தமிழ் ஸ்டுடியோ.காம் தமிழ் குறும்பட படைப்பாளிகள் சங்கம் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் குறும்பட விற்பனை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம். | ||
நாள்: சனிக்கிழமை (13-11-2010) வணக்கம் வாசகர்களே, தமிழ் ஸ்டுடியோவில் குறும்பட படைப்பாளிகளின் பொருளாதார சுமையைக் குறைக்கும் பொருட்டு அவர்களின் குறும்படங்களுக்கான விரிவானதொரு சந்தையையும் குறும்படப் படைப்பாளிகளின் நலன் காக்கும் பொருட்டு அவர்களுக்கான ஒரு சங்கத்தையும் தோற்றுவிக்கும் முதல் முயற்சியின் கலந்தாய்வுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (13-11-2010) நவம்பர் 13அன்று கோடம்பாக்கத்தில் தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் மிக முக்கியமானதொரு பயனை உங்களுக்கு விளைவிக்கும் என்பது திண்ணம். தமிழ் குறும்படங்களை உலக அளவில் சந்தைப்படுத்துதல், குறும்படப் படைப்பாளிகளுக்கு உரிய அங்கிகாரம் கிடைக்க வழிவகை செய்தல், குறும்பட படைப்பாளிகள் ஒன்றிணைந்து குறித்த இடைவெளியில் ஊர் சுற்றுவது, அங்கே குறும்படங்கள் சார்ந்து விவாதிப்பது போன்ற பல திட்டங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவிருக்கிறது. எனவே தமிழகம் முழுவதிலும் இருக்கும் குறும்படப் படைப்பாளிகள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.வெளி மாவட்டங்களில் இருந்து வரும் ஆர்வலர்களுக்கு தங்குமிடம் தமிழ் ஸ்டுடியோவே செய்துக் கொடுக்கும். குறும்படத்தை நேசிக்கும் எவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுங்கள்... உங்களுக்கான உரிமையை, தேவையை அறிந்துக் கொள்ளுங்கள். வாருங்கள் சந்திப்போம். மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற: 9840698236, 9894422268 | ||
Wednesday, November 10, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் தமிழ் குறும்பட படைப்பாளிகள் சங்கம் உறுப்பினர்கள் சேர்ப்பு மற்றும் குறும்பட விற்பனை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment