நல்லதோர் வீணை செய்து அறிமுகக் கூட்டம் |
நல்லதோர் வீணை செய்து - தமிழ் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை குறும்படமாக வடித்து, மக்களிடையே கொண்டு செல்வது இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் இலக்கியமும், ஊடகமும் ஒரு சேர, ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் வாய்ப்பு அமையும். இதன் பிரதிபலனாக சிறந்த படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேலும் தமிழ் ஸ்டுடியோவின் கிராமத் திரையிடலில் இந்தக் குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்களிடையே கலந்துரையாடல் நடத்தப்படும். இதன் மூலம் ஓரளவேனும் மக்களுக்கு நல்ல இலக்கியங்களை கொண்டு சேர்க்கும் வாய்ப்பு கிட்டும். இந்த திட்டத்திற்காக மிக தீவிர வாசிப்பு பழக்கம் உள்ள பத்து ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி அன்று ஒரு அறிமுகம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் போக்கு மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது. சுமார் 13 மேற்பட்ட ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இதன் படி திரைக்கதை அமைக்க இருவர், ஒளிப்பதிவு பணிக்கு இருவர், இயக்கம் இருவர், கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியளிக்க ஒருவர், இடங்களை தெரிவு செய்ய ஒருவர், படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு பணிகளை செய்ய இருவர் என குழுப் பிரிக்கப்பட்டது. இந்த மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அவர்களுக்கான பயிற்சி தொடங்கப்படுகிறது. திரைக்கதை அமைத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இந்த திட்டம் அனேகமாக மே அல்லது ஜூன் மாதம் முதல் செயல்படத் தொடங்கும். பயிற்சி மற்றும் குறும்பட உதவிகள் தமிழ் ஸ்டுடியோ மூலம் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. ஆர்வலர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட துறை, அவர்கள் பற்றிய முழு விபரங்கள் ஆகியவை விரைவில் வெளிவரும். http://thamizhstudio.com/shortfilm_guidance_nvs.php |
Showing posts with label short story into short film. Show all posts
Showing posts with label short story into short film. Show all posts
Wednesday, February 16, 2011
நல்லதோர் வீணை செய்து
Subscribe to:
Posts (Atom)