Wednesday, October 26, 2011

ஆனந்த் பட்வர்த்தன் ஆவணப்படங்கள் திரையிடல்


ஆனந்த் பட்வர்த்தன் ஆவணப்படங்கள் திரையிடல்

நாள்: 29-10-2011, சனிக்கிழமை
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை.
இடம்: சென்னை திரைப்படக் கல்லூரி, தரமணி, சென்னை
டைடல் பார்க் அருகில், இந்திரா நகர் ரயில் நிலையம் எதிரில்


முதன்மை பார்வையாளர்கள்:

படத்தொகுப்பாளர் பீ. லெனின்.
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்
ஆவணப்பட இயக்குனர் ஆர்.ஆர். சீனிவாசன்
திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி.

தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து "திரையிடல்" எனும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. குறும்படங்களுக்காக இரண்டாவது சனிக்கிழமை ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் ஆவணப்படங்கள், உலகப்படங்களை மாதந்தோறும் திரையிட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குனரான ஆனந்த் பட்வர்தன் அவர்களின் முக்கியமான நான்கு ஆவணப்படங்களை எதிர்வரும் சனிக்கிழமை திரையிட திட்டமிட்டிருக்கிறது.

இந்த திரையிடலில் கலந்துக் கொள்ள விருப்பம் உள்ள நண்பர்கள் முன்பதிவு செய்துக் கொள்ளவும். அனுமதி இலவசம். முன் பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை.

தொடர்புக்கு: 9840698236

திரையிடப்படும் படங்கள்:

WAR & PEACE (Tamil Version, (2002, Colour, 90 mins)

Fishing: In the Sea of Greed, (1998, 45 minutes)

A Narmada Diary, (1995, 57 minutes)

In Memory of Friends - Una Mitran Di Yaad Pyaari, (1990, 60 mins)

Prisoners of Conscience - Zameer ke Bandi, (1978, 45 mins)

------------------------------------------------------------------------------------------------------

WAR & PEACE (Tamil Version, (2002, Colour, 90 mins)

போரும் அமைதியும்

இந்தியாவின் அணுகுண்டு சோதனையைத் தொடர்ந்த கொந்தளிப்பான அந்த நான்கு வருடங்களில் இந்திய, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட, உலகளாவிய போர்குணத்தை சாடும், அமைதியை நோக்கிய ஒரு ஆவணப்படம்.

மகாத்மாவின் அஹிம்சையில் ஊறிய இயக்குனர், இந்திய துணை கண்டத்தின் பகைமை உணர்ச்சியை கவலையுடன் இப்படத்தில் ஆராய்கிறார். அதில் ஒரு செயலாக பகைமை நாடகக்கருதப்படும் பாகிஸ்தானுக்கு செல்லும் பயணம். அங்கே எதிர பார்பிற்கு மாறாக இந்திய பிரதிநிதிகளை பாகிஸ்தானிய பிரதிநிதிகள் மட்டுமன்றி சாதாரண குடிமக்கள்கூட அன்புடன் நடத்துகின்றனர்.

"ஆபத்தற்ற அமைதியான அணு" என்ற அமெரிக்காவினால் ஜோடிக்கப்பட்ட மாயையை, யுரேனிய சுரங்கம் அருகில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையின் மூலமும், தேசிய பாதுகாப்பு நிதி என்ற பெயரில் பொதுமக்களிடம் அமெரிக்கா நடத்தும் வசூல் மூலமும் தோலுரித்து காட்டுகிறார்.
வல்லான் வகுத்ததே சட்டம் என்ற மாமதையில் இருக்கும் அமெரிக்கா, ஆயுத வியாபாரத்திற்காக புது புது காரணங்களையும் , புதுபுது எதிரிகளையும் உருவாக்குவதுடன் , வளரும் நாடுகளுக்கு ஒரு மோசமான உதரணமாக விளங்குவதையும் , காந்தியின் கனவான அமைதியான பாரதம் ஒரு கானல் நீராகவே இருப்பதையும் தெள்ளதெளிவாக உணர்த்துகிறார்

படம் வெளியான ஆண்டு 2002

Fishing: In the Sea of Greed, (1998, 45 minutes)

பேராசை: கடலில் மீன் வேட்டை

பிரமாண்டமான கப்பல்கள் மூலம் மீன் பிடிக்கும் தொழிலால், இன்று உலகின் மரபார்ந்த மீனவ சமுகம், இடம் பெயர வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிஇருக்கிறது. தனியார் முதலீடும், சர்வதேச கடனளிப்பும் இந்த மூளையற்ற மீன் கொள்ளைக்கு காரணமாகும்.

கடன் தொல்லையில் இருந்து மீள வளரும் நாடுகளின் அரசாங்கமே தன் கடல் எல்லையை சர்வதேச நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்துவிடுகிறது. மேலும் உலகவங்கியே இறால் பண்ணைகளை அந்நிய செலவாணி ஈட்டும் காரணியாக முன்னிறுத்துகிறது. இத்தகைய இறால் பண்ணைகளால் மீனவ சமுதாயத்துடன் விவசாகிகளும் பாதிகபடுகின்றனர். இறால் பண்ணையில் இருந்து வெளியேற்றப்படும் கடல் நீரால் விவசாய நிலங்களும் உப்பு நிலங்களாக மாறுகின்றன.

பேராசை: கடலில் மீன் வேட்டை என்ற இந்த ஆவணப்படம் தங்கள் வாழ்வாதாரத்தை மட்டுமன்றி இயற்கை சூழ்நிலையையும் சூறையாடும் பெருந்தனகாரர்களை எதிர்க்கும், ஒரு இந்திய மீனவ சமூகத்தின் போராட்டத்தை விவரிக்கிறது.

படம் வெளியான ஆண்டு 1998

A Narmada Diary, (1995, 57 minutes)

நர்மதாவின் நாட்குறிப்பு

நர்மதா நதியின் குறுக்கே மேற்கிந்தியாவில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை பொருளாதார ரீதியாக பயனளிக்காது எனவும், நீதிக்கு முரணானது என விமரிசிக்கபட்டது. இது கிராமங்களின் அழிவில் நகரங்களுக்கு வசதி தரபோகிற ஒரு திட்டமாகும்.

இந்த அணைகட்டும் பணி முடியும் தருவாயில் 37000 ஹெக்டர் விளைநிலங்களும் 200000 ஆதிவாசிகளும் அழிவுக்குலக வேண்டியிருக்கும்.

நர்மதாவின் நாட்குறிப்பு என்ற இந்த ஆவணப்படம் நர்மதாவை காப்போம் என்ற இயக்கத்தை அறிமுகப்படுத்துகிறது . அணைகட்டுக்கு எதிரான இந்த இயக்கம் அரசாங்கத்தின் மறு குடியேற்ற திட்டத்தின் குறைபாடுகளால் இன்று இந்தியாவின் செயல் மிக்க இயக்கமாக திகழ்கிறது.

படம் வெளியான ஆண்டு 1995

In Memory of Friends - Una Mitran Di Yaad Pyaari, (1990, 60 mins)

நண்பர்களின் நினைவில்

பஞ்சாப், அடிப்படை மதவாதிகளாலும் அடக்குமுறை அரசாங்கத்தாலும் சிதைந்து கிடந்தது. இந்த ஆவணப்படம் பஞ்சாபின் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் விவரிக்கிறது.

1970 க்கு பின் நடந்த அரசியல் குழபங்களையும் அதன் பின் எழுந்த சீக்கிய தீவிரவாதத்தையும் அலசியபின் இப்படம் மாவீரன் பகத்சிங்கை நோக்கி குவிகிறது. பகத்சிங் 1931 ம் ஆண்டு ஆங்கிலேய அரசங்கத்தால் துக்கிலிடப்படும்போது வயது 21.

இன்றைக்கு இந்திய அரசாங்கம் பகத்சிங்கை தேசியவாதி எனவும், சீக்கிய பிரிவினை வாதிகள் அவரை சீக்கிய போராளி என குறிபிட்டாலும் பகத்சிங் இரண்டுமில்லை.

பகத்சிங் மரணத்துக்கு சிறிது காலம் முன்னர் நான் ஏன் நாத்திகனானேன் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

நண்பர்களின் நினைவில் என்ற இந்த ஆவணப்படம் சந்தர்பவாத அரசியலை தோலுரித்து காட்டுகிறது.

படம் வெளியான ஆண்டு 1990

Prisoners of Conscience - Zameer ke Bandi, (1978, 45 mins)

மனசாட்சியின் கைதிகள்

மறைந்த பாரதபிரதமர் இந்திரா காந்தியால் ஜூன் 1975 முதல் மார்ச் 1977 அவசரநிலை பிரகடனம கொண்டு வரப்பட்டது. அச்சமயம் பத்திரிகைகளுக்கு வாய் பூட்டு போடப்பட்டது. சுமார் ஒரு லட்சம் பேர் எந்த குற்ற சாட்டும், விசாரணையுமின்றி சிறையில் அடைக்கப்பட்டனர். அரசியல் கைதிகளான இவர்களின் நிலை மகா அவலமானது.

இந்தியாவின் இந்த துயரமிக்க சரித்திர பதிவை விவரிக்கும் படமே மனசாட்சியின் கைதிகள் என்ற ஆவணப்படம்.

படம் வெளியான ஆண்டு 1978.

தமிழாக்கம்: Dr. சிவபாத சுந்தரம்

About the films:

WAR & PEACE (Tamil Version, (2002, Colour, 90 mins)

Filmed over fourtumultuous years in India, Pakistan, Japan and the USA following nuclear tests in the Indian sub-continent War and Peace is a documentary journey of peace activism in the face of global militarism and war.

The film is framed by the murder of Mahatma Gandhi in 1948, an act whose portent and poignancy remains undiminished half a century later. For the filmmaker, whose family was immersed in the non-violent Gandhian movement, the sub-continent's trajectory towards unabashed militarism is explored with sorrow, though the film captures stories of resistance along the way. Amongst these is a visit to the "enemy country" of Pakistan, where contrary to expectations, Indian delegates are showered by affection not only by their counterparts in the peace movement but by uninitiated common folk.

The film moves on to examine the costs being extracted from citizens in the name of national security. From the plight of residents living near the nuclear test site to the horrendous effects of uranium mining on local indigenous populations, it becomes abundantly clear that, contrary to a myth first created by the U.S.A, there is no such thing as the "peaceful Atom".

Fishing: In the Sea of Greed, (1998, 45 minutes)

Traditional fishing communities around the world are under threat of mass displacement by the industrial fishing practices of gigantic factory ships. Private capital, with the aid of international lending agencies, have embarked on a mindless offensive to catch fish in quantities unheard of until now.

This frightening abuse of the seas has been actively promoted by governments in the developing world, as territorial waters are handed over to transnational corporations to meet debt obligations. Further, agencies like the World Bank have promoted aquaculture prawn farming as a foreign currency earner in the Third World.

The primary victims are poverty-stricken rice growers and fishing communities. Salination of ground water causes a scarcity of fresh drinking water as waste from prawn farms are emptied into nearby rivers and other fresh water bodies. Within years, large stretches of land are abandoned as unfit for agriculture.

Fishing in the Sea of Greed documents the response of one fishing community in India to the "rape and run" industries that have begun to dominate their livelihood and decimate their environment. Under the leadership of the National Fishworkers Forum and the World Forum of Fishworkers and Fish Harvesters, workers are fighting not only for their jobs, but for the survival of the world's coastal communities and ecosystems.

A Narmada Diary, (1995, 57 minutes)

The Sardar Sarover Dam in western India, lynch-pin of a mammoth development project on the river Narmada's banks, has been criticized as uneconomical and unjust. It will benefit urban India at a cost borne by the rural poor.

When completed, the dam will drown 37,000 hectares of fertile land, displace over 200,000 adivasis - the area's indigenous people -, and cost up to 400 billion rupees. Ecological, cultural, and human costs - as often is the case with "mega" projects - have never been estimated.

A NARMADA DIARY introduces the Narmada Bachao Andolan (the Save Narmada Movement) which has spearheaded the agitation against the dam. As government resettlement programs prove inadequate, the Narmada Bachao Andolan has emerged as one of the most dynamic struggles in India today. With non-violent protests and a determination to drown rather than to leave their homes and land, the people of the Narmada valley have become symbols of a global struggle against unjust development.

But the dam building continues. If it's height is not checked, the entire adivasi region of the Narmada will drown. In the name of progress, a relatively self-sufficient, egalitarian and environmentally sound economy and culture will be destroyed and a proud people reduced to the status of refugees and slumdwellers.

In Memory of Friends - Una Mitran Di Yaad Pyaari, (1990, 60 mins)

IN MEMORY OF FRIENDS documents the violence and terror in Punjab,
India - a land torn apart by religious fundamentalists and a repressive government.

After examining the political turmoil of the late1970s and rise of Sikh fundamentalism the film concentrates on the legacy of Bhagat Singh, a young socialist hanged by the British in 1931 at age 23. Singh has since become a legendary figure. Today the State eulogizes him as a nationalis while Sikh separatists portray him as a Sikh militant. In fact, Singh was neither. Just prior to his death he wrote a book which he entitled Why I Am An Atheist.

A band of brave Sikhs and Hindus carry Bhagat Singh's secular legacy from village to village. In the religiously charged countryside ideas of internationalism now carry a price.

IN MEMORY OF FRIENDS is an incisive look at identity politics in India today.

Prisoners of Conscience - Zameer ke Bandi, (1978, 45 mins)

An important historical record of a traumatic period in India's recent political history, PRISONERS OF CONSCIENCE focuses on the State of Emergency imposed by Indira Gandhi from June 1975 to March 1977.

During the Emergency the media was muzzled, over 100,000 people were arrested without charge and imprisoned without trial. But political prisoners existed before the Emergency, and they continue to exist even after it is over.

ஆனந்த் பட்வர்தன் பற்றி:

ஆனந்த் படவர்தன் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக ஆவணப்படங்களை எடுத்துவருகிறார். இவற்றுள் உள்ளடங்குவனவற்றுள் சில, பீகார் ஊழல் எதிர்ப்பு இயக்கம் பற்றிய புரட்சியின் அலைகள் (1974), 1975-77ல் இந்திரா காந்தியின் நெருக்கடிகாலத்தில் சிறையிடப்பட்ட அரசியல் கைதிகள் பற்றிய மன சாட்சியின் கைதிகள் (1978); பம்பாய் குடிசைவாசிகளைப் பற்றிய பாம்பே நமது மாநகரம் (1985) ; கடவுளின் பெயரால் (1992); தந்தை, மகன் மற்றும் புனிதப் போர் (1995); நாங்கள் உங்கள் குரங்குகள் அல்ல (1996) மற்றும் தொழில்: ஆலைத் தொழிலாளி (1996) ஆகியனவாகும். இந்தியத் துணைக் கண்டத்தில் அணு ஆயுதப் போரின் அபாயம் மற்றும் மத அடிப்படைவாதத்தின் எழுச்சி பற்றிக் கூறும் போரும் அமைதியும் படத்தின் தணிக்கை பற்றி அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம் பேசினார்.

ரிச்சர்ட் பிலிப்ஸ்: போரும் அமைதியும் படத்தை தடைசெய்யும் முயற்சியுடன் தற்போதைய சூழ்நிலை என்ன?

ஆனந்த் பட்வர்தன்: கடந்த ஜூனில் தணிக்கைக்குழு திரைப்படத்தில் பெரிய எண்ணிக்கையில் வெட்டுக்களுக்கு அவர்கள் கேட்டுக்கொண்டனர். பின்னர் அது மறுஆய்வுக் குழுவுக்கு சென்றது மற்றும் அவர்கள் முற்றிலும் தடைசெய்வதற்கு கேட்டனர். இரண்டாவது மறுஆய்வுக் குழு வகைப்படுத்த இருந்தது. அவர்கள் தடைசெய்வதற்கு கேட்கவில்லை ஆனால் 21 வெட்டுகளுக்கு கேட்டனர், அது பலமாய் திரைப்படத்தை அழித்துவிடும். இப்பொழுது நான் தில்லியில் உள்ள தீர்ப்பாயத்திற்கு செல்லவேண்டியுள்ளது மற்றும் தோல்வி பெற்றால் அதனை முறையான நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு எனக்கு உண்டு. இந்தக் கணத்தில் திரைப்படம் சக்திமிக்க வகையில் தடைசெய்யப்பட்ட போதிலும் நாட்டிற்கு வெளியே திரைப்பட விழாக்களில் அதனைக் காட்டுவதிலிருந்து அவர்கள் என்னைத் தடுக்க முடியாது-- அதற்கான சட்ட மசோதாவை அவர்கள் வைத்திருக்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால் இந்தியாவில் எந்தவிதமான பொதுத்திரையிடலையும் நான் செய்ய முடியாது.

K.H: திரைப்படத்திற்கு உள்நாட்டு வரவேற்பு என்னவாக இருந்தது?

ஆ.ப: இந்த தடை கடந்த இரு மாதங்களில்தான் ஆரம்பமானது, ஆகையால் அதற்கு முன்னர் அதனை இந்தியாவில் மிகவும் பரவலாக நாங்கள் காட்டி இருந்தோம் அதற்கு வரவேற்பு பெரிய அளவினதாக இருந்தது. இப்பொழுதும் கூட நான் அப்படத்தை மக்களின் வீடுகளில் உள்ள சிறிய பார்வையாளர்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறேன், அது நன்றாக இருக்கிறது. இருப்பினும், இப்படத்தைக் காண்பிப்பதில் பிரச்சினை பெரும்பாலும் ஏற்கனவே எங்களுக்கு ஆதரவு காட்டுபவர்களை மட்டும் சென்றடைவதுதான். அது இன்னும் நம்பி ஏற்கச்செய்யப்படாத அல்லது மறுபக்கத்தில் உள்ள மக்களுக்கு காண்பிக்கப்படவேண்டி இருக்கிறது மற்றும் விவாதிக்கப்பட வேண்டி இருக்கிறது.

ரி.பி: போரும் அமைதியும்் இந்து அடிப்படைவாதிகள் பற்றிய பலமான விடயத்தை --மேற்கத்தைய பார்வையாளர்கள் அரிதாய்க் காண்கின்ற படச்சுருளை-- கொண்டிருக்கிறது. இது பற்றி நீங்கள் குறிப்பிடமுடியுமா?

ஆ.ப: இந்த அடிப்படைவாதத்தின் எழுச்சி பற்றி நான் இரு படங்களை தயாரித்திருக்கிறேன். 11 ஆண்டுகளுக்கு முன்னர் நான் தயாரித்த கடவுளின் பெயரால் என்ற படம் பாபர் மசூதி இடிப்பைப்பற்றி அலசுகிறது, அது உண்மையில் இந்து அடிப்படைவாதிகளுக்கு எதிராக பந்தை அடிக்க அமைத்துக் கொடுக்கிறது. 1992 மற்றும் 1993 மற்றும் பம்பாயில் வகுப்புவாததக் கலவரங்களுக்குப் பிறகு தந்தை, மகன் மற்றும் புனிதப்போர் என்று அழைக்கப்படும் திரைப்படத்தையும் கூட நான் எடுத்தேன், அது மத வன்முறை மற்றும் ஆண்தன்மைக்கும் (masculinity) இடையிலான தொடர்பு பற்றியதாகும்.

K.H: உங்களது படங்களுள் ஒன்றை இந்த ஆண்டு நியூயோர்க்கில் திரையிடப்படுவதை தடுத்துவிட்டார்கள் என கேள்விப்படுகிறேன்.

ஆ.ப: ஆமாம் அவர்கள் நியூயோர்க்கில் இயற்கை வரலாறு பற்றிய அருங்காட்சியகத்தில் கடவுளின் பெயரால் படத்தை அவர்கள் தடுத்து விட்டனர். வி.இ.ப திரையிடலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தது மற்றும் என்னை கம்யூனிஸ்ட் என்று கூறி மற்றும் இடையூறு விளைக்கப்போவதாய் அச்சுறுத்தியதால் சக்திமிக்க வகையில் அது தவிர்க்கப்பட்டது. மதச்சார்பற்ற இந்தியர்கள் படத்தைத் தவிர்த்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்தபொழுது, அருங்காட்சியகம் பின்வாங்கி சமரசம் செய்தது மற்றும் அது அருங்காட்சியக வளாகத்துக்கு வெளியே நியூயோர்க் பல்கலைக் கழகத்தில் காட்டப்பட்டது.

K.H: போரும் அமைதியும் படத்தை எந்த அடிப்படையில் தணிக்கைக்குழு தடைசெய்தது?

ஆ.ப: அவர்களிடம் உண்மையில் எந்தவித அடிப்படையும் இல்லை. உண்மையான காரணம் என்னவெனில் எமது நாட்டில் பல முக்கிய நிறுவனங்கள் காவி மயமாதலில் இருந்து வருகிறது. காவிநிறம் இந்து அடிப்படைவாதிகளின் நிறமுமாகும் மற்றும் அவர்கள் தங்களின் கடுங்கோட்பாட்டாளர்களை பல முக்கிய பொறுப்புக்களில் வைத்திருக்கின்றனர். இது தணிக்கைக் குழுவிற்கும் நிகழ்ந்துள்ளது. பலகாலமாக தணிக்கை வாரியத்திலிருந்து ஓய்வு பெறும்பொழுது அவர்கள் பி.ஜே.பி அல்லது மற்றைய வலதுசாரி இந்து அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களால் நிரப்பப்படுவர். தணிக்கை வாரியத்தில் 70லிருந்து 80 சதவீதத்தினருக்கு மேல் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் அல்லது ஆதரவாளர்கள் ஆவர்.

அவர்கள் தங்களின் நடவடிக்கைகளை நியாயப்படுத்துதற்கு கடப்பாடுடையவர்களாக மற்றும் தணிக்கைக்குழு நெறிமுறைகளை குறித்திருக்கலாம்தான். நெறிமுறைகள் மிகவும் விரிவானவை மற்றும் எனது விஷயத்தில் அவர்கள் அரசாங்க அரசியலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் பற்றிய அனைத்து படச்சுருளையும் வெட்டும்படி எனக்கு ஆணையிட்டார்கள். அவர்கள் குறித்த நெறிமுறை அவமதிப்பாகும், ஆனால் எனது திரைப்படம் இந்த அரசியல்வாதிகள் பேசியதைத்தான் பதிவு செய்திருக்கிறது. நான் செய்ததெல்லாம் அவர்கள் கூறி இருப்பதை முன்வைத்ததாக இருக்கும்பொழுது எப்படி அது அவமதிப்பாக இருக்க முடியும்? அது செய்தி அறிவிப்பாக இருக்கிறது மற்றும் அவர்கள் செய்தி அறிவிப்பு கொள்கைக்கு எதிராகப் போனால் பின்னர் செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகள் அர்த்தமில்லாமல் போகும்.

K.H: நீங்கள் தணிக்கைக் குழுவிடம் முன்னர் முரண்பட்டு இருந்திருக்கிறீர்களா?

ஆ.ப: ஆம், என்னுடைய பல திரைப்படங்கள் விஷயத்தில், ஆனால் இந்த ஒன்று போல யுத்தங்கள் இருக்கவில்லை. முதலாவது சுற்றில் வழக்கம்போல நான் தொல்லை அடைந்தேன். ஆனால் இரண்டாவது சுற்று அளவில், அது மீளப்பார்க்கும் குழு ஆக இருந்த கட்டமாக இருந்தது, அங்கு குழுவில் சில அறிவார்ந்த நபர்களும் இருப்பர் மற்றும் அப்படம் வெட்டுக்கள் இன்றி கடக்கும். இன்று வரைக்கும் நான் தனி ஒரு காட்சியையும் வெட்டுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கவில்லை மற்றும் அது 30 ஆண்டுகளான ஆவணப்படத் தயாரிப்பில் ஆகும்.

K.H: இதனை அரசியல் ரீதியாக எப்படி மதிப்பிடுகிறீர்கள்? காஷ்மீர் மீதான மோதலில் செல்வதற்கு எந்த அளவு அவர்கள் தயாரிப்பு செய்திருக்கிறார்கள் என்பது பற்றி அது என்ன சொல்கிறது?

ஆ.ப: ஆற்றொணா நடவடிக்கை இயங்கத் தொடங்கியுள்ளது மற்றும் அரசாங்கத்தையும் அதன் நிறுவனங்களையும் கடுங்கோட்பாட்டாளர் குழு கட்டுப்பாட்டில் எடுத்திருக்கிறது. நீங்கள் அறிந்தவாறு, புதிய துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி ஆவார் மற்றும் அவர் பி.ஜ.பி-ன் கடுங்கோட்பாட்டாளரிலிருந்து வந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களில் குஜராத்தில் உள்ள வன்முறை மற்றும் இனஅழிப்பு இந்தக் கட்சி ஆற்றொணா நிலையில் உள்ளது மற்றும் அனைத்து வகையான நடவடிக்கைகளுக்கும் போக விரும்புகிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்துள்ளனர். தாராண்மைவாத மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் என்ன சொல்வார்கள் என்பது பற்றி அது பொருட்படுத்துவதே இல்லை. நான் எப்படி நுட்பமாக மதிப்பிடுவது என்பதில் எனக்கு உறுதியாய் தெரியாது ஆனால் அவர்கள் பிழைத்திருப்பதற்கான ஒரே வழி இந்த அணுகுமுறையுடன்தான் என அவர்கள் நம்பி இருக்கலாம்.

இந்தக்கணம் சென்று கொண்டிருக்கும் இன்னொரு விஷயம் தெஹெல்க்கா மீதான தாக்குதலாகும், அது கீழ்த்தரமான ஆயுத பேரத்தை அம்பலப்படுத்த மறைவாய் கேமராக்களைப் பயன்படுத்தி சிக்கவைக்கும் நடவடிக்கையை செய்த ஒரு வலைத் தளமாகும். அது அரசாங்கத்திடமிருந்து தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றது மற்றும் இது அரசாங்கம் எனது படத்திலிருந்து எடுக்கும் தொடர் நிகழ்ச்சிகளுள் ஒன்றாக இது இருக்கிறது.

K.H: இதுவரை நீங்கள் ஆதரவைப் பெற்றதற்கான அறிகுறியைக் கூறமுடியுமா?

ஆ.ப: நிறையவே ஆதரவிருக்கிறது. அங்கு இணையத் தொடர்பில் மனுச்செய்யும் மற்றும் கையெழுத்திடும் பிரச்சாரம் இருக்கிறது. கடந்த மாதம் 11 ஆண்டுகள் பழமையான எனது படம் கடவுளின் பெயரால் கேரளாவில் ஒரு மாவட்டத்தில் நிறுத்தப்பட்டது. அந்த மாநிலத்தை காங்கிரஸ் ஆளுகிறது மற்றும் அங்கு பலமான இடது எதிர்க்கட்சி இருக்கிறது ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் அல்லது நிர்வாகி, திரையிடலானது மாவட்டத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று இந்து வலதுசாரி சக்திகள் கூறியதன் காரணமாக திரையிடலுக்கு தடை ஆணை வழங்கினார் மற்றும் நிறுத்தினார். உள்ளூர் நிர்வாகி 15 நாட்களுக்கு தடை விதித்தார் மற்றும் பின்னர் மற்றுமொரு 15 நாட்களுக்கு நீட்டித்தார். இந்தப்படம் உலக சான்றிதழைப் பெற்றிருக்கிறது, ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் தொலைக்காட்சியில் காட்டப்பட்டிருக்கிறது மற்றும் தேசிய விருதை வென்றிருக்கிறது.

நல்வாய்ப்பாக கேரளாவில் மதச்சார்பற்ற இயக்கம் மிகப் பலமாக இருக்கிறது மற்றும் ஆயிரம்பேர் இரண்டு அல்லது மூன்று தடவைகள் அணிவகுத்தனர், ஊர்வலம் சென்றனர். அங்கு வீதி நாடக அரங்கு இருந்தது மற்றும் சில "எதிர்ப்பு" திரையிடல் நடந்தது, ஆகையால் அங்கு படத்தைக் காண்பிப்பதற்கான உரிமையைப் பாதுகாக்க பெரும் இயக்கம் கட்டப்பட்டது. இறுதியில் உள்ளூர் நிர்வாகியால் அந்தத் தடை ஆணை தளர்த்தப்பட்டிருந்தது, ஆகையால் மக்களின் அழுத்தம் தடைஆணையை தலைகீழாக்குவதில் வெற்றி கண்டது.

K.H: போரும் அமைதியும் படத்தில் ஒரு புள்ளியில் அடிப்படைவாதம் சோசலிசத்தின் பொறிவுடன் எழுகின்றதாக மற்றும் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு பற்றி பேசுகிறீர்கள். நீங்கள் என்ன அர்த்தப்படுத்துகிறீர்கள் என்பதைக் கூற முடியுமா?

ஆ.ப: நான் இங்கு விஷயங்களை மிக எளிமைப்படுத்தி இருக்கிறேன் மற்றும் இந்தப்படத்தில் ஆழமாகச் செல்லவில்லைதான். சோசலிசம் இறந்து விட்டது அல்லது ஒட்டுமொத்தமாக பொறிந்து விட்டிருக்கிறது என்பதை நான் அர்த்தப்படுத்தவில்லை மாறாக சோசலிசத்தின் செல்வாக்கு மங்குகையில் அந்த வெற்றிடம் அடிப்படைவாத சக்திகளால் நிரப்பப்படுகிறது, இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே.

K.H: சோவியத் ஒன்றியம் மற்றும் ஏனைய சோசலிச அரசுகள் என்று அழைக்கப்படுபவை சோசலிசத்தைப் பிரதிநிதித்துவம் செய்தன என்ற கருத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை.

ஆ.ப: இல்லை, சீனாவோ அல்லது சோவியத் ஒன்றியமோ உண்மையான சோசலிச அரசாக இருக்கவில்லை என்பதில் நான் உடன்படுகிறேன் மற்றும் சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் பொறிவிற்கு பின்னால் உள்ள காரணிகளுள் ஒன்று அது ஜனநாயக ரீதியானதாக இருக்கவில்லை. ஆனால் நான் கூறுவது சோசலிசம் என்ற கருத்துருவே கடந்த 20 ஆண்டுகளிலோ அல்லது மிகுதியானதிலோ மதிப்பிறக்கப்பட்டிருக்கின்றது. நான் கல்லூரிக்குச் சென்ற காலத்தின் பொழுது, சோசலிசம் என்பது மிகவும் ஆர்வமூட்டும் கருத்தாக இருந்தது, இப்பொழுது அது பலரால் தோல்வியுற்ற கற்பனையான ஒன்றாய் கருதப்படுகிறது.

அபாயம் என்னவென்றால் உலகம் குழந்தையை குளித்த நீருடன் சேர்த்துத் தூக்கி எறிந்து விட்டது, அவர்கள் சோசலிசத்தின் சாதக மதிப்புக்களை எறிந்து விட்டார்கள் மற்றும் அவ்வெற்றிடம் அடிப்படைவாத சக்திகளால் நிரப்பப்படுகிறது. ஒரே தேர்வுக்குரியது சுதந்திர சந்தைப் பொருளாதாரம் மற்றும் "முதலில் எனக்கு" தலைமுறை பற்றி சிந்திக்கும் வளர்ந்துவரும் குழந்தைகளை நீங்கள் வைத்திருக்கிறீர்கள், அங்கே பணம்தான் கடவுள். இவை ஒன்று கூட ஆன்மரீதியாய் திருப்திப்படுத்தாது, ஆகையால் ஆன்ம வெற்றிடத்தை நிரப்புதற்கு நீங்கள் மதத்தைக் கொண்டிருக்கிறீர்கள்.

K.H: போரும் அமைதியும் படத்தில் வரலாற்று உள்ளடக்கத்தைப் பற்றி கேட்க விரும்புகிறேன். திரைப்படம் பற்றிய ஒரு விமர்சனம், அது இந்தியப் பிரிவினைக்கான வரலாற்றுப் பின்னணி பற்றி வழங்கவில்லை என்பது. இரண்டாவதாக, இந்தியாவில் காங்கிரசோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சிகளோ, அவை பாக்கிஸ்தானுக்கு எதிராக அரசாங்கத்தை ஆதரித்திருந்தும் மற்றும் இவை எல்லாவற்றிலும் வாய்ச்சிலம்பம் ஆடியிருக்கிறபோதும், அவைபற்றிய எந்தவிதமான படச்சுருளும் உங்களிடம் இல்லை. அதுபற்றிக் கூறமுடியுமா?

ஆ.ப: உங்களது முதலாவது கேள்வியை எடுத்துக்கொள்கிறேன். நான் பிரிவினை பற்றி அலசவில்லை --நான் அந்த விஷயத்தை வசதியாக எடுத்துக் கொண்டேன் ஏனென்றால் அது ஏற்கனவே மூன்று மணிநேர திரைப்படம் மற்றும் நான் அதனைச் சேர்த்திருந்தால் அது மிக நீண்டதாக இருக்கும். படத்தின் ஆரம்பப்புள்ளி இந்து அடிப்படைவாதிகளால் காந்தி படுகொலை செய்யப்படுவதாகும். நான் முன்னர் எனது படங்களில் விளக்கத்தில் முதல் மனிதனை நான் ஒருபோதும் பயன்படுத்துவதில்லை ஆனால் போரும் அமைதியும் படத்தில் எனது குடும்பம் விடுதலைக்கான போராட்டத்தில் சம்பந்தப்பட்டிருந்தது, அவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியதால் சிறைக்கு சென்றனர் என்பதை விளக்குவதன் மூலம் ஆரம்பத்தை நான் தொடங்கினேன். நான் இந்திய விரோதியாக அல்லது தேசிபக்தி இல்லாதவனாக இருக்கின்றதாய் தாக்கப்படுவேன் என்பதை அறிவேன், ஆகையால் நான் எனது "தேசிய" நற்சான்றுகளை ஏற்படுத்திக் கொள்வதன்மூலம் ஆரம்பிக்க விரும்பினேன்.

போரும் அமைதியும் நம்புகின்ற அமைப்பு முறையானது, இன்று நாட்டை ஆள்பவர்களின் நம்பிக்கை அமைப்பு முறையைவிட சுதந்திரத்திற்காகப் போராடியவர்களது கண்ணோட்டத்திற்கு நெருக்கமானதிலிருந்து தோன்றுகிறது. நீங்கள் இந்து வலதுசாரிகளின் மற்றும் முஸ்லிம் வலதுசாரிகளின் வரலாற்று நிலைச்சான்றுகளை ஆய்வு செய்வீர்களாயின், அவர்கள் சுதந்திரத்திற்காகப் போராடவில்லை என்பது உண்மையாகும். ஒருவர் கூட பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து சிறை செல்லவில்லை. இந்திய தேசபக்தர்கள் என கூறிக்கொள்பவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தவர்கள் என்பது இன்றைய சூழலின் முரண்நகையாகும்.

உங்களது இன்னொரு கேள்வி பற்றியதில், அணுகுண்டு மற்றும் அணுஆற்றல் தொடர்பான பாரம்பரிய இடதுகளின் நோக்குடன் பகுதிஅளவுக்கு நான் பலமான ஆனால் ஆக்கபூர்வமான விமர்சனத்தைக் கொண்டிருக்கிறேன் என்பதைக் கூற என்னை அனுமதிக்கவும். எனது படத்தில் உள்ள எனது நிலைப்பாட்டுக்கும் இடதுசாரிகளின் பெரும்பான்மைப் பகுதியினர் பாரம்பரியமாக பராமரித்து வரும் நிலைப்பாட்டுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருக்கிறது. அவர்களில் பலர் மொத்தத்தில் அணு ஆற்றலை விமர்சித்திருக்கவில்லை. ஆகையால் அணு ஆயுதங்கள் பற்றிய பிரச்சினைகளும் அணு ஆற்றல் பற்றிய பிரச்சினைகளும் பிரிக்கமுடியாதது என்பதை நான் படத்தில் வலியுறுத்த முயற்சி செய்திருக்கிறேன். நான் யுரேனிய சுரங்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களைக் காட்டி இருக்கிறேன் மற்றும் யுரேனியம் இரண்டுக்கும் பொதுவானதாகும்.

நான் இடதுசாரிகளை வெளியே சென்று பகிரங்கமாக விமர்சிப்பதற்கு விரும்பவில்லை ஏனென்றால் அணு ஆயுதங்களுக்கு எதிராக பல்வேறு மக்களின் வானவில் கூட்டணி அங்கு இருக்கிறது என நான் நம்புகிறேன் மற்றும் சிவப்பு இந்த வானவில்லின் பெரும் பகுதியாய் இருக்கிறது. ஆனால் நான் அணு ஆற்றல் அல்லது அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கை பற்றியதில் எனது நிலைப்பாட்டை சமரசம் செய்து கொண்டிருக்கவில்லை.

நீங்கள் அறிவீர்களோ என எனக்கு உறுதியாய்த் தெரியாது, ஆனால் 1996ல் இந்திய இடதுகளின் பகுதிகள் தங்களின் ஊசிகுத்த அசைவுறும் தேசியவாத நிலைப்பாடுகளின் காரணமாக அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடக்கூடாது என்பதில் உறுதிப்படுத்துவதில் பாத்திரம் ஆற்றி இருந்தார்கள். அவர்கள் இறையாண்மையை விட்டுக் கொடுக்க வேண்டாம் என்று பேசினர், அமெரிக்கா அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையில் நாம் கையெழுத்திட விரும்புகிறது மற்றும் நாம் அதைச் செய்யக் கூடாது, நாம் இந்திய சுதந்திரத்திற்காக நிற்க வேண்டும் மற்றும் இவ்வாறாக கூறினர். அவர்கள் அணு ஆயுத தேசியவாதத்திற்கு உணவூட்ட உதவி செய்தனர். விளைவு இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் கையெழுத்திடவில்லை மற்றும் உடனே அமெரிக்காவில் உள்ள வலதுசாரி குடியரசுக்கட்சியினர் தங்கள் சொந்த வழியை எடுத்துக் கொண்டு அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கையை செல்லத்தக்கதாக்க மறுத்தனர், அது நமது உலகை இன்னும் அதிகமான ஆபத்துக்குள்ளானதாய் ஆக்கியிருக்கிறது.

ஆகையால் எனது படத்தில் நான் அணு ஆயுத பரவல் தடை உடன்படிக்கை மற்றும் அணு ஆற்றல் பற்றியதை பிரச்சினையாக ஆக்கி இருக்கிறேன். இவை பாரம்பரிய இடதுகளில் இருந்து பிரிந்து செல்லும் புள்ளிகள் ஆகும் மற்றும் அவர்கள் எனது படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் புள்ளியைப் பிடித்துக் கொள்வார்கள். நான் வெளியே சென்று அவர்களைப் பகிரங்கமாக விமர்சித்திருக்கவில்லை. இந்த உள்ளடக்கத்தில் படம் வேலை செய்கிறது மற்றும் இடது வட்டங்களில் நன்றாக வரவேற்கப்படுகிறது, அவர்கள் தவறாக சென்றதாய் நான் எண்ணும் விஷயங்களுக்காக நான் வெளியே சென்று அவர்களை திட்டினால் அது அப்படி இருக்காது. கூட்டணியைக் கட்டும் மற்றும் கொள்கைகளை உயிர்ப்புள்ளதாய் வைத்திருக்கும் அதேவேளை, இந்த பிரச்சினைகளை நுட்பமான முறையில் குறுக்காக கடந்து பெறுவது முக்கியமானதாகும்.

K.H: இருப்பினும், புதிய அரசியல் உணர்திறனை ஏற்படுத்தல், ஒருவர் தேசியவாதம் தன்னையே நிராகரித்தல் மற்றும் சோசலிச அடித்தளங்களில் உலக மக்களின் ஐக்கியத்திற்காக போராடல் அது முக்கியமான பிரச்சினை இல்லையா?

ஆ-ப: முற்றிலுமாக. இந்த வழியில் இந்தப்படம் ஒரு பயனுள்ள கருவியாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இப்படமானது இராணுவவாதம், போர்வெறிவாதம் மற்றும் அடிப்படைவாதம் பற்றிய விமர்சனமாய் அதன் பாத்திரத்தை சிறப்பாய் செயலாற்றுகிறது. சோசலிசம் பற்றி நேரடியாக நான் பேசாதிருப்பினும், படத்தில் உள்ள காந்திய சோசலிஸ்டுகள், அமைதிப் பேரணியினர், தலித்துகள் மூலம், ஒருவர் அது என்னவாக இருக்க முடியும் என்பது பற்றிய மங்கலான மினுக்கொளியைப் பெறுவார்.

நன்றி: http://www.wsws.org/tamil/articles/2002/sep/040902_film.shtml
---------------------------------------------------------------------------------------------
About Anandh Patwarthan

Anand Patwardhan has been making political documentaries for nearly three decades pursuing diverse and controversial issues that are at the crux of social and political life in India. Many of his films were at one time or another banned by state television channels in India and became the subject of litigation by Patwardhan who successfully challenged the censorship rulings in court.

Patwardhan received a B.A. in English Literature from Bombay University in 1970, won a scholarship to get another B.A. in Sociology from Brandeis University in 1972 and earned a Master's degree in Communications from McGill University in 1982.

Patwardhan has been an activist ever since he was a student -- having participated in the anti-Vietnam War movement; being a volunteer in Caesar Chavez's United Farm Worker's Union; working in Kishore Bharati, a rural development and education project in central India; and participating in the Bihar anti-corruption movement in 1974-75 and in the civil liberties and democratic rights movement during and after the 1975-77 Emergency. Since then he has been active in movements for housing rights of the urban poor, for communal harmony and participated in movements against unjust, unsustainable development, miltarism and nuclear nationalism.


No comments:

Post a Comment