கதை சொல்லி - மனுஷ்யபுத்திரன் (Manushyaputhran) | ||
| ||
லிவி | ||
ஞாயிற்றுக்கிழமையின் பின் மதியப் பொழுதில் நகரமே ஒரு தனிமை விரும்பியைப் போல் மந்தைவெளி பேருந்து நிலையம் நெரிசல்களைக் குறைத்துக் கொண்டு வெறுமையைப் பாடிக் கொண்டிருந்தது. சென்னையின் வாகன வியாபார இரைச்சலுக்கிடையில் அந்த மந்தமான கணங்களை மிக அரூபமாகவே உணர முடியும். மந்தைவெளி பேருந்து நிலையத்தில் இறங்கி செயின்ட் மேரிஸ் சாலையில் நடந்து கதை சொல்லிப் பகுதிக்காக மனுஷ்யபுத்திரனை அவரது வீடு மற்றும் உயிர்மை அலுவலகம் உள்ள அபிராமபுரத்தில் சென்று சந்தித்தோம். தன் மடிக்கணினியில் எதனையோ அலைந்து கொண்டிருந்தார். தமிழ்ஸ்டூடியோவில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்ததும்,வரவேற்று தன் அறையில் அமரச் சொன்னார். இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழ் மொழியில் செழுமை வாய்ந்தது கவிதை. நாம் வெறும் செய்யுட்களை மட்டுமே நம் சங்கப்பாடல்களில் காண முடியும். உரைநடைகள், சிறுகதை நாவல்கள் இவை யாவும் பிற மொழியில் இருந்து நாம் கடன் பெற்றுக் கொண்டவை மட்டுமே. கவிஞனை பிற எழுத்தாளர்களை விடுத்து மிகப் பெரியவன் எனப் பொது புத்தி கொண்டது நம் சமூகம்.பாரதிக்கு இணையென்று எந்த ஒரு சமகால எழுத்தாளனை குறிப்பாக கவிதை தவிர்த்து பிற எழுத்து வகையில் தமிழில் உச்சம் தொட்டவர்களை நாம் கருத மாட்டோம்.கவிதைக்கு மட்டுமே பேர் போனவன் பாரதி அவனைவிட உரைநடையில் கட்டுரையில் சிறுகதையில் என எத்தனைப் பேர் இருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை எழுத்தாளன் என்றால் கவிஞன் மட்டுமே. இன்று தமிழ் நிலப்பரப்பின் ஜால்ராக் கூட்டங்கள் "தான் கவிஞன், தான் எழுதுவது கவிதை" என்று சொல்லியே சுற்றிக்கொண்டிருக்கிறது. நம்பிக் கொண்டிருக்கிறது பாவப்பட்ட சமூகம். இன்றுள்ள தமிழ் நவீன கவிஞர்களில் மிக முக்கியமா கதைகளைக் கேட்க: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_8.php |
Showing posts with label manusyaputhran. Show all posts
Showing posts with label manusyaputhran. Show all posts
Monday, November 29, 2010
கதை சொல்லி - மனுஷ்யபுத்திரன் (Manushyaputhran)
Subscribe to:
Posts (Atom)