கதை சொல்லி - குட்டி ரேவதி (Kutti Revathi) | |||
| |||
லிவி | |||
" நான் பாடல் நெடுநாட்கள் கழித்து சென்னை மெரினா கடற்கரைக்குச் சென்றிருந்தேன். பெரிய மாற்றம் எதுவும் நிகழ்ந்து விட்டது போல் தெரியவில்லை. மழைக் காலம் ஆகையால் கடற்கரை மணலில் தண்ணீர் தேங்கி சிறு குளமாகியிருந்தது. கடைகள் அதிக அளவில் இயங்காததால் அதனால் வரும் வெளிச்சம் வழக்கத்திற்கு மாறாக குறைவாகவே இருந்தது. நண்டுகளின் கூட்டம் போல் காதலர்கள், இம்முறை குட்டி ரேவதி தமிழின் முக்கியமான பெண்ணிய கவிஞர்களில் ஒருவர். பெண்ணடிமைத் தனத்தால் சீழ் பிடித்து விட்ட மனதை ஆற்றின் மீனை போல் பற்கள் இல்லாமல் கொத்தி அழுக்ககற்றும் போராளி. பெண் சுதந்திரம் மறத்துப் போன ஆழ் மனதை சிறிதளவேணும் உசுப்பிப் பார்ப்பவை அவருடைய கவிதைகள். கட்டற்ற விடுதலையை எண்ணிப் பயணிக்கும் தமிழ் மரபுத் தொடர்ச்சியின் வீரிய உன்னதம் 'கவிதைகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இலக்கியத்தில் கவிதை என்பது வேறு சிறுகதை நாவல்கள் போன்ற மற்றவைகள் எல்லாம் வேறு' என்றார். மேற்குடி இலக்கியமாக இருந்த சங்க இலக்கிய காலகட்டத்தில் நாற்பதிற்க்கும் மேற்பட்ட பெண் கவிஞர்கள் இருந்தார்கள். இன்றுள்ள மக்கள் தொகைக்கு குறைந்தது நான்காயிரம்பேராக இருக்க வேண்டும். தமிழின் பெண்ணிய சிந்தைனையோடு வந்த "பெண்ணிய சிந்தனையை கவிஞர்கள் ஒரு இயக்கமாக எடுத்துச் செல்ல தவறி விட்டோமோவெனத் தோன்றுகிறது. அன்றைய காலகட்டத்தில் இன்று இலக்கிய மேதமைகளாக வலம் வருபவர்கள் வாசகனை குழப்பச் செய்தார்கள். இது கவிதைகள் அல்லவென்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள்" என்றார். வெங்கட் சுவாமிநாதனுடன் ஒருமுறை உரையாடிக் கொண்டிருந்தபோது, கவிதையில் பெண்களின் உடல் மொழிகள், பால் உணர்ச்சிகள் கவிதையில் வருவதை கதைத்துக் கொண்டிருந்தோம். "பெண்கள் தம் உண்ர்வுகளைக் கவிதைகளாக்குவது தவறல்ல, வரவேற்க கூடியது ஆனால் அவை வலிந்து திணித்தவொரு முழக்கமாக இருக்க கூடாது" என்றார். வானம்பாடிகள் போல் ஆகி விடக்கூடாது என்கிற தொனி மட்டும் அதில் இருந்தது. எழுபது வயதை கடந்தவருக்கும் இன்றைய இளைஞர்களுக்கும் இல்லாத பொய்யான கட்டுக்கோப்பை நாற்பதை தாண்டிக் கொண்டு நிற்கும் இலக்கிய அப்பாக்கள் நிலை நாட்ட விரும்புகிறார்கள். குட்டி ரேவதிக்கு தமிழில் மிகப் பிடித்த கவிஞர் பிரமிள்." பிரமிளின் கவிதைகள் உள் நுழைவதற்கு முதலில் கடினமாக இருக்கும் அதன் பின்னர் அவருக்குள் பயணித்துக் கொண்டே இருக்கலாம். இன்றைய நவீன சிந்தனைகள் அனைத்தும் அவர் கவிதைகளில் இருக்கும்" என்றார். அடுத்துப் பிடித்த கவிஞர் தேவததேவன். மற்றொருவர் எம்.டி ராஜ்குமார். இவர் மாய எதார்த்தவாதத்தில் கவிதைகள் எழுதுபவர். ஈழத்துப் பெண் கவிஞர்களிடம் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்தார்." கவிதைகளில் ஈழத்துப் போர்ச் சூழல் காரணமாக அவர்களிடம் இருக்கும் வீச்சு நம் தமிழக பெண் கவிஞர்களிடம் இல்லை" என்றார். குட்டி ரேவதிக்குப் பிடித்த ஈழ்த்துப் பெண் கவிஞர்கள் "அனார், ஃபகிமா ஜகான், தில்லை, பானு பாரதி". யார் தொடங்கியிருப்பார் ஆதி மனிதனில் இருந்து இந்த கதை சொல்லல் மரபை! ஒவியம், கூத்து, சிறுகதை, நாடகம் , நாவல்கள் கலையின் ஒவ்வொரு வடிவமும் கதை சொல்லலின் இருந்தே தன் பிறப்பு முறையை தேர்ந்தெடுத்திருக்கிறது. முடிவற்ற இந்த சங்கிலியின் சேர்க்கை வரலாறாகவும் பதிவு செய்யப்படுகிறது. சற்று விலகியிருந்து பார்த்தால் கதைகள் இதிகாசங்களாகவும் வேத நூல்களாகவும் உருவெடுத்து கதை மாந்தர்கள் கடவுள்கள் உப கடவுள்களாகவும் அந்தந்த பாத்திரங்களின் வசனங்கள் வேத வசனங்களாகவும் வாழ்க்கை நெறிமுறையை பின்பற்ற கடவுள் ஒதியவையாக ஆக்கப்பட்டிருக்கின்றன். கதைகளை கேட்டுக் கொண்டே இருக்கிறோம். கதைகளும் தீர்வதில்லை. கேட்டும் அலுப்பதில்லை. வாழ்வின் நிகழ்வுகளெல்லாம் வரலாறாக கதையாடிக் கொண்டே இருக்கிறது. வரும் சந்ததிக்கெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தொடரோட்டமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்தச் செயல். கதை சொல்வதில் என்றும் பெண்களுக்கு அடுத்ததாகவே ஆண்கள் இருக்க முடியும் என்பதை நிரூபித்தார் குட்டி ரேவதி. கதை சொல்லிக்காக நேரம் ஒதுக்க இயலாததால் சந்திப்பு சில நாட்கள் தள்ளிக் கொண்டே சென்றது. 'தமிழ்ஸ்டூடியோ அலுவலகத்திற்கே வந்து கதை பதிவு செய்யலாம்' என்றார். அதன்படி ஞாயிறு பின்னேரம் குறிப்பிட்ட நேரத்திற்கு சரியாக வந்திருந்தார். கதை சொல்லத் தொடங்கும் முன் " மானசி(பவா செல்லதுரையின் குட்டி மகள்) மாதிரி எனக்கு கதை சொல்லத் தெரியாது , அவங்க பெரிய ஆள்,எனக்குத் தெரிஞ்சத நான் சொல்றேன்" என்றார்.கதை சொல்லலும் ஒரு கலை. எல்லோராலும் அது முடிவதில்லை.குட்டி ரேவதி ஆகச் சிறந்த கதை சொல்லிகளில் ஒருவர். 'கதை சொல்வதில் ரொம்ப ஆர்வம் எனக்கு. கதை சொல்ல மிக மிக பிடிக்குமென. நம்மிடம் வழக்கொழிந்து போன மரபை மீட்டுக் கொண்டு வர வேண்டுமெனச் சொன்னார்' குட்டி ரேவதி. ஆனால் குட்டி ரேவதி சிறிய குட்டிக் குட்டிக் கதைகளை மட்டும் சொன்னார் முதல் காணலில். ஒரு தேர்ந்த கதை சொல்லியின் குரலோடு கதைகளின் இழைந்தாடும் தன்மையை அழகோடு கொண்டு வந்தார். ஒருவித லயிப்பு ஒட்டிக் கொண்டது அவர் கதைகளைக் சொல்லச்சொல்ல கேட்கும் பொழுது.கதைகளின் சரளம் எங்கும் அவருக்கு மட்டுப் படவில்லை. தொடர்ச்சியாக கதைகளின் வரிகள் பாய்ச்சலோடு கதைகளின் தாகத்திற்கு போதுமானதாக இல்லை அவரின் குட்டிக் கதைகள். சிறிய வேண்டுகோள் வைக்க அவரும் ஆர்வமாக இருந்ததால் மிக நீண்ட கதையொன்றை குறுந்தகட்டில் பதிவு செய்து கொடுத்தார். குட்டி ரேவதியின் கதைகளைக் கேட்க கீழே உள்ள ப்ளே ஐக்கானை தட்டுங்கள். (கதைசொல்லி பகுதி ஒவ்வொரு வாரமும் திங்களன்று வெளிவரும்) http://koodu.thamizhstudio.com/kadhaisolli_12.php |
Saturday, January 1, 2011
கதை சொல்லி - குட்டி ரேவதி (Kutti Revathi)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment