மிஷ்கின் வித்தியாசமான ஒன்றை உருவாக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த வித்தியாசமான ஒன்று அவருள்ளிருந்து தான் வருகிறதா என்று பார்க்கவேண்டும். இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. வித்தியாசமாக, தனக்கென ஒரு தனிப்பாதையில் செல்ல எங்கே அவர் சொல்லும் இன்ஸ்பைரேஷன் கிடைக்கும் என்று வெளி நாட்டுத் திரைப்படங்களையெல்லாம் பார்க்கக் கிளம்பிவிடுகிறார். அவர் தனக்குள் அந்தத் தேடலைத் தொடங்கவேண்டும். அங்கிருந்து தான் சிறந்த கலை எதுவுமே தோற்றம் கொள்கிறது. நந்தலாலா ஒரு ஜப்பானிய படத்தின் நகல் என்றார்கள். வெளி நாட்டுப் படங்கள் பார்க்கும் வசதி இப்போது நிறைய வந்துவிட்டன. பர்மா பஜார் போகவேண்டாம்.
சரி உண்மையில் ’இன்ஸ்பைரேஷன்’ என்றால் அது பார்த்ததையே திரும்பச் செய்ததாக இராது அது தன்னுள் ஒரு பயணத்தை மேற்கொள்ளத் தூண்டும். சுற்றித் தமிழ் நாட்டு வாழ்க்கையை, தான் வாழ்ந்த வாழ்க்கையை தன் அனுபவங்களை அசை போடச் சொல்லும். நான் ஜப்பானிய மூலப் படத்தைப் பார்த்ததில்லை. நந்தலாலாவில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி ஆரம்பத்திலேயே சில நிமிடங்களில் வந்து விடுகிறது. பையனும் பாட்டியும் வீட்டில் தனியே இருக்கிறார்கள். அம்மா இல்லை. “அம்மா எப்போ வருவார்?” என்று கேட்கிறான். பாட்டி தெரியாது என்கிறாள். சற்றுக் கழித்து பாட்டியை கை பிடித்து கழிவறைக்கு அழைத்துச் செல்கிறான். காத்திருந்து பின் அங்கிருந்து திரும்ப பாட்டியை அழைத்து வருகிறான். தனித்து விடப்பட்ட பையனுக்கு பொறுப்பு தெரிகிறது. நல்ல காட்சி. தமிழ்ப் படங்களில் வரும் சிறுவர்களைப் போல பெரியவர்களுக்கான நீண்ட புத்திசாலித்தனமான வஜனம் ஏதும் பேசுவதில்லை.. ஆனால் ஏன் அந்தப் பையன் தலையைக் குனிந்து கொண்டே அவ்வலவு நேரம் நிற்கிறான் என்ற குடைச்சலுக்கு பதில் அடுத்த படத்தில் யுத்தம் செய் படத்தில் கிடைத்து விடுகிறது. அதில் ரொம்பவும் புத்திசாலியும் சுறுசுறுப்பும் திறமைசாலியும் மேலதிகாரிகள் பெரிதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு புலன்விசாரணை செய்யும் அதிகாரியாக வரும் சேரன் ஏன் எப்போதும் என்னமோ தப்புப் பண்ணி தலை நிமிர வெட்கமும் பயமும் கொண்டவர் மாதிரி தலை குனிந்தவாரே இருக்கிறார்.? அவர் என்ன போலீஸ் அதிகாரியா, இல்லை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்ட பிக் பாக்கெட் கேஸா? படம் முழுதும் மிஷ்கினின் ப்ரோடகனிஸ்ட்கள் எல்லாம், தலை குனிந்தே இருக்க வேண்டிய அவசியம் என்ன? நந்தலாலாவில் அந்த சின்ன பையன் இங்கு யுத்தம் செய் படத்தில் சேரன். இதுதான் மிஷ்கினுடைய இயக்கத்தைக் காட்டும் முத்திரையோ. இது தான் மற்ற தமிழ் சினிமாக்காரர்களிடமிருந்து அவரைத் தனித்துக்காட்டும் பிரயத்தனமோ என்னவோ. ரஜினி ரம்பம் அறுக்கும் சத்தத்தோடு விரலை அசைக்கும் சமாசாரம் போல.. சேரன் ஸ்வபாவத்தில் இந்த ஸ்டைலில் நிற்பவர் இல்லையே. மறுபடியும் எனக்கு மிஷ்கினுக்கு இன்ஸ்பைரேஷன் தந்த ஜப்பானிய படத்தைப் பார்த்தது கிடையாது. நந்தலாலா நகல் தான் என்பதை அந்தப்படத்தின் பெரும்பகுதி எனக்குச் சொன்னது வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறும் சிறுவன் என்கிற சம்பவம் எந்த நாட்டிலும் நடக்கக் கூடியது தான். உண்மையில் நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கும் தான். சிலர் ஒப்புக்கொள்ளலாம் சிலர் வெட்கப்படலாம். நானே என் சிறு வயதில் ஒரு நாள் இரவு வீட்டை விட்டு ஓடியிருக்கிறேன். அதைப் பற்றி எழுதியுமிருக்கிறேன். நந்தலாலா பையன் தாயைத் தேடிப் போகிறான். இது எவ்வளவு பெரிய விஷயம். எவ்வளவு மகத்தான விஷயம்! வீட்டில் பெரியவர்களின் பாதுகாப்பை விட்டு மீறி ஒரு புத்தி பிறழ்ந்த முன்பின் அறியாத பெரியவருடன் வெளியேறுகிறான். அவன் மனதுக்குள் இது ஒரு பெரிய சாகஸப் பயணம். ஆச்சரியங்களும், பயங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைந்த ஒரு சாகஸப் பயணம். அவன் மனதுக்குள் என்னெவெல்லாம் நடந்து கொண்டிருக்கும்!! ஒரு பெரிய உலகமே ஆச்சரியத்துடன் விரிந்துகொண்டிருக்கும். அது எதுவும் இந்தப் படத்தில் இல்லை. புத்தி பிறழ்ந்த ஒரு பெரியவருடன் கூடப் போகிறான். அவ்வளவு தான். அவன் மனதுக்குள் விரியும் உலகம் எதுவம் நமக்குத் தெரியவில்லை. காரணம் மிஷ்கினுக்கே அது பற்றிய சிந்தனை ஏதும் இல்லை. போகும் வழியில் அந்த இருவருக்கும் நடக்கும் அடுக்கடுக்கான சம்பவங்கள் தான் படத்தில் விரிகின்றன. அதில் ஒரு கற்பழிப்பும் உண்டு. மசாலா ஐட்டமான சண்டையும் உண்டு. இதெல்லாம் இல்லாது, அந்தச் சிறுவனின் மன உலகம் விரிந்திருக்குமானால் அது தமிழ்க் கதையாகியிருக்கும். ஏன், ஜப்பானில் தான் சின்ன பையன் வீட்டை விட்டு ஓடுவானா என்று மிஷ்கின் வெகு தைரியமாக தன்னைக் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லியிருக்கலாம். படம் முழுதும் மூளை வளர்ச்சியடையாத அந்த பெரிய மனிதனையே மையமாகக் கொண்டுள்ளது. தொடங்குவதும் முடிவதும் அந்த சிறு பையனை வைத்து என்றாலும் மிஷ்கின் பார்வையாளர் முன் நிறுத்துவது பையனை அல்ல. இதற்கும் முன்னும் பின்னும் அவர் சில படங்களைத் தந்திருக்கிறார். முன்னது பற்றி அவரும் வேறு யாரும் அதிகம் பேசுவதில்லை. நந்தலாலா தான் அவருக்குப் பேர் சொல்லும் படைப்பு என்று முன் வைக்கப்படுகிறது. அடுத்த படம் யுத்தம் செய் என்ன சொல்ல வருகிறது என்றே தெரியவில்லை. ஒரே இருட்டும் ரத்தமும் வன்முறையும் கொலைகளும் பழிவாங்கலுமாகவே கதை உருவாக்கப் பட்டிருக்கிறது. இல்லை, தயாரிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லலாமா? இதில் அவருக்கே முத்திரையாகிப்போன டாப் ஆங்கிள் ஷாட் (சொல்லத் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். யுத்தம் செய் படத்திலும் பார்க்கிறேன்.
என்னென்னமோ உலகத் தரமான படங்களையெல்லாம் பார்த்து தானும் உலகத் தரமான படம் பண்ணுகிறேனாக்கும் என்று கிளம்பியவர் என்ன உலகத் தரத்திற்க்காக ஒரு குத்துப் பாட்டை புகுத்தியிருக்கிறார். அதுவும் மகா கடைத்தரமான ஒரு பாட்டு, ஒரு டான்ஸ். ”கட்டுமரத் துடுப்புப் போல இடுப்பை ஆட்டுறா” இதில் என்ன உலகத் தரம் இருக்கிறது என்று மிஷ்கின் நினைக்கிறார்? குடித்துக் கொம்மாளம் போடுகிற தரங்கெட்ட கூட்டம் இரவுக் கேளிக்கை விடுதிக்குப் போகும். இல்லை அது கிராமத்துக் கூட்டம் என்றால் ரெகார்டு டான்ஸ் பாக்கப் போகும். அதுதான் தமிழ் வாழ்க்கையின் கோரமான அங்கங்கள் என்றால், அதைத்தான் நான் காட்ட வந்தேன் என்றால், நேர்மையுடன் அதைக் காட்டட்டும். தமிழ் வாழ்க்கையின் ஒரு கோர பகுதி இதுதான் என்றால் அந்த ரிகாட் டான்ஸோ, இல்லை கேளிக்கை விடுதி ஆட்டமோ, ஒன்றிரண்டு நிமிடங்களுக்கு மேல் அது நீளாது. மேலும் காமிராவின் குவிமையம் அந்த டான்ஸாக இராது. அந்த சூழல்தான் காட்டப்படும். அது தான் ஒரு சீரிய கலை நோக்கம் கொண்ட ஒரு இயக்குனரின் அணுகலாக இருக்கமுடியும். இந்த "கட்டுமரத் துடுப்பு போல இடுப்பை ஆட்டுறா" டான்ஸ், மசாலாவாகச் சேர்க்கப்பட்ட சமாசாரம் தான். சில பெரிய இயக்குனர்களின் சில படங்களிலும் டான்ஸும் பாட்டும் இடம்பெற்றிருக்கின்றன தான். ஷாம் பெனெகல், பூமிகா என்ற படத்தில் கடந்த காலத்திய ஹம்ஸா வாடேகர் என்ற ஒரு மராத்தி நடிகையின் வாழ்க்கையை படமாக எடுத்திருக்கிறார். அதில் அந்நடிகை நடித்த காலத்திய பாணி சினிமா பாடல்களும் நடனங்களும் இடம்பெற்றிருக்கும். முழுதும் அல்ல. துணுக்குகளாக. லதாமங்கேஷ்கர் / ஆஷா போன்ஸ்லே யை மாதிரியாகக் கொண்டு இரண்டு சகோதரிகளின் கதையை ஒரு படத்தில் சொல்லியிருப்பார். அதிலும் பாட்டுக்கள் இடம் பெற்றுள்ளன. சத்யஜித் ரேயின் ஜல்ஸாகர் என்ற படத்தில் ஹிந்துஸ்தானி சாஸ்திரீய சங்கீதக் கச்சேரியே நடக்கும். கச்சேரிக்காக அல்ல. அழிந்து வரும் பிரபுத்துவ வாழ்க்கைச் சூழலைச் சொல்வதற்காக. மாறிய காலச் சூழலில், கடந்த கால பிரபுத்துவ எச்சமாக வாழும் ஒரு பிரபுவின் வாழ்க்கையில் பண்பும் நாகரீகமும், பண்பட்ட கலை வாழ்வும் இருந்தது. அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள புதுப் பணக்காரனின் பாமரத்தனத்தையும் பணத்திமிரையும் அங்கு நாம் காண்போம். இன்னொரு ரேயின் படத்தில் ரவீந்திரரின் சங்கீதம் ஒன்று காலை வணக்கமாக தனிமையில் உட்கார்ந்திருக்கும் ஒரு ஸ்த்ரீ பாடிக் கொண்டிருப்பாள். காட்சி தான் நினைவில் இருக்கிறது. படத்தின் பெயரல்ல. ரேயின் படத்தில் டான்ஸ் இருக்கே பாட்டு இருக்கே, ஷ்யாம் பெனிகல் படத்தில் பாட்டும் டான்ஸும் இருக்கே என்று வாதிடக் கூடும் தமிழ் சினிமா பெரும்புள்ளிகள் இருக்கக் கூடும். அவர்களின் பாமரத்தனம் அவர்களது வாழ்வுரிமை. ரேயும், ஷ்யாம் பெனிகலும் கட்டுமரத் துடுப்பு போல இடுப்பை ஆட்டுறா என்று ஒரு குத்தாட்டத்தை அங்கீகரிப்பவர்கள் இல்லை.. மிஷ்கினைப் பற்றி இவ்வளவு எழுதக் காரணம் அவரை மாத்திரம் ஸ்பெஷலாகக் குறிப்பிட்டு அவர் படத்தை பாத்தீங்களா என்று சொன்னதால் தான். மகா மட்டமான படங்களும், இயக்குனர்களும் நடிகர் கூட்டமும் மிஷ்கினைவிட பல மடங்கு அதிக கண்டனத்துக்கு உரியவர்கள் தான். ஆனால் அவர்கள் அக்கறைகளும் வாதமும் வசூலை மாத்திரம் பற்றியது. முடிந்தால் பின்னர் கலை என்றும் அவர்கள் உரிமை கொண்டாடுவார்கள். உலகத் தரம் என்றால் பேசமாட்டார்கள். (தொடரும்) | ||
from: |
Monday, March 14, 2011
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (19)
Thursday, March 10, 2011
குறும்படங்களின் திரைக்கதை -1
குறும்படங்களின் திரைக்கதை -1 செவ்ளி | |||
காட்சி:1 இரவு/கிராமம்/வெளிப்புறம். 1/1 பேரன்: -காட்சி முடிவு- காட்சி: 2 இரவு/கிராமம்/வெளிப்புரம் 2/1 மரங்கள் அடர்ந்தத்தோப்பு வழியே ஏரிமேட்டைக்கடந்து போகின்றனர். கோட்டுக்கழியால் தரையைத் தட்டியபடியே நடக்கிறார் கிழவர். வழியில் காவல்தெய்வம் தெரிகிறது. (தாத்தா போகிறபோக்கில் கன்னத்தில் கும்பிடு போட்டுக்கொள்கிறார்). இருள் முழுமையாக சூழ்கிறது. அப்போது தூரத்தில் நரிகள் ஊளையிடும் சத்தம் கேட்கிறது. பேரன்: தாத்தா: பேரன்: தாத்தா: பேரன்: தாத்தா: இருக்கணும் இல்ல. பேரன்: தாத்தா: பேரன்: தாத்தா: 2/2 பேய் பிசாசு பற்றிய எந்த ஒரு சிந்தனையுமற்று திரிந்தவனுக்குள் தற்போது இனம்புரியாத பேய் பற்றிய பயம் விரைவாக தொற்றியது. மேலும் அதுபற்றி கேட்கவிடாமல் இதயம் சற்றுவேகமாய் துடித்துக்கொண்டிருந்தது. கிழவரின் முதுகை உரசும் தூரத்தில் நெருங்கி நடக்கிறான் சிறுவன். -காட்சி முடிவு- காட்சி: 3 இரவு/கிராமம்/வெளிப்புரம் 3/1 தற்போது சிறுவனுக்குள் பேய் பற்றிய சிந்தனைகளும், கற்பனை உருவங்களும் வந்துவந்து மறைகின்றன. லாந்தர் வெளிச்சத்தில் காலடி தடத்தை உண்ணிப்பாக பார்த்து நடக்கும்போது ஆடி அசையும் வெளிச்சம் கூட, பேயாய் உருவெடுத்து மிரட்டுகிறது.ஒழுங்கையின் இருமருங்கிலும் அடர்ந்த காரை முட்புதர்களும், சப்பாத்தி கள்ளிகளும், செடி வகைகளும், லாந்தரின் நகர்தலில் தன் நிழல்களில் பலவித பூதாகர தோற்றத்தை வெளிப்படுத்தி அவனை அச்சமுறச்செய்கிறது. அப்போது எங்கிருந்தோ ஓர் உருவம் சிறியவனின் கால்களில் பலாத்காரமாய் உரசிவிட்டு விர்ரென மறைகிறது. ஏற்கனவே படபடப்பாய் இருந்தவனுக்குள் உள்ளங்காலிலிருந்து இரத்தம் ஜிவ்வென மண்டைக்கு ஏறுகிறது. பேரன்: என அலறினான். பய உச்சத்தின் நடுக்கத்தில் நடை தடுக்கி விழுகிறான். கையிலிருந்த கலயம் கீழே விழுந்து தண்ணீர் கொட்டுகிறது. சப்தம்கேட்டு திடுக்கிட்ட கிழவர் லாந்தரை வேகமாய் கீழே வைத்துவிட்டு ஒரே தாவலில் சிறுவனை வாரி அணைத்துக்கொள்கிறார். சற்று பதற்றத்துடன், தாத்தா: ஒண்ணுமில்லப்பா..ஒண்ணுமில்ல..ஏந்திர்..ஏந்திர்றா.. கிழவரின் அணைப்பில் சற்று பயம் குறைய, பேரன்: திடட்டிய வார்த்தைகள் பிசிறுதட்டி வெளியேறுகிறது. அவனை உரசிய உருவம் கிழவரையும் உரசிவிட்டுத்தான்போனது. அப்போது கிழவர் சிரித்துக்கொண்டே (தன் பின்னால் வாலாட்டிக்கொண்டிருந்த நாயைக்காட்டி) தாத்தா: தன்னை உரசி பயமுறுத்திய நாயின் மேல் சிறுவனுக்கு ஆவேசம் பொங்குகிறது. பேரன்: நாயி.. திருட்டு நாயி..(கோபமாக திட்டுகிறான்). தாத்தா: பேரன்: தாத்தா: -காட்சிமுடிவு- காட்சி: 4 இரவு/ மல்லாட்டைக்கொல்லை/குச்சுக்கட்டில்/வெளிப்புறம்/உட்புறம் 4/1 read: http://thamizhstudio.com/shortfilm_guidance_script_1.php |
ஒற்றைச் சாளரம் - பிரபலங்களின் சிறுகதைகள்
அவனை வேறு கோணத்தில் முதன் முதலாக பார்த்தேன். மிகவும் சிறியவன் அவன். தனது தாயின் மரணத்துக்குபிறகு நிம்மதியை அவன் முழுவதுமாக இழந்திருந்தான் பெருந்துக்கம் அவனை மிகவும் அலைக்கழித்திருந்தது. கொலைக்கு அதுவும் ஒருகாரணமாக இருக்கலாம் என நான் நண்பனிடம் கூறினேன். நண்பன் மறுத்தான் இல்லை இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதுதான் . வீட்டுநாயை கொல்பவன் மனிதனே அல்ல. அவனை நண்பனாக பெற்றமைகாக வெட்கப்படுகிறேன் என்றான். தேவையில்லாமல் நீ அவனுக்கு காம்யூவின் அந்நியன் முகச்சாயல் தரவேண்டாம். இதோபோலீசார் அவனைத்தேடிக்கொண்டிருப்பதாக செய்திதாள்கள் பேசுவதை பார். அவன் பிடிபட்டுவிடுவான். எல்லா கொலைகளுக்குபின்னாலூம் தத்துவகாராணங்கள் இருக்கத்தான் செய்யும். நியாயங்களை கூறாதே எனக்கூறி நண்பன் என் வாயை அடைத்தான்.
இருவரும் அந்தவீட்டின் வெளிப்புறத்தில் தோட்ட்டத்துக்கு வந்திருந்தோம். கொலை நடந்த வீடுபோல தெரியவில்லை. உள்ளே அவ்வப்போது யாரோ சிரித்துக்கொண்டிருக்கும் சப்தம் வேறு கேட்டது. நண்பனது மனைவியின் தங்கை வெளியேவந்து எங்களை பார்த்தாள். சுமாரன அழகு. அவளை அருகேவரச்சொல்லி அழைத்தேன். ஒருபழைய சினிமா பாடல்போல நடந்துவந்தாள். அவள்முகத்தில் மவுனம். அவள் சொன்னதகவல் என் நண்பனுக்கு ஏற்புடையதாக இல்லை.
நான் எனது நண்பனுக்காக பரிதாபப்பட்டேன். கல்லூரிக்காலத்தில் கால்பந்தாடத்தில் அசுரன் அவன். நாங்கள் மூவரும் இதரகல்லூரிகளில்நடக்கும் போட்டிகளுக்கு செல்லும்போதெல்லாம் அந்த புதியநகரத்தின் மாலப்பொழுதை உற்சாகாமாக முத்தமிட்டு மகிழ்வோம். ஒருமுறை அப்படி இளம் நகரத்துக்கு சென்றபோதுதான் சாலையின் எதிர்கொண்ட பெண்ணின் ஒரே புன்னகையில் தன் எதிர்கால வாழ்வை தீர்மானித்துக் கொண்டான். அவளும் நறுவிசான பெண்தான். அவளது புன்னகைவிலை மதிப்பற்றது. தேனிலவுக்கு சென்ற போது ஒருமுறை அவள் சற்று அளவு மிகுதியுடன் புன்னகைக்கபோய் படகுமுன் அனேக பறவைகள் கூடிவிட்டதாக நண்பன் பெருமை பேசினான். உண்மையில் அவளிடம் அத்தகையதொரு மந்திரசக்தி குடிகொண்டிருந்தது. ஆனாலும் அவளுக்கு என்னவோ மருமகளாக வந்ததிலிருந்து வீட்டின் வளர்ப்பு நாயை பிடிக்கவில்லை. உடன் நாய்க்கும் அவளை பிடிக்காமல் போய்விட்டது. நண்பனின் தாய்க்கு அவ்வப்போது மருமகள் பூசும் நறுமண திரவியங்கள் எரிச்சலை தந்திருக்கின்றன. ஆனால் அதனை நேரடியாக வெளிப்படுத்தாமல் நாயை மருமகளின் முன் அடிக்கடி உச்சி முகர்வதும் கொஞ்சி குலவுவதுமாக இருந்திருக்கிறாள் .இதனாலேயே நண்பனின் மனைவிக்கு நாயின் மேல் தீராத வெறுப்பு. ஒரு நாள் நண்பனின் தாய் புற்றுநோய் அவதிதாளாமல் இறந்துபோக தனது தாயின்மேல் அளவற்ற பாசம் வைத்திருந் தநண்பன், நிம்மதியற்றவனாக உழன்று கொண்டிருந்தான். வீட்டுவாசலில் தனிமையில் கிடந்த நாய்வேறு அவனது துக்கத்தை அதிகபடுத்திக்கொண்டே இருந்தது. இதுதான் நாயை கொலைசெய்ய காரணம் என அந்த மனைவியின் தங்கையும் கூறினாள் .இரவுகளில் நாயின் ஊளை அதிகமாக இருந்ததாகவும் அதுதான் அதன் மரணத்தை நண்பனின் மூலம் தீர்மானித்தது என்றும் அவள் கூறினாள்.
ஆனாலும் உடன் வந்த நண்பனுக்கு இந்த பதிலில் திருப்தியில்லை. இருவரும் வெளியே புறப்பட இருந்த சமயம் போலிசால் தேடப்பட்ட நாயை கொலைசெய்த நண்பன் அவசரமாக உள்ளே வந்தான். அவனை போலிஸ் எப்படி விட்டது என நண்பன் என்னிடம் கேட்டான். நாயை கொலை செய்தவன் எங்களை பார்த்தும் பார்க்காதவனாக வேகமாக மனைவியைத் தேடி வீட்டிற்குள் ஓடினான். நாங்கள் மவுனமாக அங்கிருந்து வெளியேறினோம். அங்கே நாய் கட்டிவைக்கப்பட்டிருந்த சங்கிலி மறுமுனையில் வெற்று வளையத்துடன் அனாதையாக கிடந்தது.
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 30வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
நாள்: சனிக்கிழமை (12-03-2011)
முதல் பகுதி: (3 மணி) கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல் இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் சிம்பொனி மற்றும் சேர்ந்திசைக் கலைஞர் அகஸ்டின் பால் கலந்துக் கொள்கிறார். இசையின் நுணுக்கங்கள் பற்றியும், குறும்படங்களில் இசையைப் பயன்படுத்தும் விதம் பற்றியும் ஆர்வலர்களுடன் விரிவாக கலந்துரையாடுகிறார். தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டத்தில் இதுவரை இசைப் பற்றிய வழிகாட்டல் நடைபெற்றதே இல்லை என்கிற ஆர்வலர்களின் அந்த குறையும் இப்போது போக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல் இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்: மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் அஜயன் பாலா சித்தார்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இவர் பெரும்பாலான திரைப்படங்களில் கதை விவாதக் குழுவில் பங்கேற்று வருபவர். மதராசப் பட்டினம், தென்மேற்குப் பருவக் காற்று போன்ற படங்களில் விவாதங்களோடு, நடிகராகவும் வலம் வந்தவர். விகடனில் நாயகன் தொடரின் மூலம் சரித்திர எழுத்தாளராகவும் அறியப்படுபவர். சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். from: http://thamizhstudio.com/shortfilm_guidance_kv_30.php |
Wednesday, March 9, 2011
பெருந்தேவி – வானை முட்டும் நுரைகளின் கெக்கலி
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள் -6 பெருந்தேவி – வானை முட்டும் நுரைகளின் கெக்கலி
‘புத்தகங்கள் தமக்குள்ளே உரையாட இருக்கிறோம் யாம் வாசித்துக்கொண்டே. நிகழும் அல்லது அற்ற உரையாடலின் சாத்தியத்தை நிர்ணயிப்பது தமிழ் நூன்மரபு. கவிதைகள் இவை பண்பட்ட மரபின் வசமானால் மாத்திரமே எழுத்தென்று அறியப்படட்டும்’ என்ற வரிகளை வாக்குத் தத்தங்களாக்கி கவிதைக்குள்ளே அழைத்துச் செல்லும் தனது முதல் கவிதைத் தொகுப்பான ‘தீயுறைத்தூக்கம்’ எனும் கவிதைக்குரலுடன் வந்தார், பெருந்தேவி. 1997- ல் வெளிவந்த இந்நூலுக்குப் பின் பெருந்தேவியின் கவிதை ஆளுமை நிகரற்றப்பயணங்களால் விரிந்து கொண்டேயிருக்கிறது. தன் அக உணர்வுகளை தொடர்ந்து அர்த்தப்படுத்தவும் மொழியாக்கவும் நாம் எடுத்துக்கொள்ளும் மொழிவழியான பயிற்சி தான் கவிதை என்ற புரிதலை தமிழ்த்தளத்தில் முதன்மையாக முன்வைத்த பெண் கவிஞர் பெருந்தேவி. சொற்களின் வளமான தேசத்தை இவர் தனக்கு ஏற்படுத்திக்கொண்டது போல் எவரும் அதற்கு முன்போ பின்போ ஏற்படுத்திக்கொள்ளவில்லை. ஒவ்வொரு சொல்லின் பின்னாலும் தளும்பிக்கொண்டிருக்கும் அர்த்த உணர்வு சலித்துப் போன காலக்கட்டமதில் அச்சொற்களின் வழியாகவே அவ்வுணர்வுகளைப் புழக்கத்திற்குக் கொண்டு வரும் மொழியைக் கவிதையாக்கினார், தன் தீயுறைத்தூக்கத்தில். விழைந்து தானிருக்க மறுத்து தன்னிருப்பை கற்கும் வாழ்வு கசடற அதனதன் பிறகான வண்ணத்தின் நீர்முகம் அலையும் இப்படித்தான் சொற்கள் தமக்குள் அடர்த்தியாக்கி வைத்திருந்த உணர்வுகளை சொல்லும் பொருட்டும், ஒரு சொல்லோடு பிறிதொரு சொல்லை இணைத்து வேறு அர்த்தங்களுக்கு அவ்வுணர்வுகளை இழுத்துச்செல்வது என்றும் நவீனக்கவிதையில் இத்தகைய சொல் முறையை அறிமுகப்படுத்தியதுடன் அம்முறையைத் தன் வசப்படுத்தவும் செய்தார். சென்றது கடலுள் இத்தகைய சொற்சுவையும் கட்டமைப்பும் கொண்ட கவிதை மொழியிலிருந்து பின்னாளில் தன்னைத் தளர்த்திக்கொண்டார். இது இவரது மொழி வெளிப்பாடானது, இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பான, ‘இக்கடல் இச்சுவை’யில். ஒவ்வொரு சிறுவனின் வீட்டின் பின்புறத்திலும் இக்கவிதை பெண்- ஆண் உடலை குறியீடுகளாக்கி, பாலியல் அரசியலை மிகவும் நுட்பமாகப் பேசும் கவிதை. இக்கவிதை பேசும் பாலியல் சமன்பாடுகள் நவீன பெண் –ஆண் உளவியலையும் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டக்கூடியன. பெண்- ஆண் என்று எந்தப் பக்கமும் சாயாமல் இரு வகையான உடலும் பாலியல் சிக்கலுக்குள் சிக்கிக்கொண்டு தத்தளிப்பதை அதன் பொருள் முனை முறியாது எடுத்து வைத்திருக்கிறார். அதே சமயம், எவ்விடத்தில் சிறுமி, சிறுவனாகிறான் என்றும் எங்கு சிறுவன் சிறுமியாகிறாள் என்றும் பிறிதொரு சமன்பாட்டை விளக்குகிறார். உடலின் பெண்மை, ஆண்மை இரண்டையுமே இழக்கச் செய்தலோ அல்லது இரண்டையுமே வலிமைப்படுத்தலோ சமூகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது. நவீனச் சமூகத்தின் பெண், ஆண் ஆதங்கங்கள் விமானமாயும் காதணியாகவும் மாறுவது அழகர்த்தம் தருகின்றது. எந்தச் சமூக அமைப்பிலும் ஆணின் குறிகள் உயரப்பறக்கும் இழுவிசையுடனும், பெண்ணின் குறிகள் தன் புகழுரை பேசும் அணிகளை அணிந்து கொள்ளும் ஆர்வங்களுடனும் தாம் மதர்த்து எழுகின்றன. ஆனால், ’அழுகுணி’ கவிதை பந்தயத்தில் தான் எந்தப்பக்கம் நின்று ஆடினாலும் வெற்றி பெறும் ஆணின் விளையாட்டைச் சொல்கிறது. இத்தந்திர விளையாட்டைப் புரிந்து கொள்ளுதல் பாலியல் அசமத்துவத்தைப் புரிந்து கொள்ளவும் உதவும். அழுகுணி ஊரிழுக்கும் ஒவ்வொரு முக்கிலும் ’உலோக ருசி’ என்ற தன் மூன்றாம் தொகுப்பில் நவீன வாழ்வில் நவீனமடைந்திருக்கும் மனித உறவுகளின் புதிர்களையும் அறியாமைகளையும் விலங்குகளையும் விடுவிக்கும் கவிதைகளுடனும் அவ்வாழ்வின் முட்டுச்சந்துகளுடனும் திருப்பங்களுடனும் கூட வருகிறார். இணைய வெளி தந்த புலனுணரா காமங்களை மொழிப்படுத்துவதில் தீவிரப்பட்டவராயும் அப்பாலினத் தன்மையை அதன் நேர்மையான அரசியலுடன் முன்வைப்பவராயும் இருக்கிறார். ’மதிப்பு’ எனும் கவிதையில், ’ஆண்கள் / பெண்கள் / இருபாலர் / உடல்களுக்கு / உடல்களின், நீண்ட உறவுக்கு / கொழுத்த வங்கிக்கணக்கு போதும். / சின்ன முத்தங்களே / தரமுடியாத உறுதிமொழிகளைக் / கேட்கின்றன விலையாக. ’ கவிஞர் குறிப்பிட்டிருக்கும் உடல் சார்ந்த ஒப்பந்தங்களும் பேரங்களும் இன்றைய பாலின உறவுமுறையின் நேரடியான அணுகுமுறைகளாகி விட்டன. என்றாலும் எனக்கு பெருந்தேவியிடம் பிடித்தமானது, அவரது கவிதைகளில் தொனிக்கும் பல்வேறு பட்ட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் நின்று பேசும் பெண்குரலாய் மாறி நிற்கும் கவிதைகள் தாம். தன் உடல் வெளியை விரிக்கும் குரலாயும் உடலுக்கும் அதன் மொழிக்கும் பொதுத்தன்மையையும் அடையாளத்தையும் கட்டமைப்பில் அவர் தீவிரப்பட்டிருப்பது இங்கே தான். ஒரு பெண்ணியவாதிக்கு வயப்படும் தீவிரமான போராட்டத்தை இவர் மொழிவழியாகவும் அதில் கையாளும் நவீனப் படிமங்கள், உருவகங்கள், ஆளுமைச் சித்திரங்கள் வழியாகவும் தொடர்ந்து வழங்குகிறார். இது பெண்ணல்லாதோருக்கும் பெண்விடுதலைக்கான விழுமியங்களைக் கற்றுக்கொடுக்கும் பயிற்சியை ஆற்றும் என்பதில் சந்தேகமில்லை. புஷ்பா சேலையணிந்த முதல் நாள் புஷ்பாவின் அண்ணன் இக்கவிதை, மறுவாசிப்பில் பால் நிலை உட்பொருளை மிகத்துல்லியமாகவும் கத்தியைப் போன்றும் எடுத்துவைக்கிறது. குடும்பச்சுவருக்குள், கழிவறை, குளியலறை, படுக்கையறையின் சுவர்களுக்குள் தனிமனிதன் கொண்டிருக்கும் பாலியல் உள்நோக்கங்கள், வெளியுலகில் அவற்றை நேர்மையின்மையாய் ஆக்கி வன்மங்கொண்டு எழும் தன் சுயத்தை பிறர் மீது ஏவும் வல்லமையான பாலிமை கொண்ட மனிதர்கள் தாமே நாம்! பாலியல் அரசியலைப் பேசுவதைக் காலமொட்டியும் வரலாறு ஒட்டியும் தன் இயக்கமாக்கிக் கொண்ட நவீனத்தமிழ்க் கவிதை, இன்று பேசவந்திருப்பதோ பண்பாட்டால் பிளவுண்டிருக்கும் பெண்ணுடல்களை அறிந்த காத்திரமும் அதற்கான உழைப்பும் கொண்டு அந்தப் பல உடல்களையும் முன் வைக்கும் இயக்கத்தை நோக்கி எல்லா பெண்களையும் குரலெடுத்து அழைக்கிறது. இது மிகவும் கடினமான முயற்சி என்றாலும் சீதை, ஆண்டாள் போன்ற தன் உடலை பக்தி என்ற பெயரில் ’கார்க் அடைப்பானா’ல் அடைத்துகொண்ட பெண்களை முக்கியமான படிங்மகளாக்குவது தொடரியக்கத்தைச் சாத்தியப்படுத்தாமல் போய்விடுமோ என்ற சந்தேகம் எழுகிறது. அப்பெண்களின் உடல்கள் ஆதிக்கத்துடன் இயங்கிய உடல்கள் என்பதால் தாம் கடவுளின் உடலை ஆண் உடலாக வரிந்து கொண்டவை, அதற்கு தம் உடலை வழங்கத்துணிந்தவை என்பது மறை பொருள். இம்மாதிரியான சிக்கலான ஒற்றைத்தன்மையான பெண் படிமங்களைப் புறக்கணித்தல் அல்லது பிற பண்பாடுகள் சார்ந்து சீரமைத்தல் எல்லா பெண்களும் ஓர் அணியாக உணர்வுகொள்ள உதவக்கூடும். பெருந்தேவியின் ‘என் புனல்’ கவிதை பேராற்றின் சுழிப்பும் பாய்ச்சலும் நிறைந்த கவிதை. நவீனபெண்ணுடலை மொழிப்படுத்தும் அழகியலும் சொல்லாட்சியும் கொண்ட இக்கவிதை, பெண்ணுடலுக்கான இலக்கைத் தீர்மானித்த அதே சமயம், அதைக்கைக்கொள்ளும் நம்பிக்கைகளுடனும் பாய்கிறது. மறுவாசிப்பில் தீவிர அர்த்தம் பெறும் உட்பொருள் கொண்ட கவிதை. வாசித்துப்பாருங்கள்! என் புனல் ---------------------------------------------------------------------------------------------- சிறு குறிப்பு: பெருந்தேவி ‘தீயுறைத்தூக்கம்’, ‘இக்கடல் இச்சுவை’, ‘உலோக ருசி’ ஆகிய மூன்று கவிதைத்தொகுப்புகளை எழுதியிருக்கிறார். பண்பாட்டு மானுடவியலில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். அமெரிக்காவில் க்ளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் வருகை உதவிப்பேராசிரியாகப் பணியாற்றுகிறார். | |||
ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை / புத்தக வெளியீடு (11-03-2011)
ஆதவன்
ஜான் ஆபிரகாம் கலகக்காரனின் திரைக்கதை / புத்தக வெளியீடு
நாள்: வெள்ளிகிழமை, 11-03-2011
இடம்: ரஷ்ய பண்பாட்டு மையம், கஸ்தூரி ரங்கன் சாலை, ஆழ்வார்ப்பேட்டை, சென்னை.
நேரம்: மாலை ஆறு மணிக்கு (6 PM)
தொகுப்பாசிரியர்: ஆர்.ஆர். சீனிவாசன்
புத்தக வெளியீட்டிற்கு முன்:
வரவேற்புரை: கே.வி. ஷைலஜா, வம்சி புக்ஸ்
ஒருங்கிணைப்பாளர்: அருண், தமிழ் ஸ்டுடியோ.காம்
தோழர் பினாயக்சென் குறித்த ஆவணப்படம் திரையிடல் - இயக்கம்: அஜய் டி.ஜி.
பினாயக்சென்னின் குற்றங்கள் - வழக்குரைஞர் சுந்தர்ராஜன்
நூல் வெளியிடுபவர்: மின்னல் (ஜான் ஆப்ரகாமின் படத் தயாரிப்பாளர்)
பெற்றுக் கொள்பவர் - இயக்குனர். பீ.லெனின்
புத்தக அறிமுகம் - பவ செல்லதுரை, வம்சி புக்ஸ்
புத்தகம் குறித்து:
பேரா: இரவீந்திரன், துறைத்தலைவர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னை பல்கலைக் கழகம் அழகிய பெரியவன், எழுத்தாளர்.
கே.என். ஷாஜி, எழுத்தாளர்.
மாமல்லன் கார்த்தி, இயக்குனர்.
புத்தக வெளியீட்டிற்கு பின்:
வறட்சி நிலத்திலிருந்து குறிஞ்சி நிலத்திற்கு (வேலூரில் உலக வெப்ப மயமாதலை எதிர்த்து ஓர் இயக்கம்)
அறிமுகம்: ஆர்.ஆர். சீனிவாசன்
பேசுபவர்: வேலூர். சீனிவாசன், இந்தியன் கிரீன் சர்வீஸ்.
அனைவரும் வருக..
Tuesday, March 8, 2011
ஜான் ஆப்பிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை
லிவி |
![]() |
"பட்டினி எனக்குப் புதிதல்ல. என் படம் மக்களுக்கு காண்பிப்பதற்ககே, நானும் நண்பர்களும் பிலிம் பெட்டி சுமந்து மூலைமுடுக்குகளில் என் படத்தைக் காண்பிப்போம். நான் ஒரு துணி விரித்து மக்களிடம் காசு கேட்பேன். தருவதற்கு மனதுள்ளவர்கள் தருவார்கள். விநியோகஸ்தர்கள் என் படத்தைத் தொடவிடமாட்டேன்."
இந்த வரிகளுக்குச் சொந்தக்காரன் ப்ரெஞ்சு சினிமாவின் புதிய அலையை ஏற்படுத்திய இயக்குநரோ, ஈரானிய இயக்குநரோ அல்லது உலகமே வியந்து கொண்டாடிக் கொண்டிருக்கும் இயக்குநரோ அல்ல. இவை தமிழில் "அக்ரஹாரத்தில் கழுதை" என்ற கலைப் படத்தை எடுத்த ஜான் ஆப்பிரகாமினுடைய வார்த்தைகள். ஜான் ஆப்பிரகாம் என்னும் அதி அற்புத கலைஞனைப் பற்றித் தொகுத்திருக்கிறார்
காஞ்சனை திரைப்பட இயக்கத்தை நடத்திவருபவரும் ஆவணப் பட இயக்குனர்களில் முக்கியமானவருமான ஆர்.ஆர்.சீனிவாசன். "ஜான் ஆப்பிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை" என்ற
பெயரில் வம்சி வெளியீடாக இப்புத்தகம் வந்துள்ளது.
சினிமா என்கிற கலை வடிவம் தமிழகத்தில் வேரூன்றி எழுபத்தைந்து ஆண்டுகளைத் தாண்டிவிட்டது. அதன் பாய்ச்சல் எந்தவொரு வேற்று கலைக்கும் இணையற்றது. அவை ஏற்படுத்திய சமூக மாற்றத்தையும் வரலாற்றையும் உலக அளவில் நாம் அறியவில்லையென்றாலும் தமிழக அளவில் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. இன்றளவிலும் ஒரு நடிகன், வசன கர்த்தா, முன்னாள் நடிகை இவர்களே நாம் விரும்பாவிட்டாலும் வரும் தேர்தலில் நம் தேர்வாக இருக்க இயலும். அரசியலைத் தாண்டி இன்றைய தமிழ் சினிமாவின் காலகட்டம் மிக முக்கியமானது. அதற்கு முக்கிய காரணிகளில் ஒன்று இலக்கியவாதிகள் எல்லாம் தமிழ் சினிமாவை நோக்கி படையெடுக்கும் காலமிது. சினிமாவுக்குள் செல்வது என்ற புதுமைப்பித்தன் தொடங்கி ஜெயகாந்தன் முதலான நவீன இலக்கியத்தின் ஆதித் தன்மையிருந்தாலும், இன்றைய நிகழ்வுகள் முற்றிலும் மாறுபட்டவை. இலக்கிய ஆளுமைகள் என்று அறியபட்டவர்களெல்லாம் தடுக்கி விழுந்தால் சினிமா வாய்ப்புக்கு அலைவதை பார்க்கலாம். இன்றையச் சூழலில் இரவு நேர மோகினியைப் போன்றது சினிமா. பயம் தொற்றிக் கொண்டாலும் மோகத்தை விட இயலாது. கால்கள் கட்டுக்குள் இராமல் அவளைத் தேடி நடக்கத் தொடங்கும்.
இந்த இலக்கிய பேராண்மைகள் மாற்று சினிமாவையோ, சினிமா என்பதன் கலை வடிவத்தை நேசித்தோ இயங்குவதில்லை. எந்த ஒரு பரீட்சார்ந்த முயற்சிக்காவும் இவர்கள் சினிமாவை விரும்பவில்லை. சந்தைமயமாக்கி விடப்பட்ட உலகில் தங்களையும் சேர்த்து விற்கிறார்கள். இங்கு ஒன்று சொல்லியாக வேண்டும் எல்லா காலத்திலும் இலக்கிய முகம் கொண்ட இயக்குநர்களே சில நல்ல படங்கள் வருவதற்குக் காரணம், இலக்கிய முகம் காட்டிய எழுத்தாளர்கள் அல்ல.
இந்த கோபங்கள் எல்லாம் அனன்று எழக் காரணம் "ஜான் ஆப்பிரகாமின் கலகக்காரனின் திரைக்கதை". இந்த புத்தகத்தில் முதல் பகுதியாக ஜான் ஆப்பிரகாமின் கட்டுரைகள் தொகுப்பட்டிருக்கின்றன். இந்த கட்டுரைகள் ஜானுடைய சினிமாக் கோட்பாட்டை பேசுகின்றன. ஜானைப் பற்றி ஜான் கூறுவதாக தொடங்கும் கட்டுரையில் ஜானினுடைய வாழ்க்கைக் குறிப்புகளை அவரே குறிப்பிடுவதுடன் தொடங்குகிறது. கம்யூனிசக் கண்களோடே வளர்ந்திருக்கிறார் ஜான். அவ்வாறே வாழ்க்கை முழுமையும் மக்கள் சினிமாவுக்காக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார். 'மூன்றாவது கண்ணின் கலை' என்னும் கட்டுரை ஜான் ஆப்ரகாமின் சினிமாக் கோடாட்டை முன்வைக்கிறது. கலை என்பதை வெகுஜன மக்களுக்கு என்பதைத் தவிர்த்து இங்கு வேறொன்று இல்லை என்பதை முன்மொழிகிறார். தான் சினிமாவை தேர்ந்தெடுக்க காரணமாகச் சொன்னவை 'எனது சக மனிதர்களுடன் தொடர்பு கொள்ள நான் தேர்ந்தெடுத்த சாதனம் தான் சினிமா. காமிராவின் மொழியே திரைப்படம்'.
சினிமாவை ஜான் புரிந்து கொண்ட விதம் இங்கு மிக முக்கியமானது "திரைப்படம் இலக்கியமோ, இசையோ, கவிதையோ, ஓவியமோ இவையனைத்தும் ஒன்றினைந்த வடிவமோ அல்ல.அதைச் சொற்களில் விளக்குவது கடினம். சினிமா தொழிற்புரட்சி மூலம் ஏற்பட்ட இயந்திர உருவாக்கம். எனினும் மனித உணர்வுகளின் வெளிப்பாடு. அதில் காலத்தை ஒட்டிய மனித இயக்க அணுகுமுறைகளோடு காலத்தை உதறும் போக்கும் உண்டு"
கலை கலைக்காகவா கலை மக்களுக்காகவா என்ற அதரப் பழசான கேள்வி தடை எதுவும் செய்யப் படாமல் எல்லாக் காலங்களிலும் கேட்கப் பட்டுக் கொண்டே வருகிறது. மக்கள் கலையை ரசிக்கத் தெரியாத வெள்ளந்திகளாகவும் அதை ரசிக்கக் கற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு முறையான பயிற்சி வேண்டும் என்பதும் தமிழ் இலக்கிய தீர்க்க தரிசிகள் சொல்லிக் கேட்ட பதில்களில் ஒன்று. ஜான் இந்த தடத்தில் வேறுபட்டு நிற்கிறார்.
சாதாரண மனிதனை புரிந்து கொண்டு அவனுடைய தொன்மங்களில் சொல்வதே அது. அதற்காக அவனை பயிற்சிவகுப்புக்கு அனுப்பாமல் படைபாளியை அவன் வாழ்வை புரிந்து கொள்ளச் சொல்கிறார். அவனுடன் இரண்டறக் கலப்பதிலே தான் இது சாத்தியம் என்கிறார். அது தான் அவர் கூறும் மூன்றாவது கண். மேலும் சாதாரணமான மனிதனுக்கு பூடகமான குறியீடுகளை சினிமாவில் மறுதலிக்கிறார்.
பின்நவீனத்துவச் சிந்தனையான பிரதியைக் கட்டுடைத்தலில் எழுத்தாளன் கூறியவை ஒன்றாகவும் வாசகன் புரிந்து கொண்டவை ஒன்றாகவும் இருக்கும் என்பதைப் போன்று இல்லாமல் நான் நேரடியாகவே ஒவ்வொன்றையும் சொல்ல விருப்புகிறேன் என்கிறார்.
'ஜானைப் பற்றிய நினைவுகளும் விமர்சனங்களும்' கட்டுரைகள் ஜானைப் பற்றிய முழுச் சித்திரங்களையும் எழுதிவிடுபவை. ஜானைப் பற்றிய கட்டுரைகளில் முக்கியமானவைகளில் இரண்டு வெங்கட் சுவாமிநாதனுடைய விமர்சனங்களும், யமுனா ராஜேந்திரனுடைய மிகத் தீர்க்கமான பார்வையும்.வெங்கட் சுவாமிநாதன் 'அக்ரஹாரத்தில் கழுதை' திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர். வெங்கட்
சுவாமிநாதன் ஜானின் திரைப்படத்தில் உள்ள குறைபாடுகளை ஜான் என்னும் ஆளுமையின் குறைபாடாக விவரிக்கிறார். ஜானின குடிப் பழக்கத்திற்கும் திரைப்படத்தின் அழகியல் குன்றலுக்கும் நேரடித் தொடர்பு உள்ளதென்பதே அவர் வாதம். யமுனா ராஜேந்திரனின் கட்டுரை ஜானின் திரைப்படங்களில் உள்ளார்ந்த நேர்த்தியையும் அழகியல் என்பதை மறுத்தே ஜான் பிரக்ஞையுடன் செய்த விடயமாகவே
முன்வைக்கிறார். ஆங்கில திரைப்படங்களின் வழி தோன்றிய கட்டமைக்கப்பட்ட ஒழுங்கமைந்த அழகியலுக்கு எதிர் கலகமாக லத்தின் அமெரிக்கத் திரைப்படங்கள் முன்வைத்த ஒழுங்கற்ற கலக இயங்கியலே ஜானின் திரைப்படங்களுக்கு அடிப்படை. ஜெயமோகன் என்னும் உலக சினிமா வசனகர்த்தாவின் ஜானைப் பற்றிய மதிப்பீடுகளுக்கு எதிர்வினையாக அமைந்திருக்கிறது யமுனா ராஜேந்திரனின்
கட்டுரை. மேலும் அவர் குடிப்பழக்கத்திற்குக் காரணம் யதார்த்தத்துடன் தன்னை சமரசம் செய்து கொள்ள இயலாத தன்மை என்பதே ஒவ்வொரு கட்டுரையாளனும் முன்வைப்பவை. குடிப்பழக்கத்திற்கு அடிமையானாலும் ஜானின அன்பு எவரொருவரும் சந்தேகிக்க இயலாத தூய்மையைக் கொண்டிருந்தது.
ஜான் ஜனாநாயகத்தின் வரையரையே தன் சினிமாவிற்கான இலக்கணமாக வகுத்திருந்தார். மக்களின் பங்களிப்பால் தயாரிக்கப்பட்டு அதன் இயக்குதலிலும் அவர்களின் பங்களிப்போடு அவர்களுக்கே மறுபடியும் திரையிட்டுக் காட்டப் பட வேண்டும் என்பதே அதன் அடிப்படை. இதற்காகவே ஏற்படுத்தப்பட்ட இயக்கம் 'ஒடிஸா'. இதன் மூலம் மக்களிடம் இரண்டு ரூபாய் முதல் நூறு ரூபாய் வரைப் பெற்று ,மக்களின் பங்களிப்போடு இயக்கப்பட்ட திரைப்படம் "அம்ம அறியான்". திரைப்பட உருவாக்கத்தில் மாற்று சினிமாவுக்கான மையத்தை மாற்றியமைத்த சாதனையைச் செய்தது இந்த திரைப்படம்.
ஜான் திரைப்படமாக்க முயன்று தடங்கல்கள் மற்றும் சமரசம் கொள்ளாத் தன்மையினால் நின்று போன திரைப்படங்கள் ஏராளம். சிறுகதைகள், கவிதைகளை எழுதியிருக்கிறார். நாடங்கங்கள் நிகழ்த்தியிருக்கிறார். ஜானின் வார்த்தைகள் அவர் படைப்பின் ஆதாரத் தன்மையை புரிந்து கொள்ள மிக இயல்பாக உதவும் " என் சக உயிர்களோடு சேர்ந்து இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள
தேர்ந்தெடுத்த மீடியேட்டர் தான் சினிமா".
கலை என்கிற உன்னதத்தை முழுதும் புரிந்து கொணட கலைஞன் ஜான்.
கலை இலக்கியத் தொடர்பு உடையவர்களை சுய பரிசோதனை செய்து கொள்ள, சமரசப்பட்டு பழகிப் போன இதயத்தை உலுக்க, அரிதாரம் பூசிக் கொண்ட ஒப்பனைகளை கலைக்க நம் முன் கண்ணாடிச் சில்லுக்ளாய் சிதறிக் கிடக்கிறது ஜான் ஆப்பிரஹாமின் வாழ்க்கை. அதன் மேலே கால்கள் வைத்து நடக்க, குருதிகள் வழிந்தோடத் தொடங்கும் கணங்களில் முழுமை பெறத் தொடங்கும் ஜான்
ஆப்பிரஹாமின் தன்னலமற்ற அர்ப்பணிப்பு.
ஜானின் வாழ்வும் மரணமும் பல இடங்களில் வின்சென்ட் வான்காவை நினைவுபடுத்துவதை தவிர்க்க இயலுவதில்லை. இரு கலைஞர்களும் வாழ்வின் விளிம்பு நிலை மனிதர்களோடு பயணித்தவர்கள். இருவரும் வாழ்வென்பதை தாமாக விரும்பியும் விரும்பாமலும் துன்பங்களோடு அமைத்துக் கொண்டவர்கள். வான்காவிற்கு அவர் தம்பி தியோ என்றால் ஜானிற்கு அவர் மூத்த சகோதரி. தன் தமக்கை புனிதர் பற்றிய படம் ஒன்றை எடுக்க ஜானுக்கு கொடுத்த பணத்தை 'அக்ரஹாரத்தில் கழுதை'க்கு பயன்படுத்திக் கொண்டுவிட்டு, அவரிடம் சென்று 'கழுதையைப் பற்றி படம் எடுத்திருக்கிறேன். கழுதைக்கு பக்தி அதிகம் இருக்கிறது என்றிருக்கிறார். இதை வாசித்தவுடன் சிரிப்பை அடக்கிக் கொள்ள சிறிது நேரம் பிடித்தது.
வான்காவைப் போலவே ஜானின் மரணமும் பூடகத் தன்மை நிறைந்திருக்கிறது. குடியின் மிகுதியால மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கிறார். வாழ்வை பறவையைப் போல் சுதந்திரமாக
வாழ்ந்தவன் தானும் பறப்பேன் என இறுதி கணங்களில் நினைத்திருக்கக் கூடும்.
"ஜான் ஆப்பிரகாம்: கலகக்காரனின் திரைக்கதை" - ஆர்.ஆர். சீனிவாசன்
வம்சி பதிப்பகம்,
19, டி.எம். சாரோன்,
திருவண்ணாமலை -01
9444867023, 04175-251468
www.vamsibooks.com
vamsibooks@yahoo.com
கிடைக்குமிடம் -
டிஸ்கவரி புக் பேலஸ்
முனுசாமி ரோடு,
பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,
கலைஞர் நகர், சென்னை.
Ph: 9940446650