Wednesday, February 16, 2011

தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 13வது பௌர்ணமி இரவு



தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 13வது பௌர்ணமி இரவு

(13th Full Moon Day Film Screening)


18-02-2011


வெள்ளி, 18-02-2011

இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும்.

இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)

தமிழ் ஸ்டுடியோ அலுவலக நிலப்படம் (MAP)

http://thamizhstudio.com/thodarbukku.php

வணக்கம் நண்பர்களே,

இது பௌர்ணமி இரவின் இரண்டாமாண்டு தொடக்க விழா..

குறும்படங்களுக்காக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை "குறும்பட வட்டம்" நடத்திய போதும், மாற்று திரைப்படம் சார்ந்த ஒரு நல்ல புரிதலை ஏற்படுத்த அது போதுமானதாக இல்லை. மேலும், திரைப்படம் என்றாலே இருளின் பிரம்மிப்பில் தனக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் ஒருவித இறுக்கமான சூழ்நிலையில்தான் காண நேரிடுகிறது. இதுப் போன்ற நிலைகளை தவிர்த்து அவரவர் தன் விருப்பபடி, படுத்துக் கொண்டும், சாய்ந்துக் கொண்டும், எவ்வித இறுக்கமும் இல்லாமல் இரைச்சல்கள் அடங்கிய ஒரு இரவு நேரத்தில் உலக அளவிலும், இந்திய அளவிலும் எடுக்கப்பட்ட மிக சிறந்த திரைப்படங்களை கண்டு நல்ல திரைப்படத்திற்கான புரிதலை உருவாக்கி கொள்ளும் எண்ணத்துடன் பௌர்ணமி இரவு தொடங்கப்பட்டது.

இதில் ஒவ்வொரு மாதமும், தமிழில் எடுக்கப்பட்ட ஒரு சிறந்த குறும்படமும், உலக அளவில் எடுக்கப்பட்ட சிறந்த உலகப் படமும் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சில மாதங்கள் சிறப்பு விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களை அழைப்பதில் இருந்த சிக்கல்களால் பௌர்ணமி இரவு வாசகர்களே திரைப்படங்களை பார்த்து அதுபற்றி மிக பெரிய அளவில் கலந்துரையாடும் நிகழ்வாக மாறியது.

இதில் உச்சக்கட்டமாக ஒவ்வொரு மாதமும் "நிலாச்சோறு" என்கிற உணவு உபசரிப்பும் அறிமுகப்படுத்தப்பட்டது. மொட்டை மாடியில், இதமான தென்றலின் இம்சையில், முழு நிலவை ரசித்தவாறே நமக்கு பிடித்த திரைப்படங்களை பார்த்துக் கொண்டே, மூலிகை செடிகளின் வாசத்தில் உணவருந்தும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. தொடங்கி ஒரு வருடத்திற்குள் பத்திரிகை நண்பர்களும், தொலைக்காட்சி நண்பர்களும், ஆர்வலர்களும் கொடுத்த வரவேற்பு மிக பெரியது.

கத்திரி வெயில், அடைமழை, பேய்க்காத்து, கடுங்குளிர் என எந்த ஒரு சீதோசன நிலையிலும் திறந்த வெளியில் நடத்தப்படும் இந்த பௌர்ணமி இரவு ஒரு மாதம் கூட நிறுத்தப்படாமல் 12 மாதங்களும் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. உங்களின் அதே ஆதரவை எதிர்வரும் மாதங்களிலும் கொடுத்து இந்த பௌர்ணமி இரவு நிகழ்ச்சியை வெற்றியடைய செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

சென்னையின் மையபகுதியில், மரங்கள் அடர்ந்த ஒரு மொட்டைமாடியில், சுற்றிலும் மூலிகை செடிகளின் வாசத்தில், புல்வெளியில் அமர்ந்துக் கொண்டு, ஒத்த உணர்வுள்ள நண்பர்களுடன் நமக்குப் பிடித்த திரைப்படங்களை பார்த்து, அது பற்றி விவாதத்தில் கலந்துக் கொண்டு, இந்த நிலாச்சோற்றை ருசிக்க வாருங்கள். நீங்களில்லாமல் எந்த ஒரு நிகழ்வும் வெற்றி பெற சாத்தியமில்லை. உங்களை இனிதே எதிர் நோக்குகிறோம்.

இந்த மாதம் திரையிடப்படவிருக்கும் படங்கள்:

இந்த மாதம் தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: ராஜாங்கத்தின் முடிவு, அருள் எழிலன் இயக்கிய இந்தக் குறும்படம் சதத் ஹசன் மாண்டோவின் சிறுகதையை அப்படியே பிரதிபலித்து எடுக்கப்பட்டது.

இந்தப் படத்தை பார்த்துவிட்டு, நம்முடன் உரையாட தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வரவிருக்கிறார்.

இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்:செவன் சாமுராய் (அகிரா குரோசோவா)

இத்திரைப்படம் மேலும் தெரிந்துக் கொள்ள:http://www.imdb.com/title/tt0047478/

(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)

முதலாமாண்டு நிறைவு விழா, இரண்டாமாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இந்த மாதம் ஒரு குட்டி உணவுத் திருவிழாவே நடக்கவிருக்கிறது. வகை வகையான உணவினை ருசிக்க, சிறந்த திரைப்படங்களைக் கண்டு ரசிக்க வாருங்கள் நண்பர்களே...

முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268



1 comment:

meenonline said...

நேற்று நடந்த பௌர்ணமி இரவில் முதன் முறையாகக் கலந்து கொண்டேன். ஒரு இரசிகனாக மட்டுமே இருந்த நான் தயாரிப்பின் பெரும்பகுதியான கதை மற்றும் இயக்கம் இவைகளைக் கையாலும் நண்பர்களின் முதற் பரிச்சியம் கிடைக்கப் பெற்றேன். நன்றி- பாலா மற்றும் அருண்.

முயற்ச்சி பாராடுதற்குரியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஒரு குறும்படம் மற்றும் திரைப்பட முனைவில் இருப்பவர் ஓருவருக்கு அவசியமான இயன்ற உதவிகளைச் செய்து அவரை மேலும் உத்வேகம் கொள்ளச் செய்யும் முயற்சியில் திரு.அருண்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நான் என்னுடைய மிகமிக குறைந்த முக்கியத்துவம் கொண்ட அபிப்ராயம் ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

குறும்படமும் அதனைத் தொடர்ந்த திரு. அருள் எழிலனின் கலந்துரையாடலும் நன்று.

ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட கொசுத் தொல்லை காரணமாய் ஆர்வமிருந்தும் என்னால் அமர முடியவில்லை.

இது மிகச் சாதாரண விஷயமாய் இருந்தாலும், கருத்தில் கொள்ளப் பட வேண்டிய விஷயமாகவே நான் எண்ணுகிறேன்.

என் நண்பர்கள் வட்டத்திலும் இது சம்பந்தமாய் விசாரித்து, இது போன்ற திறந்த வெளி இடங்களில் கொசுவைக் கட்டுப்படுத்த ஏதேனும் வழிமுறைகள் இருந்தால் நானே அதனை நடைமுறைப் படுத்த முயற்சிக்கிறேன்.

நீங்களும் முயற்சிக்கவும்.

நன்றி,
மீனாட்சி சுந்தரம்.

Post a Comment