Wednesday, December 7, 2011
குறும்பட வட்டம் - பகுதி இரண்டு.
தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்
குறும்பட வட்டம் - பகுதி இரண்டு.
நாள்: 10-12-2011, சனிக்கிழமை
நேரம்: மாலை 5.30 மணி.
இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)
முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
அலுவலக வரைபடம் ( படத்தின் மீது சொடுக்கி பெரிதாக பார்க்கவும் )
வணக்கம் நண்பர்களே
தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட வட்டம் நாற்பது மாதங்களை கடந்துவிட்டது. குறும்பட வட்டத்தின் முதல் பகுதி சென்னை எழும்பூரிலுள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது. மிகுந்த பொருட்செலவின் காரணமாக இந்நிகழ்ச்சி சென்னை கே.கே. நகர் தியேட்டர் லேப் அலுவலத்தில் மாற்றப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சக நண்பர்கள் குறும்படங்களோடு, உலக அளவில் புகழ்பெற்ற குறும்படங்களும் திரையிடப்பட்டு வருகிறது. சென்னை குறும்பட ஆர்வலர்கள் அனைவரும் எவ்விதக் கட்டணமுமின்றி இந்நிகழ்வில் கலந்துக் கொள்ளலாம். மேலும் குறும்பட எடுக்க நினைக்கும் ஆர்வலர்களுக்கான வழிகாட்டலும் இந்நிகழ்வில் நடைபெறுகிறது.
மேலும் உலகின் மற்ற மொழிகளில் புகழ்பெற்ற படங்களில் இருந்து ஒன்று அல்லது இரண்டு சீன்கள் தொகுக்கப்பட்டு அதுவும் குறும்பட வட்டத்தில் ஒளிபரப்பப்படும். இந்த காட்சிகள் உலகப் படங்களை பார்க்கும் ஆர்வத்தை ஆர்வலர்களுக்கு ஏற்படுத்தும்.
குறிப்பு: பவர் கட் காரணமாக நிகழ்ச்சியின் வழக்கமான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாலை 5:30 மணிக்கு நிகழ்வு தொடங்கும்.
இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
குறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு
அக்காலம் இக்காலம் ஜெயராஜ் 12 நிமிடங்கள்
அ+ம்+மா வினு அர்விந்த் 8 நிமிடங்கள்
10 Minutes Ahmed Imamovic 10 நிமிடங்கள்
Baran (Two Scenes) Majid Majidi -
http://thamizhstudio.com/screening_5.php
Thursday, June 10, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) | |||||||||||||||||
நாள்: சனிக்கிழமை (12-06-2010) முதல் பகுதி: (3 மணி) - களம் இந்த பகுதியின் இரண்டாவது மாத முயற்சியாக கேமரா பயிற்சி அளிக்கப்படுகிறது. கேமரா சார்ந்த அனைத்து நுட்பங்களும் செயல்வழிப் பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படும். ஆர்வலர்களை கேமராவை இயக்கவைத்து உடனுக்குடன் அவர்களின் குறைகளும் நிவர்த்தி செய்யப்படும இந்த மாதம் கேமரா பயிற்சி கொடுக்கவிருப்பவர், ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார். இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், லீனா மணிமேகலை அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களை விருதுகளுக்கு அனுப்புவது தொடர்பான வழிகாட்டல் நடைபெறும். மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல் இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்: மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட நடிகர் திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். இராமகிருஷ்ணன் அவர்கள், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், கோரிப்பாளையம் போன்ற திரைப்படங்களின் கதாநாயகன்ஆவார். மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும். மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற: |
Saturday, June 6, 2009
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.
நாள்: சனிக்கிழமை (13-06-09)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை
10 AM - 2 PM - உலகப் படம் திரையிடல்
இந்த மாதம் உலகப் படம் திரையிடல் பகுதியில் ஐசன்ஸ்டீன் இயக்கத்தில் வெளிவந்த "தி பாட்டில்ஷிப் ஆப் பொடேம்கின்" திரைப்படமும், டெர்ரி க்ரோர்ஜ் இயக்கத்தில் வெளிவந்த"ஹோட்டல் ர்வாண்டா" திரைப்படமும் திரையிடப்படுகிறது.
இத்துடன் ஆர்வலர்களுடன் கலந்துரையாடலும் நடைபெறும்.
3 PM - 7 PM - குறும்பட வட்டம்
முதல் பகுதி: (3 PM-4 PM) - கலைகளை ஆவணமாக்குவோம்.
இந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் வெ. நீலகண்டன் அவர்கள் "கலைகளை ஆவணமாக்குவோம்" என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்.
இவரைப் பற்றி:
இவரது கவிதைகள் "நாங்களும் சில பூக்களும்" என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. 'கூடாரம்' என்ற பெயரில் இலக்கிய இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. தமிழின் பிரதான வார இதழில் 2 தொடர் கட்டுரைகள் எழுதியுள்ளார். அந்தக் கட்டுரைகள் நூலாக வரவுள்ளன. இருளர்கள், நரிக்குறவர்கள் உள்ளிட்ட விழிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கைநிலை, அவர்கள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆய்வு செய்து வரும் இவர் அது பற்றிய நூலொன்றை விரைவில் வெளியிட இருக்கிறார். தமிழக ஆறுகளின் இயற்கைச்சூழலும், இப்போதைய இழிநிலையும என்றொரு நூலும் தயாராகி வருகிறது. சென்னையின் பிரதான கானா பாடகர்களில் ஒருவரான ' மரணகானா விஜியின்' சர்ச்சைக்குறிய வாழ்க்கை வரலாறை தொகுத்து "சாக்கடை சரித்திரம்" என்ற பெயரில் நூலாக வெளியிட இருக்கிறார்.
சிறந்த வலைப்பதிவர் விருது:
இம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. நர்சிம் அவர்கள்.இவரது வலைப்பூ. http://www.narsim.in/ தமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. |
இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் திரு. சக்தி சரவணன் அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் குறித்து மிக நுணுக்கமான பல தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
இவர் பணியாற்றியுள்ள படங்கள்:
திரு. சக்தி சரவணன் அவர்கள் "பூவே உனக்காக", "சூரிய வம்சம்", "ஆஹா" "திருப்பாச்சி", உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும், சமீபத்தில் வெளிவந்த "சிலம்பாட்டம்" படத்தின் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்
இந்த மாதம் திரையிடல் பகுதியில் செல்வி. திவ்யா அவர்கள் இயக்கிய "இருண்டவீடு", திரு. சா.சு. அவர்கள் இயக்கிய "வேண்டுதல்" திரு. எ. என். சரவணன் அவர்கள் இயக்கிய "அறியாமை" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
இம்மாதம் புகழ்பெற்ற திரைப்பட கதாசிரியர் திரு. வியட்நாம் வீடு சுந்தரம் அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார்.
குறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.
6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.
மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268