| ||
லிவி | ||
செவ்வாய்க்கிழமை பின்னேரம் 5.00 மணிக்கு கடிகார முள்ளோடு இதயமும் சேர்ந்து துடித்தது.மூச்சை சில நிமிடங்கள் சிறிது இழுத்து விட்டுக்கொண்டேன். கதை சொல்லிக்காக சாரு அன்று நேரம் ஒதுக்கியிருந்தார். ராயப்பேட்டையில் உள்ள அமிதிஸ்ட் கஃபே (Amithist) யில் இரவு சந்திப்பதென முடிவாகியிருந்தது. அடர் நீலமாய் வானம் மாறும்போது தொடங்கிய பயணம் சரியாக இருள் கவிந்ததும் கஃபே க்கு சென்றடைந்திருந்தோம். தகவல் தெரிவித்ததும் சாருவும் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். கைக் குலுக்கல்களுடன் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம். மரங்களில் தொங்கும் லாந்தர் விளக்குகளைப் போன்ற உருளை பல்புகளும் பூவின் அமைப்பையொத்த ஸ்டாண்டில் (stand) இதழ்களையொத்த மங்கிய வெளிச்சம் தரும் மின்சார விளக்குகளுமென சூழ்ந்து நின்ற விருட்சங்களுக்கு கீழ் உள்ள ஒரு மேஜையில் அமர்ந்து உரையாடத் தொடங்கினோம். முன்னர் ஒருமுறை சென்னை கே.கே நகரில் உள்ள "டிஸ்கவரி புக் பாலஸில்"(Discovery book palace) புத்தக வெளியீட்டு விழாவுக்கு சாரு வந்திருந்தார். அங்கு பள்ளி நாட்களின் வகுப்பறைத் தோழனை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்."பரத்தை கூற்று" புத்தகத்தை வெளியிட்டு சாரு பேசத் தொடங்கினார். அது வரையில் என்னிடம் கதைத்துக் கொண்டு இருந்தவன், திடீரென முழு கவனமும் சாரு பக்கம் திரும்பியது. சாரு பேச்சைக் கேட்க தொடங்கியதும் அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியும் பிரகாசமும்.சாருவின் ஒவ்வொரு அசைவையும் அவன் ரசிப்பவனாக இருந்தான். சாரு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சமர்பணம் என்பதில் தொடங்கி அவர் நடையில் விமர்சித்துக் கொண்டே போனார் (அவர் பேரரசு என்றால் மற்றவர்கள் எல்லாம் சாதாரண குடிமக்களா?). என்னைப் புறந்தள்ளியவனாக அவரின் பேச்சிலே அத்தனை ஆனந்தத்தைக் கண்டான். அவன் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு தீவிர நவீன இலக்கிய வாசகன் அல்ல.ஆனால் அவனுக்கு சாருவை பிடித்தருக்கிறது.அவரைத் தொடர்ந்து இணையத்தில் வாசிக்கிறான். More: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_9.php |
Monday, December 6, 2010
கதை சொல்லி - சாரு நிவேதிதா (Charu Nivedita)
Labels:
charu nivedita,
kadhaisolli,
koodu,
lenin thamizhstudio.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment