Saturday, December 11, 2010

பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010,கடைசித் தேதி: டிசம்பர் 20, 2010.



பெரியார் சுயமரியாதை ஊடகத் துறை & பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் பெரியார் திரை - குறும்படப்போட்டி 2010,கடைசித் தேதி: டிசம்பர் 20, 2010.

முதல் பரிசு: ரூ.10,000
இரண்டாம் பரிசு: ரூ. 5,000
மூன்றாம் பரிசு: ரூ. 3,000

மேலும் சிறப்பு, ஊக்கப் பரிசுகள் உண்டு

நுழைவுக் கட்டணம் இல்லை.


போட்டிக்கான விதிமுறைகள்:

* குறும்படம் தமிழில் எடுக்கப்பட்டதாக 30 மணித் துளிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் (Subtitles) இருப்பி..


more: http://thamizhstudio.com/competitions_22.php


மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (12)



மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (12)

வெங்கட் சுவாமிநாதன்

எந்திரன் பற்றி எழுதியது போதும், இனி மற்ற விஷயங்களைப் பற்றி எழுதலாமே என்று சில அன்பர்கள் இங்கு எழுதியிருக் கிறார்கள். வாஸ்தவம். ஒரு ஆரோக்கியமான சமூகத்தில், எந்திரன் பற்றிப் பேச்சே எழுந்திராது. ஆனால் அது ரஜனி காந்த் ஸார், சன் டிவி என்ற இரு பிரம்மாண்ட சக்திகள் கையில் ஒரு மகத்தான சினிமாவாக ஒரு சூறாவளி விளம்பரத்தின் தயவில் முன் வைக்கப்பட்டிருக்கிறது. அது திரும்பத் திரும்ப, சன் தொலைக்காட்சியின் டாப் டென்னில் இன்னமும் முதலிடம் வகிப்பதாக தர நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. தர நிர்ணயம் என்பது நம் தமிழ் சினிமா உலகில் ஒட்டு மொத்தமாக எல்லோராலும் வரும்படியை வைத்துத்தான் தரம் பற்றி முடிவு செய்யப்படுகிறது. வரும்படி என்கிற சமாசாரம் நிதர்சனமாகக் காணக்கூடிய ஒன்று. நிரூபிக்கப்படக்கூடிய ஒன்று.

ஆனால் தரம் என்கிற உணர்வு இருக்கிறதே அது, நிதர்சனமற்றது. ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். ஆனால் சன் தொலைக்காட்சி ஆட்சி செய்யும், தமிழ் பேசும் உலகில், வரும்படி கூட கட்டாயத் திரையிடல் மூலம் அறிவிக்கப்படுகிறது. ஆக ஒரு கால கட்டத்திற்குப் பிறகு இப்படி கட்டாயமாக வெற்றி திணிக்கப்பட்ட ஒன்றை தரம் பற்றி பேசுவோரே இல்லாமல் செய்துவிட்ட தமிழ் சமூகத்தில் அது பற்றிப் பேசித் தான் உதறித் தள்ள வேண்டியிருக்கிறது. காரணம், எந்திரன் ஒரு உச்சத்தின் குற்யீடாகிவிட்டது. இனி அந்த எவெரெஸ்டை நோக்கித் தான் எல்லோரும் பயணிக்கும் கனவு காண்பார்கள். செயல்படுவார்கள்.

இன்னம் ஒன்று. ஏந்திரன் பற்றி எழுதியது போதும் என்று சில அன்பர்கள் சொன்னது இங்கு வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், எந்திரன் பற்றி நான் எழுதியதைப் பொறுக்கமாட்டாது ஆபாசமாகத் திட்டி வந்த பின்னூட்டங்கள் நிறையவென்றும், ஆனால் அவை ஆபாசமாக இருந்ததால் அவற்றை வெளியிடவில்லை என்று அருண் சொல்கிறார். மாதிரிக்கென்று ஒன்றிரண்டை வெளியிட்டிருந்தால், அவை எத்தனையில் ஒன்றிரண்டு என்றும் சொல்லியிருந்தால் நம் தமிழ் சமூகத்தில் ரஜனி சாரின் ரசிகர்கள், எப்படிப்பட்ட எதிர்வினையைக் காட்டுபவர்கள் என்பதோடு நம் தமிழ் சமூகத்தின் சீரழிவு எத்தனை ஆழ வேர்கொண்டதும், பரவலானதும், கொடூரமானதும் என்பது தெரிந்திருக்கும். நம் ஆபாசங்களை, நம்மைப் பீடித்திருக்கும் பயங்கர நோய்களை நாம் அறியாது மூடி மறைப்பானேன்?. நம் வியாதியைப் பற்றி நாம் அறியாதிருப்பதும் கண்மூடிக்கொள்வதும், நோயை பயங்கரமாக முற்றச் செய்துவிடும். செய்துவிடும் என்ன, முற்றிவிட்டது என்று தான் எனக்குத் தோன்றுகிறது.

எந்திரனைப் பற்றி இன்னம் கொஞ்சம் சொல்லி விட்டு பின் மற்றவற்றிற்கு நகர்கிறேன். ஏனெனில் இது பற்றி நாம் மிகவும் பெருமைப் பட்டுக்கொள்கிறோம். தமிழ் சினிமாவின் வரலாற்றிலேயே இப்படத்தின் தொழில் நுட்பமும், கற்பனையும் விஞ்ஞானத்தைக் கலையாக்கியதாகவும், எல்லாம் ஒரு உச்ச கட்ட சாதனையென்றும் பேசிக்கொள்ளப்படுகிறது. குத்தாட்டம், ஸ்டண்ட் காட்சிகள், வட்டாரப் பேச்சு, கிராமம் , காமிக் என்று எந்த ஒன்று ரசிகப் பெருமக்களின் வரவேற்பைப் பெற்று அதிக வரும்படிக்கு வழி காட்டுகிறதோ, அதையே பின் வரும் நிறைய படங்கள் காப்பி அடிப்பது நம் சினிமா மரபு ஆதலால், இனி நிறைய எந்திரன் காப்பிகள் வருவதை எதிர்பார்க்கலாம். தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுத ஆரம்பித்தால் அதன் ஒவ்வொரு அத்தியாயமும் இப்படித்தான் நீளும். எந்த மசாலா சரக்கு வெற்றியடைந்து, காபி செய்யப்பட்டு எத்தனை வருடங்களுக்கு எத்தனை படங்களுக்கு அது நீடித்தது பின் எந்த மசாலா எந்த வருடம் எந்தப் படத்தில் புகுந்து வெற்றிக்கு வழிவகுத்தது என்று அந்த அத்தியாயங்கள் நீளும்.

ஆனால் இது எப்படி ஒரு தமிழ் சினிமாவின் சாதனையாகும் என்பது முக்கியமான கேள்வி. இந்த படத்தை மற்றவற்றிலிருந்து வேறுபடுத்தி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளதாகச் சொல்லப்படும் சமாசாரங்கள் எதுவும் தமிழ் மண்ணைச் சேர்ந்ததில்லை. தமிழனின் படைப்பல்ல. நான் ரஜனி சாரைச் சொல்லவில்லை. அவர் இங்கு தான் தன் சினிமா வாழ்வையும் வளத்தையும் கண்டவர். அவரும் நம் தமிழ் அரசியல் வாதிகளைப் போல, தமிழைக் கோஷமாக்கியே தன் அனேக காரியங்களைச் சாதித்துக்கொள்கிறார். அவர் மூச்சிலே தமிழ் இருக்கும் என்று பிரகடனம் செய்தவர். தமிழ் தான் இருக்குமே தவிர காவிரித் தண்ணி இருக்காது. அது கன்னடம் தான் பேசும். ஆக, காவிரித்தண்ணி பற்றி மட்டும் பேசிவிடக்கூடாது. அதற்கு அவரை மட்டும் தனித்துக் குற்றம் சொல்லிவிடமுடியாது. நம் அரசியல் தலைவர்களும், தமிழினத் தலைவர்களும் மிகவும் அடக்கித் தான் வாசிக்கிறார்கள். காவிரி, பாலாறு, ஈழத் தமிழர் பற்றியெல்லாம் ஏதும் வீராவேச முழக்கங்கள், அறை கூவல்கள் விடுவதில்லை.

ஆனால் எப்படி, நமது உலக நாயகனின் ஒவ்வொரு படத்துக்கான அவதார வேடங்கள் அனைத்துக்கும் ஹாலிவுட் ஒப்பனைக் காரர் எவராவது அழைத்து வரப்பட்டால் அது எப்படி தமிழ் சினிமாவின் தொழில் நுட்ப அல்லது கலைநுட்ப சாதனையாகும்? இதுகாறும் அனேகமாக எல்லா வேஷங்களும் போட்டுத் தீர்ந்துவிட்டதால், உலக நாயகன் இஸ்பானிய காளைச் சண்டை வீரராகிறார். மன்மதன் விட்ட அம்பு படத்தில் எம்ஜிஆர் சிங்கத்தோடு சண்டை போடவில்லையா? அதுக்கும், முன்னால், எப்பவோ முப்பது நாற்பதுக்களில், ஒரு சிறு குழந்தையாக, மூன்று வயசுக் குழந்தை, கண்ணன் ஒரு ராக்ஷஸ பாம்பை வளைத்துப் பிடித்து அதன் மேல் காளிங்க நர்த்தனம் செய்யவில்லையா? வேண்டியது ஒரு தேர்ந்த காமிராமேன். அடுத்த படத்தில் சூப்பர் ஸ்டாரோ இல்லை உலக நாயகனோ, பாகிஸ்தானிலிருந்து வரும் கோரி, கஜனி ஏவு கணைகளை அவை வரும் வழியிலேயே ஆகாயத்துக்கு எம்பி குதித்து அவை தாக்கும் முன்னரே தம் ஒற்றைக் கையில் பிடித்து விடுவார்கள். பாபா படத்தில் இதன் ஆரம்பங்களைப் பார்க்கவில்லையா என்ன?

இதெல்லாம் கிடக்கட்டும். சினிமாவில் வரும் பீதாம்பர வித்தைகள் இவை. அந்த வித்தை காட்டுபவரோ நம்மூரில் பிறந்தவர், வளர்ந்தவர். வித்தை கற்றுக் கொண்டவர். எனவே அதைத் தமிழனின் சாதனையாகக் கொள்ளலாம். ஆனால் உலக நாயகன் படங்களுக்கு வந்து அவருக்கு ஒப்பனை செய்யும் ஹாலிவுட் காரர் யாரோ ஒருத்தர். அதை நம்மது என்று தம்பட்டம் அடித்துப் பெருமை கொள்வதில் என்ன இருக்கிறது? சன் பிக்சர்ஸ் காரரிடம் 150 கோடியோ என்னவோ அநாயசமாக அள்ளிவிட பணம் அம்பாரம் அம்பாரமாகக் கொட்டிக்கிடக்கிற காரணத்தால் சங்கர், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்க்கு (எனக்கு இதற்கெல்லாம் தமிழில் என்ன சொல்வது என்று தெரியாது. இந்த என் குறைபாட்டை கேடிவி, சன் பிக்ஸர்ஸ் நடத்துபவரோ, அல்லது அவரது தாத்தாவுமோ கோவிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்) எந்திரன் படத்துக்கான மொத்த செலவில் 40 சதவிகிதம் செலவழிக்க முடிகிறது. .சாகஸ காட்சிகளை உருவாக்க மாட்ரிக்ஸ் படத்தில் வேலை செய்த யுவென் வோ பிங்கையும் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவை க்ராஃபிக்ஸ்க்கும், அழைத்து வந்து செய்து கொண்டால் அது எப்படி சங்கருக்கோ சன் பிக்சர்ஸ்க்கோ, ரஜனி சாருக்குமோ பெருமை சேர்க்கும்?. இதெல்லாம் போகட்டும். ஐஸ்வர்யா ராய் இதில் காட்சி தரும் 57 வித உடையலங்காரங்களையும் சூப்பர் ஸ்டார் ரஜனி ஸார் தோன்றும் 55 வித உடைகளையும் வடிவமைத்து தயார் செய்து கொடுத்தது மேரி ஈ.வொட் என்பவர். எங்கிருந்து வந்தாரோ தெரியாது.

ஆக ரோபோ வும் இறக்குமதி. அதன் இயக்கமும் தந்திர, சாகஸக் காட்சிகளும் இறக்குமதி செய்த பல தொழில் நுட்ப மூளைகளின் வேலைகள். போயும் போயும் உடையலங்காரங்கள் கூட இறக்குமதி, என்றால் அதில் நம்மைப் பற்றித் தம்பட்டம் அடித்துக்கொள்ள என்ன இருக்கிறது? அதிலும் அந்த உடைகள் எந்த நியாயத்துக்கோ தர்க்கத்துக்கோ கட்டுப் பட்டவை அல்ல. ஏதோ இஷடத்துக்கு கற்பனை செய்து கொள்ளப் பட்டவை. க்ராஃபிக்ஸூக்கு இந்தியா தான் சிறந்த இடம் என்றும் அதிலும் சென்னை தான் முன்னணியில் இருக்கிறது என்றும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படி இருந்தும் ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோவையும் யுவென் வோ பிங்கையும் தான் நாடவேண்டியிருந்திருக்கிறது. ஏனெனில் நம்ம படம் 150 கோடி படம் உலகத் தரத்துக்கு இருக்கவேண்டுமே. இவ்வளவையும் இறக்குமதி செய்துவிட்டு உலகத் தரத்துக்கு தயாரித்திருக்கிறோம் என்று பெருமையடித்துக்கொள்வது எப்படி சாத்தியமாகிறது? அதில் என்ன நியாயம் இருக்கிறது. பணம் தான் நம்மது. ஐஸ்வர்யா ராயைக் காதலிக்க ரோபோவுக்கும் ரஜனிசாருக்கும் போட்டி என்ற கற்பனையும் நம்மூர் கற்பனை. தான். சரி. வேறு எது இதில் நம்மது? பணம் கொடுத்து அமெரிக்காவிலிருந்து விலைக்கு வாங்கியதைக் காட்டி இது உலகத் தரத்துக்கு நான் செய்ததாக்கும் என்றால் அது கேலிக்கூத்தல்லவா? வெட்கப் படவேண்டாமா? I

ஆக, இதில் நம்மது, தமிழ் சினிமா சம்பந்தப்பட்டது எது? கலப்படமில்லாத தமிழ்ச் சரக்கு எது என்று பார்த்தால் அது ரஜனி சாரும், சங்கரின் கற்பனை வளமும், வழக்கமான தமிழ் வெற்றிப் படத்துக்கான ஆவி வந்த ஃபார்முலாக் கதை இருக்கே பின்னர் அந்தக் கதைக்கு தாளிக்கப்படும் கடுகு உளுத்தம் பருப்பு சமாசாரமாக, பாட்டு, டான்ஸ், சாகஸ காட்சிகள், எல்லாம். அது தான். அது இந்தப் படத்துக்கு மாத்திரம் இல்லை. எல்லாத் தமிழ் படத்துக்குமான தாளிப்பு தான். மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய்ப் பொடி வகையறாக்கள். ஆக எந்திரன் படத்தை மாத்திரம் தனிப்படுத்திப் பேசுவதில் அர்த்தமில்லை. எல்லா தமிழ் சினிமா படங்களையும் கணக்கில் கொண்டு தான் சொல்கிறேன்.

தமிழ் சினிமா மாறிக்கொண்டு வருகிறதாக்கும். என்னென்னவோ புது புது சோதனைகள் செய்கிறார்களாக்கும் என்கிறார்கள். சமீபத்தில் மகிழ்ச்சி என்று ஒரு படம். நீல பத்மனாபனின் தலைமுறைகள் என்னும் நாவலை படமாக்கியது என்றார்கள். தமிழ் சினிமாக் கதைகளுக்கும் தலைமுறை நாவலுக்கும் எப்படி முடிச்சு போட முடியும், ஒன்று மொட்டைத் தலை, இன்னொன்று முழங்கால், என்று எனக்குள் கேள்வி பிறந்தது. அதில் வரும் ஒரு ஆச்சி பிரமாதமான சிருஷ்டி. நாவல் முழுதும் வியாபித்து இருப்பவள். தலைமுறைகள் நாவலின் மைய பாத்திரம். தமிழ் இலக்கியத்திலேயே உன்னத சிருஷ்டிகளில் ஒன்று. ஜானகிராமனின், ஜமுனா போல, புதுமைப் பித்தனின் கந்தசாமிப் பிள்ளை போல, இமையத்தின் ஆரோக்கியம் போல. இந்த ஆச்சியைத் தமிழ் சினிமாவுக்குள் கொண்டு வர, தமிழ் சினிமாக் காரர்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? இல்லை. அவர்கள் புத்தி சுவாதீனத்தில் உள்ளவர்கள் தான் தம் வழிவந்த வெற்றிக்கு உத்தரவாதம் தரும் மரபைப் பேணுபவர்கள் தான். ஆகவே, கஞ்சா கருப்புக்கு தலைமுறை நாவலில் என்ன வேலை என்று கேட்கமுடியாது. அதன் சினிமா அவதாரமான மகிழ்ச்சியில் அவசிய வேலை உண்டு. நான் பார்த்த இரண்டு அல்லது மூன்று நிமிட துணுக்கில் அந்த ஆச்சி நூற்றுக்கு நூறு சதவிகித தமிழ் சினிமாவில் ஆகி வந்த ஆச்சி தான். தலைமுறை நாவலின் ஆச்சி அல்லள்.

நந்த லாலா பாருங்கள். இது உலகத் தரம் வாய்ந்த க்ளாஸிக் என்று இங்கு சில அன்பர்கள் எனக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர்கள் சிபாரிசுக்காகக் கட்டாயம் பார்ப்பேன். அது தொலைக் காட்சியில் வரும்போது. தியேட்டருக்கு போய் அல்ல. ஆனாலும் நான் பார்க்கக் கிடைத்த சில நிமிட துணுக்கு எனக்கு உற்சாகம் தருவதாக இல்லை. இயல்பு என்பது நம் வசத்தில் சிக்க மறுக்கிறது. எதைச் செய்தாலும் ஒரு நாடகத் தன்மை கட்டாயம் வந்து ஒட்டிக்கொள்கிறது. அது படம் முழுதும் வியாபித்து பயமுறுத்துகிறது. இயல்பாக இருப்பது என்பது தமிழனுக்கு என்றுமே சாத்தியமாகாத ஒன்று என்று தோன்றுகிறது. இது என்ன இன்று நேற்று பீடித்த வியாதியா என்ன? இதன் உச்ச கட்டமே “அவள் ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஒடினாள்” சமாசாரத்தை அறுபது வருடங்களுக்குப் பிறகும் சொல்லிக்கொண்டு வருகிறோம். சமீபத்தில் கூட உலக நாயகன் அதில் தான் கண்ட சினிமா நயத்தை இன்றும் நினைத்து மலைத்து நிற்பதாகச் சொல்லியிருக்கிறார். யார் சொன்னது? உலக நாயகன் தான். ஆக, முன்னால் ஜெயகாந்தன் சொன்னது போல, திடீரென தமிழன் எட்டடிக்கு உயர்ந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பார்க்கவேண்டும்.

(தொடரும்)




Thursday, December 9, 2010

பிரமிள் நூலகம்



பிரமிள் நூலகம்

தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்பட மற்றும் இலக்கிய ஆர்வலர்களுக்காக விரைவில் தனது அலுவலகத்தில் நூலகம் ஒன்றை அமைக்கவிருக்கிறது. இந்த நூலகத்தின் மூலம் விரிவானதொரு வாசகர் வட்டம் உருவாக்கப்பட்டு கிராமங்கள் தோறும் "வாசிப்பு அனுபவத்தை" ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்படவிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஏதாவது கிராமத்தில் பிரமிள் நூலக வாசகர் வட்ட வாசிப்பு நிகழ்வுகள் நடத்தப்படும்.

தமிழகத்தில் பரவலான வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தவும், தமிழ் எழுத்தாளர்கள் பற்றி கிராம மக்களும், மாணவர்களும் அறிந்துக் கொள்ள இந்த நிகழ்வுகள் உதவும். தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிளின் பெயரில் இயங்கவிருக்கும் இந்த நூலகத்திற்காக நீங்களும் உங்களிடம் உள்ள புத்தகங்களை கொடுத்து உதவலாம், அது ஒரே ஒரு புத்தகமாக இருந்தாலும் சரி. புத்தகங்கள் தர விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9840698236..


வெளிநாடுகளில் வசிப்பவர்களும் புத்தகங்கள் கொடுத்து உதவலாம். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thamizhstudio@gmail.com


தமிழ் ஸ்டுடியோ.காம் 27வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)




நாள்: சனிக்கிழமை (11-12-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)

முதல் பகுதி: (3 மணி) - களம்

முதல் பகுதி: (3 மணி) - களம்

இந்த மாதம் முதல் புதிய பகுதியாக "களம்" என்கிற பகுதியில் இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, உள்ளிட்ட துறைகளில் உதவியாளராக பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களின் திரைப்பட அனுபவங்களை குறும்பட ஆர்வலர்களுடன் பகிர்ந்துக் கொள்வார்கள். இதன் மூலம் திரைப்படத் துறையின் தற்காலப் போக்கு, குறும்பட துறையில் எந்தெந்த இடத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கிற தெளிவு ஆர்வலர்களுக்கு ஏற்படும்.

மேலும், ஒரு உதவி இயக்குனர், உதவி ஒளிப்பதிவாளர், உதவி படத்தொகுப்பாளர் உள்ளிட்ட கலைஞர்களின் பணி என்ன என்கிற தெளிவும் இதன் மூல ஏற்படும்.

இதில் இந்த மாதம் கௌதம் மேனன், லிங்குசாமி போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திரு. நாகராஜ் பங்கு பெறுகிறார்.

இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்

இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் சென்னை திரைப்பட கல்லூரி ஒளிப்பதிவு துறை பேராசிரியர் திரு. கிருஷ்ணா G.P. அவர்கள் பங்கு பெறுகிறார்.

குறும்படங்களில் ஒளிப்பதிவில் ஷாட் தொடர்பாகவும், எந்த ஷாட்டை எங்கே, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பாகவும் விளக்கவுள்ளார். ஒளிப்பதிவு தொடர்பான தொழில்நுட்ப சந்தேகங்களுக்கும் அவர் பதிலளிப்பார்.

மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்

இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.

குறும்படத்தின் பெயர்இயக்குனர் பெயர்கால அளவு

அட்சயம்

கணபதி

12 நிமிடங்கள்

தீராத பக்கங்கள்

ஷரன்

5 நிமிடங்கள்
ETC.,

ரவி பிரகாஷ்

9 நிமிடங்கள்

மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:

மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் இயக்குனர் கஸ்தூரி ராஜா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.

என் ராசாவின் மனசிலே, நாட்டுப்புறப்பாட்டு, எட்டுப் பட்டி ராசா, துள்ளுவதே இளமை, கரிசக் காட்டுப் பூவே போன்ற படைகளின் இயக்குனர் ஆவார்.

மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268


Tuesday, December 7, 2010

தமிழ் ஸ்டுடியோ.காம் மூன்றாமாண்டு தொடக்க விழா... (பதிவு எண்: 475/2009)




சா.ரு. மணிவில்லன்

தமிழ் ஸ்டுடியோ.காம்-ன் 26வது குறும்பட வட்டம் மற்றும் தமிழ் ஸ்டியோ.காம் மூன்றாவது ஆண்டு துவக்க விழா சென்னை இக்சா மையத்தில் 23.11.2010 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக எழுத்தாளர் மாலன், நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குனர் பிரபு சாலமன், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘தமிழ் ஸ்டியோ’ குணா வரவேற்புரை வழங்கினார்.

முதல் நிகழ்வாக இரண்டு குறும்படங்கள் திரையிடப்பட்டன.
1. பயணம் - சுப்புராஜ்
2. ஒரு ஊர்ல - பொன்ராஜ்

தமிழ் ஸ்டுடியோ மூன்றாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடத்திய ஒரு நிமிட குறும்பட போட்டியில் பரிசு பெற்ற படங்கள்

1. பொதி - சுப்புராஜ் (முதல் பரிசு) ரூ.2000
2. request - விஜயபாஸ்கர் (இரண்டாம் பரிசு) ரூ.1000
3. Festival - குறிஞ்சி பிரபா (இரண்டாம் பரிசு) ரூ.1000
4. ஜன்னலுக்கு வெளியே - பொன்ராஜ் (இரண்டாம் பரிசு) ரூ.1000

தமிழ் ஸ்டியோ அருண்

தமிழ் ஸ்டியோ காம் பற்றி சில வதந்திகள் உலவுகின்றன. இதற்கு பின்னணியில் எந்த நிறுவனமும் கிடையாது. எந்த NGO அமைப்புடனும் தொடர்பு கிடையாது. தமிழ் ஸ்டுடியோ ஒரு சுயேச்சியான அமைப்பாகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் குணாவும் எங்கள் சொந்த பணத்தை செலவு செய்து நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு முதல் லிவிங்சன், தயாளன் இருவரும் எங்களுடன் சேர்ந்துக் கொள்கின்றனர்.

தமிழ் ஸ்டியோ.காம் மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை குறும்பட வட்டம் நிகழ்ச்சியை தொடர்ந்து கடந்த 25 மாதங்களாக நடத்தி வருகிறது. இதன் நோக்கம் குறும்பட ஆர்வலர்களுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியை அளிப்பது மற்றும் குறும்பட இயக்குனர்களை கவுரப்படுத்துவது ஆகும்.

கடந்த 10 மாதங்களாக பவுர்ணமி கூட்டம் நடத்தி வருகிறோம். பவுர்ணமி இரவில் ஒரு குறும்படம் மற்றும் ஒரு உலக படம் திரையிட்டு விவாதிக்கிறோம். இதன் நோக்கம் குறும்பட ஆர்வலர்களுக்கு திரைப்பட ரசனையை வளர்க்க வேண்டும் என்பதாகும்.

குறுந்திரை பயணம் என்ற நிகழ்ச்சி மூலம் கிராமங்களுக்கு குறும்படங்களை கொண்டு செல்கிறோம். கிராம மக்கள் ஆர்வமாக உள்ளனர். நீங்கள் ஒத்துழைப்பு அளித்தால் உங்கள் கிராமங்களுக்கு கொண்டு செல்லலாம்.

கொஞ்சம் தேநீர் நிறைய அரட்டை மூலம் குறும்பட ஆர்வலர்களை இலக்கிய வாதிகளுடன் சந்திக்க வைக்கிறோம். குறும்பட ஆர்வலர்களின் இலக்கிய ரசனை மேம்பட இது உதவியாக இருக்குமென நம்புகிறோம்.

வரும் 27ந் தேதி முதல் புதுச்சேரியில் தமிழ் ஸ்டுடியோ.காம் கிளை செயல்பட இருக்கிறது. துவக்க விழாவிற்கு விருப்பம் உள்ளவர்கள் வரலாம்.

படம் எடுக்கலாம் வாங்க என்ற திட்டத்தின் மூலம் குறும்படம் எடுக்க காமிரா, படத்தொகுப்பு உதவிகள் செய்து தருகிறோம்.

குறும்பட இயக்குனர்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் படிமை என்ற பயிற்சி இயக்கத்தை இந்த மாதம் தொடங்க இருக்கிறோம். இதன் மூலம் ஆர்வம் உள்ளவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கிறோம்.

குறும்படங்களை விற்பனை செய்வது சம்மந்தமான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறோம். விரைவில் குறும்பட விற்பனை தொடங்கப்படும். இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் குறும்பட விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறோம்.

குறும்பட ஆர்வலர்களுக்கு பயன்படும் வகையில் நூலகம் (புத்தகங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் உலக படங்கள்) அமைக்கவும் முயற்சி செய்து வருகிறோம்.

எல்லா நிகழ்ச்சிகளையும் எவ்வித வியாபார நோக்கமும் இல்லாமல்தான் செய்து வருகிறோம். ஆர்வலர்கள் அவற்றை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இயக்குனர் பிரபு சாலமன்

எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்தமைக்கு முதலில் நன்றி கூறி விடுகிறேன். நிறைய பேர் கதை சொல்லி விட்டால் தன்னை இயக்குனர் என நினைத்துக் கொள்கின்றனர். என்னுடைய பாட்டிக்கூட நிறைய கதைகள் சொல்வார். கதை சொல்வது என்பது வேறு, இயக்கம் என்பது வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இயக்குனராக கடுமையாக உழைக்க வேண்டும். என்னுடைய 16 வருட உழைப்பு மூலம் நான் கற்ற விசயங்கள்தான் இன்று மைனா திரைப்படம் வெற்றிகரமாக ஓட காரணமாகும். மைனா படம் திராவிடர்களின் சினிமா என ரஜினி பாராட்டினார். இப்படத்திற்காக சுமார் 1200 கிலோ மீட்டர் பயணம் செய்தோம். யதார்த்தமாக அதேசமயம் வியபாரத்தனம் குறையாமலும் மைனாவை எடுக்க விரும்பினேன். அதை சிறப்பாக செய்துள்ளேன் என்பதை தான் மைனாவின் வெற்றி நிரூபிக்கிறது.

குறும்பட, திரைப்பட ஆர்வலர்களுக்கு தமிழ் ஸ்டியோ.காம் ஒரு பெரிய வாய்ப்பை தருகிறது. அதை நீங்கள்தான் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனி வரும் நாட்களில் நானும் தமிழ் ஸ்டுடியோவுடன் சேர்ந்து செயல்படுவேன் என கூறிக்கொண்டு விடை பெறுகிறேன்.

நடிகர் ரமேஷ் கண்ணா

இரண்டு மாதங்களுக்கு முன்பே அழைத்தனர். வர முடியாமல் போய்விட்டது. இன்று கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. அருண், குணா இருவரின் முயற்சிகள் கனவுகள் சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். குறும்பட ஆர்வலர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்னிடம் சுமார் 5000 உலக படங்கள் உள்ளன. அதை தமிழ் ஸ்டுடியோ பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்

எனக்கு எழுதுவது எளிது, மேடையில் பேசுவது சிரமம். இருந்தாலும் சுருக்கமாக பேசிவிடுகிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னை ஒரு தொடர் எழுத அருண் கேட்டார். நானும் எழுதுவதாக ஒப்புக்கொண்டு யாவரும் கேளிர் என்ற தொடரை எழுதினேன். எழுதும்போது பல விசயங்களை கற்றுக் கொண்டேன். நான் தான் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அருண் இங்கு பேசும்போது மிகவும் தன்னம்பிக்கையாக பேசினார். அவருடைய தன்னம்பிக்கைக்கு காரணம், திரை ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல வழிக்காட்டல் நிகழ்ச்சியாகும். ஆர்வலர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எழுத்தாளர் மாலன்

இந்த நிகழ்ச்சிக்கு என்னை ஏன் அழைத்தார்கள் என அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இங்குள்ள அனைவரும் சினிமா சார்ந்தவர்கள். நான் சினிமா மீது கடும் விமர்சனம் வைத்துள்ளவன். இன்னும் கொஞ்ச நாளில் பெரியார் சொன்னது போல் ஐந்து பாவங்களில் ஒன்று சினிமா என்ற மனநிலைக்கு கூட சென்றுவிடலாம்.

எழுபதுகளில் உலக படங்களை தொடர்ந்து பார்த்து இருக்கிறேன். உலக படங்களை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் திரையிடலுக்குக் கூட ஏற்பாடு செய்துள்ளோம்.

16எம்எம் -ல் குறும்படம் எடுத்தேன். அதில் ஏற்பட்ட அனுபவங்கள் பல. சினிமா நமக்கானது அல்ல. எழுத்துதான் நான் பயணிக்க வேண்டிய பாதை என்ற முடிவுக்கு வந்தது மிக முக்கியமான அனுபவமாகும்.

குறும்படம் என்பது ஒரு பாதிப்பை தரக்கூடியது. உங்களை பாதித்த ஒரு விசயத்தை மட்டும் கூறுவது.

என்னை பொறுத்தவரை ஊடகங்கள் செய்தியை சுமந்து செல்ல வேண்டும். அது எப்படி என்பது படைப்பாளியின் சுதந்திரம்.

இறுதியாக தமிழ் ஸ்டுடியோ அருண் நன்றி கூறினார். பண்பலை வானொலி தொகுப்பாளர் ராஜசேகர் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

நிகழ்வு சார்ந்து மேலும் ஒளிப்படங்களைக் காண:

http://picasaweb.google.com/thamizhstudio/pmSa

எழுத்து - சா.ரு. மணிவில்லன்




Monday, December 6, 2010

கதை சொல்லி - சாரு நிவேதிதா (Charu Nivedita)

லிவி

செவ்வாய்க்கிழமை பின்னேரம் 5.00 மணிக்கு கடிகார முள்ளோடு இதயமும் சேர்ந்து துடித்தது.மூச்சை சில நிமிடங்கள் சிறிது இழுத்து விட்டுக்கொண்டேன். கதை சொல்லிக்காக சாரு அன்று நேரம் ஒதுக்கியிருந்தார். ராயப்பேட்டையில் உள்ள அமிதிஸ்ட் கஃபே (Amithist) யில் இரவு சந்திப்பதென முடிவாகியிருந்தது. அடர் நீலமாய் வானம் மாறும்போது தொடங்கிய பயணம் சரியாக இருள் கவிந்ததும் கஃபே க்கு சென்றடைந்திருந்தோம். தகவல் தெரிவித்ததும் சாருவும் சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். கைக் குலுக்கல்களுடன் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டோம். மரங்களில் தொங்கும் லாந்தர் விளக்குகளைப் போன்ற உருளை பல்புகளும் பூவின் அமைப்பையொத்த ஸ்டாண்டில் (stand) இதழ்களையொத்த மங்கிய வெளிச்சம் தரும் மின்சார விளக்குகளுமென சூழ்ந்து நின்ற விருட்சங்களுக்கு கீழ் உள்ள ஒரு மேஜையில் அமர்ந்து உரையாடத் தொடங்கினோம்.

முன்னர் ஒருமுறை சென்னை கே.கே நகரில் உள்ள "டிஸ்கவரி புக் பாலஸில்"(Discovery book palace) புத்தக வெளியீட்டு விழாவுக்கு சாரு வந்திருந்தார். அங்கு பள்ளி நாட்களின் வகுப்பறைத் தோழனை எதிர்பாராத விதமாக சந்தித்தேன்."பரத்தை கூற்று" புத்தகத்தை வெளியிட்டு சாரு பேசத் தொடங்கினார். அது வரையில் என்னிடம் கதைத்துக் கொண்டு இருந்தவன், திடீரென முழு கவனமும் சாரு பக்கம் திரும்பியது. சாரு பேச்சைக் கேட்க தொடங்கியதும் அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சியும் பிரகாசமும்.சாருவின் ஒவ்வொரு அசைவையும் அவன் ரசிப்பவனாக இருந்தான். சாரு கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு சமர்பணம் என்பதில் தொடங்கி அவர் நடையில் விமர்சித்துக் கொண்டே போனார் (அவர் பேரரசு என்றால் மற்றவர்கள் எல்லாம் சாதாரண குடிமக்களா?). என்னைப் புறந்தள்ளியவனாக அவரின் பேச்சிலே அத்தனை ஆனந்தத்தைக் கண்டான். அவன் எனக்குத் தெரிந்த வரையில் ஒரு தீவிர நவீன இலக்கிய வாசகன் அல்ல.ஆனால் அவனுக்கு சாருவை பிடித்தருக்கிறது.அவரைத் தொடர்ந்து இணையத்தில் வாசிக்கிறான்.

போலியாக க‌ட்ட‌மைக்க‌ப்பட்ட‌ அமைப்பை மீறுத‌லே சாருவின் எழுத்தின் அர‌சியல். மிக‌த் துல்லிய‌மாய் தேர்ந்தெடுகப்பட்ட ஆணாதிக்க‌ மற்றும் ச‌மூக‌ இறுக்க‌ங்க‌ள் கொண்ட நம் ச‌மூக‌ம் அவ‌ரை ஏற்றுக் கொண்ட‌தே மிக‌ வினோத‌மான‌து. த‌மிழ்ச் ச‌மூக‌ம் சில‌ அற்புத‌ங்க‌ளை செய்து கொண்டே இருக்கும். பெரியாரை எவ்வாறு உயிரோடு விட்டார்க‌ள் என்ற‌ ச‌ந்தேக‌ம் அவ்வ‌ப்போது எழாம‌ல் இல்லை. சாருவையும் இச்சமூகம் ஏற்றுக் கொண்டிருக்கிற‌து என்றால் அவ‌ரே ஆச்ச‌ரிய‌ப்ப‌டுவார்.லாண்ட்மார்க் (land mark) புத்தகக் க‌டையில் ஒருமுறை புத்த‌க‌ங்க‌ளை தேர்வு செய்து கொண்டிருந்தார் ஒருவர்.கையில் சில‌ சாருவின் புத்த‌க‌ங்க‌ளை வைத்திருந்தார். தீவிர‌ வாசிப்பாள‌ர் என‌ எண்ணி அவ‌ரிட‌ம் பேச்சுக் கொடுத்தேன்.அவர் சொன்னாவைகள் தான் மிக‌ ஆச்சிரிய‌மானது "எல்லாப் புத்தக‌ங்க‌ளும் ப‌டிக்க‌ மாட்டேன் சாரு நிவேதித்தாவையும் சுஜாதாவையும் ம‌ட்டும் நேரம் கிடைக்கையில்


More: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_9.php




Thursday, December 2, 2010

ஊரே கேளு நாடே கேளு - எஸ். இலட்சுமணப் பெருமாள் கொட்டகை அனுபவங்கள்




எஸ். இலட்சுமணப்பெருமாள்

எஸ். இலட்சுமணப்பெருமாள்

எஸ். இலட்சுமணப்பெருமாள் முன்னுரை

சினிமா கொட்டகை அனுபவத்துல எங்க ஊருக்குன்னு தனிப் பாரம்பரியமே உண்டு. ஊரே கேளு நாடே கேளுன்னு சினிமாவும் புவியும் வதக்கழிஞ்சி போய்க் கிடக்கையிலெ இன்னுங்கூட எங்க ஊர்ல சினிமா டிவி பாக்காத ஆளுகள் உண்டு அப்படி ஓரு ஊரான்னு நீங்க அதிசயிக்கலாம்.

ஒரு தடவை பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சரா இருக்கும்போது எங்க ஊருக்கு வந்திருந்தார். ஊரு மந்தையிலெ சனங்களெல்லாம் கூடி நின்னாங்க ஆளுகளோட ஆளா அவரும் நின்னுக்கிட்டு, ‘ஏன்யா இந்த ஊர்ல காலரா கீலரா வந்திருக்கா’ அப்படீன்னு கேட்டார்.

ஒரு பெரிய மனுசர் எழுந்திரிச்சி கையைக் கட்டி ‘ஐயா நாஞ்சொல்றேன்னு சடைக்கப்படாது. பக்கத்து சம்சாரி ஊர்களில் தெருலைட்டு, தண்ணிடாங்கி, வாறுகாலு- ன்னு என்னென்னமோ வந்திருச்சி, இந்த ஊருக்குன்னு ஒண்ணும் இது வரைக்கும் வந்தபாடில்லை. காலரா மட்டும் இங்கெ எப்படி முன்னக்கூடி வந்திரும் மகாராசா!' அப்படீன்னார்.

அவரு காலரான்னா ஏதோ அரசு நலத்திட்டம்ன்னு நெனச்சிட்டார். அப்பேர்கொத்த அன்னாடுகாய்ச்சிக இருக்கிற ஊரு. போக்குவரத்துக நாகரீகம் சினிமாங்கிறவுல்லாம் சன்னஞ்சன்னமாத்தான் வந்து சேந்தது.

அப்பொவெல்லாம் பக்கத்து டவுனான சாத்தூருக்கு வருசத்துக்கு ரெண்டு வாட்டிதான் சனங்க போய்வருவாங்க. தீபாவளி, தைப்பொங்க, அந்த ரெண்டு நாளுக்குத்தான் அரிசிச்சோறு. அந்த அரிசி பருப்பு எண்ணை புண்ணை வாங்க அஞ்சு கல் தொலைவு நடந்தே போய் நடந்தே வருவாங்க.

சாமான்கள் வாங்கி திரும்பும்போது அஞ்சாறு பேரு சேந்தாத்தான் நடந்து வருவாங்க ரப்பட்டுல நேரங்கெட்டநேரத்துல வழிப்பறிகாரங்களுக்கு பயந்து ஒண்ணுரெண்டு பேருன்னா மால்ல படுத்திருந்துட்டு காலையில ‘பள்’ ஜன்னு விடியவும்தான் கிளம்பி வருவாங்க..

இப்படி சமயத்துலதான் சாத்தூர்ல ரெயில்வே லயனுக்கும் பக்கமா மொதமொத சினிமாக் கொட்டாயி வந்திச்சு. அப்பொ ரெண்டு பேரு சாமான்க வாங்க வந்தாங்க மாலுக்கு ஏம்போவானே சினிமா சினிமாங்கிறாங்களே அதையும் என்னான்னு சித்த பாத்திட்டு வருவோம்ன்னு போயிருக்காங்க.

சினிமாவுல ஒரு கட்டத்துல ‘ஹோ’ன்னு சத்தங்கொடுத்த மட்டுல ரெயிறு கிஜீகிஜீன்னு வந்திருக்கு. கொட்டாய்க்கி பின்னாடி ரெயில்வே லைன் இருக்கா. ஆஹா ரயிலுதடம் விலகி கொட்டாய்க்குள்ள புகுந்திருச்சின்னு இந்த ரெண்டு பேரும் ஓடுறா ஓடுறான்னு விழுந்தடிச்சி வெளியே ஓடியாந்துட்டாங்க.

வெளியே வந்து கொட்டாய திரும்பிப் பாத்து ‘நல்ல வேளடா தப்பிச்சோம். உள்ளே பூராம் நசுங்கி செத்துக்கிடக்காங்கடா. போலீசு கேஸுன்னு ஆகுமுன்னே அரம்படாம ஊருக்கு நடந்திருவோம்ன்னு வந்துட்டாங்க. அவங்க தவங்குற காலம் வணக்கும் விசயத்தை வெளியே விடலை.

வெள்ளக்காரன் போலீசு எத்தனையோ கொலை பாதங்களை மறைச்சமாதிரி இதையும் போட்டு மூடிருச்சின்னு ரொம்ப வேண்டிய ஆளுக்கிட்டெ சொல்லியிருக்காங்க செவலக்குடும்பணும் குருசாமித்தேவரும் ரொம்ப சிநேகிதகாரங்க. ஒருத்தர் பெரிய பண்ண வீட்டுலயும் ஒருத்தர் சின்னப்பண்ணெ வீட்டுலயும் சேந்த மட்டுல வேலை செய்றாங்க. வேல தீந்த நேரம் ரெண்டு பேரும் ஒண்ணாவே திரியுவாங்க. அதும் ரப்படல சாத்தூருக்குப் போயி டவுன்ல வேடிக்கை பாக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும்.

அங்கே டீக்கடையில தலைக்குமேல கையைத்தூக்கி டீ ஆத்துறதும். ஓட்டல்கள்ல பெரிய தோசைக்கில்லுல விளக்குமாறுவச்சி தொடச்சி வளைய வளையழா கல்தோசை போடுறது வேடிக்கையா இருக்கும்.

சைக்கிள்ல ஒருத்தன் இவங்களை கடந்து போகும்போது ரொம்ப ஆச்சர்யப்பட்டுப் போனாங்க. ‘யோவ் தேவரே இங்கே பாரும் அரிசியத்த! அந்த விசையை (சைக்கிள்) ரெண்டு காலுக்கு உடே கவுட்டுக்குள்ளே வச்சிப்போகும்போதே இந்தப் போக்கு போறானே! அதைத்தூக்கி தலையில வச்சிக்கிட்டுப் போனா இன்னும கதி போக்காவில்லெ போவாம் போலுக்கு’.

‘அதுமட்டுமா சுவஞ் சோத்தங்கைப் பக்கம் ஒண்ணு ஆளுகளை விலகச் சொல்லி லவ லவன்னு குலைக்கிறதப்பாரு.

களத்துல மிளகாய்ப்பழம் காயப்போட்டிருந்தாங்க. ரெண்டு பண்ணைகளும் ஆளுக்கு ஒரு ஏக்கர் நீள அகலத்துக்கு பரப்பி விட்டு ஒரு வாரமா வெயில்ல காய்ஞ்சதுல பழம் வத்தலாகி நாளைக்கு வியாபாரியை வரச்சொல்லி களத்துலேயே எடைபோட்டு மருகு போட்டிருவாங்க. இன்னும் ஒருநா காய்ச்சதான்.

அங்கெ ஒரு வாரமா காவலிருந்த செவலைக்குரும்பனும் குருசாமித்தேவரும் சாத்தூருக்கு போகாம ரப்பட்டு காவலிருந்தது கிறுக்குப்பிடிச்ச மாதிரி ஆகிப்போச்சி.

‘ஏம்ப்பா செவலை! அப்படியே டவுனுக்கு போலி ரெண்டாம் ஆட்டம் சினிமா பாத்துட்டு வருவோம். இத்தன நாள் வராத கள்ளனா இன்னக்கி வரப்போறான் அப்படீன்னதும் அவரும் எப்படான்னு காத்திருந்த மாதிரி ‘ம்போவோம்’ ன்னு கிளம்பிட்டாங்க. ஆள்படுத்திருந்த மாதிரி தட்டை முடியில போர்வையைப் போட்டு மூடிவச்சிட்டு செம கொட்டாய்க்கு வந்து «ச்நதுட்டாங்க.

படத்துல ஒரு கட்டம்போல காத்தும் மழையும்ன்னா சொல்லி முடியாது. இடியும் மின்னலும் ரவ்வாளி போட்டு குமுறுது. மழைக்கு பெரிய பெரிய மரங்களெல்லாம் தூரோடு சாயுது. எங்கெ பாத்தாலும் தண்ணிக்காடு, மழை விட்டபாடில்லை. நேரமாக ஆக மேகங்க கரேர்ன்னு கவிந்து மழை குஞ்சு பொரிச்சுக்கிட்டு நாலா திசையும் அடைச்சி ‘ஜோ’ன்னு பெய்ஞ்சி தள்ளிட்டிருந்தது.

திடீர்ன்னு குருசாமித்தேவரு தடபுடலா எழுந்திரிச்சி பெரீசா அவயம்போட்டு, ‘ஐயையோ ஏம்ப்பா செவலை ஏய் நல்லா வேடிக்கை பாத்தே களத்துல வத்தல கிடக்கிறதை மறந்துட்டம்ல்லா’.

‘அட நாசமாப்போக. அயத்தே போச்சே... ஒரு வார காய்ச்சல்ல கிடந்த வத்தலு. என்னைத்துக்காகும்.. நானும் மெம்மறந்து போனேனே... அடக்கடவுளே! ரெண்டு பேரும் அங்கெ பிடிச்ச ஓட்டந்தான். அஞ்சுகல் தொலவு இருட்டுல மேடு பள்ளம் தெரியாம கீழே மேல விழுந்து ஓடு ஓடுன்னு ஓடிவந்து கேஸ§மூளிரன்னு இளைச்ச மட்டுல களத்துல வந்து நின்னாங்க. செங்கடல் மாதிரி வந்தல் விரிப்பு அப்படியே கிடந்தது.

‘’அடச்சே... சினிமவுல தான்யா மழை பெய்ஞ்சிருக்கு அடக்கிறுக்கெழவே எம்புட்டு ஓட்டமய்யா...’’ பைத்தாரத்தனமாகிப்போச்சே... சேய்’’

கண்டியார்க்கிழவி கொட்டகிக்கி அன்னைக்குத்தான் வந்திருக்கா. மருமகா கூப்பிடுதாளேன்னு நண்டுஞ்சிண்டுமா நாலஞ்சு பேரம் பேத்திகளோட சினிமாப் பாக்க வந்திருந்தா. திக்கெட் எடுத்து உள்ளெ நொழஞ்சதுதான் தாம்சம் கிழவிக்கி தண்ணி தாகம் எடுத்தது. சினிமாவுக்கு போகணும்ன்னு காலையிலிருந்து சின்னதுக்கை குளிப்பாட்ட மருமகளுக்கு வெந்நி போட சோறு பொங்கன்னு வேலை சரீயா இருந்தது. இந்தப்பரப்புல தண்ணி குடிக்கக் கூட தேறமில்லை.

மருமகதான் தண்ணி டிரம்மிருக்கிற இடத்தைக் காட்டுனா, அதால குழாய் போட்டி- ருந்தது. நாலஞ்சு பொண்ணுக வரிசையில நின்னு தண்ணி குடிச்சிட்டிருந்தாங்க. ஒரு ஈயத் தம்ளரை நாய்ச்சங்கிலியில போட்டு கட்டி வச்சிருந்தாங்க. இருந்தாலும் குழாயில கையை ஏந்தி வாயால உறிஞ்சிக் குடிச்சிக்கிட்டிருந்தாங்க. ஒவ்வொருத்தரும் குடிச்சிட்டு அடுத்தாளு பின்னாடி நிக்கிறதால குழாயை அடைக்காம அப்படியே விட்டுட்டுப் போக அடுத்தாளு குனிஞ்சு தண்ணி குடிச்சாங்க.

கண்டியார் பாட்டி முறை வந்தது. தண்ணியை வயித்துக்கு குடிச்சதும் போதும்ன்னு தலைய தலைய ஆட்டுனா. குழாயிலிருந்து தண்ணி வந்துக்குட்டேயிருந்தது. இவா போதும் போதும்ங்கிற சாடையில தலையை பலம்மா பலம்மா ஆட்டுனா. நல்லியை திருகி நிறுத்தணும்னு அவளுக்குத் தெரியல பாவம்...

ஊர்ல இவளத்த பொம்பளைங்க காட்டு வேலைக்கு போயிட்டு கையோட முதலாளி வீட்டுக்கு வந்து கூலி வாங்க வருவாங்க. அப்பொ தண்ணி ரொம்ப தவையா இருக்கும். ‘அம்மா தாயி கொஞ்சம் குடிக்க தண்ணி கொடுங்கன்னு கேட்டா மொதலாளியம்மா செம்புல தண்ணி கொண்டு வந்து வீட்டுக்கு வெளியே நிறுத்தி கையை ஏந்தச் சொல்லி தண்ணியை ஊத்தும். இவளுக்கு வயிறு நிறைஞ்சி தாகம் அடங்குவதும் போதும்ங்கிறதுக்கு அடையாளமா தலைய தலைய ஆட்டுவா அந்த அம்மா ஊத்துறதை நிறுத்திக்கிடும். அந்த நெனப்புலத்தான் பைப்புக்கு முன்னாடி தலைய தலைய ஆட்டுனா

நல்ல வேளை அந்நேரம் ஒரு பொண்ணு வந்து நல்லியை திருகி அடைச்சாள் கண்டியார்க்கிழவி நிழுந்து ‘அடி சக்கைக்னானா’ இதுல சூச்சாம் இருக்காக்கும் தாயி அப்படீன்னு கொமட்டுல கைய வச்சி அதிசயமா பாத்தா.

நிறைய தண்ணி குடிச்சதுல இவளுக்கு மோலணும் போல இருந்தது. ‘அம்மா தாயி எங்கெ மூத்திரம் பெய்றதுன்னு கேட்டா. ‘அந்தா அந்த கக்கூஸுக்கு போ பாட்டின்னு அந்தப் பொண்ணு போயிட்டா. இவளுக்கு கக்கூஸுன்னா என்ன எழவு தெரியும். அங்கெ போய்ப் பாத்தா. பாத்து பதறிப்போய் ஓடியாந்துட்டா.

நாசமாய் போறவா அடுப்படியப்பாத்து கையக் காட்டீட்டு போறாளேன்னு மொணங்கிக்குட்டெ வந்தா, அவளுக்கு கக்கூறைப்பாத்தா மூணுகல்லு வச்சி அடுப்புக்கூட்டுன மாதிரி தெரிஞ்சது. எப்படி வெளேர்ன்னு பளிச்சின்னு இருக்கே வெள்ளைக்காரன் அடுப்பு மிதமாவா இருக்கும். நல்லவேளை நா ஒரு பைத்தியகாரி போயி நின்னு சேலையை திறைச்சிட்டேன். குனிஞ்சு பாத்தாத்தான் தெரியுது. அடுப்பாங்கரைன்னு

யாரும் பார்க்கிறதுக்கு முன்னாடி நல்ல பிள்ளை மாதிரி அங்குக்கு இங்குட்டு திரும்பாம வந்து தரையில உக்காந்து எல்லோரோடையும் படம் பகித்தாள். ஆட்டம் நடந்திட்டிருக்கும்போது யானை ஒண்ணு ஓடியாந்தது. அதுக்குப் பின்னாடி ஒருத்தன் ஓடியாந்தமட்டுல ‘எல்லோரும் ஓடுங்கள் எல்லாரும் ஓடுங்கள் யானைக்கு மதம் பிடித்துவிட்டது. பட்டத்து யானைக்கு மதம் பிடித்து விட்டது. அப்படீன்னு எச்சரிக்கை பண்ணிக்கிட்டே ஓடியாந்தாம்.

‘ஐயையோ நா என்னாம்பேன் பிள்ளைக் மூலைக்கொன்னா படுத்திருக்கே... மதம் பிடிச்ச யானைங்காகளே அடியேய் பிள்ளைகளை தூக்கிற. இந்த ஓட்டம் ஓடியாருதே.. இப்படி வந்து இக்கல மாட்டிக்கிட்டமே... ரெண்டு கையில ரெண்டு பிள்ளைகளை தூக்கிக்கிட்டு இருட்டுல ஆளுகளை நலுக்கு நலுக்குன்னு மிதிச்சிக்கிட்டு இழுபறியா ஓடுனா. இவா படத்தை மறைக்கிறதனால எல்லாரும்
‘ஒன்னு கத்துனாக. இவரொம்பவும் கலவரி ஆகிட்டா. எல்லாரும் பதறி கூக்காடு போடுறதா அவக்குத்தவக்குன்னு வெளியே வந்தா. மருமகளை திரும்பி அடியே அசமந்தம் பிடிச்சவளே அடியேய்ன்னு அவயம்போட

என்னம்மோ ஏதோன்னு வாட்ச்மேன் ஓடியாந்து ‘ஏய்... உக்காரும்மா ஏ.. பெரிய மனுஷி! உக்கார்றியா இல்லையான்னு கம்பை ஓங்குனான். அந்த இடத்திலேயே உக்காந்து பழையபடிக்கும் படத்தை திரும்பிப்பாத்தா அதுலெ நாலஞ்சு காவலாளி கள் கத்தி ஆயுதங்களோட குதிரையில ‘ஓ’ ன்னு அவயம்போட்ட படிக்கு யானையை விரட்டிப் போனதை கிழவி பாத்து சலசலசன்னு சேலையை நனைச்சிட்டா.

எங்க ஊரு எமிச்சியாரு தாத்தாவை பாத்தவுடனேயே சிரிப்பு வந்திடும். ஆளு தட்டக் குச்சியா இருப்பாரு. கூனு வளசலு. நடக்கும்போது அவரு தலையும் உடம்பும் இட வலிமா ஆடிக்கிட்டே வரும்.

வெறும் மண்ணு வச்சி வீடு கட்ட அவரு மாதிரி யாராலயும் முடியாது. ஊர்ல இருக்கிய முக்கலே மூணுவிசம் வீடுகள் அவரு கட்டுனதுதான். அவருக்கு எம் ஜி ஆர்ன்னா கொள்ளாப்பிரியம். அவரோட ஐயா கூழத்தாத்தாவும் அப்படித்தான்னு சொல்லுவாக. அப்பொ எமிச்சியாருக்கு ஒண்றனா வயசு. சம்சாரம் மொக்கப்பேச்சியோட சினிமாவுக்கு போயிட்டு வந்தார். வரும்போதே பாதை நெடூக எம்ஜிஆர் மாதிரியே சிலா வரிசை போடுறதும் பாட்டுப்பாடுறதுமா ரொம்ப குஷியா வந்தார். சாமம் இருக்கும் வீட்டுக்கு வந்து எமிச்சியாரை தொட்டில்ல போட்டு தூங்க வச்சதும் சாப்படக்கூட பொறாம சினிமாவுல எம்.ஜி.ஆர் காதலியை கட்டில்ல தள்ளிவிட்டு ஓடியே வந்து பாய்ஞ்சி மேலே விழுந்து கொஞசோ கொஞ்சுண்ணு கொஞ்சுவார். அதுமாதிரி வீட்டுலயிருந்த கயித்துக்கட்டில்ல மொக்கப்பேச்சியை தள்ளிவிட்டதும் இவரு பின்னடிச்சிப்போயி திடுதிடுன்னு ஓடிவந்து அந்த அம்மா மேல பொத்துன்னு விழுக கட்டிலு மடார்ன்னு ஒடிஞ்சு கீழே மொந்துன்னு விழுந்து மொக்கப் பேச்சிக்கு கிண்ணி இறங்கிருச்சி. ஐயையோ ஐயையோன்னு அன்னைக்குப் போட்ட கூப்பிடு கடைசி வரைக்கும் நிக்கலை. குறுக்சகெலும்பும் ஒண்ணு சேரவே இல்லை. கடைசி காலம் வரைக்கும் அந்த அம்மாவுக்கு சகல சேவுகமும் இவருதான் பண்ண வேண்டியதாகிப் போச்சி.

காலையில காலையில இவரு ‘வெளிக்கி’ போகும்போது ‘அந்த’ ஓலைக் கொட்டானையும் சுமந்துகிட்டுப் போவாரு. ‘ஏ கூழ! கொட்டானை கொண்டு போய் தள்ளி போடப்பா. ஓடையில கொண்டு போய்போடு.. காலையில எதிர்த்து வர்றவனொல்லாம் அங்கே போடு தூரமாப்போடுன்னு தினோமும் லச்சைகேடுதான்.

இதனாலயோ என்னவோ எமிச்சியாருக்கு யாரும் பொண்ணு கொடுக்கலை எமிச்சியார் தாத்தாவும் லேசுப்பட்ட ஆளு இல்லை.

எங்க வீட்டுப்பிள்ளை படத்தை நூறுதரம் பாத்திருப்பார் ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் மொதல்ல பார்க்கிற மாதிரியே பாப்பாரு படத்துல கோழை எம்ஜிஆரை நம்பியார் சவுக்கால அடிப்பார். அந்தக்
கட்டம் வந்ததும் மனுசன் எழுந்திரிச்சி குத்துக்கால் வச்சி உட்காந்துக்கிடுவார்.

‘அடிரா டேய் ஙொப்பனோலி அடி.. ஒங்க ஆத்தா புருசன் கொஞ்ச நேரத்துல ஒஞ் சொட்டெலும்பை ஒடிக்க வருவான்டோய்.. தாயோலி.. அடி... வந்து ஒம் முதுகுத்தோலை உரிக்கலையாக்கும்... பிறகு பார்ரா!’

பக்கத்திலிருக்கிற ஆளைத்திரும்பி கையால ஒரு இடி இடிச்சி ‘அடிக்கான்ல்ல அடுது இருக்கு இவனுக்கு வேடிக்கை!’ அந்த ஆள் இவரை சட்டை பண்ணாட்டாலும் ஒரு திருப்தியில் பழையபடி திரையைப் பார்த்து. ‘டேய்...வக்காள வாத்தாளி... வரும்டா உனக்கு வட்டியும் மொதலுமா...’

அடுத்து கொஞ்ச நேரத்துல ஆள்மாறாட்டமாகி கேனைபு எம்ஜிஆர் அங்கே போயி வீர எம்ஜீஆர் இங்கே வந்திடுவார். நம்பியார் வழக்கம்போல கோழை எம்ஜீஅர்தான்னு சவுக்கை எடுத்து வீச அதை லாவகமா பிடுங்குனதும் அடிப்பர் திருப்பி வீர எம்ஜிஆர்.

அவ்வளதான் எமிச்சியாரு சுதாரிச்சி எந்திரிச்சது ‘அப்படி அடி.. போடு .. கொளு அர்ரெ ஙொப்பந் தொண்ணய .. தாட்சண்யம் பாக்காத...’

சுத்தி உட்காந்திருக்கிற ஆளுகளுக்கெல்லாம் அடி... உதை மிதி. இவ்வளவும் செய்துட்டு அவங்ககிட்டெயே ‘எப்படி கிடைக்குது பூசை’ இவனுக்கு இப்பொ விடிஞ்சுபோச்சா இன்னும் இருக்கு வேடிக்கை.

இதனாலதான் எமிச்சியாரு கூட யாரும் சினிமாவுக்கு போறதில்லே போனாலும் பக்கத்துல உக்கார்றதில்லை

பிறகொருநாள் ஒரு நரிக்குறவர் சினிமாவுக்கு வந்திருந்தார். அப்பொவெல்லாம் அவங்களுக்கு துப்பாக்கி வச்சிக்கிடுற உரிமை இருந்தது. அதனால துப்பாக்கியோட வந்து மணலை கூட்டிவச்சி முன்னடியில உட்கார்ந்துக்கிட்டாரு. அது எம்ஜிஆர் நடிச்ச சரித்திரப்படம் கடைசிக்கட்டம். வழக்கம்போல கதாநாயகியை தூக்கி தோள்ல போட்ட மட்டுல நம்பியார் கோஷ்டிகளோட ரொம்ப மும்முரமா வாள்ச்சண்டை
போட்டுகிட்டிருந்தார்.

கிட்டத்தட்ட சுழட்டி சுழட்டி அவ்வளவேரையும் விழுத்தாட்டிட்டாரு. கிளம்பிப்போகும்போது ஒரு மூலையிலிருந்து நம்பியார் கத்தியால எம்ஜிஆருக்கு கணக்கா குறிவச்சாரு. நம்ம நரிக்குறவரு துப்பாக்கியெடுத்து நம்பியாருக்கு குறிவச்சிட்டாரு. இமை தட்டுற நேரந்தான் டுமீல்ன்னு குண்டு நம்பியார் மேல பாய்ஞ்சதுதான் தாம்சம்.

வெள்ளத்திரை குபிர்ன்னு தீப்பிடிச்சது. ஜனங்க ஆணும் பெண்ணும் கந்தல்குலமா ஓடுறாங்க. நரிக்குறவர் சொல்றார்.

பிறகென்ன சாமி நானும் நாப்பது அம்பது படம் வரைக்கும் பாக்கேன் சாமே இதே வேலையா பாவம் அந்த மனுசன் இப்பொதான் செத்துப்பொடிச்சி வந்திருக்கார் சாமே(எம்ஆர்ராதா துப்பாக்கியால் சுட்டநேரம்) எவ்வளவுதான் சாமி நானும் பொறுத்து பொறுத்து போறது சாமே போலீஸென்ன சாமி போலீஸு மிலிட்டிரியை வரட்டும் சாமே என்னய அந்த மனுசர் வந்து காப்பாத்திருவாரு சாமோ...

இப்பொ குடிசைகளெல்லாம் கொட்டகையாகிப்போச்சு. பெரிய வீடுகள் பூராம் தியேட்டராகிப் போச்சி. பட்டி தொட்டிகளெல்லாம் டிவிபெட்டிக்குள்ளே அடக்கமாகிப்போச்சி. கோலங்களின்னு ஒரு தொடர் வந்திட்டிருந்த நேரம் ஒரு நா காலையில ரெண்டு பொம்பளைக வாசல் தெளிக்க சாணிக் சட்டியோட எதிர்த்தெதிர்த்து நின்னுக்கிட்டு பேசிக்கிட்டிருந்தாங்க. என்ன பேசுவாங்க பட்டி தொட்டி பொம்பளைக எங்கே நடுகைக்கு போகலாம் எங்கே களைக்குப் போகலாம் கடலைபிடுங்க நெத்துப் பெறக்கன்னு பாடுபங்கைத்தவிர வேற பேசுறதுக்கு என்ன இருக்குன்னு கவனிச்சுக் கேட்டேன்.

‘யக்கா ஊருக்குள்ள பன்னிக்காய்ச்ச வருதுங்கிறாங் பறவைக்காய்ச்ச வருதூங்கிறாங்க இந்த ஆதிக்கி ஒரு பேதி வரமாட்டேங்குதேக்கா.

http://thamizhstudio.com/others_tt_6.php