நாளைக்கு மழை பெய்யும் -குறும்பட விமர்சனம் | ||
| ||
| ||
தமிழ் குறும்படச் சூழலில் பெரும்பாலான படங்கள் சென்னை, சென்னை பிரச்சினைகளைச் சுற்றியும் இளைஞர் பிரச்சினைகளை மையமிட்டும் எடுக்கப்படுகின்றன. கிராமத்துக்குச் செல்லும் படங்களும்கூட ஏற்கெனவே பேசப்பட்டு வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்றவற்றை கவனப்படுத்துவதுடன் நின்றுவிடுகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் - மதுரை அருகேயுள்ள ஒரு கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது அ. வேல்மணி இயக்கியுள்ள "நாளைக்கு மழை பெய்யும்". இப்பகுதியிலுள்ள பெரும்பாலோர் விவசாயத்தை நம்பி வாழ்பவர்கள். இவர்கள் சம்சாரி என்றழைக்கப்படுகிறார்கள். திடீரென தந்தை இறந்துவிட்ட சூழ்நிலையில், சிறிதளவு நிலம் வைத்திருக்கும் ஒரு இளம் சம்சாரியின் வாழ்க்கையை பின்தொடர்கிறது இந்தப் படம். பள்ளி செல்லும் வயதைத் தொடாத மகள், இளம் மனைவியுடன் வாழ்க்கையை புதிதாகத் தொடங்க முயற்சிக்கிறார் அந்த இளைஞர். ஒரு நண்பரின் உதவியுடன் பக்கத்து நகரத்தில் இருக்கும் மலர் சந்தையில் மண்டி நடத்தும் ஒருவரிடம் கடன் வாங்கி ரோஜா பயிரிட ஆரம்பிக்கிறார். பக்கத்து தோட்டத்துக்காரரிடம் மோட்டார் இரவல் கேட்டு ரோஜாக்கள் வாடாமல் பார்த்துக் கொள்வது முதல், அரசியல் விழாவுக்காக அதிகாலைக் குளிரில் மண்ணெண்ணெய் விளக்கில் மலர்களை மேலும் படிக்க: http://thamizhstudio.com/shortfilm_review_12.php |
Monday, October 25, 2010
நாளைக்கு மழை பெய்யும் -குறும்பட விமர்சனம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment