| தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்) | ||
| ||
கிழக்கு கடற்கரை சாலை எப்போதும் வனப்பு மாறாத, குறையாத இளம் பெண் போல தன் அழகை பராமரித்து வைத்திருக்கும். யார் கண் பட்டதோ அதன் வனப்பு தொலைந்துக் கொண்டே வருகிறது. கல்பாக்கத்திற்கு முன் வழியில் இரண்டு புறமும் மிகப் பிரமாண்டமான இடத்தில் முட்செடிகளும், மரங்களும் வளர்ந்துக் கொண்டு வரும் வேளையில் அங்கே ஜீவ நதியாய் ஓடிக் கொண்டிருந்த பாலாறு காணாமல் போனதுப் பற்றியோ, அது மீண்டும் வராததுப் பற்றியோ அரசும், மக்களும் கவலைப் படாமல் இருக்கலாம். ஆனால் பாலாற்றை தூக்கி வளர்த்த அதன் காலடிச் சுவடுகளை தன் மார்புக்குள் வாங்கிக் கொண்ட அந்த மணல் பிரதேசம் இன்னமும் பாலாற்றின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது. ஆங்காங்கே கிடக்கும் குழிகளும், மேடுகளும் கேட்பாரற்றுக் கிடக்கும் அனாதைக் குழந்தைப் போல் காட்சியளிக்கிறது. வருத்தப் பட்டு பாரம் சுமப்பதை விட வேறென்ன செய்து விட முடியும். என்ன செயல் செய்தாலும், என்ன தொழில் செய்தாலும், எல்லோருடைய முதல் இலக்கும் குழந்தைகளைக் கவருவதாகத்தான் இருக்கும். நாங்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அந்தப் பகுதி குழந்தைகளுடன் ஒன்றர கலக்க அவர்களுக்கு சில விளையாட்டுகள் வைத்து பரிசுகள் கொடுக்க கலையரசன் முடிவு செய்தார். அவர் ஏற்கனவே என். ஜி. ஒ வில் பணிபுரிந்ததால் அந்த அனுபவம் அவருக்கு கைகொடுத்திருக்கலாம். சிறப்பாக செய்தார். குழந்தைகள் பாடினர், ஆடினார், கதைகள் சொன்னார்கள். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமையை பின்னர்தான் கவனிக்க முடிந்தது. அவர்கள் பாடியது, ஆடியது, சொன்னது எல்லாமும் கிறித்தவம் சார்ந்த அல்லது தழுவியவை மட்டுமே. 98% மேலாக கிறித்தவர்களாக மதம் மாற்றப்பட்ட குடும்பங்கள் என பின்னர் கேள்விப் பட்டேன். மோனிஷா எனும் சிறுமி மிக நேர்த்தியாக பாடிய விதம் அனைவரையும் கவர்ந்தது. மேலும் படிக்க : http://thamizhstudio.com/shortfilm_guidance_screeningtravel_3.php |
Monday, October 4, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment