Thursday, December 30, 2010

சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2011 (இறுதித் தேதி: 15 .01 . 2011)



சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2011 (இறுதித் தேதி: 15 .01 . 2011)

எதிர் வரும் 2011 வருடம் சனவரி திங்கள் 22 ஆம் நாள் சேலத்தில் நடக்க இருக்கும் சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2011 உங்கள் படைப்புகள் வரவேற்கபடுகின்றன . அனுமதி இலவசம் . படைப்புகள் சமுக கருத்துள்ள வகையில் இருக்க வேண்டும் .
பரிசுகள்:

முதல் பரிசு: ரூபாய் 10000
இரண்டாம் பரிசு: ரூபாய் 5000
மூன்றாம் பரிசு: ரூபாய் 3000

போட்டி விதிமுறைகள்:

1. ஒருவர் எத்தனை படங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் போட்டிக்காக ஒன்றை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.

2. படைப்புகள் 2D, 3D, கார்ட்டூன், அசையும் பிம்பங்களாக (Creative Animation) வும் இருக்கலாம்.

3. சிறந்த மூன்று படங்களுக்கு மேற்கண்ட மூன்று பரிசுத் தொகையும், போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் சிக்னிஸ் தமிழ் நாடு குறும்பட மற்றும் ஆவணப்பட போட்டிகள் 2011 சான்றிதல்களும் வழங்கப்படும்.

4. போட்டியில் கலந்துக் கொண்ட சிறந்தப் படைப்புகளை 22 .01 .2011 அன்று சேலம் ஜெயராம் கல்லூரி அரங்கில் திரைட்டு, படைப்பாளிகளுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படும். பரிசுத் தொகைகளும் அன்றே வழங்கப்படும்.

5. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

6. போட்டிக்காக அனுப்பப்பட்ட எந்தப் படைப்பையும் திருப்பி அனுப்ப இயலாது.

அனுப்ப வேண்டியவை:

1. படைப்பாளிகளின் பெயர் உள்ளிட்ட முழு விபரம், தொடர்பு முகவரி மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரிலோ, அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம்.

2. படைப்புகளை DVD/VCD யாக அனுப்பி வைக்க வேண்டும்.

3. படைப்பு தொடர்பாக எந்தப் பிரச்சனை எழுந்தாலும், அதன் படைப்பாளியே முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான உறுதி மொழிக் கடிதத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.

4. படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 15 .01 . 2011

* படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

ஒருகினைப்பாளர் ,
மிர்த் மீடியா மையம் ,
218/F3 பஞ்சநாதன் தெரு ,
குப்தா நகர்,அங்கம்மாள் காலனி,
சேலம் 636 009.
செல் = 9952667395
மின்னஞ்சல் : leopaulsalem@gmail.com




No comments:

Post a Comment