அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஷங்கர்
தலைமுறைகளின் வாழ்வைக் கலாபூர்வமாகப் பதிவு செய்திருக்கும் கவிதை அவள் சிறுமியாயிருந்த போது
இந்த கவிதை, அனுபவமா. நிச்சயமாக, இல்லை. உணர்வா. அதுவும் இல்லை. பிறகு? கண்டதும் கேட்டதுமான அவதானிப்பு? இருக்கலாம். அப்படியானால், அதுவும் அனுபவம்தான், உணர்வு தான் - ஒரு வகையில். எப்படியோ கவிஞன் கவிப்பொருளை வசப்படுத்திவிடுகிறான். இப்படிதான் சொல்லமுடிகிறது. நம்மால். நாமே கூட அநேக குடும்பங்களைப் பார்த்திருப்போம் ஒரு தலைமுறை. சாதாரணமாக இருக்கும், அடுத்த தலைமுறை கொஞ்சம் விருத்தியாகி வந்திருக்கும் அதற்கடுத்த தலைமுறை செல்வச் செழிப்பாக வளர்ந்து நிற்கும். கீழ் நடுத்தரவர்க்கம், நடுத்தரவர்க்கம், உயர் நடுத்தர வர்க்கம் என்று வசதியை வைத்துத்தானே வகுத்திருக்கிறார்கள். ஷங்கர், இந்த விஷயத்தைத்தான் சரியாக ஆவணப்படுத்தியிருக்கிறார் ஐம்பது - அறுபதாண்டுக் காலத்தில் ஒவ்வொரு தலைமுறையினரும் தழைத்து வளர்ந்துவருவதை கலாபூர்வமாகப் பதிவுசெய்கிறார், இதனாலேயே அருமையான கவிதையாகிவிடுகிறது. உள்ளபடியே. கவிதையாக்குவதற்குக் கடினமான பாடுபொருள்தான் கருத்தாக்கக் கவிதையாகச் சரிந்துவிடும் அபாயம் நேர்ந்துவிடும் கவிதையாகத் திரளாமல் போகும் ஆபத்து வந்துவிடும் அதுபோல எல்லாம் ஆகாமல் காப்பாற்றிக் கொண்டு வந்திருப்பது திறமான கவித்துவம்தான். இவ்வளவும் கவிதையின் பொருள் குறித்து… இனி, சொல்முறைபற்றி இந்தக் கவிதையின் பெரிய பலமே இதன் சொல்முறை தான். மூன்று தலைமுறையினரின்வாழ்வே கதைச் சுருக்கம் போல - அவர்களின் வளர்ச்சி, மாற்றம், உயர்வு அனைத்தும் ஒரு சேர - செய்தி சொல்லில்பாங்கில் முன் வைக்கப்படுகிறது. காலமாற்றத்துக்குத் தக, அவர்களின் மனப்பாங்கு வடிவு கொள்வது கட்டாக விவரிக்கப்படுகிறது, வெள்ளியோனி என்ற உருவகம் (குறியீடு/புனைவு), நடுத்தர வர்க்கத்தைச் சுட்டுவதாகவும், தங்கயோனி என்ற உருவகம் உயர் நடுத்தரவர்க்கத்தைக் குறிப்பதாகவும் வருகிறது. கவிதையின் ஆரம்ப வரியே அதே சமயம், புனைவும் விரவ. அவள் சிறுமியாயிருந்த போது / பெற்றோர் அவளுக்கு ஒரு வெள்ளியோனியை / பரிசளித்தனர்.
வீட்டின் பின்புறம் நாட்டைக் கிணறும் வீட்டினுள் குளிர்மர இருக்கைகளும் இருந்தன. தகவல் போலத்தாம் தெரியும், எனில் அப்படியல்ல. அவர்கள் வசதியைக் காட்டுவது மேலும், அவள் வாழ்க்கையில் ராட்டைக் கிணறு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. நினைவாக, கனவாக, பழம் பொருள் அலங்காரமாக. வெள்ளியோனியுடன் அவள் வளர்ந்து
இந்த இரண்டு வாசகங்களுமே செய்தி சொல்வது போலத்தாம் சொல்லப்படுகின்றன. இதிலும் கவிதை சொல்லலாம் போல இதுவே தமிழுக்குப் புதிதுதான் நவீன கவிதையின் சாதனைதான். சிறுமியின் ஊரிலிருந்த நாட்டைக் கிணற்றின் / சப்தம் நகர வீட்டிற்குள்ளும் அவளுக்கு முதலில் ஒலித்துக் கொண்டு இருந்தது.
இந்த கவிதைக்கு தான் சரிபோல தெரிந்தேதான், கவிஞன் இப்படிக் கவிதை கூறல்த் தேர்ந்தெடுத்திருப்பான்போல. இதில் அநேகம் சாதகங்கள் முதலில், நிறைய விஷயங்களை நாசூக்காகச் சொல்ல முடிகிறது, பிறகு பட்டுக்கொள்ளாமல் – விட்டேற்றியாக இருக்க முடிகிறது. அதே வேளை வெறும் சொல்லும் அல்ல இது, நூதனமான பின்னல் வேலை உள்ளதும் தான். தலைமைச் செயலக அதிகாரியும் / வெள்ளியோனி அம்மாவும் / தங்கள் சிறுமிக்குப் பரிசளித்தனர் / தங்கயோனியை.
தேர்ந்த மொழிதல் பெண்மணியின் இருப்புநிலையை, மனநிலையைச் சொல்லி யுவதியின் வாழ்நிலையை, மனப்போக்கை சித்தரித்து – இரண்டையும் மாறி மாறி / அடுத்தடுத்து பூர்த்தியடையும் கவிதை காட்டும் உலகம் நுட்பமானது. பெரிய விஷயம் நுணுக்கமான உத்தியினால், எளிமையாகச் சொல்வது போலப் படுகிறது. ஆகச் சிறந்த கவிதை ஆகச் சிறந்த கவிஞன்தான் ஷங்கர்.
இந்த மூன்று கவிதைகளையுமே, ஷங்கர் இருபத்தெட்டு வயதுக்குள்ளாகவே எழுதிவிட்டார் அவரை சீரிய கவிஞன் என்று அங்கீகரிக்கவும், அவர் °தானத்தை உறுதிப் படுத்தவும் இதுவே போதுமானது. பிறகும், இவை தமிழ் வாழ்வை மையமாகக் கொண்டவை என்பது கூடுதல் சிறப்பு. நல்ல கவிஞனுக்குத்தான் பொறுப்புகளும் அதிகம்.
http://koodu.thamizhstudio.com/thodargal_18_1.php
| ||
|
Tuesday, August 9, 2011
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் - ஷங்கர் -- விக்ரமாதித்தன் நம்பி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment