Saturday, January 21, 2012

கதைகளைக் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_26.php

கதைகளைக் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_26.php


கதைசொல்லி - விக்ரமாதித்தன் நம்பி

செந்தூரன் நன்றி: எம்.டி முத்துக்குமாரசாமி
கவிஞர் விக்கிரமாதித்யனை நான் முதன் முதலில் 1985இல் சென்னையில் இலக்கு அமைப்பு ஏற்பாடு செய்திருந்த எழுபதுகளில் கலை இலக்கியம் என்ற சிறுபத்திரிக்கை கூட்டத்தில் சந்தித்தேன். திருச்சியில் என் நண்பர்கள் ரமேஷ்குமார், செந்தில், மனோகர் நடத்திய ராகம் இதழில் ஸில்வியா என்ற புனைபெயரில் நான் எழுதிய ஆறு சிறுகதைகள் பிரசுரமாயிருந்தன. என்னுடைய ஐந்து கதைகளுக்குப் பிறகு ஆறாவது இதழில் என் கதையோடு சாரு நிவேதிதாவின் ‘கிரிக்கெட்டை முன் வைத்து புத்தி ஜீவிகளுக்கு சொல்லிக்கொண்டது’ கதையும், தமிழவனின் சிறுகதையும் பிரசுரமாகியிருந்தது. நானும் ராகம் ஆசிரியர் குழுவில் இருந்தேன், விமர்சன கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என என்னுடைய பல எழுத்துக்களும் பிரசுரமாயிருந்தன.

இலக்கு கூட்டம்தான் நான் பார்வையாளனாக, மாணவனாக, இளம் எழுத்தாளனாக பங்கேற்கும் முதல் கூட்டம். திருவல்லிக்கேணியில் ஏதோ ஒரு மண்டபத்தில் கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.

சி.சு.செல்லப்பாவின் கட்டுரை முதல் அமர்வில் முதல் கட்டுரை. சி.சு.செல்லப்பாவின் குரல் அடைத்துக்கொண்டிருந்தது; கர கரவென்று என்ன வாசிக்கிறார் என்றே யாருக்கும் பிடிபடவில்லை. விமலாதித்த மாமல்லன் எழுந்துபோய் செல்லப்பா நான் உங்கள் கட்டுரையை வாசிக்கிறேனே என்றார். செல்லப்பா நொடியில் அதை மறுத்துவிட்டார். கரகர லொட லொடா வென தொடர்ந்து வாசித்தார். சாரு நிவேதிதா துள்ளி எழுந்துபோய் மண்டபத்தின் வாசற்கதவை சுவரில் டொம் டொம் என்று அடித்தார். சாரு கதவை சுவரில் அடிக்க அடிக்க செல்லப்பா குரலை அதற்கு நிகராய் உயர்த்தி கர கர லொட லொடாவைத் தொடர்ந்தார். ஒன்றுமே நடக்காதது போல கூட்டத்தினர் செல்லப்பாவினை தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தனர். புதியவனான நான் வெல வெலத்துபோய் பக்கத்து இருக்கையில் பெரிய கருந்தாடியுடன், வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டையில் காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்த விக்கிரமாதித்யனிடம் அறிமுகம் செய்துகொண்டேன். விக்கிரமாத்தியனிடம் இப்படி கலாட்டா செய்கிறாரே பெரியவரை சாரு என்றேன் பம்மி பம்மி. நானும் மாமல்லனும் பண்ணாத கலாட்டாவா இது என்ன கலாட்டா என்றார் நம்பி.
பின்னர் இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிறகு குற்றாலம் கவிதைப்பட்டறையில் நான் வாசித்த கட்டுரையைத் தொடர்ந்து பெரியவர் தருமு சிவராமு என்ற பிரமிளுக்கும் அமுல்பேபி எனக்கும் ஏற்பட்ட வாதம் குரல் உயர்த்திய வாய்ச்சண்டையாயிற்று. மறு நாள் அதிகாலை நான் தங்கியிருந்த விடுதி அறைக்குள் அதிரடியாக நுழைந்தார் விக்கிரமாதித்யன் நம்பி,’ டேய் பேராசிரியரே உனக்கு தருமு சிவராம் யாரென்று தெரியுமாடா‘ என்று கத்தியபடியே. இவருக்கு எப்படி நெல்லை கல்லூரியொன்றில் நான் ஆசிரியராக பணியில் சேர்ந்தது தெரியும் என்று அனுமானிப்பதற்குள் வசை மேல் வசை காற்றை நிரப்பியது.

கவிதைப் பட்டறை முடிந்து ஓரிரு நாட்கள் சென்றிருக்கும். கல்லூரியில் இருந்தேன். வாட்ச்மேன் வகுப்பிலிருந்த என்னிடம் யாரோ ஒரு சாமியார் உங்களை உடனடியாகப் பார்க்கவேண்டும் என்கிறார், வாசலில் நிற்கிறார் கொஞ்சம் வந்து பார்த்துவிட்டு போங்களேன் என்றார். வகுப்பை பாதியில் விட்டுவிட்டு வாசலுக்குப் போய் பார்த்தால் நம்பி ஒரு தோளில் டிரங்குப்பெட்டியும், கையில் வேட்டி நுனியுமாய் அடங்கிய புயல் போல நின்றிருந்தார். கூட்டிக்கொண்டு போய் துறை அலுவலகத்தில் உட்காரவைத்தேன். வகுப்பு முடிந்து திரும்ப துறைக்கு வந்தபோது நம்பி எல்லோருக்கும் கவிஞராய் அறிமுகமாயிருந்தார். கால் மேல் கால் போட்டபடி ஸ்டைலாய் சிகரெட் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார்; என்னிடம் எனக்கு சன்மானம் வேண்டுமே என்றார். என்னிடத்தில் இப்போது காசில்லை கவிதை பற்றி ஒரு உரையாற்றுங்களேன் கல்லூரியில் சன்மானம் வாங்கித் தருகிறேன் என்றேன். கல்லூரி நிர்வாகம் கவிதை வேண்டாம் வேறு ஏதாவது பொருளில் பேசட்டும் என்று அனுமதி கொடுத்தது. அன்றைக்கு மதியமே நம்பி ‘தற்கால பத்திரிக்கைத் தமிழ்’ என்ற பொருளில் பேருரை ஆற்றுவது என்று ஏற்பாடாயிற்று.

சுமார் அறுநூறு மாணவர்கள் கூடியிருந்த அரங்கில் நம்பியை அறிமுகப்படுத்தும்போது இன்றைய தமிழ் நவீன கவிதையில் முக்கியமான முதல் பத்து கவிஞர்களைச் சொல்லவேண்டுமென்றால் அதில் விக்கிரமாதித்யனின் பெயர் ஒன்றாகும் என்றேன். நம்பி என்னை பூனை போல தாடியை நீவிவிட்டபடியே குறுகுறுவென்று பார்த்துக்கொண்டிருந்தார்.

அன்றைக்கு நம்பி ஆற்றிய பேருரை நான் வாழ்நாளிலேயே மறக்க முடியாத உரையாகும். பின்னாட்களில் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களிலும் சரி, வெளியிடங்களிலும் சரி எத்தனையோ புகழ் வாய்ந்த கவிஞர்கள், தத்துவவாதிகள், இலக்கியவாதிகளின் உரைகளை கேட்டிருக்கிறேன் ஆனால் நம்பியின் உரைக்கு நிகரான ஒன்றினை இன்று வரை கேட்டதில்லை. அலட்சியமாக, உட்கார்ந்தபடியே, இயல்பான பேச்சுத் தமிழில்தான் நம்பி பேசினார். உண்மையின் ஒளிர்வு என்றால் என்ன என்று அந்தப் பேச்சில்தான் அன்றைக்கு அறிந்தேன். மிகை அலங்காரங்களும் , ஜோடனைகளும் துறந்த நவீன கவிதைக்கு உதாரணமாய் நகுலனின் கவிதை வரிகளை மேற்கோள்காட்டி அவர் பேச்சு ஆரம்பித்தது. நவீன கவிதையை மட்டுமே எழுதுபவனுக்கு வாழ்வாதாரத்திற்கான வேலைகள் எதுவும் இல்லாதபடியால் அச்சுக்கோர்ப்பவர்களாகவும், மெய்ப்பு திருத்துபவர்களாகவும் செய்தியாளர்களாகவும் மட்டுமே பத்திரிக்கைத் துறையில் சேர வேண்டிய நிர்ப்பந்தத்தைக் குறிப்பிட்டு அந்தப் பத்திரிக்கைகளில் தான் நம்பும் நவீன தமிழ் கவிதையின் மொழிக்கு நேரெதிரான ஆவேசக்கூச்சல் மொழியினை தமிழ் பொது வெளி உரை நடையாக உருவாக்குவதற்கும், தான் அத்தகைய மொழியைப் பயன்படுத்தியே பத்திரிக்கை செய்திகளை உருவாக்க, எழுத நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.


Investigative journalism என்ற பெயரில் பல ஆவேசக்கூச்சல் பத்திரிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டு, பிரசித்தி பெற்றுவந்த காலம் அது. பல பத்திரிக்கைகளின் ஆரம்ப நிலைகளில் அவற்றின் உரை நடை உருவாக்கத்தில் தானும், அவர் நண்பர் துரை என்ற வித்யாஷங்கரும் பங்கேற்றதைச் சொல்லிய நம்பி, விஜய டி.ராஜேந்தரின் அடுக்கு மொழி, திரைப்பட பாடல்களை செய்தித்தலைப்புகளாய் வைப்பது, போலியான வேடிக்கையான தனித்தமிழ் என்று கலந்துகட்டி பொதுவெளியின் தமிழ் உரை நடை உருவானதாக மேலும் சொன்னார். அரசியல் தலைவி ஒருவரின் செயல்பாட்டினைக்குறிக்க ‘சண்டி ராணியின் திக்குமுக்கு தக்குத்தாளம்’ என்ற செய்தித் தலைப்பாய் வைத்தது, எம் எல் ஏ ஒருவரின் ஊழலைச் சொல்ல ‘அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ’ பாடல் வரியினைப் பயன்படுத்தியது என்பது போன்ற பல உதாரணங்களைக் கொடுத்து பத்திரிக்கை உரை நடையின் உருவாக்கத்தினை விவரித்தார். ‘சிக்கலை இடியாப்ப சிக்கலாய் மாற்றினார்’, ‘தமாசு’, ‘செம’, ‘ஆப்பு’, ‘சூப்பர்’, ஆகிய பிரயோகங்கள், ‘ஜாங்குஜக்கும்ஜக்கும்ஜக்கும்ஜா‘ போன்ற ஒலிகள் ஆகியற்றை மட்டுமே பயன்படுத்தி உருவாகிற பொது வெளியின் பத்திரிக்கைத் தமிழ் உரை நடை சிந்தனையை எப்படி மழுங்கடிக்கிறது, மொழி நுட்பம் அறியாத பயனாளர்களின் மொழி உபயோகத்தை எப்படிக் குறுக்குகிறது என்றும் நம்பி விளக்கிச் சொன்னார். வியப்பு, ஆச்சரியம், திகில், வெறுப்பு, ஆவேசம் ஆகிய உணர்ச்சிகள் அனைத்தும் ஒரு இருபது வார்த்தைகளில் பத்திரிக்கைத் தமிழ் உரை நடையில் குறுகிவிடுவதையும் அவற்றின் பயன்பாட்டிற்கு பழக்கப்பட்டு விடுபவர்களுக்கு தங்களின் சுய வாழ்பனுபவங்களை வேறுவகையில் வார்த்தைப்படுத்த முடியாமல் வாழ் நாள் முழுக்க பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் நம்பி எடுத்துச் சொன்னார்.

விதிவசம் என்று இந்த மாதிரியான பத்திரிக்கைகளில் வேலை செய்வது தனக்கு ஏற்படுத்தும் தாங்கவியலா மன உளைச்சலே தன்னைக் குடியை நோக்கித் தள்ளுவதாகவும் சொன்ன நம்பி குடிப்பதற்கு ‘கவர்’ தருகிற அரசியல்வாதிக்கு ஏற்ப பத்திரிக்கையாளனான தன் செய்தியின் நிறம் எப்படி மாறும் என்றும் தொடர்ந்தார். பாவ சங்கீர்த்தனமெனவும், வாக்குமூலமெனவும் அப்பட்டமாக எந்த ஒளிவு மறைவு இல்லாமல் சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த விக்கிரமாதித்யனின் உரை மாணவர்களை உலுக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பகட்டில்லை, ரொமாண்டிசிசம் இல்லை, தன்னுடைய இமேஜ் பற்றிய கவலையில்லை என்று பேசிய விக்கிரமாதித்யன் நம்பி எவ்வளவு உயரிய கலைஞன் என்று அன்று நான் கண்டுகொண்டேன்; என் தந்தைக்கு நிகரான ஸ்தானத்தோடு அவருக்கும் எனக்குமிடையே நட்பு வேரூன்றியது.

உரை முடிந்த பிறகு கல்லூரி கொடுத்த சன்மானத்தோடு அவரை தங்கும் விடுதியில் விட்டுவிட்டு வீடு திரும்பினேன். எங்கள் வீடு நெல்லையில் அப்போது சிந்துபூந்துறையில் இருந்தது. இரவு மணி ஒன்றிருக்கும். எங்கள் வீட்டின் முன் தெருவில் ஏகமாய் சத்தம். தூக்கம் கலைந்து மாடி பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தேன். நம்பி நன்றாகக்குடித்துவிட்டு தெருவில் கூச்சலிட்டுக்கொண்டிருந்தார். ‘டேய் பேராசிரியப் புடுங்கி, வெளியே வாடா’ போன்ற வாசகங்களோடு கடுமையான கெட்ட வார்த்தைகளும் அவர் வாயிலிருந்து சரமாரியாய் வெளிப்பட்டுக்கொண்டிருந்தன. வேட்டி இடுப்பிலிருந்து நழுவிக்கொண்டிருந்தது. ‘என்ன விஷயம் நம்பி?’ என்றேன். ‘ஐந்தாவது நபர் யாருடா புண்டே?’ என்றார். எந்த ஐந்தாவது நபர் என்று தலையும் புரியாமல் காலும் புரியாமல் தூக்கக் கலக்கத்தோடேயே கீழே இறங்கி தெருவுக்கு வந்தேன். பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், விக்கிரமாத்தியன் ஆகிய நான்கு கவிஞர்கள்தானே, ஐந்தாவது நபர் யாரென்று நான் மதியம் -முதல் பத்து கவிஞர்களில் ஒருவர் என்று- அவரைப் பற்றிய அறிமுக உரையில் சொன்னதைக் குறிப்பிட்டு நம்பி கேட்கிறார் என்று நான் புரிந்துகொள்ளவே அரைமணி நேரம் ஆகிவிட்டது.

இன்னும் குடிக்க வேண்டும் என்று நம்பி படுத்த அவரோடு நான் புறப்பட்டுச் சென்றேன். இரவு இரண்டு மணிக்கு பாக்கெட் சாராயக் கடை கூட மூடிவிட்டது. நம்பி எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. பலகீனத்திலும் குடியிலும் உடல் தள்ளாடிக்கொண்டிருந்தது. அவர் பண்ணிய கலாட்டாவில் அவசரமாகச் சட்டையைப்போட்டுக்கொண்டு கிளம்பியதில் காசு வேறு எடுத்து வரவில்லை. கல்லூரியில் வாங்கிய சன்மானத்தை அவர் ஏற்கனவே தீர்த்து விட்டிருந்தார். திருநெல்வேலி ஜங்ஷன் பஸ்ஸ்டாண்டில் நம்பிக்குத் தெரிந்த டீக்கடை ஒன்றிருந்தது. அங்கே போய் ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கக் கிளம்பினோம். அந்த டீக்கடையில் நல்ல வேளையாக நம்பி நண்பர் அங்கே இருந்தார்; ஆனால் கடையில் ஒரே ஒரு சுண்டல் பொட்டலம்தான் இருந்தது. அதை தானமாய் வாங்கி, பிரித்து முதல் கவளத்தை வாயில் போடப்போனபோது ஒரு பிச்சைக்காரர் ஐயா பசிக்குது என்று வந்து நின்றார். நம்பி தன் கையிலிருந்ததை அப்படியே அவரிடம் கொடுத்துவிட்டார். கைத்தாங்கலாய் நம்பியை அவர் விடுதியில் விட்டுவிட்டு வீடு திரும்பினேன்.


பசியிலும் போதையிலும் தரையில் படுத்து தூங்கிப்போயிருக்கிறார்.மறு நாள் நம்பி தங்கியிருந்த விடுதிக்கு நான் போனபோது நம்பியின் செருப்பு, கண்ணாடி, டிரங்குப்பெட்டியிலிருந்தவை எல்லாம் களவு போயிருந்தது. அவர் கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுத்து தென்காசிக்கு பஸ் ஏற்றிவிட்டேன். பஸ் புறப்படும்போது ‘போயிட்டு வாரேன் பிள்ளைவாள்’ என்று நம்பி என்னைப் பார்த்து கத்தியபோது பஸ்ஸே என்னைப் பார்த்து சிரித்ததுபோல பிரம்மை தட்டியது.

பிறகு நம்பியும் நானும் அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் உண்டானது. சந்திக்கவில்லையென்றாலும் என்னையும் வண்ணதாசனையும் ஃபோனிலாவது அழைத்து நீங்கள் கலைஞனில்லை என்று சொல்லாவிட்டால் நம்பிக்கு பல குடி இரவுகள் நிறைவு பெற்றதாகாது. வந்து கலாட்டா செய்யும்போது ஏண்டா இவருடன் நட்பாக இருக்கிறோம் என்று மனம் கலங்கும். பல மாதங்கள் காணாவிட்டால் நம்பி எங்கே எங்கே என்று மனம் தேடும்.

சொல்லவொணா துயரத்திற்கு ஆட்பட்டு தமிழில் எழுதாமல் தனித்திருந்த காலங்களில் என்னைத் தேடி வரும் வெகு சில நண்பர்களில் நம்பி ஒருவராயிருந்தார். நேரடியாக என்றில்லாமல் ஜோதிடம், பரிகார வழிபாடு என்று ஆறுதலாய் ஏதாவது சொல்லிவிட்டுப்போவார். நான் கலைஞனில்லைன்றாலும் எழுத வேண்டும் என்பதை ஏதோ ஒரு வகையில் சொல்லிப்போவார். துக்க காலத்தின்போதும், முன்பும், பின்பும் அறுபடாத நட்பு அவருடன் மட்டுமே எனக்கு இருந்திருக்கிறது.

ஒரு நல்ல வசதியான வாழ்க்கை அமைந்திருந்தால் கம்பீரமும் தேஜஸும் நிறைந்த கவிஞராக அல்லவா விக்கிரமாதித்யன் நம்பி புகழ் பெற்றிருப்பார் என நான் நினைக்காத சந்தர்ப்பங்களே இல்லை. ‘நான் கடவுள்’ படத்தை தொலைக்காட்சியில் பார்த்தபோது என்னதான் சினிமா என்றாலும், என்னதான் நடிப்பு என்றாலும் நம்பியை பிச்சைக்காரர் பாத்திரத்தில் பார்க்க என்னால் முடியவேயில்லை; ஆங்காரமான துக்கம் என் தொண்டையை அடைக்க கண்களில் நீர் மல்குவதை தவிர்க்கவே முடியவில்லை.
மாமல்லனோடு டிவிட்டர், ஃபேஸ்புக் கர்புர் உரையாடலின்போது நம்பியின் பேருரை ஞாபகம் வந்து இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். எழுத்தின் போக்கில் எங்கேயோ போய்விட்டது கட்டுரை.
சொல்லவந்தது இரண்டு விஷயங்கள்:

ஒன்று நம்பிக்கும் எனக்கும் ஒரு பந்தயம் இருக்கிறது. நான் கவிதை எழுதிவிட்டேனென்றால், என் கவிதைகளும் அவர் பார்வையில் கவிதைகளாகத் தேறிவிட்டால் அவர் எனக்கு ஒரு பவுனில் மோதிரம் போடவேண்டும். ஷங்கர் ராம சுப்பிரமணியன் என் தளத்திலுள்ள கவிதைகள் சிலவற்றை நம்பியிடம் வாசித்துக்காட்டியதாக என்னிடம் சொன்னார். சமீபத்தில் என்னிடம் ஃபோனில் பேசிய நம்பியும் மோதிரம் போட ஒப்புக்கொண்டுவிட்டார். என் கவிதைத் தொகுதி மின் பதிப்பாய் வெளிவர இருக்கையில் இது எனக்கு இளமையை மீட்டெடுத்ததன் சந்தோஷமாயிற்று.

இரண்டு விக்கிரமாதித்யன் நம்பி தன்னுடைய எந்த இலக்கிய கட்டுரையிலும் சரி, கதையிலும் சரி, கவிதைகளிலும் சரி எனக்குத் தெரிந்தவரை ஆவேசக்கூச்சல் பத்திரிக்கைகளின் நடையைப் பயன்படுத்தியதில்லை.

http://mdmuthukumaraswamy.blogspot.com/2011/12/blog-post_17.html

(கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவு வெளிவரும்)

கதைகளைக் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_26.php

Friday, January 20, 2012

சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2012

http://thamizhstudio.com/competitions_30.php

சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2012

(இறுதித் தேதி: 10 .02 .2012)



எதிர் வரும் 2012 வருடம் பிப்ரவரி திங்கள் 18 ஆம் நாள் சென்னையில் நடக்க இருக்கும் சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2012 உங்கள் படைப்புகள் வரவேற்கபடுகின்றன. அனுமதி இலவசம். படைப்புகள் சமுக கருத்துள்ள வகையில் இருக்க வேண்டும்.

பரிசுகள்:

முதல் பரிசு: ரூபாய் 10000
இரண்டாம் பரிசு: ரூபாய் 5000
மூன்றாம் பரிசு: ரூபாய் 3000

போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் எத்தனை படங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் போட்டிக்காக ஒன்றை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.
2. படைப்புகள் 2D, 3D, கார்ட்டூன், அசையும் பிம்பங்களாக (Creative Animation) வும் இருக்கலாம்.
3. சிறந்த மூன்று படங்களுக்கு மேற்கண்ட மூன்று பரிசுத் தொகையும், போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2012 சான்றிதல்களும் வழங்கப்படும்.
4. போட்டியில் கலந்துக் கொண்ட சிறந்தப் படைப்புகளை 18.02.2012 அன்றுசாந்தோம் கலை தொடர்பு நிலைய அரங்கில் திரையிட்டு படைப்பாளிகளுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படும். பரிசுத் தொகைகளும் அன்றே வழங்கப்படும்.
5. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
6. போட்டிக்காக அனுப்பப்பட்ட எந்தப் படைப்பையும் திருப்பி அனுப்ப இயலாது.

அனுப்ப வேண்டியவை:

1. படைப்பாளிகளின் பெயர் உள்ளிட்ட முழு விபரம், தொடர்பு முகவரி மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ, அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம்.

2. படைப்புகளை DVD/VCD யாக அனுப்பி வைக்க வேண்டும்.

3. படைப்பு தொடர்பாக எந்தப் பிரச்சனை எழுந்தாலும், அதன் படைப்பாளியே முழுப் பொறுப்பேற்க
வேண்டும். அதற்கான உறுதி மொழிக் கடிதத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

4. படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 10 .02 . 2012

* படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

ஒருங்கிணைப்பாளர்,
சாந்தோம் கலை தொடர்பு நிலையம்,
150 , லஸ் சர்ச் ரோடு ,
மைலாபூர் ,
சென்னை-600 004
செல்: 9952667395
மின்னஞ்சல் : leopaulsalem@gmail.com

http://thamizhstudio.com/competitions_30.php

Tuesday, January 17, 2012

ஆனந்த் பட்வர்தனை சந்தியுங்கள்..

ஆனந்த் பட்வர்தனை சந்தியுங்கள்..

இந்தியாவின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனரான ஆனந்த பட்வர்தன் அவர்கள் இயக்கியுள்ள JAI BHIM COMRADE திரைப்படம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 5 அளவில் திரையிடப்படவிருக்கிறது. படம் பார்த்த பின்னர் ஆனந்த் பட்வர்தனுடன் கலந்துரையாடலாம். அனைவரும் வாருங்கள்.
நாள்: 20-01-2012

இடம்: பாலமந்திர் ஜெர்மன் ஹால்
பிரகாசம் சாலை, (அபிபுல்லா சாலை நடிகர் சங்கம் அருகில், ஜி.என். செட்டி சாலை அருகில்)
தி. நகர்

நேரம்: மாலை 5 மணிக்கு

படம்: JAI BHIM COMRADE- 3 HOURS AND 20 MTS

Wednesday, January 11, 2012

கடலூர் மக்களுக்கு உதவுங்கள்

http://thamizhstudio.com/kalam_kadaloor_thane.php

கடலூர் மக்களுக்கு உதவுங்கள்

வணக்கம் நண்பர்களே,

பொது தளத்தில் இயங்கும் அனைவருக்கும், சமூக பொறுப்பும், கடமைகளும் இருக்க வேண்டும். அந்த வகையில் கடலூரில் தானே புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு உதவ தமிழ் ஸ்டுடியோ முனைந்துள்ளது. இதில் வாசகர்களாகிய உங்கள் பங்கு மிக அவசியம்.

இயன்ற வாசகர்கள், தன்னார்வலர்கள், வலைப்பதிவர்கள், பெரிய பதவிகளில் இருக்கும் அனைவரும் இந்த உதவும் இயக்கத்திற்கு உங்கள் பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று அன்புடன் கோருகிறேன்.

ஒரு ரூபாயாக இருந்தாலும் கூட உங்கள் பங்களிப்பு மட்டுமே முக்கியம். இந்த பணம் கடலூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு வகைகளில் வழங்கப்படவிருக்கிறது. என்னதான் அரசாங்கம் செடிக் கன்றுகள் கொடுத்து, ஒரு வருடம் பராமரிப்பு செய்யும் செலவையும் கவனித்துக் கொண்டாலும், கடலூர் விவசாயிகளின் இழப்பை ஈடு கட்ட முடியாது. எனவே இதில் அனைவரும் தங்களாலான பங்களிப்பை செய்வது அவசியம். நீங்கள் ஒரு முறை கடலூர் சென்று பாருங்கள். உங்களுக்கு அவர்களின் நிலை புரியும்.

ஓரளவிற்கு பணம் சேர்ந்த பின்னர் கடலூர் சென்று அங்கு விவசாயிகளுக்கு இந்த பணம் பிரித்துக் கொடுக்கப்படும். இந்த நிகழ்வில் நேரில் நீங்களும் கலந்துக் கொள்ளலாம். பணம் கொடுத்தவர்களின் பட்டியல் தமிழ் ஸ்டுடியோ இணையதளத்தில் வழங்கப்படும்.

பணத்தை நேரில் கொடுக்க விரும்புபவர்கள் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை கொடுக்கலாம்

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

வங்கியின் மூலம் பணம் செலுத்த:

வங்கியின் பெயர்: ICICI வங்கி

வங்கி கணக்கு எண்: 000101564346

கணக்கு வைத்திருப்பவர் பெயர்: அருண். மோ (Arun M.)

கிளை: செனோடப் சாலை, சென்னை (Cenotaph Road, Chennai)
யாராவது கொடுப்பார்கள் என்று நினைக்காமல் நீங்கள் உங்கள் பங்கை மறக்காமல் கொடுத்து உதவுங்கள். ஒவ்வொருவரின் பங்களிப்பும் நிச்சயம் தேவை.

பணம் செலுத்திய பின் உங்கள் பெயர், முகவரி, அலைபேசி ஏன் ஆகியவற்றை கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

thamizhstudio@gmail.com

http://thamizhstudio.com/kalam_kadaloor_thane.php

பொங்கலைக் கொண்டாடுவோம்.. (குறும்பட வட்டம்)

பொங்கலைக் கொண்டாடுவோம்.. (குறும்பட வட்டம்)

நாள்: 14-01-2012

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

நேரம்: மாலை 5.30 மணிக்கு.

நிகழ்வு: பொங்கல் தொடர்பான குறும்பட / ஆவணப்படங்கள் திரையிடல், பிரபலங்களுடன் பொங்கல் பற்றிய கலந்துரையாடல், பூவுலகு நண்பர்களுடன் சேர்ந்து ரசாயனக் கலப்படமில்லாத பொங்கல் செய்தல்..

Saturday, January 7, 2012

சாரல் விருது 2012 - வண்ணதாசன், வண்ணநிலவன்

சாரல் விருது 2012



ராபர்ட்-ஆரோக்கியம் நினைவாக இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி அளித்துவரும் 2012 ஆம் வருடத்திற்கான சாரல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வண்ணதாசன், வண்ணநிலவன் இருவருக்கும் விருது அளிக்கப்படுகிறது விழா 2012 ஜனவரி மாதம் 7 ஆம் தேதி சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் நடைபெறுகிறது. சிற்பி வித்யாசங்கர் வடிவமைத்த சிற்பமும் ரூ 50000 மும் அடங்கியது விருது.







சாரல் விருது 2012

மணி: 01-- நிமிடம்: 58 -- நொடி: 01

உரையைக் கேட்க பச்சைப் பொத்தானை சொடுக்கவும். (Click the Green Button)

http://koodu.thamizhstudio.com/saral_award_4.php

Wednesday, January 4, 2012

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டு நிகழ்ச்சிகள். (வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமை)

கவிஞர் குட்டி ரேவதியின்
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
நூல் வெளியீட்டு விழா

நாள்: 06-01-2012, வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 5:30 மணிக்கு.
இடம்: ஜீவன ஜோதி அரங்கம், கன்னிமாரா நூலகம் எதிரில், எழும்பூர்.

சிறப்பு அழைப்பாளர்கள்:

அழகிய பெரியவன்
பாலை நிலவன்
யாழன் ஆதி
தமயந்தி
அஜயன் பாலா
நர்மதா
தி. பரமேஸ்வரி
ப்ரவீண்
&
குட்டி ரேவதி

-----------------------------------------------------------------------

யாவும் உள - உலக இலக்கிய அறிமுக நிகழ்வு

பங்கேற்பு: கவிஞர் சுகிர்தராணி

அறிமுகம் செய்யும் நூல்: "எங்கே அந்த பாடல்கள்" (ஆப்ரிக்க பெண் கவிஞர்களின் கவிதைகள்)

நாள்: ஜனவரி 8, ஞாயிற்றுக் கிழமை

நேரம்: மாலை 4:30 மணிக்கு.

இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப்), டிஸ்கவரி புக் பேலஸ் மாடியில், புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில், கே.கே. நகர்.

Monday, January 2, 2012

கவிஞர் குட்டி ரேவதி

more: http://koodu.thamizhstudio.com/katturaigal_30.php

கவிஞர் குட்டி ரேவதி

இதுவரை இணையம், மற்றும் பத்திரிகைகளில் வெளிவந்த கவிஞர் குட்டி ரேவதியின் நேர்காணல் மற்றும் கட்டுரைகளில் சில.


கன்னிமாரா தேசிய பொது நூலகத்தில் கிடைக்கும் கவிஞர் குட்டி ரேவதியின் நூல்கள்:

1. உடலின் கதவு
Other Title: utalin kathavu by kutti revathi .Author: குட்டி ரேவதி .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8111 KUTAccession Number: 649170Actions: Reserve

2. தனிமையின் ஆயிரம் இறக்கைகள்
Other Title: thanimaiyin aayiram irakkaikal by kutti revathi .Author: குட்டி ரேவதி .
Copies available for loan: Connemara Public Library (1)Call Number: 894.8111 KUTAccession Number: 575382Actions: Reserve

3. காலத்தைச் செரிக்கும் வித்தை
Other Title: kaalaththais serikkum viththai by kutti revathi .Author: குட்டி ரேவதி .
Copies available for loan: Connemara Public Library (1)Accession Number: 702326Actions: Reserve



SRM பலக்கலைக்கழக தமிழ் பேராயத்தில் குட்டி ரேவதி:

http://www.srmuniv.ac.in/tamil_perayam/tamil_courses/Lessons
/MA_Tamil/I_Year/matt01/html/mat01007pp2b.htm

--------------------------------------------------------------------------------------

முழுக்க முழுக்க எனக்காகத்தான் - குட்டி ரேவதி


குட்டி ரேவதி இரண்டே கவிதைத் தொகுப்புகளின் மூலம் பரவலாக அறியப்பட்ட கவிஞர். இவரின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு "முலைகள்" பெண்ணுடல் உறுப்பை படிமமாக கொண்டு கவிதைகள் எழுவது தவறு என்ற மாயை உடைத்தது. பல்வேறு தளங்களில் விவாதங்களை கொழுந்து விட்டு எரியச் செய்தது. சித்த மருத்துவராக இருந்து கொண்டு ஆய்வுகளை செய்து கொண்டிருக்கும் அவரிடம் சில கேள்விகளும், அதற்கான பதில்களும்...

கவிதைன்ன என்ன?

கவிதைங்கிற அதற்கான அவகாசத்தை எடுத்துக் கொண்டு நம்மிடம் தங்கி சீர்மையான முறையில் வெளிக் கொணரப்படுவது. சில சமயம் 3 வார்த்தைகள் சேர்ந்து ஒரு கவிதையும் ஒரு சொல்லே கவிதையாகவும் சில சமயம் எத்தனை சொற்களை போட்டாலும் கவிதையாகமல் இருப்பதும் உண்டு. ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில் சீர்மைங்கிறது ரொம்ப முக்கியம். அது குலைந்து போறப்ப நமக்குள் ரொம்ப கலைந்து போறாங்க கலைந்து போனதை சரி செய்வதற்காகதான் சொற்களை அடுக்கி அடுக்கி கட்டி சரி செய்யிறாங்க. நாடகம் போன்ற மற்ற வடிவங்களில் முயற்சி செய்து பார்த்து அதில் எதிலும் திருப்தியாகாமல் கடைசியில் மனம் கவிதையில்தான் நிலைப்படுத்தி நின்றது.

அந்த சீர்மைங்கிறது என்ன?

அது அவரவர் மனம் சார்ந்து எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம் பணம் சேர்க்குறதாகவோ வேடிக்கை பார்ப்பதாகவோ ஒருவரின் மீதானா அதீத நேசிப்பாகவோ, இப்படி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதனதன் இடத்துல அதை அதை வைக்கிற அதோட இதை பொருத்தி பார்க்குறது இது உலகத்துல எல்லா உயிர்களுக்கும் வாய்த்திருக்கு. விலங்குகள், தாவரங்கள் போன்றவற்றிற்கும் கூட இதைப்போன்ற தகுதியும், தேவையும் எல்லா உயிர்களிடமும் இருக்குது.

உங்கள் கவிதைக்கான மொழியை எப்படி அடைந்ததாக உணர்கிறீர்கள்?

மனப்பயிற்சியின் மூலமாகத்தான். எனது தாய்மொழி மராத்தி தெலுங்கு இப்படி எதுவாக இருந்தாலும் இப்போது இருப்பது போன்ற நேர்த்தியான கவிமொழியை அடந்திருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். சொற்களை பலம் வாய்ந்ததாகவோ, ஆறுதல் தருவதாகவோ கட்டி சீர்மயான முறையில்தான் எனது கவிதைகளை அமைப்பதாக நினைக்கிறேன். நான் சித்த மருத்துவத்தை தேர்ந்தெடுத்ததே அது மொழி சம்பந்தமாக இருப்பதால்தான். சித்த மருத்துவ சொல் அகராதியை எடுத்து பார்த்தீங்கன்னா அதுல இருக்கிற ஒவ்வொரு சொல்லும் மிகவும் பொருள் பொதிந்து இருக்கும், அகழ்வாராய்ச்சி செய்தது போல் இருக்கும். பாடல்கள் பொருளுடன் சந்ததுத்டன் இருக்கும். இதைப்போன்ற மனப்பயிற்சி இருந்தால் கவிமொழி எல்லோர்க்கும் வாய்க்கும். மற்றபடி வேற தளத்துல இயங்குற மற்றவர்களுக்குfம் அந்த சூழலுக்கு ஏற்ப மொழி உண்டாகும்.

உங்களின் கவிதைகள் சமன்பாடுகளாய் இருக்கின்றன. இது எப்படி சாத்தியமானதா?

என்னுடய ஒரு கவிதை கூட எனக்கு ஞாபகத்தில் இருப்பதில்லை. ஆனால் என்னுடய கவிதையை என்னிடம் கொடுத்தால் அது எப்படி உருவான என்று சொல்ல முடியும். எனக்கு இந்த சமன்பாடு போன்ற தொழில் நுட்பங்களில் திறமை கிடையாது. என்னுடய கவிதைகள் எப்போதும் ஒரே மாதிரி இல்லாமல் மாறிக் கொண்டே இருக்கிறது. புதிய முறைகளை முயற்சி

more: http://koodu.thamizhstudio.com/katturaigal_30.php

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 16

more: http://koodu.thamizhstudio.com/thodargal_14_17.php

ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் - 16

பானுபாரதி - ஆண்மை கொல்
குட்டி ரேவதி



இன்றும் எனக்குக் கடிதம் வருகின்றது, ஏன் படைப்பாளியைத் தெருவிறங்கிப் போராடச் சொல்கிறீர்கள் என்று. ஏன் எம் கைகளில் போராட்டத்தை, அதற்கான ஆயுதங்களை, கிளர்ச்சியை ஒப்படைக்கிறீர்கள் என்று. அது தேவைப்படாதவர்கள் என்னைப் பொறுத்தவரை ஒரு வகையில் அதிகாரத்தின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது அதிகாரத்தின் சமரசங்களுக்கு ஆளாகிறார்கள் என்று தான் அர்த்தம். ‘போராட்டம்’ என்பது கலகம் மட்டுமே அன்று! மூர்க்கமான இயக்கமும் கூட!

‘ஆண்மை’ என்பது, பல வித தத்துவவியலாளர்களால் வியக்கும்படியான, ஒரு கருத்தாக்கமாகவும், மானுடத் திண்மமாகவும் பார்க்கப்பட்டது. பின், சமத்துவ உரிமைகள் நோக்கிப் போராடிய பெண்கள், ‘அதே விதமான ஆண்மையை’யே தமக்கு வரித்துக் கொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆணைப்போல உடையணிதல், ஆணைப் போன்ற பாவனைகளை உடலுகுக் கொடுத்தல், ஆணின் சிந்தனைகளையே தன் மூளைக்குப் பணித்தல் எனத் தொடர்ந்தனர். ஆனால், ஒரு கட்டத்தில், போராட்டத்தின் முன்னேற்றத்தில் பக்குவத்தில், அது பெண் சமூகத்திற்கு ஒரு மாதிரியாக மாறாமல், சமூகத்திலிருந்தும், சமத்துவத்திலிருந்தும் விலகி இருந்ததை உணர்ந்தனர். ஆக, ‘ஆண்மை’யின் விறைத்த நிலைகளும் தளர்ந்த நிலைகளும், ‘ஆண்மை’யின் எதிர்க்குணங்களாக விவாதிக்கப்பட்டன!

பானுபாரதியின் கவிதைகள் பெரும்பாலும் அரசியல் கவிதைகள் தாம்! அவற்றின் பிரகடனம் குறித்த கருத்துகள் பற்றிய விவாதத்திற்கு நாம் எடுத்துக் கொண்ட தலைப்பின் பொருள் உதவாது என்பதால், அக்கவிதைகளை விடுத்து அவர் எழுதிய, ‘பெண்ணியக் கவிதைகளை’ இங்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்!

பானுபாரதியின், ‘ஆண்மை கொல்’ என்ற கவிதை:
எருமையின் முதுகுத் தோலில் துளையிட்டு
உட்புகுந்த மழைத்துளிபோல்
எனது வார்த்தைகள்
உனது ஆண்மைக்குள்
புகுந்து குடைகிறதென்பதை
நீ தூக்கம் தொலைத்து
இரவுகளை
புகை வளையங்களால்
நிரப்பிக் கொள்வதிலிருந்து
புரிந்து கொள்ள முடிகின்றது

எறிகணையின் வலிமையோடு
எறியப்படும்
உனதொவ்வொரு வார்த்தைகளும்
தோற்றுப் போய் விழுகின்றன
நேர்மை வயபப்டாததினால்

வானம் நீலமென்கிறாய்
கடல் உப்பென்கிறாய்
முத்தம் இனிப்பென்கிறாய்
வியர்வை சூடென்கிறாய்
விந்து குளிரென்கிறாய்
ஆண்மை
அதுவே அதற்கே அனைத்துமென்கிறாய்

நல்லது
போதனைக்கு நன்றி
ஆண்மை அரியாசனத்திலிருந்து
இறங்கி வர
நீ மறுக்கும் ஒவ்வொரு கணங்களும்
கலவியின் உச்சநிலையில்
சோர்ந்து சூம்பிக் கிடக்கும்
ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது

வோட்கா நிரப்பப்பட்ட
உனது கண்ணாடிக் குவளையில்
எலுமிச்சை சீவல்களாய்
எனது கனவுகளோடு வாழ்வும்
கரைந்து போனதேன் என்ற
எனதொரு கேள்விக்கு
உன்னிடமும் விடையில்லை
உன்னைப்படைத்த
உன்னப்பனின் ஆண்மையிடமும்
விடையிருக்கப்போவதில்லை

அம்மிக்கல்லில் அடித்து நொறுக்கப்படும்
சிதறு தேங்காய்போல்
உனதாண்மை நொறுக்கப்படும்போது
வோட்காவிலும் பியரிலும்
கரைந்து போன கணங்களிலிருந்து
எனக்கான பதில் கண்டடையக் கூடும்

அல்லது
இரத்தமும் வியர்வையும் தெறித்துச் சிதற
ஆண்மையை
அறுத்தெறியும் திராணியுண்டாயின்
வா பேசுவோம்
சுதந்திரமான வார்த்தைகளின் அக்களிப்போடு.

இக்கவிதையில், நவீனப் பெண்ணின் மனநிலை ஆணாதிக்கத்தை நோக்கி அதை எதிர்த்துக் குரல் எழுப்பி விட்டு, மாற்றத்தின் பதிலுக்காகக் காத்திருக்கிறது. மறைமுகமாக ’ஆணின் குறியையே’ ஆண்மையின் இடமாக்கியிருக்கும் கவிதை. ’ஆண்மை / அதுவே அதற்கே அனைத்துமென்கிறாய்’ என்ற வரி தான் இக்கவிதையின் மையப்பொருள். நவீன வாழ்வில் மது அருந்துமொரு வேளையில், அதன் அத்தனை அம்சங்களோடும், கவிதை பதிவாகியிருக்கிறது. ஆனால், வார்த்தைகள் தாம் கவிதையின் எதிர்ப்புக்குரலுக்குள் சுழன்று வருகின்றன.

வார்த்தைகளாக்கப்பட்ட பெண்ணியம் தான் சென்ற நூற்றாண்டின் இறுதியில் நாம் கண்ட வெற்றியாக இருக்கும் என்று இருக்கிறேன். உலகெங்கும் ஆண்கள் அனுபவித்து அந்த மிகையான அதிகாரங்களை எதிர்க்கும் வகையில், அல்லது தமக்கேயான அடிப்படை உரிமைகளையேனும் கோரும் வகையில் தொடர்ந்து வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு உரிமைகளுக்காகப் போராடி வெற்றி கண்டிருக்கின்றனர். ‘எழுத்து’ என்பதன் வழியாகப் பதிவான ஆய்வுக்கட்டுரைகளுக்கும் புனைவுகளுக்கும் அப்பாற்பட்டு, ‘பெண்ணியக் குரல்’ ஓங்கி ஓர் ஆவணமாகவோ, சாட்சியாகவோ இல்லாமல், அக்குரலாகவே பதிவானது கவிதைகளில் தாம் நிகழ்ந்தது.

’ஆண்மை கொல்’ என்பதன் உள்ளார்த்தம், நிறுவனமயமாகிப் போன ஆண்மையை அடையாளப்படுத்துகிறது. குடும்பம், சமூகம், மதம், சாதி போன்று கட்டமைப்புகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து நிறுவனமயமாகி, இறுகிப் போன ஆண்மையைக் காலங்காலமாகக் குறிப்பதாகவும் இருக்கிறது. ‘ஆண்மை அரியாசனத்திலிருந்து / இறங்கி வர / நீ மறுக்கும் ஒவ்வொரு கணங்களும் / கலவியின் உச்சநிலையில் / சோர்ந்து சூம்பிக் கிடக்கும் / ஆண்குறியின் நிலைக்கொப்பானதாயிருக்கிறது’ என்ற இந்தக் குறியீடு ஆண்மையின் சரணடைதலை, தளர்ச்சியைக் குறிப்பதாக இருக்கிறது. இது பெரும்பாலும், ‘பெண்ணியத்தின்’ மைய விவாதமாகவும், ஆணின் பாலியல் ஆற்றலைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் இருந்திருக்கிறது. ஏனெனில், இந்தப் பிம்பத்தை அடையாளமாக்கித் தான் பெண்ணின் உடல்கள் யோனிகளாய்ப் பார்க்கப்பட்டு கிழிக்கப்பட்டிருக்கின்றன.

அஞ்சறைப்பெட்டியில் அடங்கிய நீரும் நிலமும்

அவிழ்த்துவிட்ட கூந்தலோடு
ஆவேசத்தை
முகம் முழுவதும் அப்பிக்கொண்டு
குன்றினுச்சியினின்று
குய்யோ முறையோவென
குளறியடித்து
படையெடுத்தது அருவி
பூமியை விழுங்கி விடுவது போல்

நமட்டுச் சிரிப்போடு
பேசாமல்
மல்லாந்து
படுத்துக் கிடந்தது
வானத்தைப் பார்த்தபடி நிலம்

போருமின்றி
பேச்சுவார்த்தையுமற்று
வரப்புகளுக்குள் மட்டும்
மட்டுப்படுத்தப்பட்டது
அருவியின் ஆவேசம்

கோரைப் புற்களின்
கலந்துரையாடல்களில் கூட
நிலத்தின் பொறுமைதான்
வெற்றிக்கு வித்திட்டதாக
ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன

நியூட்டன் விதியிலிருந்து
தப்பியோடி வந்த ஆப்பிளொன்று
பூமிக்கு
பெண்குறியைப் பொருத்தி
பெருமை பேசியது

இடுப்பு வளைந்து
அன்னநடை போடும்
அருவியின் பெருமை கண்டு
முலைகள் பொருத்திப் பேசியது
பிள்ளையான் தின்று போட்ட
ஞானப்பழத்தின் கொட்டை

மூன்றாந் தரப்பிலிருந்து
கருவாடு தின்று சுவையறிந்த
ஆதிபராசக்தியின் தூமைத்துணி
புதுக்கதை பேசியது
ஆறுகள் சங்கமிக்கும்
கடற்தாய் என்றது அது.
நீலநிறத்தில்
சேலையும் கட்டி விட்டது.

வாளெடுத்த பெண்தெய்வங்களெல்லாம்
நிலத்தடியிலும், அருவியிலும்,
கடலிலும் சங்கமமாகி
சாதிக்கொரு
பிள்ளை பெற்றுக் கொண்டன

அதற்காக
அஞ்சறைப் பெட்டியிலிட்டு
ஆளுக்கொரு கற்பும்
பரிசாக தரப்பட்டன.

ஒரே கவிதையில், நிலத்தையும் நீரையும் ஆண் – பெண் அடையாளமாக்கி மதம் இன்ன பிற ஒட்டு பிம்பங்களையெல்லாம் கேள்விக்குள்ளாக்குகிறார், கவிஞர். எப்படிப் பேரருவியாக இருந்த. ‘பெண்’ அஞ்சறைப்பெட்டியில் அடைக்கப்பட்டாள் என்பதை, கவிதையின் வேகம் குன்றாமல் சொல்லியிருக்கிறார். ‘பெருவெள்ளமாக இருந்தவளை’ அடைக்க இயன்ற போது, அதன் பரிசாக, ‘கற்பு’ பரிசளிக்கப்பட்டது.
‘பெண்ணியத்தின் கோட்பாட்டு விஷயங்களைத் தொடர்ந்து அணுகும் பெண்ணியவாதிகளும், படைப்பாளிகளும் அதன் முரண்களையும், நாட்பட்ட அதன் விளைவுகளையும் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர். அதுவே, பெண்ணியத்திற்கான தத்துவப்பின்புலமாக இருந்திருக்கிறது. ஏனெனில், பிற எல்லா வகையிலும் பதிவாகும் ஆக்கங்கள் எல்லாம் ஆண் மையச்சிந்தனையுடன் தான், அவ்வித விழிப்புடனும், அவ்விழிப்பு இல்லாமாலும் பதிவாகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், ‘நான் காணா மனிதனை’ என்ற பானுபாரதியின் கவிதை, பல தலைமுறைப் பெண்கள் தேடிய, கடவுள் போன்ற மனிதனைக் குறித்துப் பேசுகிறது.

நான் காணா மனிதனை

எனக்கென்றொரு ...............

more: http://koodu.thamizhstudio.com/thodargal_14_17.php