊடகம் சார்ந்த சிற்றிதழ்களை ஒருங்கே இணையத்தில் வாசிக்கக் கொடுப்பதில் தமிழ் ஸ்டுடியோ செயல்பட்டுக் கொண்டிருகிறது. அதன் ஒரு பகுதியாக படப்பிடி இதழின் முதல் இதழ் ஜூன் 2005 ஆம் வருடம் வெளிவந்த இதழ் இப்போது படிக்கக் கிடைக்கிறது.



Friday, November 4, 2011

யாவும் உள - உலக இலக்கிய அறிமுக நிகழ்வு - 1


யாவும் உள - உலக இலக்கிய அறிமுக நிகழ்வு


பங்கேற்பு: எழுத்தாளர் பிரபஞ்சன்

அறிமுகப்படுத்தப்படும் நூல்: வெட்டுப்புலி

நாள்: நவம்பர், 6, ஞாயிற்றுக் கிழமை

நேரம்: மாலை 4 மணிக்கு.

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

தொடர்புக்கு: 9840698236

வணக்கம் நண்பர்களே,

இதுவரை குறும்பட நிகழ்வுகளை மட்டுமே தமிழகம் முழுவதும் நடத்தி வந்த தமிழ் ஸ்டுடியோ முதல் முறையாக ஒரு தொடர் இலக்கிய நிகழ்வை நடத்தவிருக்கிறது. உலக இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைப்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். தமிழ் / இந்திய இலக்கியமும் இதில் அடங்கும். அந்த வகையில் இனி ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணிக்கு "யாவும் உள" என்கிற தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய நிகழ்வு தொடங்கும்.

முதல் யாவும் உள இலக்கிய நிகழ்வில் தமிழ்மகன் அவர்கள் எழுதிய வெட்டுப்புலி நாவலை எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் அறிமுகப் படுத்தி பேசுகிறார்.

வெறும் நூல் அறிமுகக் கூட்டமாக இல்லாமல், இலக்கியத்தின் முழு சுவையையும் நீங்கள் ரசித்து, அனுபவிக்கும் விதமாக இந்த நிகழ்வு உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இலக்கிய வாசகர்கள் அனைவரும் இந்த நிகழ்வில் தவறாமல் கலந்துக் கொள்ளவும்.

http://koodu.thamizhstudio.com/yaavum_ula_1.php