தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 12வது பௌர்ணமி இரவு (12th Full Moon Day Film Screening) | ||
| ||
இரவு எட்டு மணிக்குத் தொடங்கி நள்ளிரவு வரை திரையிடல் நடைபெறும். இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்) திரையிடப்படும் படங்கள்: தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: ஏழுமலை ஜமா (பவா செல்லத்துரை அவர்களின் சிறுகதை ஏழுமலை ஜமாவாக திருவண்ணாமலையை சேர்ந்த கருணா என்பவரால் குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது). இரண்டாவதாக உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படங்கள் வரிசையில்:லெமன் ட்ரீ (Lemon Tree) இத்திரைப்படம் மேலும் தெரிந்துக் கொள்ள:http://www.imdb.com/title/tt1172963/ (குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.) முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268 |
Monday, January 17, 2011
தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 12வது பௌர்ணமி இரவு
நவீனத்துவம் என்றால் என்ன?
யாயும் ஞாயும் யாரா கியரோ- 3
தமிழில் கல்வி நிறுவனங்களுக்குள் இலக்கியக் கல்வி தரப்படவில்லை. அதனால் இலக்கியம் பற்றிய ஆரம்பப் பாடம் கூட இல்லாத தமிழ்ப் படிப்பே நம் இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது.சினிமா பாட்டைக் கவிதை என்று நினைக்கும் மாணவர்களே அதிகம் உள்ளனர். இது தமிழின் சாபக் கேடு.இந்தச்சாபக் கேட்டால் உருவானவர்களே தமிழ்த் துறையினரும் நம் முதலமைச்சர் போன்றவர்களும். சினிமா பாட்டுக்கும் இலக்கியத்துக்கும் வித்தியாசம் தெரியாத பரிதாபம். கன்னடத்தில் மிக பிரபலமான சினிமா பாடலாசிரியர் ஒரு முறை பெங்களூர் பல்கலைக் கழகக் கன்னடத் துறைக்கு வந்தார். ஆனால் எந்த மாணவரும் அவரைப் பார்க்க ஓடிவந்து குவியவில்லை. கேட்டபோது சினிமா பாடலாசிரியர்களைப் பெரிய இலக்கிய ஆளுமைகளாகத் தாங்கள் கருதுவதில்லை என்றனர் மாணவர்கள்.ஆனால் நம் நிலை?பல தமிழ்ப் பேராசிரியர்களுக்கே சினிமா பாட்டுக்கும் சரியான கவிதைக்கும் உள்ள தாரதம்மியம் தெரியாது. இந்த வித்தியாசமே தெரியாத ஒரு சூழலில் நவீனத்திற்கும் பின்-நவீனத்துக்கும் இருக்கும் வித்தியாசம் எப்படித் தெரியும்? மூன்றாம் வகுப்பு படித்த ஒரு நடிகன் நடித்த எல்லாபடங்களையும் பற்றி இன்று பொது அறிவுப் போட்டி வைக்காத பள்ளிக்கூடமோ டி. வி. சானலோ உண்டா? அரசியலும் சினிமாவும் இணைந்து தமிழத்தைப் படாத பாடு படுத்துகின்றன. என்போன்றவர்கள் தமிழகத்தை விட்டுவிட்டு எழுபதுகளில் வேறு மாநிலங்களுக்குப் போய்விட்டதாலும் பிறமொழிகளில் என்ன நடக்கிறது என்று கவனித்ததாலும் தமிழ்ச் சிறுபத்திரிகைகளின் எழுத்துக்களால் கவரப்பட்டுச் சிறுபத்திரிகைகளுக்குப் போய்விட்டோம். என்னைப் பொறுத்தவரை நான் கர்னாடகத்துக்கு எழுபதுகளில் வந்தபோது இங்கே நவீனத்துவம் கோலோச்சிக் கொண்டிருந்தது.எங்குப் பார்த்தாலும் புதுக்கவிதைத் தொகுப்புக்கள் காட்சிதந்தன.நவீனத்துவம் என்ற பேச்சாகவே இருந்தது.அப்போது இங்கு பின்- நவீனத்துவம் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. எல்லோரும் பின் -நவீனத்துவத்துடன் நவீனத்துவத்தையும் இன்று சேர்த்துப் பேசுகிறார்கள். இவ்விரண்டு சொற்கள் சமீபத்தில் மீண்டும் முக்கியமாகி்யுள்ளன. இந்தச் சொற்கள் இன்று இலக்கியத்திலும் ஓவியத்திலும் ஒருவகை எதிர் பதங்களாகப் பயன் படுத்தப் படுகின்றன.ஆனால் இப்படிப் பயன்படுத்துவது, அதாவது பின் நவீனத்துவத்துக்கு எதிரானது நவீனத்துவம் என்று நினைப்பது ஓரளவுதான் சரி. இன்னொருவகையில் தப்பு. அதனால் இப்பதங்களை ஒவ்வொன்றாக முதலில் விளக்கவேண்டும். நவீனத்துவம் வேறு; புதுமை வேறு. நவீனத்துவம் என்ற சொல் முதல் உலகப் போர் நடந்த காலத்தில் உருவான இலக்கிய, கலை, மற்றும் ஓவிய போக்கு ஒன்றின் பெயர்; புதியதெல்லாம் நவீனத்துவம் கொண்டதல்ல. புதியதை ஆங்கிலத்தில் Modern என்றும் நவீனத்துவத்தை ஆங்கிலத்தில் Modernism என்றும் அழைப்பார்கள். அப்படியென்றால் நவீனத்துவம் எதைக்குறிக்கிறது? ஆங்கிலத்தில் டி.எஸ். எலியட் கவிதைகள் நவீனத்துவக் கவிதைகள். தமிழில் நகுலன் ஒரு நவீனத்துவ எழுத்தாளர் ஆவார்.அவருடைய நாவல்கள்,சிறுகதைகள், கவிதைகள் நவீனத்துவ படைப்புக்கள் ஆகும். தனிமையும் நோய்மையும் பீடிக்கப் பட்ட பாத்திரங்களை இவர் எழுத்துகளில் காணலாம்.இதற்கு நினைவுப் பாதை என்ற இவர் நாவலை உதாரணமாகக் கூறலாம். தற்கொலை செய்துகொண்ட ஆத்மாநாம் ஒரு நவீனத்துவக் கவிஞர். இவர்களை எல்லாம் கேள்விப்ட்டிருக்கிறீர்களா? இவர்கள் படைப்புக்களில் அகத்தேடலும் பயமும் சுயஇரக்கமும் எதிர்கால நம்பிக்கையின்மையும் சாவின் நினைப்பால் விரட்டப் படுபவர்களின் சித்தரிப்பையயும் காணலாம். தமிழில் நவீனத்துவ சினிமா இன்றுவரை எடுக்கப் பெறவில்லை. மலையாளத்திலும் இந்தியிலும் கன்னடத்திலும் நவீனத்துவ சினிமா வந்துள்ளது. மலையாள எழுத்தாளர் சேது எழுதிய நாவல் பாண்டவபுரம். அதே பெயரில் வந்த பாண்டவபுரம் என்ற சினிமாவைப் பார்த்தவர்களுக்கு நவீன்த்துவ சினிமா புரியும்.கோடாரின்( GODARD) பிரஞ்சு சினிமா BREATHLESS ஒரு கிளாசிக். சிலர் பார்த்திருபீர்கள். எதிலும் நிச்சயமில்லாமல் இருக்கும் கதைத்தலைவனின் குணத்தைக் காட்ட காமராவை இடதுபுறமும் வலது புறமும் அசைத்து அதை ஊசலாடும் படிவிட்டு படத்தை எடுத்திருப்பார் கோடார். கதாபாத்திரத்தின் ஊசலாட்டமும் கையற்ற நிலையும் மாடர்னிசத்தின் கூறுகள்.தவிர்க்க இயலாமல் சாவை விரும்பும் பாத்திரங்கள் நவீனத்துவப் படைப்புக்களில் வரும். உயர்ந்த படைப்புக்கள் ஒருவித தத்துவச் சாயலைக் கொண்டிருக்கும்.நவீனத்துவப் படைப்புக்கள் எக்சிஸ்டென்ஷியலிசத்தத்துவத் தன்மையுடன் எழுதப்பட்டிருக்கும்.( எக்சிஸ்டென்ஷியலிசம் பற்றியும் பின்னால் பார்க்கலாம்.) ஓவியத்தில் பிக்காசோவைக் கூறலாம். சிதைந்த உருவங்கள் நவீனத்துவத்தின் கூறுகள்.பிக்காசோவின் கூர்னிக்கா என்ற ஓவியத்தைப் பற்றிக் கொஞசம் சொல்லலாம்.கூர்னிக்கா ஓவியம் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் கொடூரம் பற்றிக் கூறுகிறது.ஆனால் ஒரு பல்ப் ஓவியத்தின் நடுவில் தொங்குவது தவிர எந்த கோரமும் ஓவியத்தில் இல்லை.ஓவியம் முழுதும் ஒரு குதிரைத் தென்படுகிறது.இப்படி குறியீடுகள் வழி செய்தியை அறிவிப்பது நவீனத்துவ பாணியாகும். தமிழில் உதாரணம் சொல்லவேண்டுமென்றால் நகுலனின் இந்தக் கவிதையைக் கூறலாம். நில் கவிதை இங்கே முடிகிறது.இதைக் கவிதை என்று ஏற்றுக் கொள்வீர்களா? மனிதனின் அதீத வெறுமையைக் கூறவும் எந்தப் பேச்சிலும் அர்த்தமில்லை என்று் கூறவும் மனிதன் நஷ்டமாகிப்போனான் என்பதைக் கூறவும் யாரும் யாருடனும் உரையாட முடியவில்லை என்பதைக் கூறவும் இக்கவிதை முயல்கிறது.நில் என்பதும் வா என்பதும் போ என்பதும் ஒன்றே என்று இக்கவிதை சொல்ல முயல்கிறது.மனிதன் தொடர்புறுத்த முடியாத சிக்கலில் மாட்டிக் கொண்டான் என்பதை இக்கவிதை கூறுகிறது.இன்னொரு கவிதையைப் பாருங்கள்.ஞானக்கூத்தனுடையது இது. விழிக்கிறான் இதுபோல் இன்னொரு ஞானகூத்தன் கவிதையும் உள்ளது.அதுவும் Fragmentation என்னும் உத்தியைக் கொண்டதாகும். வள்ளிக் கிழங்கின் எனக் கவிதை போகிறது. பிள்ளைகள் தாயின் உடலைத்தின்னுகின்றன.தமிழில் இரண்டாயிரமாண்டுகளில் இப்படிக் கவிதை எழுதப்பட்டதில்லை. இதுபோல் பெங்களூரில் வைத்துத் தற்கொலை செய்த ஆத்மானாம் கவிதைகளும் தீவிர வெறுமையைக் காட்டுகின்றன. ஒன்றுமில்லை இவை பற்றி முதன்முதலாக படிப்பவர்களுக்கு இது போல் சித்தர்களும் பாடியுள்ளார்களே என்று ஐயம் தோன்றும். சித்தர்கள் காயமே இது பொய்யடா என்று பாடியது வேறு; அது ஒரு நம்பிக்கை, தத்துவம், பார்வை. எப்போதும் உலகம் இப்படித்தான் என்ற எண்ணம் சித்தர்களிடம் இருந்தது. நவீனத்துவம் அப்படி சொல்லவில்லை. இது இரண்டாம் உலப் போரால் விளைந்த ஓர் மனநிலை. அமைப்பியல் போல இது ஒரு சிந்தனை முறை அல்ல. ஒரு கால கட்ட மனநிலை.அகில உலகத்தையும் ஆக்கிரமித்த மனநிலை.இவ்வளவும் எளிமைப் படுத்தப் பட்ட அறிமுகம். இத்தகைய போக்குள்ள எழுதாளர்களை நீங்களும் வாசிக்கும் போது அடையாளம் காணலாம்.அது உங்களுக்கு ஓர் படைப்பை சரியாக வாசிக்க உதவும். தமிழில் இச்சிந்தனைமூலம் எழுதியவர்கள் ந. முத்துசாமி, ஞானக் கூத்தன், நகுலன்,பாரவி, ஓரளவு சுந்தர ராமசாமி ,மௌனி, அசோகமித்திரன் போன்றவர்கள். (பின்- நவீனத்துவம் அடுத்த கட்டுரையில்) அமைப்பியல், இசங்கள், நவீன இலக்கியம் என உங்கள் கேள்விகள், விவாதங்களை முன் வையுங்கள்.. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:thamizhstudio@gmail.com | ||
Saturday, January 15, 2011
கற்பனை+கனா=நிதர்சனம்
ஊசியாய் குத்தும் மார்கழிப் பனி. பொழுது முளைத்து ஒரு பனைமர உயரம் வரும் வரைக்கும் குளிரும் பனியும். குட்டிபோட்ட பூனையாட்டம் கூடவே சுத்திக்கிட்டிருக்கும். வயதானவர்களுக்கு மட்டுமல்ல. இளந்தாரிப் பயல்களுக்கும் இந்த இளங்காலை மார்கழியில் பேசும்போது வாய் தந்தி அடிக்கும். குயில் என்று நினைத்து காக்கைகளைப் கன்னி வைத்து பிடிப்போம். எப்போதும் ஒயாமல் ஒடிக்கொண்டிருக்கும் கொய்யாமரத்து அணில்கள்கூட கொஞ்சம் அமைதியாகவே மரக்கிளையில் படுத்துக்கிடக்கும். கூரைமேல் ஏற்றிவிட்ட சுரையும், பந்தக்கொடியில் படர்ந்துக்கிடக்கிற அவரையும், தரைமீது கிடக்கிற பறங்கியும் ஏகத்துக்குப் பிஞ்சுவிடும். தைமாதம் பிறக்கப்போகிற தைரியத்தில், தைநெல் அறுத்துக் கொடுத்துவிடலாம் என எண்ணி கடன்வாங்கி புதுவண்டி மாடிகள் வாங்குவதும், இந்த மார்கழியில்தான் நடக்கும். வட்டிச்செட்டி கூட யோசிக்காமல் கடன் கொடுத்து மகிழ்வதும் இந்த மார்கழியில்தான். காலப்போக்கில் மார்கழியில் வாங்குவதை மனிதர்கள் நிறுத்தியதும் சிலர் மட்டும் வாழவேண்டும் என்ற சூழ்ச்சிதான் (அக்ஷ்யதிதி பிறந்த காரணமும் அதுதான்), பனியிறங்கும் இந்த மார்கழியை பழிக்கு ஆளாக்கி பீடைமாதம் எனக் கதிபுனைந்து விட்டுட்டாங்க. இதோ இன்னும் ஒருவாரம்தானிருக்கு தைமாதம் பிறப்பதற்கு. காணுமிடமெல்லாம் நெல்லறிந்த வயல்கள். செழித்தோங்கி வளர்ந்துக்கிடக்கிற செங்கரும்பு, மஞ்சள்கிழங்கு, வாழைன்னு மக்கள் முகமெல்லாம் மகிழ்ச்சிப் பூத்துக்கிடக்கிற தைமாதம். தை என்பது தமிழனின் அடையாளம். கன்னிப் பெண்களுக்கு தையில் பரிசம் போடுவது ஒரு வழக்கமாக இருந்தது. களஞ்சியங்கள் நிறைவதும் இந்த தை மாதத்தில். கிராமங்களின் உயிர்த்தொழிலே உழவுதான். அதனால்தான் வள்ளுவன் சொன்னான் “சுழன்றும் ஏர்பின்னுது உலகு” என. உழவு இல்லையேல் உலகு இல்லை. அந்த உழவுக்கு உறுதுணையாய் இருந்தது மாடுகள்தான். மனிதனின் உறவு. இதோ இன்று தை மாதம் பிறந்துவிட்டது. ஆண்டின் பன்னிரெண்டு மாதங்களில் முதன்மையான, செழிப்பான மாதம் . அதனால்தான் பழந்தமிழர்கள் தை முதல்நாளை தமிழ்புத்தாண்டாக கொண்டாடி மகிழ்ந்தார்கள். மீண்டும் அந்தப் பழமையின் பெருமையில் நாம் தை முதல் நாளை தைத்திருநாளாகவும், தரைப்பொங்கல் நாள் எனவும், சூரியனை வழிபடும் திருநாளாகவும் கொண்டாடுகிறோம். காலம்காலமாக கற்சிலைகளை வழிபட்டவர்களின்றும் மாறுபட்டு முதன்முதலான இயற்கையை வணங்கி மகிழும் தமிழன் பகலை விழுங்கியபோது சூரியன் அஸ்தமமிட செவ்வானம் அதைமுத்தமிட, நெல்லடிக்கும் களத்தில் தலைத்தரையைவெட்டி செம்மண்ணெடுத்து குழைத்து மூன்று மண்உருண்டைகளை முப்புள்ளிகளாய் (ஆயுத எழுத்தைப்போல) அடுப்பு கூட்டி வைத்தபோது. விமான இருக்கையில் இருந்த செய்திதாளை நான் வாசிக்கையில் நம்மில்பிறந்து லண்டன்வாழ் தமிழன் சமீபத்தில் நோபல் பரிசுபெற்ற விஞ்ஞானி திரு. வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ஒரு விழா உரையில் “நான் இந்த விழாவில் நாற்பத்திஐந்து நிமிடங்கள் செலவழித்தேன். அதில் முற்பது நிமிடங்கள் சால்வைகளும், மாலைகளும் வாங்கிக்கொண்டு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே என்னால் பேச முடிந்தது என்பது அவரின் வருத்தம் (அவர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொரு விநாடியும் எவ்வளவு அர்த்தமுள்ளது என்று உணர்த்தியது). நேரங்கள் எவ்வாறு வீணாகிபோகிறது என்பதை உணர்த்தப்பட்டு எனது கையில் இருந்த பையை துழாவியபோது திலீபனின் அந்த கடைசி 12 நாட்களை பற்றி படிக்க தொடங்குகிறேன். புத்தகம் படித்து முடித்தபோது ஹைதராபாத்தும் வந்துவிட்டது. நான் உண்ட சர்க்கரை பொங்கல் எனக்குள் செறிக்க மறுத்து உடல் முழுவதும் கம்பளி புழுவாய் ஊர்ந்தது. உண்ணா விரதமிருந்து உயிர்விட்ட அந்த மாவீரனின் நினைவு என்னை வாட்டியது. காந்தியின் அகிம்சை வெள்ளையனை இறங்க வைத்தது. அதே காந்திய வழியில் போராடிய நம் தொப்பில்கொடி உறவு திலீபனை அன்று நாம் அனைவரும் போராடி காப்பாற்றி இருந்தால். ஈழமும் வீழ்ந்திருக்காது. உயிர்விட்டுக் கொண்டிருக்கின்ற உறவினர்கள் இடம்,உணவு, உடை,உடமை, அங்கிகாரம் இழந்து தவிக்கும் தமிழர்கள் அனாதையாய் இருந்திருக்கமாட்டார்கள். இந்தியப் பெருங்கடலில் சீனாவின் பின் புலத்தால் இன்று நம் மீனவர்கள் படும் அவதி. நாளை நம் தமிழ்நாட்டுக்கும் வந்துவிடுமோ? அறம் தரம் இனி | ||
Wednesday, January 12, 2011
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்தப் பிரதிகள்
(தமிழ்ப்பெண் மொழி வழி ஓர் அகழ்வாய்வு)
| குட்டி ரேவதி |
பெண்ணெழுத்து தமிழ்ச்சூழலுக்கு ஏற்கெனவே நிரம்ப அறிமுகமாகியிருந்தாலும் அதன் புரிந்து கொள்ளல் தளத்தில் உள்ள முரண்களைக் கட்டவிழ்ப்பது அவசியம் எனப்படுகிறது. பெண்மை என்பது ஒற்றைத்தன்மை உடையதன்று, அது பன்முகத் தன்மை உடையது என்பதான, பின்நவீனத்தின் கருத்தாக்கத்தை எதன் மீதும் சுமத்திப் பார்க்கும் காலக்கட்டத்தில் தான் பெண்ணெழுத்து தமிழகத்தில் ஓங்கியது. குழந்தைகள் விளையாடும் உடைந்த பொம்மையைக் கூட பின்நவீனத்துவப்பண்பு கொண்ட கலைப்பொருள் எனக் கொண்டாடும் நகைப்பைக் கொடுக்கும் இடத்தில், பெண்ணெழுத்தை அறிமுகம் செய்யும் இடத்தையும் கால அவகாசத்தையும் நான் உங்களிடையே எடுத்துக் கொள்ள இருக்கிறேன்.
இவ்விடத்தில் ‘பெண்’ என்ற தனது பால் அடையாளத்தை நிலைநிறுத்த எழுத்தைப் பயன்படுத்திய பெண்களுடன் ஏற்கெனவே அவ்வடையாளங்களுடன் எழுதிய, எழுதிக்கொண்டிருந்த பெண்கள் வந்து இணையும் இடத்தில் அவ்வொற்றை அடையாளம் என்பது காத்திரமடையாமல் நீர்த்துப் போகும்படியான ஒரு செயலூக்கம் பெற்றிருந்ததைத் தமிழ்ச்சூழல் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தது அல்லது சொரணையற்று இருந்தது. இந்நிலையில் நம் பெண்கள், தம் பிரதிகளை மீண்டும் மீண்டும் எழுதிக் கலைக்கவேண்டியிருந்தது. மணல் மீதான தடங்களைப்போல கலைந்து கொண்டே இருந்தன, அப்பிரதிகள். மண் அடுக்குகளின் ஆழத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும், புதைக்கப்பட்டிருக்கும் தம் உடலைக் கண்டடையும் முடிவற்ற முயற்சியின் வெளிப்பாடாகவும் இருந்தன அப்பிரதிகள். இவ்விடத்தில், பெண் ‘எழுத்தை’, இரண்டாம் கட்டத்தில் எழுத வந்தப் பெண்கள் அவ்விதம் தான் தமக்குப் பயன்படுத்திக் கொண்டனர், ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து முதல் முறையாக எழுத வந்த பெண்கள், இவர்கள். சமூகவெளியில் முதன் முறையாகத் தம் உடலை நிலைநிறுத்திக் கொள்ளும், கட்டமைத்துக் கொள்ளும் அவர்தம் பணி, அவர்கள் எழுத்தின் வழியாகவே, அதிகார நிறுவனங்களுக்கு வெளிப்படையாகத் தெரியவந்தது. அதிர்ச்சியை அளித்தது. இது நிகழ்ந்த காலக்கட்டத்தில் அதிகார நிறுவனங்கள், பெண்ணுடல்களுடன் நேரடியாகவே மோதத் தொடங்கின.
ஆனால், அதற்கு முன்பிருந்தே எழுத்தைத் தங்களின் ஊக்கமாகவும் அதிகார நிறுவனங்களை எதிர்ப்பதற்கான ஆயுதமாகவும் பயன்படுத்திய இரண்டாம் தலைமுறைப் பெண்கள், ’பெண்’ என்ற ஒற்றை அடையாளத்தையே எப்பொழுதும் வலியுறுத்தி வந்தனர் என்பதை இங்கு நினைவில் வைத்துக் கொள்வோம். ஒற்றை அடையாளப் பெண்கள் இதர, அதிகார நசிவுக்குள்ளான பெண்களுடன் ஒருபுறம் தங்களை இணைத்தவாறே மறுபுறம் ஆதிக்கக்குறிகளையும் தங்கள் உடலில் வளர்த்துக் கொண்டும் இருந்தனர். இந்நிலையில் பெண்களில் ஆதிக்கக் குறி வளர்த்த பெண்கள், ஆதிக்கக் குறி வளர்க்காத பெண்கள் என்ற இருவகையினர் உருவாகினர். ஏற்கெனவே, அதிகாரம், முறையற்ற பாலின்பச் சுவை, உடல் மீதான தொடர் வன்முறைக்கான வேட்கை போன்ற ஆண்மைய வாதத்தினால் பெண்களின் பேசுபொருட்கள் ஒருக்காலும் விளிம்பிலிருந்து மையத்தை எட்ட முடியாத சுழற்சி நிலையிலும், இயக்க நிலையிலுமே இருந்தன. அவ்வகையில், சமூகத்தின் மேல் தட்டு அங்கீகாரங்களுக்கும் சலுகைகளுக்கும் உரியவர்களான பெண்கள் தாங்கள் மீட்டுக்கொண்டு வந்த மணலுடலில் குறி வளரக் கண்டனர். அது பாலுறுப்பு என்பதால், அது எப்பொழுதும் மறைவிடத்தில் உள்ளது என்பதால் அது பெரிய பொருட்டாக்கிப் பேசப்படவேண்டியதில்லை என்று கருதியதுடன், தம் பெண்ணியப்பிரச்சனைகளுக்கெல்லாம் முற்றுவைத்துவிட்டு, தம்முடலை ஒரு பேசுபொருளாக ஆக்கும், அதை திடப்படுத்தும் தலையாய வேலையையும் விட்டுவிட்டு மீண்டும் தங்கள் தங்கள் உடலை ஆணின் வேட்கைக்கு இரையாகச் செய்யும் மரபார்ந்த வேலைக்குத் திரும்பிவிட்டனர்.
பெண்ணெழுதும் பிரதியோ அப்பிரதியைப்படைக்கும் பெண்ணோ முக்கியமன்று. இப்பிரதி உருவாக்கம் பெறும் வழிமுறை தான் முக்கியம். பிரதியை வியத்தலும், அதைத் தூற்றுதலும் அல்லது பிரதியை விடுத்து அதை உருவாக்கிய பெண்ணின் உடலையும் வாழ்க்கையையும் ஒரு பிரதியாக்கித் தூற்றுதல் அல்லது புறக்கணித்தல் போன்ற நிகழ்வுகளையெல்லாம் தமிழ்ச்சமூகம் வேண்டி விரும்பி தன் ஆதிக்கக் குறி வளர்த்த தருணங்களாகக் கொள்ளலாம்.
ஆனால், பெண்ணின் சமூக அடையாளம், அவள் ஆக்கிய பிரதியின் கருப்பொருட்களின் பொருள்விளக்கம் இவையிரண்டுமே, அப்பெண் உருவாகிவந்த பண்பாட்டுத் தளத்தின் வழியே தான் நுகரப்படுகிறது. இதை வேண்டாமென்று பெண்களும், இது அவசியமில்லை என்று வாசகர்களும் ஒருபொழுதும் புறக்கணித்து விடமுடியாது. ‘மொழி’ யைப் பெண் பெறுவது ஓர் அதிகாரமாகவே கருதப்பட்ட சமூகத்தில் பிரதியை உருவாக்கிய பெண்ணுக்கு எழுத்துமொழியுடனான அல்லது வழக்கு மொழியுடனான புழக்கம் எத்தனை தலைமுறையினது என்பதும், முந்தைய தலைமுறையிலேயே அவளுக்கு மொழி வாய்த்திருந்தது எனில் அத்தலைமுறையிலேயே அவளுக்கு மொழி அதிகாரத்தைத் துய்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது அப்பெண் அம்மொழியை வைத்து தனக்கும் தன்னையொத்த உடலுடைய பெண்களுக்கும் என்ன செய்து கொண்டாள் என்பது மிகவும் கவனத்தில் கொள்ளப் படவேண்டிய கேள்வி. இந்தக் கேள்வியை இன்னும் எளிதாக அணுகுவது அப்பெண்ணுக்கு அவசியப்படும் விடுதலையின் வேட்கையை அளவிட உதவியாக இருக்கும். அதற்குக் காலத்தைத் தலைகீழாக நாம் அணுகவேண்டியிருக்கும். முதல் தலைமுறையாக மொழியைக் கைக்கொள்ளும் பெண் எனில் அப்பெண்ணின் கருப்பொருட்களே முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படவேண்டும். ஏனெனில், இன்னும் வாசிக்கப்படாததும், முன் வைக்கப்படாததும், புறக்கணிக்கப்பட்டதுமான மூலகங்கள் அங்கே தான் நிறைந்து கிடக்கின்றன.
மேற்கண்ட புரிதலுடன், தமிழ்ச்சூழலில் பெண்ணெழுத்து நிகழ்வை அணுகலாம். மிகை வெளி, இவ்வுலகை ஒரு ‘முழுமை’ எனப்பார்ப்பதற்கான தனிப்பட்ட முறைமை, நன்கு செழித்தும் கொழுத்தும் வளர்ந்திருந்த முதலாளித்துவப் பண்பாட்டு நிலையைப் பகுத்தாய்வதற்கான தத்துவார்த்தக் கருத்துகளின் ஒரு தொகுதி, எப்பொழுதும் கலகத்தை நிகழ்த்துவதற்கான வாய்ப்பும் வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதற்குமான வசதியும் வழங்கப்பட்ட பசியாறிய உடல்கள், பணிவு மறுக்கும் தன்மை, புரிதலின் செயல்பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தருவது, ஒருங்கிணைப்பைக் காப்பாற்றுவதில் அதிக ஆர்வமற்றது, ஏற்கெனவே திடமான குருதிப்பாய்ச்சலுக்கு உள்ளான ஆதிக்கக் குறிகளை வளர்த்திருந்த இனத்துடன் சென்று சேரும் ஆர்வத்தைச் செயல்படுத்திக்கொள்வது, எனத் தீவிரமாக தன்னிலையிழந்து தமிழ்ச்சமூகம் செயல்பட்டுக் கொண்டிருந்தக் காலகட்டத்தில் பெண்ணெழுத்து அறிமுகமாகிறது. அதுவரையிலும் பெண்ணுடலைத் தன் புனைவுகளுக்குள் ஒரு கச்சாப்பொருளாக மட்டுமே ஆண் படைப்பாளிகள் படைத்து வந்தனர். ஆக. பெண்கள் தம் மொழியால் அத்தகையப் புனைவுகளையெல்லாம் தம் எழுத்துக் கரத்தால் அழிக்கின்றனர். அப்புனைவுகளில் இடம்பெற்றவை எல்லாம் எம் உடல்களோ, ஏன், எம் உடல்களின் சாயல்களோ கூட இல்லை என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. ஆண்களின் புனைவுகளில் உலவிய பெண்ணுடல்கள், ஆண்களின் வசதிக்காகவும், ஆண் குறிகளின் அதிகாரத்தை இயக்குவதற்காகவும் அவர்கள் புலன்களுக்கு இன்பமூட்டும் நுகர்வுத்தன்மைகளுடன் உருவாக்கப்பட்ட அங்க அடையாளங்களுடையதுமான ஒரு தட்டையான உடல் தான். இந்நிலையில் பெண்ணெழுத்து என்பது தன்னுடலின் வலிமையையும் தன்னையொத்த பெண்கள் உருக்கொண்ட உடலையும் எழுதுபொருளாக்கும் முதல் வகையான பணியைச்செய்கிறது. இங்கு எழுத வரும் பெண்களும், அவர்கள் எழுத்து உருவாக்கம் பெறும் நடைமுறையும், ஏன் அவர்கள் உருவாக்கும் பிரதியுமே கூட தனித்த அளவில் முக்கியத்துவம் பெறுவதுடன் உச்சப்பட்ச செயற்பாடும் அடைகின்றன.
மேற்கண்ட நிலையில் உருவாகிய பிரதிகள் எவ்வாறெல்லாம் வாசிக்கப்பட்டன எனும் புரிதலுக்குச் செல்லலாம். அப்பிரதியை வாசித்தவர்கள், அவரவர் மனதில் அப்பிரதியை உருவாக்கியப்பெண் பற்றிய என்னென்ன சமூகப் பண்பாட்டு பிம்பங்கள் துலங்கினவோ, அந்தச் சமூகப் பண்பாட்டு பிம்பங்களுக்கு என்னென்ன ஏற்றத் தாழ்வுகளைக் கற்பித்திருந்தனரோ அதையே கண்ணாடியாக அணிந்து கொண்டு வாசித்தனர். அவர்கள், தங்களின் அகஉலகத்திற்கு ஊட்டி வளர்த்திருந்த கருத்தாக்கத்தையோ, சமூகக் கூறுகளையோ, பண்பாட்டு ஏற்றத் தாழ்வுகளையோ எங்குமே கேள்வி எழுப்பாமல் சந்தேகிக்காமல், தங்கள் முன்வைக்கப்பட்ட பிரதிகளின் மீது அச்சுமைகளை ஏற்றினர். அவற்றைச் சந்தேகித்தனர், அஞ்சினர். அவதூறு செய்தனர். தங்கள் புனைவுகளில் உலவிய பெண் பிம்பங்களும் அவற்றின் வழியாக அவர்கள் தங்களுக்குச் சேமித்து வைத்திருந்த அதிகாரங்களும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தை மறைக்கப் பரிபூரண அமைதி காத்தனர். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், யோனியையும் முலைகளையுமே வீடாகவும் வெளியாகவும் மாற்றியிருந்த பெண்களின் காதுகளில், ’யோனிகளும் முலைகளுமே கூட மாயை!’ என அழுந்த அழுந்தக் கூறி அவற்றின் வழியாக அச்சத்தைச் சித்திரித்த பக்திப்பாடல்கள் தொடர்ந்து ஒலித்த இந்துக் குடியிருப்புகளிலிருந்து வந்த படைப்பாளிகளாயிருந்தனர். ஆகவே, தங்களின் கவனத்தை, சமூகப் பிரக்ஞையை, அவர்களுக்கு அது வரை செயலூக்கம் வழங்கி வந்த இந்திய இறையாண்மை, இந்திய சமயம், இந்தியப் பண்பாடு என்ற இந்திய முகத்துடன் தங்களை ஒட்டுமொத்தமாய் இணைத்துக் கொண்டனர். அப்படி அவர்கள் தங்களை இந்திய இறையாண்மையின் இந்து இதயத்திற்கு ஒப்புக்கொடுத்துவிட்டார்களானால், பெண்கள் முகத்தில் வெளிப்படும் பலதரப்பட்ட உணர்ச்சிகளை நேரடியாக எதிர்கொள்ளவே வேண்டியிருக்காது. ஏனெனில் அவ்வுணர்ச்சிகள் அவர்களுக்குள் கடுமையான குற்றவுணர்வை ஊட்டக்கூடும். அவர்தம் பண்பாட்டு அதிகாரத்துடனான உறவைத் துண்டித்து நிரந்தரமானதொரு தனிமையைக் கொடுக்கக்கூடும். மொழி வழியாகத் தம் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டினால் உண்டாகும் பதட்டத்தை எல்லோரும் அறியும்படியாகும். ஆண் குறி வழங்கிவரும் மறைமுகமான பெருமையையும் அதிகாரத்தையும் சுவைக்கமுடியாது போய்விடும். இன்னும் சொல்லப்போனால் எந்த மொழியை வைத்துத் தன் அதிகாரத்தை வளர்த்துக் கொண்டார்களோ அந்த மொழியே முற்றிலும் அந்நியமாகப் போய்விடும். ஏனெனில் இது வரை அவர்கள் கற்பித்து வந்த அர்த்தத்தில் இருந்த சொற்களையெல்லாம் பெண்கள் வேறுவேறு அர்த்தங்களில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அவர்கள் தம் பயன்பாட்டிற்கு ஏற்ற கலைச்சொற்களையும் உருவாக்கிக் கொண்டனர். ஆகவே, புனைவாளர்கள் தங்கள் முகம் திருப்பிக் கொண்டார்கள்!
ஆனால், தமிழ்ச்சூழலில் ஒரு தவறான அர்த்தப் புரிதல் நிகழ்ந்து விட்டது. பெண் விடுதலைக்கான இந்த எழுத்து வகை, பாலியல் வேட்கையின் வெளிப்பாடாகவும் அதற்கான வெளிப்படையான கோரலாகவும் பெண்களாலேயே புரிந்து கொள்ளப்பட்டிருப்பது தான் அது. அத்தகைய பாலியல் வேட்கையை பெண்கள் தாமாய் முன்வைக்கும் உரிமையைப் பெற்றுவிட்டாலே, ஆண் குறிகள் தம்மீது செலுத்தி வந்த அதிகாரத்தை எதிர்த்து விடலாம் என்ற அர்த்தமாயும் எடுத்துக்கொண்டனர். அப்படியொரு பாலியல் வேட்கையையும் விடுதலையையும் ஏற்கெனவே சாதியச் சந்தையின் மேல் தட்டில் இருக்கும் ஆதிக்கச் சாதிப் பெண்கள் நுகரவில்லையா என்ன? அது முழுமையான விடுதலையை பெண்ணினத்திற்குச் சாத்தியப்படுத்திவிட்டதா என்ன? ஆக, மொண்ணையாக அதை பாலியல் வேட்கை என்றும் பாலியல் விடுதலை என்றும் பேசுதல் ஆணாயிருப்பினும் பெண்ணாயிருப்பினும் அவரவர் சாதி சார்ந்த அதிகார போதையில் நிகழும் அரைகுறைப் புரிதலே. பாலிமை உறுதிப்பாட்டை அடைவதற்கான முயற்சியில் ஒடுக்கப்பட்ட சாதிய, பொருளாதார அடுக்குகளின் கீழ்த்தட்டில் இருப்பவர்களுக்கும் இவை தடைகளாக எழுகின்றன. ஆக, இக்கட்டத்தில் பாலியல் உரையாடல்களின் அர்த்தங்களையும் பாலிமையின் பண்புகளையும் பாலியல் சொற்களின் குறியீடுகளையும் விரைந்து மாற்ற வேண்டியிருக்கிறது. மொழியின் கூர்மையை இன்னும் தீட்டிக் கொள்ளவேண்டிய அவசியமும் இருக்கிறது. பாலியல் வேட்கை பற்றிய வெற்று உரையாடல்கள் எல்லாம் புணர்ச்சியின் உச்சக்கட்டத்தைப் போலவே தீவிரச் சோர்வைத்தாம் தரக்கூடும், அதை அடைவதற்கான வழிமுறைகளும் அலகுகளும் தேவைகளும் இல்லாத போது.
பாலியல் வேட்கை என்பதை முன்வைக்கும் பெண்நிலை வாதம் முற்றிலுமானதோர் ஒற்றை அடையாளத்தைப் பெண்ணுக்குக் கேட்பது. ஆண்களை மட்டுமே எதிரிகளாகப் பாவித்து, இதர சமூகப் பெண் வர்க்கத்தினரை புறந்தள்ளுவது. இவர்கள் தாம் ”பெண்” சம்பந்தப்பட்ட எதுவுமே பெண்ணியப் பிரச்சனையென்று பொத்தாம்பொதுவான விஷயங்களையும் பேசுபொருளாக்குவதுடன், பெண்ணிலை வாதத்தை கூர்மையடையாமல் மழுங்கடையச்செய்கின்றனர். பொருளாதார, சாதிய நிலைகளில் ஒடுக்கப்பட்ட நிலையில் இருக்கும் பெண்களின் முதன்மையான பிரச்சனை பாலியல் வேட்கை இல்லை, பாலியல் உரிமை. அத்தகைய பாலியல் உரிமைகளில் அவர்கள் கோரும் வேட்கை என்பது மிகச்சொற்பமான, அற்பமானதோர் உரிமை. அன்றாடம் கணநேரமும் உழைக்கும் பெண்ணின் பாலியல் நுகர்வுக்கான இயல்பூக்கம் எப்பொழுதுமே ஆரோக்கியமானதாகவும் அவ்வேட்கையை நிறைவு செய்துகொள்ளும் அனுபவமும் வாய்த்ததாகவும் இருக்கும் என்பதில் ஐயமென்ன இருக்கிறது?. ஆனால், உடலுக்கு உணவையும் ஆரோக்கியத்தையும் வழங்குவதற்கான அடிப்படை வசதிகள் அற்ற சமுதாயத்திலிருந்து எப்படி உடலுக்கு பாலியல் இன்பத்தை வழங்க முடியும்? பசி வந்திடப் பறந்து போம்!
தீவிரநிலைப் பெண்ணியம், மார்க்சியம் போன்ற கருத்தாக்கங்களை பெண்களின் உடல் சார்ந்த அரசியலைப் பேசுவதிலும் குறிப்பாக, கீழைத் தேயப்பெண்களின் காலங்காலமான செயற்பாடுகளை அர்த்தப்படுத்துவதிலும் இருக்கும் போதாமைகளை நினைவில் கொண்டும், அக்கருத்தாங்களை முற்றிலும் உதிரியான அளவில் புரிந்து கொண்டும் தாம் இதை முன்னுரைக்கிறேன். இந்நிலையில் நாம் அடையவேண்டிய பெண் விடுதலை என்பது, பெண்ணின் பொருளாதார விடுதலையைக் கருத்தில் கொண்டது, அதன் கடந்த கால சாத்தியங்களை நினைவில் கொண்டது, இன்றைய பெண்ணுக்கான அறஞ்சார்ந்த வாழ்வையும் அதில் பெண்ணுக்கான பாலுரிமையையும் உள்ளடக்கியது.
அம்பேத்கரின் நூற்றாண்டுக்குப் பின் தான் பிற சமூகத்தினரிடம் ’பெண் விடுதலை’ நிகழ்த்தப்போகும் அதிர்வுகள் குறித்த இம்மாதிரியான பதற்றங்களும், குழப்பங்களும், தடுமாற்றங்களும் அதிகமாகியிருப்பதை உணர்கிறேன். பட்டியல் இனம் தவிர்த்த பிற சாதியினர் தங்கள் அதிகாரத்தையும் நிலைநிறுத்துதலையும் புணரமைக்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டதைப் போல தீவிரமாக இயங்கத் தொடங்குகின்றனர். இதில் இயல்பாகவே பெண்களின் ஒட்டுமொத்த பிரதிகளும் அவர்கள் எந்தப் பின்னணியிலிருந்து வந்தனரோ அந்தப் பின்னணி சார்ந்து இரு வகையினராகப் பிரித்து நுகரப்படுகின்றன.
இதில் நாம் உண்மையிலேயே படித்துணரவேண்டியதும் நாம் எடுக்கவேண்டிய நிலைப்பாடும், தொன் பொருண்மைத்துவமும் தொல் அறவியலும் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கெனவே நினைவுகளில் மீண்டும் மீண்டும் பதியப்பட்டிருந்த மரபார்ந்த பெண்பிம்பங்களின் நினைவுகளிலிருந்து நம் பெண்களை மீட்டெடுக்கவேண்டியிருக்கிறது. ஆதிக்கப் பெண் பிம்பங்களான பாஞ்சாலியின் தூமையில் உழலும் பூமியாகவும் சீதையின் சாபத்தினால் பீடிக்கப்பட்ட மண்ணில், அவள் உண்டாக்கிய தீயின் வெக்கையில் உழல்பவர்களாகவும் நம் மண்ணையும் நம் மக்களையும் சித்தரிக்கும் பிம்பங்களிலிருந்தும் பெண்கள் தங்கள் உடல்களை மீட்டெடுக்க வேண்டியிருக்கிறது. இதன் பின்னணியில் மரபார்ந்த இன ஒடுக்குமுறையையும், அதற்காகக் கட்டமைக்கப்பட்ட சாதிய அடக்குமுறையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே, இம்மண்ணின் தொல் தெய்வம் என்றால், வைதிக அடையாளங்களைத் துறந்த தெய்வமென்றால் அதன் தூமையலாத செங்குருதியில் உழலும் உடல்கள் நீங்கள் என்று எவரையும், ஏன் எந்த ஓர் ஆதிக்க சாதிப்பெண்ணையும் நாம் அடையாளப்படுத்தி அவர்களுக்கு, அறிவு புகட்டமுடியுமா என்ன? எந்த அதிகார நிறுவனத்தின் குறுக்கீடும் இல்லாமல் இயல்பான பாலியல் உந்துதலை, ஊக்கத்தைச் செயல்பாடாக்கும் உரிமை தான் பெண்களை மிகவும் வலுவாக்கும். இன்று பெண் கவிதையின் அடிநாதமாய் வியக்கப்படும் ஆண்டாளின் பாடல்களே கூட தனக்கு மறுக்கப்பட்ட ஆணுடல் மீதான வேட்கையை இறைவன் மீது ஏற்றிப் பாடியதே. இந்த ஆண்டாளுக்கு எல்லா அடிப்படையான உரிமைகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு இருக்க, பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் வாயிலான யோனி மட்டுமே அடைக்கப்பட்டிருந்ததே அவள் உணர்வெழுச்சிக்குக் காரணமாயிருந்தது.
ஆகவே, ஆண்டாளின் உடலும் எம் பெண்டிரின் உடல் அல்ல. யோனியை எவருக்கும் குத்தகைக்கு விடாத உடல் தீரத்தை நாம் எதிர்கொள்ளவேண்யிருக்கிறது. காலங்காலமாக ஆண்களும் அதிகாரமும் அடைக்கலமான நம் யோனிகளை அதன் அதிகார உடல்களிடலிருந்து பறித்தெடுக்க வேண்டியிருக்கிறது. அந்த யோனிகளைக் காரணம் காட்டித்தான் நம்மீது பண்பாட்டின் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன. ஆக, நம் பெண்டிரின் யோனிகளே, அறமும் சமூக நீதியும் உட்பொருளான தொல்நெறியுடன் நம்மை இணைத்துக்கொள்வதான நுழைவாயில்கள். மேலும் அந்தயோனிகள் வழியாகத் தொடர்ந்த புனல்கள் தாம் நமது உடல்களுக்கு, உடல் வளமைக்கு தீராத பாலூக்கத்தைத் திறந்து கொடுக்கின்றன.
மேலும் வாசகர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். கலவியையும் பாலியல் வேட்கையையும் பேசுமிடத்தில் மட்டுமே நம் உடலை மீட்டுக் கொண்டுவிட்டதாகி விட முடியாது. நம் உடலை வலையாகப் பின்னிக்கொள்ளும் பிற ஆண், பெண் சார்ந்த பாலியல் அடக்குமுறைகளிலிருந்தும் வன்முறைகளிலிருந்தும் கூட நம் உடலை கைப்பற்ற வேண்டியிருக்கிறது. அதன் உள்ளீடாக இருக்கும் பாலியல் அரசியல்களையும் விவாதப் பொருளாக வேண்டியிருக்கிறது. தன் உடல் என்பதே கூட மற்ற உடல்களுடன் ஊற்றாக இருக்கும் யோனிகளுடன் தொடர்ந்ததொரு தீராத உறவைக் கொண்டிருக்கிறது. ஆகவே, மற்ற வேறுபட்ட தளங்களிலும் இருக்கும் பெண்ணுடலையும் மீட்டு வராமல் ஒரு பெண்ணுக்குத் தன் உடல் உரிமையும் விடுதலையும் என்பது சாத்தியமே இல்லை.
மேற்விவரித்த, விவாத முன்னிலையில், ‘ஆண்குறி மையப்புனைவைச் சிதைத்த பிரதிகள்’ என்ற தொடரை எழுதப் போகிறேன். இது 1990 – களில் நிகழ்ந்த பின்நவீனத்துவ வாதத்தின் தேய்வையும், அப்பொழுது பெருவாரியாக அழுத்தமாக தமிழ்த்தளத்தில் நிகழ்ந்த ஒடுக்கப்பட்ட பின்னணியிலிருந்து எழுத வந்த பெண்ணெழுத்தையும் பொருட்படுத்தி விவாதம் செய்யும். மேற்கத்திய கருத்துக் கோட்பாடுகளைப் புறந்தள்ளும் அல்லது அதன் பொருத்தப்பாடு கருதி விவாதிக்கும். மேற்குத் திசைக்கு முற்றிலும் எதிரான திசையில், ஐந்தாயிரம் வருட தொன்மையான தமிழ் அறச்சீர்மையான வெளியில் பயணித்தவாறே அகழ்வாராய்ச்சி செய்யவும் துணியும். வாருங்கள் நண்பர்களே! தேங்கிக் கவனிப்பாரற்றுக் கிடக்கும் அதன் நீர்வெளியில் நிரம்பத் தழைத்த பாசிகளை விலக்கிய வண்ணமே உள்நுழைந்து அகழ்வாராயாலாம், வாருங்கள்!
Tuesday, January 11, 2011
வியாழனில் வெங்காயம்!
வியாழனில் வெங்காயம்!
தொலைநோக்கு சிந்தனை இல்லாத மக்கள் குடிமக்களாக அமைந்துவிட்டால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அமைதி என்பதே அரிதான விசயமாக அமைந்துவிடும். புதியதாக பிறந்துள்ள பிரச்சனையா இது! சூரியனின் திசைக்கேற்ப அளவில் மாறுபடும் நம் நிழல்போல, காலத்திற்கேற்ப, காலநிலைகளுக்கேற்ப இந்த பிரச்சனை பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருந்துகொண்டேதானே இருக்கிறது. இதுபோன்ற பிரச்சனை ஏற்படும்போதெல்லாம் அறிவு ஜீவிகளாக தங்களை அனுமானித்துகொள்பவர்கள் அலோசனை கூறத்தொடங்குவது வழக்கம். அதி புத்திசாலியாக இருந்தால் ”நதிகளை இணையுங்கள்” என்பார்கள். அளவான புத்திசாலியாக இருந்தால் “மழை நீரை சேமிக்க வேண்டும்” என்பார்கள். அடித்தட்டு மக்களாக இருந்தால், ஆற்று நீர் யாருக்கும் பயண்படாமல் கடலை நோக்கி பயணமாவதை குறித்து பேசுவார்கள். அவர்களின் பேச்சை கேட்டு அரசு செயல்பட்டால் பிறகு அல்லல் படவேண்டியதுதான் மக்களுக்கு நன்றாக மழை பெய்தாலும் தண்ணீர் பிரச்சனைதான், மழை பெய்யா விட்டாலும் தண்ணீர் பிரச்சனைதான். நதிகளை இணைக்க முடியாதா? மழை நீரை சேமிக்க முடியாதா? ஆற்று நீரை அவசியமான முறையில் பயண்படுத்திக்கொள்ள முடியாதா? இவையெல்லாம் நம் மக்கள் புதியதாக கண்டுபிடித்த விசயங்களா!. ஒரு நாட்டை ஆள்பவர்களுக்கு இதுபோன்ற விசயங்களை நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமா! இதுகூட தெரியாமலா ஆட்சியில் அமர்ந்திருக்கின்றாகள். உண்மையில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு அனைத்தும் தெரியும். ஆனால் அவர்கள் அவ்வப்போது தோன்றும் பிரச்சனைக்கு அதை அடியோடு நீக்கும் நிரந்தரமான தீர்வுகளை மட்டுமே யோசிப்பார்களே ஒழிய, நிரந்தரமற்ற தீர்வுகளை உண்டாக்கும் அலட்சிய சிந்தனை கொண்டவர்கள் அல்ல. பிறகு தவறு எங்கே உண்டாகிறது? மக்களிடம்தான், மக்களின் மனநிலையில்தன் தவறு உண்டாகிறது. மக்களை பொருத்தவரையில் இன்று ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு இன்றே தீர்வு வேண்டும் என்பார்கள். அந்த தீர்வு நிரந்தரமானதா அல்லது நிரந்தரமற்றதா என்பதை பற்றி அவர்களுக்கு கவலை இருப்பதில்லை. நிரந்தரமற்ற தீர்வுகளை பெற்றுக்கொண்ட பிறகு நித்தம் நித்தம் அரசை அவதூறு செய்வாகள். ஆனால் ஒரு அரசாங்கத்தால் அப்படியெல்லாம் பொருப்பில்லாமல் செயல்பட முடியாது. அரச்சாங்கம் எதையும் நிரந்தரமான ஒன்றாக நிலைநாட்டவே விரும்பும். ஒரு சீன பழமொழி உண்டு “புதரில் இருக்கும் இரண்டு புறாக்களை வீட, கையில் இருக்கும் ஒரு புறா மேலானது” நம்மவூர் பாசையில் சொல்லவேண்டுமானால் இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க முயலக்கூடாது என்பார்கள். இதுபோன்ற பழமொழிகளை படித்துவிட்டு இருப்பதையே இறுக்கமாக பிடித்துக்கொண்டிருந்தால் பின்னர் பறப்பதை யார் பிடிப்பது? காக்கா குருவிதான் மரத்தில் கூடுகட்டும், கழுகு மலை உச்சியில்தான் கூடுகட்டும் என்பார்கள் அப்படிப்பட்ட உயர்வான சிந்தனை கொண்டதுதான் நம் அரசாங்கம். அதனால்தான் மழை நீரை பற்றி அவர்கள் கவலைப்படவில்லை, அடங்க மறுத்து ஓடும் ஆற்று நீரைப்பற்றியும் அவர்கள் கவலைப்படவில்லை, நம்மிடம் உள்ள நதிகளை இணைப்பதைபற்றி அவர்கள் கவலைப்படவில்லை. காரணம் இவை எல்லாம் நிரந்தரமல்ல. அதுமட்டுமல்லாமல் அதிக அளவில் செலவு செய்யப்பட வேண்டிய விசயங்கள் இவை. சரி அரசின் உயர்வான, சிக்கனமான சிந்தனைதான் என்ன? அவர்கள் சிந்தனைப்படி நிரந்தரமான தீர்வு எங்கே இருக்கிறது? நிலவில் இருக்கிறது. ஆம், நிலவில் தண்ணீர் இருக்கிறதா என தேடிக்கொண்டிருக்கிறார்கள், அறிகுறிகள் கூட தென்பட்டுவிட்டது நிச்சயம் கண்டுபிடித்துவிடுவார்கள். அங்கே மட்டும் தண்ணீர் இருந்துவிட்டால் அடடா! அதற்குப்பிறகு அப்படி ஒரு தண்ணீர் பிரச்சனையே எழாதே. அதுபுரியாமல் குறுகிய மனம்கொண்ட இந்த குடிமக்கள் கோபத்தில் கூத்தடிப்பதை என்னவென்று சொல்வது!. நிலவில் தண்ணீர்! அதை தேடிக்கொண்டிருப்பது ஒரு தமிழனின் தலைமையிலான குழு. இதை வீட பெருமை வேறென்ன வேண்டும் நமக்கு. தமிழ்னுக்கு தமிழனே துரோகம் செய்வானா! தண்ணீர் கிடைத்தவுடன் முதலில் நமக்குத்தானே கொடுப்பார் இதை புரிந்துகொள்ளாமல் நதிகளை இணை என்று நாள்கணக்கில் புழம்பிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. நதிகளை இணைப்பது எவ்வளவு கடுமையான பணி!. இயற்கைக்கு முரணான விசயமல்லாவா அது. நடைமுறையில் சாத்தியமாகக்கூடிய காரியமா அது. திரும்பத்திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அதனால்தானே பெரிய பெரிய அறிவாளிகள் கூட அந்த விசயத்தை அலட்சியம் செய்துவிட்டு அதற்கு பதிலாக அருகில் இருக்கும் நிலவில் தண்ணீரை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சுலபமாக நிலவில் இருந்து தண்ணீர் எடுத்து மாநிலம் வாரியாக, மாவட்டம் வாரியாக, தெருத்தெருவாக தண்ணீரை கொண்டு செல்லலாமே! இதெல்லாம் யாருக்காக? யார் செய்வது? நமக்காக நம் அரசு செய்கிறது. அதற்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டாமா! தலைக்குமேலே தண்ணீர் இருக்கும்போது அடுத்த மாநிலத்தை அவமதிப்பது எந்த விதத்தில் நியாயம்!. என்ன ஒரு பிரச்சனை தோன்றும் என்றால், நிலவில் தண்ணீர் இருந்துவிட்டால் நமக்கு இரவு நேரத்தில்தான் தண்ணீர் கிடைக்கும். பரவாயில்லை இதைக்கூடவா நம்மால் சகித்துக்கொள்ள முடியாது?. எதற்கெடுத்தாலும் உடனடித்தீர்வு வேண்டும் என்றால் இதெல்லாம் எப்படி செய்வது. இதோ வெங்காயம் விலை அதிகரித்துவிட்டது. உடனே அதற்கு தீர்வு என்னவென்று கேட்டால் அரசாங்கம் ஆத்திரப்படாமல் என்ன செய்யும்? வியாழன் கிரகத்தில் வெங்காயம் இருப்பதாக ஒரு செய்தி உண்டு. எனவே இன்னும் கொஞ்ச நாட்களில் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் கோடி செலவில வியாழன் கிரகத்திற்கு ஒரு விண்கலம் அனுப்புவார்கள். இந்த தொகை போதுமா என தெரியவில்லை காரணம் அன்றாட செலவிற்கே நமக்கு ஒரு லட்சத்தி எழுபத்தி ஆறாயிரம் கோடி தேவைப்படும்போது, அடுத்த கிரகத்தை ஆராய்ச்சி செய்ய எவ்வளவு தேவைப்படுமென தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக அந்த விண்களம் வியாழனில் இருந்து வெற்றியோடு இல்லை இல்லை வெங்காயத்தோடு திரும்பி வரும். அதுவரை கூடவா நாம் பொருத்திருக்க கூடாது? இந்த பிரச்சனைக்கு மக்களின் குறுகிய மனம் மட்டும்தான் காரணம். அதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ஐயா சொன்னபடி பெரியாரிடம் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள். | |||
http://koodu.thamizhstudio.com/thodargal_5_30.php |
Monday, January 10, 2011
கதை சொல்லி - ஷோபா சக்தி (Shoba Sakthi)
| கதை சொல்லி - ஷோபா சக்தி (Shoba Sakthi) | |||
| |||
லிவி | |||
ஒரு புலம் பெயர்ந்தவனின் வாழ்வு இலக்கற்றுத் தொடங்கும். இருத்தலின் மீதான கேள்விகள் அடுக்கப்பட தன் தேடுதலின் திசை நோக்கி செல்லத் தொடங்குவான். வாழ்வின் மீதான தீராத தாகம் அவனை நகர்த்திக் கொண்டே இருக்கும். அவனிடம் நமக்குச் சொல்ல எண்ணற்ற கதைகள் இருக்கும். நாம் பார்த்திராத வாழ்வை, கண்டிராத மனிதர்களை, அறிந்திராத மன நிலையை, துயரத்தை, நேசத்தை, போலிக் கலாச்சாரத்தை அவன் சொல்லிக் கொண்டே செல்வான். தன் பால்ய காலத்து நினைவுகள், அன்பான உறவுகளை பிரிதலின் வலி, வேற்று தேசத்தில் ஒரு வேற்று கிரக வாசியைப் போல் அவனிடம் கேட்கப்படும் மட்டமான கேள்விகள், தன் அக திணைக்குள் சற்றும் அடங்காத புறவெளி, அவன் கோராத இரக்கத்தை பிறர் அன்பின் பெயரால் காட்டுதல் இத்யாதிகளென அவன் மனம் சஞ்சலங்களால் நிரம்பி இருக்கும். ஒரு கலைஞனின் மன நிலை அவற்றைத் தீவிரமாக எதிர்கொள்ளும். அவன் வாழ்வை முழுமையாக வாழத் தொடங்குவான். அவனிடம் இருந்தே மிகச் சிறந்த இலக்கியம் அவன் மொழிக்குச் சாத்தியமாகும். அப்படியொரு தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர் ஷோபா சக்தி. தமிழ்ச் சூழலில் தன் அரசியல் நிலைப்பாடுகளால் மிகவும் வெறுக்கப்படும் மனிதராகவே இருக்கிறார் ஷோபாசக்தி. ஷோபா சக்தியின அரசியல் தவிர்த்து அவரின் படைப்பின் வெளி வேறு எந்த தமிழின் சம கால எழுத்தாளராலும் இணை செய்ய இயலாதது. புலம் பெயர்ந்தவனின் இலக்கியம் தமிழில் எழுதப்படும் வேற்று மொழி இலக்கியம் போல் அல்லாமல் அங்கு சஞ்சரிக்கும் தமிழ் மனமாகவே வெளிப்படுகிறது. அ. முத்துலிங்கம் அங்கதம் என்றால் ஷோபாசக்தி ரௌத்திரம். இந்தியத் தமிழ் மனம் ஷோபா சக்தி கதைகளில் வரும் வழக்காடல்களை விளங்கிக் கொள்ள இயலாமல் போகும் வாய்ப்புண்டு. " எம்.ஜி. ஆர் கொலை வழக்கு" சிறுகதையின் இறுதியல் வரும் வரிகளில் " எம். ஜி. ஆரும் புண்டையும்" என்னும் வரி தமிழகத்தில் பாவனையில் இல்லாதவை (திட்டும் நேரங்களைத் தவிர்த்து). ஆனால் ஈழத்தில் மிக சரளமாக ஒரு வார்த்தையோடு சேர்த்தப்படும் வார்த்தை அது. தமிழில் இன்று எழுதப்படும் பெரும்பான்மையான புனைகதைகள் இல்லாத ஒரு உலகத்தை இல்லாத சொல்லாடல்களால் கட்டமைத்து மாய யதார்த்தவாதத் தொணியோடு சொல்வதாக மட்டுமே இருக்கிறது. உதாரணமாக 'அந்த நகரத்தில் எல்லோருமே தலை இல்லாமல் இருந்தார்கள்', 'அவன் வாயை திறக்க தவளை வெளியேறியது' ,'தமிழ் பெயர் கொண்ட மாந்தர்கள் உலாவும் சிறிதும் சம்பந்தம் இல்லாத இட வெளி', அல்லது 'காலத்திற்கும் பின்னே போய் வேட்டையாடப் புறப்பட்ட வெள்ளைக்காரனும் காட்டில் வசிக்கும் ஆதிவாசிகளுமாகவே' இருக்கிறது. ஆனால் ஷோபா சக்தியின் புனைவு இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வாழ்வின் சம்பவங்களினூடே புனைவு கதைக்குள் வலுச் சேர்ப்பவை. அவரின் "குண்டு டயானா"சிறுகதை புனைவென்றாலும் அக்கதையை வாசகனால் எளிதில் மறந்து கடந்துவிட இயலாது. ஷோபா சக்தியின் 'தமிழ்' சிறுகதை பண்பாடென்றும் கலாச்சாரமென்றும் மேடைப் பேச்சாளர்கள் சொல்லிக் கொண்டு இருக்கும் போலி வியாக்கியானங்களை உடைத்தெறியும். ஈழத்தில் ஒரு விபச்சாரிக்கு கொடுக்கப் படும் தண்டனையில் தொடங்கி பல்வேறு நாடுகளில் இருக்கும் விபச்சாரிகளுடனான அனுபவங்களென்று சுயசரித தன்மையோடு நீண்டு தமிழ் எழுத்துக்களை விபச்சாரி வீட்டில் கண்டு பதற்றமாக அழிப்பதுடன் கதை முடியும். பேருந்தில் மூச்சைப் பிடித்துக் கொண்டு நின்ற நெரிசல்களுக்கு நடுவில் சிம்மாசனமாக ஒரு இருக்கை கிடைக்க வாழ்வின் இனிமையையும் பரம்பொருளின் கருணையையும் வியந்து கொண்டு ஷோபா சக்தியின் கதை சொல்லிக்காக சென்று கொண்டிருந்தேன்.ஷோபா சக்தியின் சில அரசியல் கருத்துக்களோடு ஒவ்வாமை இருப்பினும் அவரின் தனித்துவமான படைப்புலகம் அவரை நோக்கி ஈர்க்கச் செய்தது. இன்று தன் தலையைச் சுற்றி ஒளி வட்டமும் முகத்தில் தேஜஸையும் உரையாடுகையில் மேதமையை காட்சிப் படுத்தும் எழுத்தாளர்கள் மத்தியில் மிக இயல்பான மனிதராக தெரிந்தார் ஷோபா சக்தி. ஷோபா சக்தி மிக நன்கு அறிமுகமானவரைப் போல் பழகினார். அறிமுகங்களோடு தரையில் அமர்ந்து சாவகாசமாக கதைக்கத் தொடங்கினோம். யுத்தம், ஈழ அரசியல், இலக்கியமென கதைத்துக் கொண்டே இருந்தோம். தலித் அரசியலிலும் மிக அதிக ஈடுபாடுடையவர் ஷோபாசக்தி. ஈழ அரசியலையும் யுத்தத்தையும் தன் ஞாபகங்கள் தொடங்கி எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டுவந்தார். "ம்" சொல்லிக் more: http://koodu.thamizhstudio.com/kadhaisolli_13.php | |||
Sunday, January 9, 2011
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (14)
மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம். (14)
| வெங்கட் சுவாமிநாதன் |
இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பித்ததே 1961- ல் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழ் சமூகம் என்றைக்காவது ஒரு கலை உணர்வு கொண்ட சமூகமாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் என்ற எழுதியிருந்ததையும் அந்த மிகக் கசப்பான ஆரூடம் போன்ற தமிழ் சமூகத்தின் குணச்சித்திரம் அன்று என் மனத்தில் பட்டது இன்று வரை மெய்யாகிக் கொண்டிருக்கும் அவலத்தைச் சுட்டிக் காட்டிச் சொல்லியே ஆரம்பித்தேன். அறுபது வருடங்கள் கடந்து விட்டன. அது பற்றி இன்று மறுபடியும் யோசிக்கும்போதுகூட அந்த ஆரூடம், இனியாவது என்றாவது பொய்த்துப் போகக்கூடும் என்று சொல்லுவதற்கான சூசகங்கள் ஏதும் அடி வானம் பூமியைத் தொடும் எல்லையில் கூட, ஒரு சிறு கரும்புள்ளியாகக் கூடத் தென்படுவாதாயில்லை.
இக்கட்டுரைத் தொடருக்கு வரும் எதிர்வினைகள் இரு பெரும் வகைகளில் அடங்கும். ஒன்று, நான் நம் தமிழ் சினிமாவைப் பற்றி ஒரு வெறுப்புணர்வுடன், அசிங்கமாக எழுதுவதாக சொல்லும் தரப்பு. இத்தரப்பு, என் மீது அடங்காத கோபத்தில், நான் சொலவது எதையும் கருத்தில் கொள்ளாமல், தமிழ் சினிமாவின் கனவுலக மயக்கத்தில், நமது ஸ்டார்களின் - (சூப்பர், சுப்ரீம், மெகா என்றெனப்படும், இன்னும் என்னென்ன ரகங்கள் உண்டோ எல்லா ரகங்களையும் ‘சார்’ வகையறாக்களையும் சேர்த்துத்தான்) - மாயா ஜால பிரகாசத்தில் கண் கூசி நிற்கும் ரகத்தைச் சேர்ந்தது.
இரண்டாவது தரப்பு, நான் இதையெல்லாம் ஏதோ இப்போது தான் எழுதத்தொடங்கி யிருப்பதாகவும், இதை முன்னரே சொல்லியிருந்தால் தமிழ் சினிமா இதற்குள் உருப்பட்டிருக்கும் என்ற என்ணத்தில் எழுதுகிறவர்கள். தமிழ் சமூகத்தைப் பற்றிக் கொண்டுள்ள, இதை விட, உண்மைக்கு முற்றிலும் புறம்பான, கற்பனையான, தமிழ் சமூகத்தை ஒரு நூற்றாண்டுக் காலம் விடாது பீடித்திருக்கும் நோயைப் பற்றிய தவறான கணிப்பும் சிகித்சையும் வேறு என்ன இருக்கக்கூடும் என்பது எனக்குத் தெரியவில்லை. இவர்களுக்கு நான் சொல்வது பிடித்திருக்கிறது, ஆதலால் இந்த அவல நிலை மாற வேண்டும் என்ற ஆவலில், அவர்கள் இத்தகைய ஒரு அசாதரண நம்பிக்கை கொள்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன். நூற்றண்டு காலமாக பீடித்திருக்கும் நோய், காலம் செல்லச் செல்ல முற்றிக்கொண்டுதான் வருகிறது அந்த நோய், அது பற்றி, அது நோய் என்ற உணர்வு கூட இல்லாது, மாறாக அதைக் கண்டு பெருமையும் கர்வமும் கொள்ளும் சமூகம், தாம் ஏதோ உலகத் தரத்துக்கு உயர்ந்து விட்டதாக எண்ணும் பிரமையில் இருக்கும் சமூகம், இப்படி ஒரு சில கட்டுரைகளால், சினிமாத் துறைக்கு வெளியே இருக்கும் ஒரு சிலர் வெளிப்படுத்தும் கருத்துக்களால் மாறி விடும் என்று எப்படி கனவு காணமுடிகிறது?
ஏதோ ஒன்று முதலில் நிகழ வேண்டும். “இதென்னய்யா இது? ஒரே பைத்தியக்காரக் கூட்டமா இருக்கு? நம்மை என்ன மடையன்னு நெனச்சிட்டிருக்காங்களா இவனுக. இவனுங்களுக்குத் தான் மூளெ பெரண்டு கிடக்குன்னா, நம்ம எல்லாருக்குமில்ல ஒட்டு மொத்தமா மூளை பெரண்டு கிடக்குமன்னு நெனச்சிக்கிட்டானுவ, கபோதிப் பயலுவ ” என்று மக்கள். இந்த தமிழ் சினிமா என்னும் விவஸ்தை கெட்ட ஆட்டத்தை அறவே ஒதுக்கியிருக்க வேண்டும். அது தான் நியாயமாக, மக்களின் பொதுப்புத்தி செய்திருக்க வேண்டும்.
அல்லது, இந்த சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருக்கும், (இருக்கும் என்று தான் நினைக்கிறேன். எல்லா ஜீவன்களுக்கும் கடவுள் அருளால் பொதுப்புத்தியும் இருக்கத் தான் செய்கிறது) தம் வீட்டுப் பரணில் தூக்கி எறியப் பட்டிருக்கும் தங்கள் பொதுப்புத்தியைத் திரும்ப எடுத்து வந்து, பின் தான் ஸ்டுடியோக்குள் நுழைய வேண்டும். அது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை.
1960-61 வருடங்களில் எழுதிய “பாலையும் வாழையும்” கட்டுரையிலா, இல்லை பான்ஸாய் மனிதன் கட்டுரையிலா எதில் என்று சரியாக எனக்கு இப்போது நினைவில் இல்லை.
திரைப் படம் என்பது முழுக்க முழுக்க இயக்குனரின் படைப்புத் தான். அதில் மற்ற எல்லாமே அவர் விரல்கள் இயக்கும் கயிற்றசைவுக்கு ஏற்ப ஆடும் பாவைகள் தான் என்று எழுதி யிருந்தேன். அந்தக் கருத்து என்னோடு நின்றது. அந்த வருடக் கட்டுரையோடு நின்றது. சரியாகச் சொல்லப் போனால், “அடக்கம் செய்யப்பட்டு விட்டது.. அது என்னைவிட்டு, எழுதப்பட்ட அச்சிடப்பட்ட பக்கத்தைவிட்டு இன்னொருவருக்கு நகர்ந்ததற்கான சுவடு கூட ஏதும் இல்லை. இதை நான் ஏதோ எழுதி விட்டதால் சினிமா உலகம் திருந்தி விடும் என்று சொல்பவர் களுக்குச் சொல்கிறேன்.
இது சினிமாத் துறையிலிருந்து எழ வேண்டும். பராசக்தி வசனத்தைப் படித்ததும், பீம் சிங் கருணாநிதியிடம், ”;இதென்னங்க உங்க கச்சிக் கூட்டத்திலே பேசற மாதிரி இருக்கு. கோர்ட்டிலே எல்லாம் இப்படி பேசமாட்டாங்கன்னு தெரியாதுங்களா உங்களுக்கு?. இதெல்லாம் பெரியார் திடல்லே கச்சிக்காரங்க கூட்டத்திலேதான் எடுக்கும். மொதல்லே ஒண்ணு ரெண்டு கோர்ட்டுக்குப் போய் அங்கே என்ன எப்படி நடக்குதுன்னு பாத்துட்டு, இதையெல்லாம் திருத்தி எழுதிட்டு வாங்க. உங்க இஷடத்துக்கு எதையும் எழுதிட்டு வந்தா ஆச்சா,. இது சினிமாங்க, உங்க கச்சி பொதுக்கூட்டம் இல்லே” என்று அடுத்த நிமிடம் திருப்பிக் கொடுத்திருப்பார், அவருடைய பொதுப் புத்தி யை பயன்படுத்தி இருந்தால். அது நடக்கவில்லை. மாறாக, அது தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை, புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த மைல்கல்லாகிவிட்டது. இன்று வரை அது தொடர்கிறது.
அசோக் குமார் என்று ஒரு ஹிந்தி நடிகர். அச்சுத் கன்யா காலத்திலிருந்து அவர் ஒரு ஹீரோ. அதாவது நாற்பது களிலிருந்து. ஐம்பதுகளில், திலீப் குமார், தேவ் ஆனந்த், ராஜ் கபூர் ஆகியோரின் சிகரத்தில் இல்லையென்றாலும் அடுத்த படியில் அவரும் ஒருவர். அவரை தமிழ்ப் படம் அழைத்தது. வாசனோ, மெய்யப்ப செட்டியாரோ, யாரென்று நினைவில் இல்லை. முதல் நாளே ஷூட்டிங் போது, அவர் சொன்னாராம். “பக்கத்திலே தானே இருக்கீங்க பின்னே என்னத்துக்கு இந்தக் கூச்சல் போடறீங்க? ரெண்டு பேரும். மெதுவா எப்போதும் பேசறாப்போல பேசுங்களேன். ஏன் இப்படி உரக்கக் கத்திக் கத்திப் பேசறீங்க?” என்றாராம். பராசக்தி, நடிகர் திலகம் “ஓடினாள், ஓடினாள்… சமாசாரங்க ” எல்லாம் நமக்கு பொரச்சி ஆயிடுச்சே. உணர்ச்சி பொங்க நடிக்கறதுண்ணு அர்த்தமாமே அதுக்கு, நாமும் ஏதாச்சும் ஒரு திலகம் ஆகணுமில்லே, உப்புச்சப்பில்லாமே பேசினா எப்படி? அசோக் குமாருக்கு இருந்தது வெறும் பொதுப் புத்தி. நம்ம சினிமா வரலாறு என்ன, கலாச்சாரம் என்ன, பண்பாடு என்ன, அது எதினாச்சும் அவருக்கும் தெரியுமா என்ன? விஷயம் தெரியாம பேசிப்புட்டாரு. எனவே அவர் கேட்டதை நாம் கண்டுக்கவே இல்லை. பீம் சிங் வாய்மூடி இருந்த அந்த கணம் மு.கருணாநிதியின் வசனம் சினிமாவானது. அவரும் கலைஞர் ஆனார். விழுப்புரம் கணேசன் போட்ட கூச்சல் அவரை நடிகர் திலகம் ஆக்கியது..
அதற்கு முன்னால், தியாகராஜ பாகவதர் தான் சினிமாவாக இருந்தார்.. அவர் பாட்டுக்காக அவரையும் பாட்டையும் மையமாகக் கொண்டு சினிமா உருவானது. கேட்க சுகமாக இருக்கலாம். (அன்று 40-50 களில். ஆனால், இன்று “உயிரணுக்கள் உடம்பில் எத்தனை” என்று கிதாரை வைத்துக்கொண்டு தென் அமெரிக்க பாலைவனத்தில் பாட வேண்டும் “கா. கா. கா…பாட்டு, ஆரம்பித்து வைத்த புரட்சி) அன்று எந்த இயக்குனரும் பாகவதரிடம், “சரிங்க நல்லா பாடறீங்க. அதெல்லாம் சரிதான். கேக்க சுகமாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாம் சினிமா இல்லிங்க. இதுக்கு இசை நாடகம்னு சொல்லுவாங்க. பாட்டிலேயே. கதை சொல்ற நாடகம்.” என்று யாரும் நினைக்கவில்லை. சொல்லவில்லை. அப்போது பாட்டாவது கேட்க சுகமாயிருந்தது. போகுது போ,” என்று விடத் தோன்றியது. அது இப்போது, ”நாக்க மூக்க” வில் வந்து நிற்கிறது. ‘பொரச்சி தான். உலகத் தரம் தான். இந்த டெக்னிக்கில பாருங்க, நம்ம தமிழ் சினிமா கிட்ட யாரும் வந்துக்கிட முடியாது பாத்துக்கங்க.” தான்.
இப்படியே யாரும் ஏதும் கேள்வி கேட்காமலேயே, அழுக்குப் போகக் குளிப்பது போல, பொதுப் புத்திபோக நன்றாகத் தேய்த்து குளித்துவிட்டு தமிழ் சினிமாவில் புரட்சி செய்துகொண்டி ருக்கிறோம். எப்போதும், ஒன்று அது தியாகராஜ பாகவதரோ, இல்லை நடிகர் திலகமோ, இல்லை, மக்கள் திலகமோ, இப்படித்தான்,, வரிசையாக, ஒவ்வொருவரும் தம்மை மையமாக வைத்துக்கொண்டே, தம்மையே சினிமாவாக்கிக்கொண்டு வந்துள்ளனர். இப்போது அது உலக நாயகனையும், சூப்பர் ஸ்டாரையும் சினிமாவாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எப்போதும் ஒரு ஸ்டாரை வைத்து அவருக்கேற்றவாறு கதை எழுதுவது, அந்த ஸ்டார் தன்னையே சினிமா முழுதும் வியாபித்துக்கொள்வது, அதுவும் அவர் விருப்பத்துக்கேற்ப, அல்லது அந்த ஸ்டார், தன் ரசிகர்கள் எப்படித் தன்னைப் பார்க்க விரும்பிறார்கள் என்று நினைக்கிறாரோ அதற்கேற்ப, படம் முழுதும் தன்னை வியாபித்துக் கொள்வார் என்றால், இது கடை வைக்கிற காரியம். வெறும்.. வெறும் வியாபாரம். அந்த ஸ்டார் நடிகரும் இல்லை. கதை தமிழ் வாழ்க்கையும் இல்லை. அந்த படம், சினிமாவும் இல்லை. வெங்காய வியாபாரம். ஒவ்வொரு ஸ்டாரும் ஒரு ப்ராண்ட்.
இயக்குனர் என்பவர் கடைக்கு வந்து யார் என்ன கேட்கிறார்களோ, புளியோ, பருப்போ, பொட்டலத்தில் மடித்துக் கொடுத்து, கல்லாவில் காசைப் போடுகிறவராயிருக்கிறார் இங்கு. தயார் செய்தது யாரோ, யார் விருப்பத்திற்கோ. ஒரு இயக்குனர், ‘கமல் சார், ரஜினி சார் என்று ஒரு நடிகனைப் பார்த்துச் சொல்கிறாரோ, அந்த இடத்தில் சினிமா இராது. நடப்பது வெங்காய பஜ்ஜி வியாபாரம். ரஜினி சார் என்றால் வாழைக்காய் பஜ்ஜி, சத்ய ராஜ் என்றால் (பாவம் இவருக்கு ஏன் சார் இல்லை?) கத்தரிக்காய் பஜ்ஜி. கமல் சார் என்றால் வெங்காய பஜ்ஜி. வெங்காயத்தைச் சுற்றி, அதை மையமாகக் கொண்டுதான் மற்றதெல்லாம். ரோல், கதை, துணைநடிகர்கள், நடிகைகள், ஹீரோயின்கள் பாட்டு, டான்ஸ் இத்யாதி எல்லாம், வெங்காயத்தை மையமாகக் கொண்டு தான், மற்ற, கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய் எல்லாம். மற்றதெல்லாம் இல்லாமல் வெங்காயம் மாத்திரம் பஜ்ஜி ஆகாது. அதற்காக, வெங்காய பஜ்ஜி என்ற ப்ராண்ட் மாறாது.
இதில் கூட பஜ்ஜிகள் பெயர் மாறுவது போல, உலக நாயகன் பஜ்ஜி வேறு. சூப்பர் ஸ்டார் பஜ்ஜி வேறு. இரண்டு பேருமே, சந்தைக்கு வரும் சரக்குகள் தாம். இவர்கள் மாத்திரமல்ல, எல்லாருமே, எல்லாமுமே. சுப்ரீம் ஸ்டார் ஆகட்டும்- (சுப்ரீம் ஸ்டார் என விருது கொடுக்கப்பட்டது நேத்துக்கு முந்தின நாள். இன்று திமுகவை விட்டுப் பிரிந்து வேறு ஒரு முன்னேற்றக் கழகம் தொடங்கிய பின், சுப்ரீம் ஸ்டார் என கலைஞர் அழைப்பாரா என்பது சந்தேகம் தான்) - அது இயக்குனர் சிகரமாகட்டும், இசைஞானி யாகட்டும், மதராஸ் மொஸார்ட்டே ஆகட்டும், எல்லாம் இந்த பஜ்ஜிகளுக்கு இரண்டாம் பட்ச சாமக்ரியைகள் தான். ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசங்கள் உண்டு. இரண்டும் கறிகாய் வகை தான். ஆனாலும், வெங்காயம் வெங்காயம் தான். உருளைக் கிழங்கு உருளைக்
more:http://thamizhstudio.com/serial_4_14.php