Showing posts with label nalladhor veenai seidhu. Show all posts
Showing posts with label nalladhor veenai seidhu. Show all posts

Thursday, August 25, 2011

நல்லதோர் வீணை செய்து - ஆர்வலகளுக்கான அழைப்பு


நல்லதோர் வீணை செய்து - ஆர்வலகளுக்கான அழைப்பு

http://thamizhstudio.com/shortfilm_guidance_nvs_3.php

வணக்கம் நண்பர்களே,

தமிழ் ஸ்டுடியோவில் உலகின் மிக சிறந்த இலக்கிய சிறுகதைகளை குறும்படங்களாக எடுப்பதற்கு நல்லதோர் வீணை செய்து என்றொரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு உலக இலக்கியங்களில் வெளிவந்துள்ள (குறிப்பாக தமிழில்) சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அதனை குறும்படமாக எடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு சிறந்த சிறுகதை குறும்படமாக உருமாறும்.

திரைப்படத் துறை மீதும், இலக்கியத்தின் மீதும் ஆர்வமுள்ள பத்து ஆர்வலர்களை தமிழ் ஸ்டுடியோ ஒருங்கிணைத்து அவர்களுக்கு இது தொடர்பாக பயிற்சியளித்து விரைவில் இந்த திட்டத்தை தொடங்க உள்ளது.

இதில் பங்கேற்க உங்களுக்கு ஆர்வமிருப்பின் கீழ்க்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளவும். அல்லது மின்னஞ்சல் செய்யவும்.

9840698236, 9894422268

editor@thamizhstudio.com

http://thamizhstudio.com/shortfilm_guidance_nvs_3.php


Wednesday, February 16, 2011

நல்லதோர் வீணை செய்து - திரைக்கதை பயிற்சி



நல்லதோர் வீணை செய்து


திரைக்கதை பயிற்சி

சிறந்த சிறுகதைகளை குறும்படமாக்கும் முயற்சியின் இத்திட்டத்தில் முதலில் தேர்ந்தேடுக்கப்பட்ட ஆர்வலர்களுக்கு திரைக்கதை எழுதுவதற்கான பயற்சி அளிக்கப்படுதிறது.

நாள்: 18-02-2011 முதல் 19-02-2011

இடம்: தமிழ் ஸ்டுடியோவின் கோடம்பாக்கம் அலுவலகம்.

நேரம்: காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை.

ஒவ்வொரு நாளும் இரண்டு பிரிவுகளாக பிரித்து திரைக்கதை எழுதவதற்கான பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. காலை 10 முதல் 1 வரை ஒரு பகுதியாகவும், மதியம் 2 முதல் 6 வரை இரண்டாவது பகுதியாகவும் நடைபெறவிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்வலர்களைத் தவிர ஆர்வமுள்ள நண்பர்கள் முன்பதிவு செய்து விட்டு கலந்துக் கொள்ளலாம்.

பயிற்சி அளிக்க வரும் சிறப்பு பயிற்சியாளர்கள்:

வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு - எழுத்தாளர் அஜயன் பாலா

வெள்ளிக்கிழமை மதியம் 2 மணிக்கு - ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன்

சனிக்கிழமை காலை 10 மணிக்கு - திரைப்படக் கல்லூரி பேராசிரியர் ரவிராஜ்

சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு - ஆவணப்பட இயக்குனர் அம்ஷன் குமார்.


from: http://thamizhstudio.com/shortfilm_guidance_nvs_1.php






நல்லதோர் வீணை செய்து



நல்லதோர் வீணை செய்து

அறிமுகக் கூட்டம்

நல்லதோர் வீணை செய்து - தமிழ் மட்டுமின்றி உலக அளவில் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ள சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை குறும்படமாக வடித்து, மக்களிடையே கொண்டு செல்வது இந்த திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் இலக்கியமும், ஊடகமும் ஒரு சேர, ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கும் வாய்ப்பு அமையும். இதன் பிரதிபலனாக சிறந்த படங்கள் வெளிவருவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேலும் தமிழ் ஸ்டுடியோவின் கிராமத் திரையிடலில் இந்தக் குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்களிடையே கலந்துரையாடல் நடத்தப்படும். இதன் மூலம் ஓரளவேனும் மக்களுக்கு நல்ல இலக்கியங்களை கொண்டு சேர்க்கும் வாய்ப்பு கிட்டும்.

இந்த திட்டத்திற்காக மிக தீவிர வாசிப்பு பழக்கம் உள்ள பத்து ஆர்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த பிப்ரவரி ஆறாம் தேதி அன்று ஒரு அறிமுகம் நடைபெற்றது. இந்த திட்டத்தின் போக்கு மற்றும் அவர்களுக்கு தேவைப்படும் பயிற்சி குறித்து விவாதிக்கப்பட்டது. சுமார் 13 மேற்பட்ட ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். இதன் படி திரைக்கதை அமைக்க இருவர், ஒளிப்பதிவு பணிக்கு இருவர், இயக்கம் இருவர், கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சியளிக்க ஒருவர், இடங்களை தெரிவு செய்ய ஒருவர், படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு பணிகளை செய்ய இருவர் என குழுப் பிரிக்கப்பட்டது. இந்த மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் அவர்களுக்கான பயிற்சி தொடங்கப்படுகிறது. திரைக்கதை அமைத்தல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் இவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இந்த திட்டம் அனேகமாக மே அல்லது ஜூன் மாதம் முதல் செயல்படத் தொடங்கும். பயிற்சி மற்றும் குறும்பட உதவிகள் தமிழ் ஸ்டுடியோ மூலம் அவர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.

ஆர்வலர்கள், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட துறை, அவர்கள் பற்றிய முழு விபரங்கள் ஆகியவை விரைவில் வெளிவரும்.

http://thamizhstudio.com/shortfilm_guidance_nvs.php