சய்லேன்ஸ் - 1
குறிஞ்சி சலாம் பா! வணக்குமோங்கம்மோய்! நான்தாம்பா கட்டியங்காரன்... ஓய்! உன்டிங்கிறீரா... இல்லங்கீறீரா... வாங்க பழகுவோம்! முல்லை ஒரு நூல் வெளியீட்டுக்கு பிரம்மாண்டமானக் பிப்ரவரி 2010ல் கவிஞர் தமிழச்சி நவீனக் கவிதைகளை, பரதம், பாடல் குறிப்பாக 'மஞ்சணத்தி' என்கிற தமிழச்சியின் கவிதைகளை இசையமைத்து பாடிய குறும்படமும், நவீன நாடக முயற்சிகளும் வரவேற்புக் எளிமையானக் கவிதைகளின் விலை தான் கூட்டத்திலிருந்த ஒருவர் முணுமுணுத்தார். எப்படிப்பா! ரூம் போட்டு யோசிப்பாங்களோ...? மருதம் 'பழமலய்' கவிதைகளை வாசித்திருக்கிறீர்களா...? கவிஞர் பழமலய், தன்னைத் தனக்கும் தன் இழிவுகளுக்கானக் காரணங்களைக் கண்டு போராட தனது படைப்புகளாலும் உணர்வுள்ள செயல்பாடுகளாலும் அதிசயமாய் .. அற்புதமாய்... ஆதிமூலந்தேடி துழாவும் ஒட்டுமொத்த படைப்புகளும் காவ்யா வெளியீட்டில் நெய்தல் உதயக்கண்ணன் வெளியீடாக வந்துள்ள நூல் வாங்க - உதயக்கண்ணன், 10 கல்யாண சுந்தரம் தெரு சாகுபடி பாலை கொப்பளித்து துப்புகிறாய் துவேஷத்தை வேப்பங்காயில் தோய்த்த சொற்களைப் பூச அதிகாரம் சுமந்த ஆயுதங்களை கபடப் புன்னகைக்குள் மறைந்திருந்த ப்ரியங்களை என்னுள் விதைத்திருந்தாய் நம்பிக்கையைப் பரிசாக அளிக்குமுனக்கு தாய்மையின் பாசத்தோடும் கட்டியங்காரன் கவிதை நல்லா இருக்கா...? தொடரும்... | ||
Thursday, September 16, 2010
சய்லேன்ஸ் - 1
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
| தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) | ||||||
தமிழ் ஸ்டுடியோ.காம்-ன் 24வது குறும்பட வட்டம் 11.09.2010 அன்று சென்னை இக்சா மையத்தில் நடைப்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் அரிகரன் இயக்குனர் மதுமிதா ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ் ஸ்டுடியோ அருண் வரவேற்புரை வழங்கினார். குறும்பட வழிக்காட்டல் இம்மாத குறும்பட வழிக்காட்டல் பகுதியில் இயக்குனர் அரிகரன் சிறப்புரையாற்றினார். இயக்குனர் அரிகரன் குறும்படம் எடுத்து பிழைப்பு நடத்தமுடியாது. இங்கு குறும்படம் என்றவுடன் பெரும்பாலானோர் கருத்து சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றனர். வரதட்சணை, குடி, விபத்து, குழந்தை தொழிலாளர், சுற்றுச்சூழல், புகைப்பிடித்தல் என ஏதாவது ஒரு கருத்துக்கு குறும்படம் எடுக்கின்றனர். இந்த பிரச்சினைகள் பற்றி குறும்பட எடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அதைத் தாண்டி சினிமா கலையை புரிந்து கொண்டு குறும்படங்கள் எடுக்க வேண்டும். சிலர் சினிமா மூலம் சமூகத்தை மாற்ற முனைகின்றனர். ஆனால் சினிமா மூலம் சமூக மாற்றம் சாத்தியமில்லை. ஈரான் மிகவும் மதக்கட்டுப்பாடு மிக்க நாடு. அங்கு ஆண், பெண் சந்தித்து பேசுவது போன்று படம் எடுப்பது கடினம். அதனால் தான் குழந்தைகளை வைத்து படம் எடுக்கின்றனர். ஈரான் படங்களை ஐரோப்பிய திரைப்பட விழா குழுவினர் பாராட்டியதினால் அது உலக கவனம் பெறுகிறது. இந்தியாவில் பல நல்ல இயக்குனர்கள் இருக்கின்றனர். அவர்களின் படங்களை ஐரோப்பியர்கள் பாராட்டவில்லை. அதனால் அவர்களின் படங்கள் உலக கவனம் பெறவில்லை. நமக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். இந்திய இயக்குனர்கள் கதாநாயகர்களுக்காக படம் செய்ததை கைவிடவேண்டும். கதாநாயகர்களின் தேவைகள் தீர்ந்துவிட்டன. மாறி வரும் சமூக மாற்றத்தை உள்ள வாங்கி படம் பண்ண வேண்டும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம். ஆனால் இன்னும் டிஜிட்டல் சினிமா வரவில்லை. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எல்லா திரைப்படங்களும் 3டி-ல்தான் வெளிவரும். அதற்கு ஐந்து வருடங்களுக்கு பிறகு ஹாலோ கிராபிக் சினிமா-தான் வரும். இப்போது பயன்பாட்டில் இருக்கும் லேப் எல்லாம் மூட வேண்டிய காலம் வரும். எவ்வளவு விஞ்ஞான மாற்றம் நிகழ்ந்தாலும் கலாப்பூர்வமான படைப்புகள்தான் வெற்றிப்பெறும். நான் இயக்கிய முதல் படம் ஏழாவது மனிதன். முதலில் இந்த படம் எடுக்கும் திட்டம் இல்லை. 1981 ஆண்டு பாரதி நூற்றாண்டு அதனை முன்னிட்டு பாரதிப்பற்றி படம் எடுக்க பாளை சண்முகம் விரும்பினார். முதலில் பாரதி பாடல்களை பதிவு செய்தோம். பிறகு பாரதிப்பற்றிய ஆராய்ச்சியில் பாரதிப் பற்றிய பல விசயங்கள் பொது வெளியில் சொல்ல முடியாததாக இருந்தது. பாரதி ஒரு மென்டல் சேலஞ் பேர்சன். பாரதி பற்றிய உண்மைகளை புறம் தள்ளி விட்டு படம் எடுக்க எனக்கு விருப்பமில்லை. பாரதி நூற்றாண்டு கொண்டாட்டத்தின் போது இதுபோன்ற படம் வெளிவர வேண்டாம் என முடிவு செய்தோம். பிறகு பாளை சண்முகம் ஒரு போராட்ட குறிப்புகளை கொடுத்து படிக்க சொன்னார். அது இண்டியா சிமெண்ட் கம்பெனிக்கு எதிராக சுற்றுச்சூழல் சார்ந்தது. பாளை சண்முகம் போராடியதன் குறிப்புகள். இந்தியாவின் முதல் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டம் அது அதிலிருந்து உருவானதுதான் ஏதாவது மனிதன் திரைப்படம். வெகுசன சினிமா எனக்கு ஒத்துவராது. எனக்கு ஒரு படத்தை ஒரே ஷெட்யூலில் அது 25 நாட்களாக இருந்தாலும் சரி, 35 நாட்களாக இருந்தாலும் சரி தொடர்ந்து படம் பிடிக்க வேண்டும். அப்போது தான் அதே உணர்ச்சியுடன் அந்த படத்தை எடுக்க முடியும் என நம்பினேன். அது சரியானது என சொல்ல முடியாது. ஆனாலும் என்னுடைய எட்டு படங்களையும் அப்படிதான் படப்பதிவு செய்திருக்கிறேன். படம் எடுக்க விரும்புகிறவர்கள் நிறைய வாசிக்க வேண்டும். நாம் நிறைய வாசிக்க வாசிக்க நம்மை அறியாமலேயே ஒரு நல்ல படைப்பை உருவாக்குவோம். குறும்பட திரையிடல் இம்மாத குறும்பட திரையிடல் பகுதியில் மூன்று குறும்படங்கள் திரையிடப்பட்டன. அவை பின்வருமாறு. 1. பெல் அடிச்சாச்சு - எஸ்.யு. அருண் இம்மூன்று குறும்படங்களையும் இயக்குனர் மதுமிதா திறனாய்வு செய்தார். இயக்குனர் மதுமிதா எல்லா இயக்குனர்களுக்கும் முதல்படி குறும்படம்தான். நானும் குறும்படம் எடுத்திருக்கிறேன். முதல் குறும்படம் சிறப்பாக உள்ளது. யாரை கதை மாந்தராக எடுத்துக் கொள்கிறோம். எதைப் பற்றி பேச போகிறோம். எப்படி சொல்லபோகிறோம் என்பதனை சரியாக உணர்ந்து மிக குறுகிய நேரத்திலேயே தான் சொல்ல நினைத்த செய்தியை சிறப்பாக சொல்லி உள்ளார். இரண்டாவது குறும்படத்தில் நல்ல ஷாட்-கள் உள்ளன. படத் தொகுப்பில் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்தொகுப்பு என்பது படக்காட்சிகளை வெட்டி ஒட்டுவதுமட்டுமல்ல. அது ஒரு படைப்பாக வேலையும்கூட பட கால அளவை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். மூன்றாவது குறும்படம் நகைச்சுவையாக உள்ளது. குறும்படம் என்றால் இறுக்கமாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. திரைத்துறையில் நிறைய பேர் சினிமா என்பது பணம் சம்பாதிப்பதுக்கு என நினைக்கின்றனர். Cinema is not money making machine பல துறைகளிலும் பெண்கள் சாதித்த பிறகு இந்த 2010ல் என்னைப் பார்த்து ஒருவர் சொல்கிறார் பொண்ணுனா சமையல் வேல பாத்துக்கிட்டு வீட்டோ இருக்கணும். இந்த நிலை மாற வேண்டும். இப்போது தொடர்ந்து பெண் இயக்குனர்கள் வந்துக் கொண்டுள்ளனர். இது நம்பிக்கை தருவதாக உள்ளது. இந்த நிலை மாறும். மூன்று குறும்பட இயக்குனர்களும் தங்கள் படங்கள் குறித்து பேசினார். பின்னர் ஆர்வலர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும். |
Tuesday, September 14, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய இரண்டாவது குறுந்திரைப் பயணம் (28-08-2010) (வேலூர் நூலாறு)
நிகழ்வின் ஒளிப்படங்களைக் காண:
http://picasaweb.google.co.in/thamizhstudio/UiFGbG
வேலூர் நூலாறு புத்தக கண்காட்சியில் - தமிழ் ஸ்டுடியோ.காம் நிகழ்த்திய குறும்படத் திரையிடல்.
வேலூரில் (கோட்டை மைதானம்) ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 06 வரை தொடர்ந்து ஒன்பது நாட்கள் நூலாறு என்கிற தலைப்பில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு தொடர்ந்து ஒன்பது நாட்களாக தமிழ் ஸ்டுடியோ சார்பில் குறும்பட ஆவணப்படங்கள் திரையிடல் (ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 05 வரை) நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் காலை 11.30 மணியளவில் அகிரா குரசோவாவின் நூற்றாண்டை கொண்டாடும் பொருட்டு அவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் ஒரு சிறப்பு விருந்தினரின் தலைமையில் திரையிடல் நடைபெற்று படங்கள் குறித்து விவாதங்கள் நடைபெற்றன.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைப்பாட்டின் கீழ் குறும்படங்கள் திரையிடப்பட்டு மக்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
விபரம்:
ஆகஸ்ட் 28, 2010, சனிக்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: குறும்பட /ஆவணப்பட வரலாறு குறித்தான அறிமுக உரை அருண் (தமிழ் ஸ்டுடியோ)
வகைப்பாடு: குறும்பட /ஆவணப்பட வரலாற்றை விளக்கும் படங்கள் திரையிடப்பட்டன.
சிறப்பு விருந்தினர்: பீ.லெனின் திரைப்பட தொகுப்பாளர் மற்றும் எழுத்தாளர் அழகிய பெரியவன்.
திரையிடப்பட்ட படங்கள்:
1. நாக் அவுட் – பீ.லெனின்
2. மறைபொருள் - பொன்.சுதா
3. உப்புக்காத்து - ஹரி
ஆகஸ்ட் 29, 2010, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: குறும்படங்களில் சிறுகதைகள் குறித்து உரை.
வகைப்பாடு: சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர். சிவக்குமார்.
திரையிடப்பட்ட படங்கள்:
1. நடந்த கதை - பொன்.சுதா
2. திற - பிரின்ஸ் என்னாரசு பெரியார்
3. செவ்ளி - அறிவழகன்
4. கர்ணமோட்சம் - முரளி மனோகர்
5. கழுவேற்றம் – ராஜா
ஆகஸ்ட் 30, 2010, திங்கள்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: பொது குறும்படங்கள் குறித்து உரை
சிறப்பு விருந்தினர்: சி. ஜே. ராஜ்குமார்
வகைப்பாடு: பொது குறும்படங்கள் திரையிடல்.
திரையிடப்பட்ட படங்கள்:
1. கோத்தி - முத்துக்குமார்
2. எரிபொருள் - முத்துக்குமார்
3. குண்டன் - முரளி
4. அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில் - ஸ்ரீராம்
5. விளையாட மறந்ததென்ன? - ஜெய் வினோ
ஆகஸ்ட் 31, 2010, செவ்வாக்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: ஆவணப்படங்கள் குறித்து உரை
சிறப்பு விருந்தினர்: ஆர். ஆர். சீனிவாசன்
வகைப்பாடு: ஆவணப்படங்கள் திரையிடல்
திரையிடப்பட்ட படங்கள்:
1. The Most Beautiful - அகிரா குரசோவா
2.என் பெயர் பாலாறு - ஆர். ஆர். சீனிவாசன்
3.நீருண்டு நிலமுண்டு - கைலாசம் பாலச்சந்தர்
செப்டம்பர் 01, 2010, புதன்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: பிறமொழி குறும்படங்கள் குறித்து உரை
சிறப்பு விருந்தினர்: எழுத்தாளர் அழகிய பெரியவன்
வகைப்பாடு: பிறமொழி குறும்படங்கள் திரையிடல்.
திரையிடப்பட்ட படங்கள்:
1. The Lower Depths - அகிரா குரசோவா
2. White Gold - Bijan Lamanpire
3. Ashes and snow - Amite
4. Doodlebug UK=1997-3min-16mm - Christopher Nolan
5. Ali & the ball - Camilla Ah Kim
6. Kosi Kada – Jerna Anurac Singh
செப்டம்பர் 02, 2010, வியாழக்கிழமை நடைபெற்றவை.
பேச்சு: வேலூரும் அதன் வரலாற்று சிறப்பும்.
வகைப்பாடு: வேலூர் ஆர்வலர்கள் எடுத்த குறும்படங்கள்.
திரையிடப்பட்ட படங்கள்:
1. Sanshiro Sugata II - அகிரா குரசோவா
2. நடந்த கதை - பொன்.சுதா
3. திருகாணி - பெ. அமுதா
4. மறதியின் வரலாறு (ஆவணப்படம்) - சமதர்மன்
செப்டம்பர் 03, 2010, வெள்ளிகிழமை நடைபெற்றவை.
பேச்சு: எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள் குறித்து.
வகைப்பாடு: எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்கள்
திரையிடப்பட்ட படங்கள்:
1. One Wonderful Sunday - அகிரா குரசோவா
2. ஜெயகாந்தன் - இரவி சுப்பிரமணியம்
3. கி.ரா - புதுவை இளவேனில்
4. இந்திரா பார்த்தசாரதி - இரவி சுப்பிரமணியம்
செப்டம்பர் 04, 2010, சனிக்கிழமை நடைபெற்றவை.
சமூக விழிப்புணர்வு குறும்படங்கள் குறித்து உரை - யாழ் நிலவன் (புதுச்சேரி)
வகைப்பாடு: : சமூக விழிப்புணர்வு தழுவி எடுக்கப்பட்ட படங்கள் திரையிடல்
திரையிடப்பட்ட படங்கள்:
1. Rashomon - அகிரா குரசோவா
2. வாக்குமூலம் - சுப்பு
3. செத்தாழை - பிரசன்னா சுப்பிரமணியன்
4. பெல் அடிச்சாச்சு - எஸ்.வி. அருண் குமார்
5. மக்கப் மங்கம்மா – பாவல் நவகீதன்
செப்டம்பர் 05, 2010, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றவை.
சிறப்பு விருந்தினர்: பேராசிரியர். கு. ஞானசம்பந்தம்
மேலும் படிக்க:
http://thamizhstudio.com/shortfilm_guidance_screeningtravel_2.php
கொஞ்சம் தேநீர்...நிறைய அரட்டை...
கொஞ்சம் தேநீர்...நிறைய அரட்டை...
...எழுத்தாளுமையுடன் ஓர் உரையாடல்
கூடு இணையதளத்தின் மாதந்திர நிகழ்ச்சியாக ஆகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாதம் நான்காம் சனிக்கிழமையும் கொஞ்சம் தேநீர்...கொஞ்சம் அரட்டை என்கிற நிகழ்ச்சி நடைபெறும்.
இது புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் ஒரு மாலை நேரத்தில் தேநீர் விருந்தோடு கலந்துரையாடும் நிகழ்வாகும்.
கையில் ஒரு கோப்பை தேநீரோடு, நாம் நேசிக்கும் எழுத்துக்கு சொந்தக்காரரான எழுத்தாளருடன் அவர் எழுத்து பற்றியும், அவரின் பிற ஆர்வங்கள் பற்றியும், அவரின் புகழ் பெற்ற புத்தகங்கள் பற்றியும், தற்கால இலக்கிய உலகின் போக்கு குறித்தும் கலந்துரையாடலாம். இந்நிகழ்வில் பங்கு பெற பத்து பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். முதலில் முன்பதிவு செய்யப்படும் பத்து நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
மிக முக்கியமான விதிமுறை.. இதில் பங்குபெற விரும்புவோர் அந்த மாதம் நாம் சந்திக்க இருக்கும் எழுத்தாளரின் புத்தகங்களை படித்திருக்க வேண்டும். அவரின் புத்தகங்கள் குறித்து நேர்மையான கருத்துகள் கொண்டிருக்க வேண்டும். பங்குபெற விரும்பும் நண்பர்களின் முன்பதிவுக்கேற்ப மூன்றாவது சனிக்கிழமை தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெறும். இதில் அந்த எழுத்தாளர் புத்தகங்களை படித்துள்ள நண்பர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
நிகழ்வு அருமையான கலாச்சார சூழல் நிறைந்த இடத்திலோ, எழுத்தாளரின் வீட்டிலோ, அல்லது ஒரு அருமையான தேநீர்க் கடையிலோ நடைபெறும்.
முதல் மாதம்.... இந்நிகழ்வில் பங்கேற்கும் எழுத்தாளர் கரிசல்காட்டு எழுத்தாளர் திரு. கி. இராஜநாராயணன் அவர்கள். நிகழ்வு புதுச்சேரியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இதில் பங்கேற்க விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268
முன்பதிவு செய்ய வேண்டிய இறுதி நாள்: செப்டம்பர் 20, 2010... நிகழ்வு நடைபெறும் நாள்: செப்டம்பர், 25, 2010 மாலை மூன்று மணியளவில்..
இடம் புதுச்சேரி..
Wednesday, August 25, 2010
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (6)
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (6)
| வெங்கட் சுவாமிநாதன் |
ஞான ராஜசேகரனைப் பற்றிப் பேசலாம். மற்றவர்கள் நினைவில் வைத்துக் கொள்ளாத, எடுத்துச் சொல்லாத பெயர். ஆரம்ப கால ஞான ராஜ சேகரனை எனக்குத் தெரியுமாதலால் சொல்கிறேன். 1974-75 களில் அவருடன் பழக்கம் ஏற்படத் தொடங்கியதால் சொல்கிறேன்.
தமிழ் சினிமாவைக் கேலி செய்வது அவரது மனம் மகிழும் பொழுது போக்கு. மிக ஆரோக்கியமான, கேலி அது. தமிழ் சினிமாவே எத்தகைய கேலிக்கூத்து என்பதை அவர் அறிந்துவைத்திருந்தார். அந்நாட்களில் அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் தி. ஜானகிராமன். அவரது மோகமுள் நாவலை படமாக்க வேண்டும் என்பது அந்நாட்களிலிருந்தே அவரது கனவாக இருந்து வந்தது. பிறகு அவரும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகி, கேரள அரசில் சேர்ந்த பிறகும் அவரது கனவு மறையவில்லை. நானும் அவரும் மோகமுள் படமெடுக்க யாரிடமோ அந்த நாவல் விற்கப்பட்டுவிட்டதென கேள்விப்பட்டு, நான் சென்னை வந்திருந்த போது சிட்டியையும், ஜானகிராமனது புத்திரர்களையும் தேடிச் சென்றோம். இது நடந்தது எண்பதுக்களின் பின் பாதியில். பின் இந்த சிக்கல் ஒருவாறாக தீர்ந்தது என்று அறிந்தது நானும் ஞான ராஜசேகரனும் தில்லியில் உள்ள கேரள ஹவுஸில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஜானகிராமனின் நாவலை வைத்துக்கொண்டே அவரது வார்த்தைகளைக் கொண்டே திரைக்கதையின் வரைகோட்டையும் தீர்மானித்தோம். கதை நிகழுமிடங்கள் ஜானகிராமன் குறிப்பிட்டிருக்கும் கும்பகோணம் தெருக்களே. அன்று நாங்கள் தீர்மானித்திருந்த படத்தின் ஆரம்பம், நாவலின் கடைசிக் கட்டமான பாபுவின் வடநாட்டுப் பிரயாணம், சங்கீதம் கற்க. அவனுக்கு வழியனுப்பும் காட்சி. ரயில் புறப்படுகிறது. அதே ரயில் பெட்டியில் பாபு உட்கார்ந்திருக்கும் காட்சி தொட்ர்ந்து கதையின் ஆரம்பமும் ஆகிறது. அது பாபு கும்பகோணத்துக்கு வரும் காட்சி. படத்தின் கடைசி காட்சி, முதல் காட்சியான வடநாட்டுப் பிரயாணத் தொடக்கம், விரைந்து செல்லும் ரயில் பெட்டியில் பாபு. கேரளா ஹவுஸில் எழுதிச் சென்ற வரைகோடு மறக்கப் பட்டுவிட்டது. அதற்கு அவருக்கு உரிமை உண்டு. அவர் ஜானகிராமனுக்கும் அவரது நீண்ட நாள் லட்சியக் கனவுக்கும் திரைப்படத்தில் சாட்சியம்.............
மேலும் படிக்க: http://thamizhstudio.com/others_article_8.php
Saturday, August 21, 2010
உள்ளத்தை உறுத்தும் உளவியல் உண்மைகள் –3
| பா.செல்வராஜ் |
ரங்கநாதனுக்கு சமீப காலமாக காலை எழும்போதே வலது கை நடுங்க ஆரம்பித்து விடுகிறது. கையில் சுத்தமாக சக்தியின்றி எந்த வேலையும் செய்ய முடியாத வகையில் யாரோ கையைப் பிடித்து ஆட்டி விடுவது போல் ஆடிக்கொண்டிருக்கின்றது. கை நடுக்கம் அதிகமாக இருப்பதால் அவ்வப்போது வேலைக்கு விடுமுறை எடுத்துக்கொள்கிறார். சரியாக வேலைக்குச் சென்று எட்டு மாதத்திற்கு மேல் இருக்கும். பல மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்தும் கூட கை நடுக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைவதாகத் தெரியவில்லை. நரம்புத் தளர்ச்சியாக இருக்கலாம் என பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அதற்கான அறிகுறிகள் இல்லை என்று அறிந்தும் ‘சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில்’ நரம்பு தளர்ச்சியைப் போக்கும் மருந்துகளை பரிந்துரைத்துள்ளனர். ஒரு கை நடுங்கிக் கொண்டே ஆலோசனை அறைக்குள் அழைத்து வரப்பட்ட ரங்கநாதனுக்கு ஏன் இப்படி?
உளவியல் உண்மைகள்:
மருத்துவர்களின் சோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, ரங்கநாதனைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ளும் நோக்கில் அவரிடம் மெதுவாக ஒவ்வொன்றாக கேட்கத் துவங்கினேன். அவருக்கு தற்போது 47 வயது, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் ஒரு மகன் இருக்கிறான். நடுத்தர குடும்பத்தை சார்ந்த இவர் ஓர் நூற்பாலையில் கோன் வைண்டிங் எனும் பிரிவில் பணியாற்றுகிறார். ரங்கநாதனின் மனைவி வீட்டில் சும்மா பொழுதை ஏன் போக்க வேண்டும் என்றெண்ணி நாண்காண்டுகளாக அரிசி வியாபாரம் செய்து வருகிறார்.
மேலும் படிக்க:
http://koodu.thamizhstudio.com/thodargal_10_3.php
Friday, August 20, 2010
தானம் அறக்கட்டளையின் 6ஆவது மேம்பாட்டுக் குறும்பட விழா போட்டி
மேம்பாட்டுக் குறும்பட விழா எனும் தலைப்பில் ஒவ்வொரு ஆண்டும் தானம் அறக்கட்டளை போட்டிகளை நடத்தி வருகிறது. 1.வறுமை, 2.தண்ணீரும் வாழ்க்கையும், 3.தண்ணீரும் மக்களும், 4.கலாச்சாரமும், பாரம்பரியமும், 5.வறுமைக்கு எதிரான ஆயிரமாண்டு வளர்ச்சி இலக்கு என்ற தலைப்புகளில் கடந்த ஐந்தாண்டுகளாக தானம் அறக்கட்டளையின் மேம்பாட்டுக் குறும்பட விழாக்கள் நடைபெற்றன. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு 'மக்கள் ஜனநாயகமும் மேம்பாடும்' எனும் தலைப்பில் நடைபெறவுள்ளது.
1. வறுமை, ஜனநாயகம், நல்லாட்சி, வெளிப்படை, பொறுப்பேற்றல், சுயஉதவி, சுயநிர்வாகம், தற்சார்பு, மனிதஉரிமை போன்ற கருத்தமைவுகளில் உள்ள குறும்படம் மற்றும் ஆவணப்படங்களை இப்போட்டிக்கு அனுப்பலாம். சிக்கலுக்கான தீர்வினை முன்மொழிவது அவசியம்.
2. உலகின் எந்த மொழிகளில் தயாரானதாக இருப்பினும், உரையாடல்கள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் படிக்க : http://thamizhstudio.com/competitions_19.php