Monday, December 13, 2010

கதை சொல்லி - பவா செல்லதுரை (Bava Chelladurai)

கதை சொல்லி - பவா செல்லதுரை (Bava Chelladurai)

லிவி

மிகச் சிலரே தன் இருப்பை எந்தவொரு சுயநலமின்றி மொழிக்காக இலக்கியத்திற்காக தம் வாழ்க்கை முழுமையும் கலைச் செயல்பாடுகளோடு அர்த்தப்படுத்திக் கொள்வார்கள்.அந்த தமிழ் ஞாபகமே ஓர்மையின் தொடர்ச்சியின் ஒன்றே திருவண்ணாமலையில் உள்ள பவா செல்லதுரையும் அவர் குடும்பமும். கதை சொல்லிக்காக பவாசெல்லதுரையை சந்திக்கச் செல்ல இருந்த அன்றைய பொழுது சென்னையை புயல் தாக்குவதான அறிகுறிகளோடு சிறு தூறலையும் சேர்த்துக் கொண்டது. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கான நான்கரை மணி நேரப் பயணமும் மழை நேரக் கிளர்ச்சியை தந்து கொண்டிருந்தது.திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் வெள்ளை அல்லது காவி உடை அணிந்து ஆன்மீகத்தை தேடி தியானம் செய்து கொண்டிருக்கும் அயல் நாட்டவரைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும்.இந்த மண்ணே தனக்கு உவப்பானதாய் ஆன்மீகத்தையும் இலக்கியத்தையும் தேர்ந்தெடுத்திருக்கிறது போல‌!

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் வீட்டை அவர் ஊரில் யாரிடம் கேட்டாலும் வழி சொல்வார்கள் என்று வாசித்த ஞாபகம் இருக்கிறது.பவாவை செல்போனில் அழைத்து, வந்திருப்பதைச் சொல்லியவுடன் "ஆட்டோ ஒன்றை பிடித்து ஓட்டுனரிடம் செல்போனைக் கொடுங்கள் நான் முகவரி சொல்கிறேன்" என்றார்.அவ்வாறே செய்ததும் பவா முகவரியை சொல்லத் தொடங்கினார்.ஆட்டோகாரர் தான் பேசுவது பவா என்பது தெரியாமல் "எதுங்க? பவா சார் வீடுங்களா ?" என்றார்.ஆட்டோக்காரர் திருப்பி சவாரி முறைப்படி நிற்கும் ஆட்டோகாரரிடம் "பவா சார் வீடு" என்று மட்டும் சொன்னார்.திருவ‌ண்ணாம‌லையில் ந‌ன்கு தெரிந்த‌ பிர‌ப‌ல‌மாக‌ பவா செல்ல‌த்துரை இருக்கிறார். த‌மிழ் எழுத்தாள‌னுக்கு மிக‌ ஆச்சரிய‌மாக‌.....


More: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_10.php





No comments:

Post a Comment