உங்கள் குறும்படங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்க, தயாரிப்பு செலவு, உபகரணங்கள் (கேமரா, லைட்டிங், படத்தொகுப்பு, இசைக் கோர்ப்பு போன்ற தொழில்நுட்ப உதவிகள் குறித்து தேவையை தெரிவிக்க, மேலும் சந்தைப்படுத்துதல் போன்ற குறும்படங்கள் சார்ந்த உங்கள் அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழ்க்கண்ட முகவரியில் ஆலோசனை பெறலாம். (முன் அனுமதி பெற்று சந்திக்கவும்) நேரம்: காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை இச்சேவை முற்றிலும் இலவசம் நூலக வசதி: ஏதேனும் சிறுகதையை குறும்படமாக்க விருப்பமிருந்து, கதை தேடலில் இருந்தால் நீங்கள் தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட நூலக வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே அனைத்து வகையான சிறுகதைகளும் அடங்கிய நூல்களுடன் கூடிய ஒரு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 தமிழ் ஸ்டுடியோவின் குறும்பட நூலகத்திற்காக அனைத்து விதமான திரைப்பட தொழில்நுட்பங்கள், சிறுகதைகள், நாவல், வெளிநாட்டு கதைகள், முக்கிய சம்பவங்கள் அடங்கிய அனைத்து விதமான நூல்களும் தேவைப்படுகிறது. இந்த திட்டத்திற்கு நூல்கள் தந்து உதவிடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். நூல்கள் எப்படி நிலையில் இருந்தாலும் அனுப்பலாம். இந்த நூல்கள் அனைத்தும், தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகத்தில் ஆர்வலர்கள் அனைவருக்கும் படிக்க வசதியாக வைக்கபட்டிருக்கும். இதுமட்டுமின்றி, முக்கிய சம்பவங்கள், உதாரணமாக வீரப்பன் இருந்தபோது சத்தியமங்கலத்தின் நிலை, தற்போது அந்த கிராம மக்களின் நிலை சார்ந்த தகவல்கள், கிராமங்களின் நிகழும் வித்தியாசமான சடங்குகள், ஏதனும் உங்களிடம் இருப்பின் அவற்றையும் தந்து உதவலாம். அவை தமிழ் ஸ்டுடியோவின் உதவியுடன், ஆர்வலர்களைக் கொண்டு ஆவணப்படமாக உருமாற்றப்பட்டு உலகம் முழுவதும், மக்களின் பரவலான கவனத்திற்கு வைக்கப்படும். அனைத்து விதமான நூல்களையும், சம்பவங்களையும் அனுப்ப வேண்டிய முகவரி: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 |
Friday, April 9, 2010
குறும்பட ஆலோசனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment