தமிழ் ஸ்டுடியோ.காம் புதுச்சேரி கிளைத் தொடக்க விழா மற்றும் அரிக்கன் மேடு ஆவணப்படம் வெளியீட்டு விழா |
வணக்கம் வாசகர்களே, தமிழ் ஸ்டுடியோவின் நிர்வாக வசதிக்காகவும், குறும்படங்களை பொதுவாக அனைத்து விதமான மக்களிடையேயும் கொண்டு சேர்க்கும் விதமாகவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழ் ஸ்டுடியோவின் கிளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் தமிழ் ஸ்டுடியோ மூலம் குறும்பட / ஆவணப்பட படைப்பாளிகளுக்கு கிடைக்கும் அனைத்து விதமான உதவிகளும், மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. மேலும், மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அந்தந்த மாவட்டத்தில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். மேலும், குறும்படப் படைப்பாளிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தவும் இதுப் போன்ற கிளைகள் உதவும். இதன் மூலம் குறும்பட உலகம் விரிவடைவதோடு, மாற்று ஊடகத்திற்கான வாய்ப்பும் பிரகாசமாகும். இதன் முதல் கட்டமாக முதலில் புதுச்சேரியில் தமிழ் ஸ்டுடியோவின் கிளை தொடகப்படவிருக்கிறது. நாள்: சனிக்கிழமை (27-11-2010) இடம் : சாம்பர் ஆப் காமர்ஸ், பாரதி பார்க், புதுச்சேரி பொது மருத்துவமனை அருகில் நேரம்: மாலை ஐந்து மணி (5.00 மணியளவில்) சிறப்பு அழைப்பாளர்கள்: திரு. பிரபஞ்சன் எழுத்தாளர், நிகழ்வின் சிறப்பாக மாவீரர் நாள் வருகிறது. எனவே இரண்டு மணியளவில், எல்லாளன் திரைப்படம் திரையிடப்படுகிறது. எல்லாளன் போர்க்களத்தில் நேரடியாக பதிவு செய்த திரைப்படம். தொகுப்பு: கா. முருகன், நிகழ்வில் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். www.thamizhstudio.com |
Thursday, November 25, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் புதுச்சேரி கிளைத் தொடக்க விழா மற்றும் அரிக்கன் மேடு ஆவணப்படம் வெளியீட்டு விழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment