| ||
லிவி | ||
செவ்வாய்க்கிழமை பின்னேரம் 5.00 மணிக்கு கடிகார முள்ளோடு இதயமும் சேர்ந்து துடித்தது.மூச்சை சில நிமிடங்கள் சிறிது இழுத்து விட்டுக்கொண்டேன். கதை சொல்லிக்காக சாரு அன்று நேரம் ஒதுக்கியிருந்தார். ராயப்பேட்டையில் உள்ள அமிதிஸ்ட் கஃபே (Amithist) யில் இரவு சந்திப்பதென முடிவாகியிருந்தது. அடர் நீலமாய் வானம் மாறும்போது தொடங்கிய பயணம் சரியாக இருள் கவிந்ததும் கஃபே க்கு சென்றடைந்திருந்தோம். தகவல் தெரிவித்ததும் சாருவும் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். கைக் குலுக்கல்களுடன் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம். மரங்களில் தொங்கும் லாந்தர் விளக்குகளைப் போன்ற உருளை பல்புகளும் பூவின் அமைப்பையொத்த ஸ்டாண்டில் (stand) இதழ்களையொத்த மங்கிய வெளிச்சம் தரும் மின்சார விளக்குகளுமென சூழ்ந்து நின்ற விருட்சங்களுக்கு கீழ் உள்ள ஒரு மேஜையில் அமர்ந்து உரையாடத் தொடங்கினோம். முன்னர் ஒருமுறை சென்னை கே.கே நகரில் உள்ள "டிஸ்கவரி புக் பாலஸில்"(Discovery book palace) புத்தக வெளியீட்டு விழாவுக்கு சாரு வந்திருந்தார். அங்கு பள்ளி நாட்களின் வகுப்பறைத் தோழனை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்."பரத்தை கூற்று" புத்தகத்தை வெளியிட்டு சாரு பேசத் தொடங்கினார். அது வரையில் என்னிடம் கதைத்துக் கொண்டு இருந்தவன், திடீரென முழு கவனமும் சாரு பக்கம் திரும்பியது. சாரு பேச்சைக் கேட்க தொடங்கியதும் அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியும் பிரகாசமும்.சாருவின் ஒவ்வொரு அசைவையும் அவன் ரசிப்பவனாக இருந்தான். சாரு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சமர்பணம் என்பதில் தொடங்கி அவர் நடையில் விமர்சித்துக் கொண்டே போனார் (அவர் பேரரசு என்றால் மற்றவர்கள் எல்லாம் சாதாரண குடிமக்களா?). என்னைப் புறந்தள்ளியவனாக அவரின் பேச்சிலே அத்தனை ஆனந்தத்தைக் கண்டான். அவன் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு தீவிர நவீன இலக்கிய வாசகன் அல்ல.ஆனால் அவனுக்கு சாருவை பிடித்தருக்கிறது.அவரைத் தொடர்ந்து இணையத்தில் வாசிக்கிறான். More: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_9.php | ||
Monday, December 6, 2010
கதை சொல்லி - சாரு நிவேதிதா (Charu Nivedita)
Wednesday, December 1, 2010
'விருந்து' நாடக நூல் வெளியீட்டு விழா
| சா.ரு. மணிவில்லன் |
பரிக்ஷா ராஜமணி எழுதிய ‘விருந்து’ நாடக நூல் வெளியீட்டு விழா 14.11.10 அன்று மாலை 7 மணியளவில் சென்னை டிஸ்கவரி புக் பேலஸ்-ல் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பத்திரிகையாளர் ஞாநி, எழுத்தாளர் இந்துமதி, எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, நடிகை கலைராணி, ஜி.கே., நடிகர் பாரதிமணி, சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
‘விருந்து’ நாடகநூலை எழுத்தாளர் பாஸ்கர் சக்தி வெளியிட நடிகை கலைராணி பெற்றுக்கொண்டார்.
‘எனக்கு பிறந்த நாள் விழா பிடிக்கும். இன்று ராஜமணி சாருக்கு பிறந்த நாள். விருந்து நூல் வெளியீட்டு விழாவை குடும்ப விழாவாக பார்க்கிறேன்’ என்று நடிகை கலைராணி கூறினார்.
எழுத்தாளர் இந்துமதி
விருந்து நாடக நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. விருந்து உணர்வுபூர்வமான நாடகமாகும்.
நாடகத்தின் களமாக பிராமணியத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்? ராஜாமணியும் பிராமணர் என சொல்லக் கூடும். நாடகத்தில் பூநூலை அறுத்து எரிவது போன்று ஒரு காட்சி வருகிறது.
ஒரு சர்தார் தன் தலைப்பாகையை கழற்றி எரிவதாகவோ அல்லது ஒரு முஸ்லிம் தன் குல்லாவை கழற்றி எறிவதாகவோ அல்லது ஒரு கிறுத்துவர் தன் சிலுவையை கழற்றி எறிவதாகவோ காட்சி அமைத்து நாடகம் எழுத முடியுமா? முடியாது. ஏனென்றால் பயம். பிராமணியத்தின் மீது கைவைத்தால் யாரும் கேட்கமாட்டார்கள் என்று நம்பிக்கை. நவீன இலக்கியத்தில் ஷாக் ட்ரீட்மென்ட்-க்காக செய்வது போல் உள்ளது.
நடிகர் பாரதி மணி
விருந்து நாடகம் எனக்கு பிடிக்க வில்லை. நாடகம் மனதில் தோன்றியவுடனேயே எழுதிவிட வேண்டும் என்று அவசியமில்லை. பல மாதங்கள் மனதுக்குள் ஊறபோட வேண்டும். நாடகம் ஒரு சட்டகத்துக்குள் இல்லை. கதை களம், பெண்கள் சோரம் போதல் என விசயங்கள் திணிக்கப்பட்டுள்ளது.
சாமிநாதன்
விருந்து நாடகம் நல்ல முயற்சி. சமகால அரசியல் சூழலை உள்வாங்கி எழுதப்பட்டுள்ளது. இந்த முயற்சி மேலும் தொடர வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
தொடர்கதைக்கு பதிலாக இன்று சீரியல் உள்ளது. சீரியலை நாடகம் என சொல்வது தவறு. விருந்து நாடகத்தை நான் நேரமின்மை காரணமாக முழுமையாக வாசிக்க முடியவில்லை. அதனால் நாடகம் பற்றி கருத்து சொல்வதற்கில்லை. ராஜாமணிக்கு என்னைவிட வயது அதிகம். ஆனால் வயது வித்தியாசம் பார்க்காமல் நட்பு பாராட்டுபவர். நண்பர் என்ற முறையில் இந்த நூலை வெளியிட்டதில் பெருமை கொள்கிறேன்.
பத்திரிகையாளர் ஞாநி
1975 ஆண்டு முதல் ராஜாமணி பழக்கம். சரியாக 35 ஆண்டுகளாக நண்பர். பரிக்ஷா நாடக குழுவில் தொடர்ந்து செயல்படுபவர். துணுக்குகள், கட்டுரைகள், கதைகள் எழுதியுள்ளார். அவையெல்லாம் சனரஞ்சகமானவைகள் அதனால்தான் 35 ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தும் அவரை நாடகம் எழுதுமாறு சொன்னதே இல்லை.
ராஜாமணி ஓய்வு பெற்ற பிறகு உள்..........
More: http://koodu.thamizhstudio.com/ilakkiyam_seithigal_virundhu_nool.php
Saturday, October 30, 2010
அகிலன்
அகிலன்
'கல்கி' கிருஷ்ணமூர்த்தி அடுத்தபடியாக வெகுஜன வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்த எழுத்தாளர் அகிலன். இவரது இயற்பெயர் அகிலாண்டம். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலுள்ள பெருங்களுர் இவர் பிறந்த ஊர். 1922 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார். சொத்து சம்பந்தமான குடும்ப வழக்கு ஒன்றன் தொடர்பாக இவரது தந்தை கரூருக்கு இடம் பெயர வேண்டிய தாயிற்று. எனவே இவரது ஆரம்பக் கல்வி கரூரில் தொடங்கியது. ஆறாம் வகுப்பிலிருந்து தான் கல்வியை புதுக்கோட்டை மகாராஜா கிளைக்கல்லூரியிலும், உயர் நிலைக் கல்வியை மகாராஜா கல்லூரியிலும் தொடர்ந்தார். குடும்பம் அப்படியன்றும் அப்போது வசதியான குடும்பமாக இருக்கவில்லை. மேல்நிலை பள்ளிப்பருவத்தில் திரு.வி.க.வின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. பழம் பெரும் இலக்கியங்களில் இவருக்கு இருந்த ஆர்வம் பின்னாட்களில் வரலாற்று நாவல் எழுதத் தூண்டுதலாக இருந்தது. அதேபோல் பாரதியிடமும் இவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. பள்ளியில் மாணவனாக இருக்கும்போதே கதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. கல்லூரி காலாண்டு பத்திரிகை ஒன்றில் 'அவன் ஏழை' என்கிற தலைப்பில் இவர் எழுதிய கதைதான் இவரது முதல் படைப்பு. இந்நிலையில் இவரது தகப்பனாரின் மரணம், இவரை பள்ளி இறுதி வகுப்புக்கு மேல், கல்லூரியில் கல்வியைத் தொடர அனுமதிக்கவில்லை. தாயாரையும், தங்கையையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு வந்து சேர்ந்ததால் படிப்பை அத்துடன் நிறுத்திக் கொண்டார். அவரது சொந்த ஊரான பெருங்களுர் கிராமத்திலேயே முதன்முதலில் ஒரு வேலை கிடைத்தது. பத்திரப்பதிவு அலுவலகத்தில் நகல் எடுக்கும் வேலை. இதே வேலையை பின்பு புதுக்கோட்டை பொன்னமராவதி, கீரனூர் போன்ற ஊர்களிலும் தற்காலிகமாகச் சில காலம் பார்க்கவேண்டியதாயிற்று. இவர் எழுதி அச்சில் வெளிவந்த முதல் சிறு கதை 'சரஸியின்ஜாதகம்' 'கல்கி' பத்திரிகை வெளியிட்டது. இவருக்கு 1944 ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு இவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. ரயில்வே சார்டர் வேலை. திருநெல்வேலியில் ஆர்.எம்.எஸ்.பிரிவில் பயிற்சி தொடங்கியது. பிறகு தென்காசிக்கு மாற்றலாகி வந்தார். இவர் எழுதிய முதல் நாவலான 'இன்பநினைவு' முதலில் 'மங்கிய நிலவு' என்ற பெயரில் 1944ல் வெளியிடப்பட்டது. இதுவே சில மாற்றங்களுடன் 1949ல் 'இன்ப நினைவு' என்கிற பெயரில் வெளி வந்தது. இவரது 'காசுமரம்' என்கிற சிறு கதையை 'கலைமகள்' பத்திரிகை வெளியிட்டது. தொடர்ந்து பல சிறுகதைகள் கலைமகளில் வெளிவந்தன. 1945ல் 'கலைமகள்' பத்திரிகை, நாவல் போட்டி ஒன்றை அறிவித்தார்கள். நாராயண சாமி அய்யர் நினைவு நாவல் போட்டி என்று பெயர். முதல் போட்டியிலேயே இவரது 'பெண்' என்கிற நாவல் முதல் பரிசைப் பெற்றது. இந்நாவல் சில காலங்களுக்குப் பிறகு சரஸ்வதி ராம் நாத் மொழி பெயர்ப்பில் இந்தியில் வெளி வந்தது. இதே நாவல் கன்னடம், மலையாளம், வங்காளி போன்ற மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. 'கலைமகள்' ஆசிரியர் கி.வா. ஜகன்நாதனின் ஆதரவு இவரது எழுத்திற்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது. இவரது பெரும்பாலான படைப்புகள் 'கலைமகள்' பத்திரிகையில்தான் பிரசுரம் கண்டது. தென்காசியில் சுமார் மூன்று ஆண்டுகள் வேலை பார்த்தபின் அகிலன் திருநெல்வேலிக்கும் பிறகு திருச்சிக்கும் மாற்றலாகி வந்தார். திருச்சி வானொலியில் வேலை பார்த்து வந்த எழுத்தாளர் சுகி சுப்ரமணியம் மற்றும் அ.வெ.ரா. கிருஷ்ணசாமி ரெட்டியார் போன்றோரின் நட்பும் தொடர்பும் அங்கு திருச்சி எழுத்தாளர் சங்கம் ஒன்றை ஆரம்பிக்க உறுதுணையாக இருந்தது. இவர்களோடு 'காதல்' என்கிற பத்திரிகையை நடத்தி வந்த அரு.ராமநாதன் அவர்களின் நட்பும் கிடைத்தது. அரு. ராமநாதனும் பிரபலமான பல சரித்திர நாவல்கள் எழுதியுள்ளார். திருச்சியில் சுமார் பதினான்கு ஆண்டுகள் ஆர்.எம்.எஸ்.ஸில் வேலை பார்த்த அகிலன் 1958ல் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தார். இவரது 'பாவை விளக்கு' என்னும் புதினம் அப்போது 'கல்கி'யில் தொடராக வெளிவந்து மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருந்தது. திரைப்பட இயக்குனர் கே. சோமு இவரது நண்பர். இவர் மூலமாக இயக்குனர், நடிகர், தயாரிப்பாளரான ஏ.பி. நாகராஜனின் தொடர்பும், நட்பும் கிடைத்தது. ஏ.பி.நாகராஜனுக்கு 'பாவை விளக்கு' நாவல் பிடித்திருந்தது. எனவே இவரது யூனிட்டைச் சேர்ந்த கோபண்ணா, விஜயரங்கம் ஆகியோர் தயாரிக்க கே. சோமு இயக்கத்தில் 'பாவை விளக்கு' திரைப்படம் உருவாக ஆரம்பித்தது. தமிழ் வெகுஜன வாசகர்களிடையே இந்த நாவல் மாபெரும் வெற்றியடைந்திருந்ததால், தமிழ் திரைப்பட ரசிகர்களும் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்தார்கள். சிவாஜிகணேசன், சௌகார் ஜானகி, பண்டரிபாய், எம்.என். ராஜம், போன்ற தேர்ந்த நடிகர்கள் இருந்தும் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. சில பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, 'காவியமா இல்லை ஓவியமா?' என்கிற பாடலும், 'வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்எதிரே வந்தாள்' என்கிற பாடலும் மிகவும் பிரபலமாயிற்று. இதே நேரத்தில் இவரது 'வாழ்வு எங்கே? என்கிற நாவலைப் படமாக்கும் உரிமையை ஸ்பைடர் பிலிம்ஸ் கம்பெனி பெற்று படப்பிடிப்பைத் தொடங்கினர். பல்வேறு காரணங்களில் திரைப்பட வேலைகள் இழுத்துக் கொண்டே போய் கடைசியில் 1963ல் 'குலமகள் ராதை' என்கிற பெயரில் வெளிவந்த இப்படமும், சிவாஜி, தேவிகா நடித்திருந்தும் சொல்லும்படியான வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையில் 1962ல் 'பட்டினத்தார்' என்றொரு படம் வெளி வந்தது. பிரபல பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்திரராஜன் பட்டினத்தாராக நடித்திருந்தார். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தின் திரைக்கதை வசனத்தை தஞ்சை ராமய்யாதாசுடன் இணைந்து அகிலன் கவனித்துக் கொண்டார். திரைப்படத்தை நிரந்தரமானதல்ல என்பதை அறிந்து வைத்திருந்த அகிலன் மறுபடியும் நிரந்தரமான ஒரு வேலைக்குப் போவது என முடிவெடுத்தார். திரு கி.வா. ஜகன்னாதனின் நட்பு இவருக்குப் பேருதவியாக இருந்தது. கி.வா.ஜ.வின் சிபாரிசில் சென்னை வானொலி நிலையத்தில் சொற்பொழிவுத் துறையில் அமைப்பாளராகச் சேர்ந்து பின் முதன்மை அமைப்பாளராகவும் உயர்வு பெற்று ஓய்வு பெறுவது வரையிலும் பணியாற்றினார். 1966ல் வானொலியில் வேலை கிடைப்பது வரை திரைப்படத்துறையிலிருந்து சற்று விலகி, 'கல்கி', இதழுக்கு ஒரு சரித்திர நாவல் எழுத முற்பட்டு 'வேங்கையின் மைந்தன்' என்கிற சரித்திர நாவலைத் தொடராக எழுதினார். இந்நாவல் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்நாவலுக்காக அகிலனுக்கு 'சாகித்திய அகாடமி' விருதும் வழங்கப்பட்டது. அகிலனின் மற்றுமொரு நாவல் 'சித்திரப்பாவை' இது ஆனந்தவிகடனில் தொடராக வெளிவந்தது. இந்நூலுக்காக 'ஞானபீட பரிசு' இவருக்கு வழங்கப்பட்டது. தமிழ் எழுத்தாளர்களில் முதன் முதலாக 'ஞான பீட பரிசு பெற்ற எழுத்தாளர் அகிலன். இவரது 'கயல்விழி' என்கிற நாவல் தமிழ்நாடு அரசின் பரிசினைப் பெற்றது. இப்புதினத்தை எம்.ஜி.ஆர் நடித்து இயக்க, 1978ல் 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' என்கிற பெயரில் திரைப்படமாக வெளி வந்து மாபெரும் தோல்வியை சந்தித்தது. எம்.ஜி.ஆர் நடித்த படங்களிலேயே அதிகத் தோல்வி கண்ட படமாக இப்படம் பரவலாகப் பேசப்பட்டது. எழுத்தாளராக வாசகர்களைக் கவர்ந்த அளவு இவரது கதைகள் படமாக்கப்பட்டபோது அப்படைப்புக்கள் வெற்றி பெறாமல் போயிற்று. தமிழ் நாட்டிலேயே எழுத்துத்துறையில் மிக அதிக எண்ணிக்கையில் விருதுகளை (7 விருதுகள்) தட்டிச் சென்றவர் அகிலன். 'கல்கி' கிருஷ்ணமூர்த்தி வெகுஜன வாசகர்களைக் கவர்ந்ததைப் போலவே, 'கல்கி'யின் தொடர்ச்சியாக வெகுஜன வாசகர்களைக் கவர்ந்தவர் அகிலன். 'ஞான பீட' பரிசு கிடைத்தபோது பாராட்டுதல்களும், எதிர்ப்புகளும் குறைவின்றி பதிவு செய்யப்பட்டன. தீவிர இலக்கியவாசர்களும் தீவிர எழுத்தாளர்களும் அகிலனை கடைசி வரை ஒப்புக் கொள்ளவே இல்லை. அகிலன் நாவல்களும், சிறுகதைகளும் ஏராளமாக எழுதியிருக்கிறார். இவரது 200 கதைகள் அடங்கிய தொகுப்பை தமிழ்ப்புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறார்கள். ஆயிரத்து நானூறு பக்கங்களுக்கு மேல் உள்ள இப்புத்தகத்தின் விலை ரூ.1000/-தான். அதிசயமாக இவரது நாவல்கள் பலவும் இப்போது நமக்குப் படிக்கக் கிடைக்கின்றன. இவர் தனது 66வது வயதில் 1988 ஆம் வருடம் காலமானார். தொடரும் ... | |||
Friday, October 1, 2010
கொஞ்சம் தேநீர்... நிறைய அரட்டை... - கி. ராஜநாராயணன்
| சா.ரு. மணிவில்லன் |
தமிழ் ஸ்டுடியோ.காம் அங்கமான கூடு இணைய இதழின் கொஞ்சம் தேநீர்...நிறைய அரட்டை...ஒவ்வொரு மாதமும் நான்காவது சனிக்கிழமை நடத்துவது என முடிவானது. அதன் படி முதல் சந்திப்பு கரிசல் காட்டுத் தந்தை கி.ரா.வுடன் என முடிவாயிற்று. புதுவையில் வசிக்கும் கி.ரா.வுடன் சந்திப்புக்கு சுமார் 65 ஆர்வலர்கள் பதிவு செய்தனர் அவர்களில் சுமார் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் இறுதியில் ஆறு ஆர்வலர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர். ஆர்வலர்களுக்கு முதலில் இருந்த ஆர்வம் இறுதியில் இல்லாமல் போனது வருத்தப்பட கூடிய நிகழ்வாகும். சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தத்திலிருந்து 25.9.10 காலை 9 மணிக்கு புறப்படுவது என ஆர்வலர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது. சரியான நேரத்திற்கு மூன்று பேர்களும், அரைமணி நேர தாமதத்தில் இரண்டு நபர்களும் ஒரு மணி நேர தாமத்தில் மற்றொரு நபரும் என ஒன்று சேர்ந்தோம்.
Wednesday, August 25, 2010
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (6)
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (6)
| வெங்கட் சுவாமிநாதன் |
ஞான ராஜசேகரனைப் பற்றிப் பேசலாம். மற்றவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளாத, எடுத்துச் சொல்லாத பெயர். ஆரம்ப கால ஞான ராஜ சேகரனை எனக்குத் தெரியுமாதலால் சொல்கிறேன். 1974-75 களில் அவருடன் பழக்கம் ஏற்படத் தொடங்கியதால் சொல்கிறேன்.
தமிழ் சினிமாவைக் கேலி செய்வது அவரது மனம் மகிழும் பொழுது போக்கு. மிக ஆரோக்கியமான, கேலி அது. தமிழ் சினிமாவே எத்தகைய கேலிக்கூத்து என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார். அந்நாட்களில் அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தி. ஜானகிராமன். அவரது மோகமுள் நாவலை படமாக்க வேண்டும் என்பது அந்நாட்களிலிருந்தே அவரது கனவாக இருந்து வந்தது. பிறகு அவரும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி, கேரள அரசில் சேர்ந்த பிறகும் அவரது கனவு மறையவில்லை. நானும் அவரும் மோகமுள் படமெடுக்க யாரிடமோ அந்த நாவல் விற்கப்பட்டுவிட்டதென கேள்விப்பட்டு, நான் சென்னை வந்திருந்த போது சிட்டியையும், ஜானகிராமனது புத்திரர்களையும் தேடிச் சென்றோம். இது நடந்தது எண்பதுக்களின் பின் பாதியில். பின் இந்த சிக்கல் ஒருவாறாக தீர்ந்தது என்று அறிந்தது நானும் ஞான ராஜசேகரனும் தில்லியில் உள்ள கேரள ஹவுஸில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஜானகிராமனின் நாவலை வைத்துக்கொண்டே அவரது வார்த்தைகளைக் கொண்டே திரைக்கதையின் வரைகோட்டையும் தீர்மானித்தோம். கதை நிகழுமிடங்கள் ஜானகிராமன் குறிப்பிட்டிருக்கும் கும்பகோணம் தெருக்களே. அன்று நாங்கள் தீர்மானித்திருந்த படத்தின் ஆரம்பம், நாவலின் கடைசிக் கட்டமான பாபுவின் வடநாட்டுப் பிரயாணம், சங்கீதம் கற்க. அவனுக்கு வழியனுப்பும் காட்சி. ரயில் புறப்படுகிறது. அதே ரயில் பெட்டியில் பாபு உட்கார்ந்திருக்கும் காட்சி தொட்ர்ந்து கதையின் ஆரம்பமும் ஆகிறது. அது பாபு கும்பகோணத்துக்கு வரும் காட்சி. படத்தின் கடைசி காட்சி, முதல் காட்சியான வடநாட்டுப் பிரயாணத் தொடக்கம், விரைந்து செல்லும் ரயில் பெட்டியில் பாபு. கேரளா ஹவுஸில் எழுதிச் சென்ற வரைகோடு மறக்கப் பட்டுவிட்டது. அதற்கு அவருக்கு உரிமை உண்டு. அவர் ஜானகிராமனுக்கும் அவரது நீண்ட நாள் லட்சியக் கனவுக்கும் திரைப்படத்தில் சாட்சியம்.............
மேலும் படிக்க: http://thamizhstudio.com/others_article_8.php
Saturday, August 21, 2010
உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –3
| பா.செல்வராஜ் |
ரங்கநாதனுக்கு சமீப காலமாக காலை எழும்போதே வலது கை நடுங்க ஆரம்பித்து விடுகிறது. கையில் சுத்தமாக சக்தியின்றி எந்த வேலையும் செய்ய முடியாத வகையில் யாரோ கையைப் பிடித்து ஆட்டி விடுவது போல் ஆடிக்கொண்டிருக்கின்றது. கை நடுக்கம் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொள்கிறார். சரியாக வேலைக்குச் சென்று எட்டு மாதத்திற்கு மேல் இருக்கும். பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் கூட கை நடுக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை. நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம் என பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அதற்கான அறிகுறிகள் இல்லை என்று அறிந்தும் ‘சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்’ நரம்பு தளர்ச்சியைப் போக்கும் மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். ஒரு கை நடுங்கிக் கொண்டே ஆலோசனை அறைக்குள் அழைத்து வரப்பட்ட ரங்கநாதனுக்கு ஏன் இப்படி?
உளவியல் உண்மைகள்:
மருத்துவர்களின் சோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, ரங்கநாதனைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளும் நோக்கில் அவரிடம் மெதுவாக ஒவ்வொன்றாக கேட்கத் துவங்கினேன். அவருக்கு தற்போது 47 வயது, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகன் இருக்கிறான். நடுத்தர குடும்பத்தை சார்ந்த இவர் ஓர் நூற்பாலையில் கோன் வைண்டிங் எனும் பிரிவில் பணியாற்றுகிறார். ரங்கநாதனின் மனைவி வீட்டில் சும்மா பொழுதை ஏன் போக்க வேண்டும் என்றெண்ணி நாண்காண்டுகளாக அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.
மேலும் படிக்க:
http://koodu.thamizhstudio.com/thodargal_10_3.php
Thursday, August 5, 2010
ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி இலக்கிய சந்திப்பு
கேணி அமைப்பின் 11வது மாத இலக்கியக் கூட்டம் 11.04.2010 அன்று நடைபெற்றது.
பத்திரிகையாளர் ஞாநி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மேலும் "எழுத்தாளர் அசோகமித்ரன் எனது மூத்த நண்பர். தமிழ் செல்வன் என் சகவயது நண்பர். அவர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. சமூகப் பிரச்சினை, கலாச்சார பிரச்சினை, தொழிலாளர் பிரச்சினை என பல துறைகள் பற்றியும் கருத்து சொல்பவர். தன் கருத்துக்களை கட்டுரைகளாகவும் எழுதுபவர். இவை எல்லாம் விட அவர் ஒரு களப் பணியாளராகவும் உள்ளார். பெரும்பாலும் பயணம் செய்து கொண்டே இருப்பவர். அறிவொளி இயக்க அனுபவங்களையும், தொழிற்சங்க அனுபவங்களையும் நூலாக எழுதியுள்ளார். இவர் களப் பணியாளராக இருப்பதனால் புனைவுகள் எழுத முடியாமல் போகிறது. "என் வாழ்க்கை என் எழுத்து" என்ற தலைப்பில் நம்மோடு உரையாடுவார் பிறகு நாம் அவரோடு விவாதிக்கலாம் என கூறி ஞாநி தொடக்க உரையை நிறைவு செய்தார்.
ச. தமிழ்செல்வன்
எதை நாம் முக்கியம் எனக் கருதுகிறோமோ அதை நம்மால் செய்து முடிக்க முடியும். ஒரு காலத்தில் கதை எழுதுவது முக்கியம் என கருதியதால் கதைகள் எழுதினேன். "வெயிலோடு போய்" என்ற என் முதல் சிறுகதை தொகுப்பு வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாவது கதைத் தொகுப்பு வந்தது. நான் 33 ஆண்டுகளில் 32 சிறுகதைகளை மட்டுமே எழுதியுள்ளேன். வருடத்திற்கு ஒரு சிறுகதை கூட வெளிவரவில்லை.
என் அப்பா வழி தாத்தா தலையாரியாக வேலை பார்த்தார். என் அம்மா வழி தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் நாடகக்காரர். என் அப்பா எழுத்தாளர். தீவிர தி.மு.க. அனுதாபி. எங்கள் வீடு நிறைய புத்தகங்கள் இருக்கும். எங்கள் சிறுவயதில் புத்தகங்கள் மீதுதான் விளையாடுவோம். எங்கள் அப்பா வேலை மாறுதல் காரணமாக பல இடங்களுக்கு மாறிக் கொண்டு இருந்ததனால் எங்கள் அத்தைதான் எங்களை வளர்த்தார். அவர் ஒரு விதவை. தன் வாழ்க்கையை எங்களிடம் கதைகதையாகச் சொல்லுவார். நான் ஆறாவது படிக்கும்போதே எழுத ஆரம்பித்து விட்டேன். நான் எழுத்தாளனாக மாறியதில் வியப்பு ஏதுமில்லை. முதல் தலைமுறை படிப்பாளிகள் படைப்பாளியாக மாறுவதுதான் சாதனை என நினைக்கிறேன்.
ச. தமிழ்செல்வன் பங்கேற்ற கேணி நிகழ்வை ஒலி வடிவில் கேட்க
http://koodu.thamizhstudio.com/ilakkiyam_seithigal_keni11.php