எழுத்தாளர் சுந்தர ராமசாமி பங்கேற்றமுற்றம் இலக்கிய சந்திப்பு
| |||||
ஒலி வடிவில் கேட்க:http://koodu.thamizhstudio.com/mutram_1.php திருவண்ணாமலையில் மிக சிறப்பாக நடைபெற்ற முற்றம் இலக்கிய சந்திப்பில் இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளுமைகள் பங்கேற்று, உரையாற்றி இருக்கிறார்கள். அவர்களில் சிலர் தற்போது நம்மிடையே இல்லை. இந்த நிகழ்வு நடைபெற்ற காலங்களில் அதில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு நமக்கில்லாமல் போனதே என்று பலரும் வருத்தப்படும் அளவிற்கு இந்த நிகழ்வு நடந்துள்ளது. இருந்தாலும் அந்த ஆளுமைகளின் குரலை முற்றம் நிகழ்ச்சியை நடத்தி வந்த எழுத்தாளர் பவா செல்லதுரை பதிவு செய்து வைத்துள்ளார். ஆடியோ டேப்பில் பதிவு செய்யப்பட்டிருந்த அவற்றை டிஜிட்டல் முறைக்கு மாற்றி இணையத்தில் பதிவேற்றம் செய்யும் அறிய வாய்ப்பை எனக்களித்திருந்தார். இது மிக முக்கியமான வரலாற்றுப் பணி. தமிழின் மிக முக்கிய ஆவணம், இந்த முற்றம் இலக்கிய நிகழ்வு. இந்தப் பணியை சிறப்பாக செய்வதற்கு தேவைப்பட்ட பொருளாதார உதவியை நண்பர் தவநெறி செல்வன் செய்துக் கொடுத்தார். முதல் பதிவாக, முற்றம் நிகழ்வில் பங்கேற்ற எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் பேச்சு (ஒலி வடிவில்) இங்கே பதிவேற்றப்பட்டுள்ளது. இனி தொடர்ந்து பல ஆளுமைகளின் பேச்சு இங்கே பதிவேற்றப்படும். இந்த அரிய பணியை என்னை நம்பி ஒப்படைத்த பவா செல்லதுரைக்கும், சிறப்பாக கொண்டு வர உதவி செய்த நண்பர் தவநெறி செல்வன் அவர்களுக்கும் இந்த நேரத்தில் தமிழ் ஸ்டுடியோவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். | |||||
ஒலி வடிவில் கேட்க:http://koodu.thamizhstudio.com/mutram_1.php |
Thursday, September 29, 2011
எழுத்தாளர் சுந்தர ராமசாமி பங்கேற்றமுற்றம் இலக்கிய சந்திப்பு
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது, உங்களின் இமாலய பணிகளில் ஒரு அணிலாக என்னையும் இணைத்துக்கொண்டதற்கு எனது தாழ்மையான நன்றிகள்.
Post a Comment