Friday, July 3, 2009

நர்சிம் மற்றும் முரளிக் கண்ணனுக்கு ஒரு தன்னிலை விளக்கம்.



(நண்பர் நர்சிம்முக்கு பின்னூட்டமிட விரும்பினேன். ஆனால் அதிகமான வார்த்தைகள் சேர்ந்துவிட்டால் பின்னூட்டத்தில் இணைக்க வில்லை. அதனை இங்கே கொடுத்துள்ளோம்)

நன்றி நர்சிம்... ஆனால் நாங்கள் இதுப் போன்ற பதிவுகளை எதிர்பார்த்து நாங்கள் விருது கொடுப்பது இல்லை. நண்பர் முரளிக் கண்ணன் சொன்னது போல் எங்களின் இருப்பை காட்டிக்கொள்ளவோ, காப்பாற்றிக் கொள்ளவோ நாங்கள் இது போன்ற விருதுகள் கொடுப்பதில்லை.. நண்பர் முரளிக் கண்ணன் ஒரு முறையாவது தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் பார்த்து இருப்பாரா என்பது எனக்கு தெரியாது.


எங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள நாங்க ஒன்றும் மிட்டாய்க் கடை வியாபாரிகள் இல்லை. குறும்படத் துறைக்கு ஒரு நல்ல களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும், இலக்கியம் என்றாலே ஒரு சிலருக்குத்தான் சொந்தம் என்று இருக்கும் நிலையை மாற்றி இலக்கியம் பற்றி கிராமத்து மக்களும், சேரி வாழ் மக்கள் உள்ளிட்ட அனைவரும் தெரிந்துக் கொண்டு நல் வாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும், புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவும், இன்னும் பல.. (இணையதளத்தை பார்வையிட்டு தெரிந்துக் கொள்ளுங்கள் முரளிக் கண்ணன்) நோக்கத்திற்காகவும் தான் தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடங்கப்பட்டது.


அதற்கான பணிகளை செய்வதில்தான் நாங்க முழு ஆர்வம் காட்டி வருகிறோம். எங்கள் இணையதளத்தின் பார்வையாளர்களை அதிகப்படுத்த நாங்கள் ஒன்றும் இனைய வியாபாரி அல்ல. இதுவரை நாங்கள் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. தேவை இருப்பவர்கள் எங்கள் இணையதளத்தை தானாகவே நாடி வரட்டும் என்றுதான் விட்டுவிட்டோம். நாங்கள் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம்.


பதிவர்களுக்கு இதுவரை யாரும் இது போன்ற விருது கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்த வில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டப் பின்னர் தான் இந்த பதிவர் விருதை நாங்கள் கொடுக்க ஆரம்பித்தோம். காரணம் புதிதாய் எழுத வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தானே தவிர எங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்ள அல்ல. அதற்கான அவசியமும் எங்களுக்கு இல்லை. .. தமிழ் ஸ்டுடியோ.காம் ஒரு இலாப நோக்கம் அற்ற இணையத்தளம். பிறகு ஏன் நாங்கள் எங்கள் தளத்தை காப்பாற்றிக் கொள்ள பதிவர்களை நாட வேண்டும். ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டுமே என்றுதான் இந்த விருது கொடுக்கும் நிகழ்ச்சியை நாங்கள் தொடங்கினோம்.


ஆனால் அதற்கு பதிவர்களில் ஒரு சிலர் கொடுத்த வரவேற்பு எங்களை புளங்காகிதம் அடைய செய்து விட்டது. நாங்கள் இன்னும் பரவலாக அறியப்படாதவர்கள் தான். ஆனால் நாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளின் யாவும் இதுவரை யாரும் மேற்கொள்ளாதவை. எங்களின் முழு நேரப் பணி இது அல்ல. நர்சிம் போன்று வேறு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இந்த சமூதாயத்திற்கு எங்களால் முடிந்த நல்லதை செய்யவே விரும்புகிறோம். எனவே இது போன்ற வார்த்தைகளை உதிர்க்கும் முன்னர் யாரைப் பற்றிக் கூறுகிறீர்களோ அவர்களை பற்றி முழுதும் தெரிந்துக் கொள்ளுங்கள். வார்த்தைகள் வலிமை வாய்ந்தவை.


நர்சிம் விருதை வாங்கி கொள்ள வராத சூழல் பற்றி நான் நன்கறிவேன். அதில் பிழை ஏதும் இல்லை. எல்லோருக்கும் இது போன்ற சூழல்கள் ஏற்படுவது உண்டு. ஆனால் அந்த நிகழ்ச்சி முடிந்து இருபது நாட்கள் கழித்தும் நர்சிம் ஒரு கூட முறை என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. சாதரணமாக ஒரு நண்பனைப் போல் பேசி இருக்கலாமே. காரணம் இந்த நிகழ்ச்சியை நாங்கள் மிகுந்த நட்டத்திற்கு இடையில் தான் நடத்தி வருகிறோம். மேலும் ஒவ்வொரும் மாதமும் அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல விசயங்களில் எங்களுக்கு ஏற்படும் வலிகளுக்கு இது போன்ற பொறுப்பான தொலைப்பேசி அழைப்பு மருந்தாக அமையும். அதைத்தான் நண்பர் தண்டோரா விடம் சொல்லிக்கொண்டிருந்தோம். அவர் அந்த நிலைக் கண்டு உங்களிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். அதன் பின்னர் நர்சிமுக்கும், தண்டோராவுகும் நடந்த உரையாடல்க பற்றி நான் முழுதும் அறியிலேன்.


நாங்கள் வளர்ந்து வரும் அமைப்பை சார்ந்தவர்கள். எனவே எல்லோரையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறோம். தவிர்த்து இதுப் போன்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ள விரும்பவில்லை. தயவு செய்து இந்த விஷயத்தை இத்தோடு நிறுத்துக் கொள்ளுமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். இது சம்பந்தமாக தண்டோராவோ, அல்லது வேறு பதிவரோ, அல்லது நானோ நர்சிம்மை காயப் படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


செடியாய் இருக்கும் நாங்கள் மரமாய் வளர யாரும் தண்ணீர் ஊற்ற வேண்டாம். ஆனால் வெந்நீர் ஊற்றி எங்களை காயப்படுத்தாதீர்கள். நண்பர் முரளிக் கண்ணன் பதிவர் விருது கொடுக்கும் வழிமுறை பற்றி தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளத்தில் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். இதற்கு மேல் எங்களை சார்ந்த பின்னூட்டங்களை இங்கே பதிவு செய்து விவாதம் செய்யாதீர்கள். என்னை தொடர்பு கொண்டு பேசுங்கள். நாங்கள் சர்ச்சைகளை விருபுவதில்லை. அனைவரின் புரிதலுக்கும் நன்றி.


(குறிப்பு: விருதுக்கான பதிவரை தெரிவு செய்வது முழுக்க முழுக்க தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகம் மட்டுமே. (நிர்வாகம் என்பது நான் மற்றும் நண்பன் குணா) எனவே உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் எங்களை தொடர்பு கொண்டு பேசுங்கள். தவிர்த்து நீங்களாகவே உங்களுக்குள் பேசிக் கொள்ளாதீர்கள்.)


9 comments:

நர்சிம் said...

நண்பர் அருணுக்கு,

நன்றி.

நர்சிம் said...

//அதன் பின்னர் நர்சிமுக்கும், தண்டோராவுகும் நடந்த உரையாடல்க பற்றி நான் முழுதும் அறியிலேன். //

ஏதும் நடக்கவில்லை..சும்மா பதிவில் பொதுவில் இதைப்பற்றி எழுதியும், நான் மன்னிப்புக் கேட்டதை பற்றி பதிலே கூறாமலும், இப்பொழுது கர்ட்டசி பற்றி எழுதியதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடிவில்லை..I was one call away or one message away. THATS it.

நர்சிம் said...

//பதிவர்களுக்கு இதுவரை யாரும் இது போன்ற விருது கொடுக்கும் நிகழ்ச்சியை நடத்த வில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டப் பின்னர் தான் இந்த பதிவர் விருதை நாங்கள் கொடுக்க ஆரம்பித்தோம். காரணம் புதிதாய் எழுத வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தானே //

மிக நல்ல முயற்சி தலைவா.. தயவுசெய்து தொடருங்கள்.. எனது தாமதத்தால் இது தடைபட வேண்டாம். தொடர்ந்து பதிவர்களை ஊக்கப் படுத்துங்கள்.

Athisha said...

நண்பா.. மேலும் வளர வாழ்த்துக்கள். தொடர்ந்து புதிய வளரும் பதிவர்களுக்கு விருதுகள் அளித்து ஊக்கப்படுத்துங்கள். மற்றபடி பிரச்சனை குறித்து ஒன்று புரியவில்லை .

butterfly Surya said...

அருணின் முயற்ச்சி மேலும் மேலும் வளர வேண்டும்.

வாழ்த்துகள்..

மணிஜி said...

நான் சொல்வதற்கு நிறைய இருக்கிறது..ஆனால் அதற்காக தனிப் பதிவு போடப் போவதில்லை..இனி இரும்படிக்கும் இடத்திற்கு போக கூடாது என்று நினைக்கிறேன்..நன்றி..வாழ்த்துக்கள்..

Suresh said...

தயவு செய்து இதை தொடருங்கள் நண்பா நல்ல முயற்சி

யாவரும் நண்பர்களே

iniyavan said...

நிறுத்த வேண்டாம் தொடருங்கள்.

Unknown said...

ஆரம்ப நிலையில் உள்ளவர்களை ஊக்கப்படுத்தி வளர்க்க வேண்டும் என்று நினைப்பது நல்ல விஷயம். தொடர்ந்து நல்ல முறையில் யாருடைய உறுத்தலும் இல்லாமல் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

நர்சிம்மின் விளக்கம் போதுமானதாக இருக்கும்போது வருத்தப்படுவானேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

கிருஷ்ண பிரபு,
சென்னை.

Post a Comment