நாள்: சனிக்கிழமை (11-12-2010) முதல் பகுதி: (3 மணி) - களம் முதல் பகுதி: (3 மணி) - களம் இந்த மாதம் முதல் புதிய பகுதியாக "களம்" என்கிற பகுதியில் இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உள்ளிட்ட துறைகளில் உதவியாளராக பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களின் திரைப்பட அனுபவங்களை குறும்பட ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள். இதன் மூலம் திரைப்படத் துறையின் தற்காலப் போக்கு, குறும்பட துறையில் எந்தெந்த இடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற தெளிவு ஆர்வலர்களுக்கு ஏற்படும். மேலும், ஒரு உதவி இயக்குனர், உதவி ஒளிப்பதிவாளர், உதவி படத்தொகுப்பாளர் உள்ளிட்ட கலைஞர்களின் பணி என்ன என்கிற தெளிவும் இதன் மூல ஏற்படும். இதில் இந்த மாதம் கௌதம் மேனன், லிங்குசாமி போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திரு. நாகராஜ் பங்கு பெறுகிறார். இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் சென்னை திரைப்பட கல்லூரி ஒளிப்பதிவு துறை பேராசிரியர் திரு. கிருஷ்ணா G.P. அவர்கள் பங்கு பெறுகிறார். குறும்படங்களில் ஒளிப்பதிவில் ஷாட் தொடர்பாகவும், எந்த ஷாட்டை எங்கே, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் விளக்கவுள்ளார். ஒளிப்பதிவு தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்களுக்கும் அவர் பதிலளிப்பார். மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல் இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்: மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். என் ராசாவின் மனசிலே, நாட்டுப்புறப்பாட்டு, எட்டுப் பட்டி ராசா, துள்ளுவதே இளமை, கரிசக் காட்டுப் பூவே போன்ற படைகளின் இயக்குனர் ஆவார். மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:9840698236, 9894422268 |
Thursday, December 9, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் 27வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment