குறும்படங்கள் விற்பனை செய்ய / குறும்படங்கள் வாங்க..
வணக்கம் குறும்பட ஆர்வலர்களே..
தமிழ் ஸ்டுடியோ.காம் எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் குறும்படங்களை நேரடியாக விற்பனை செய்ய இருக்கிறது. எந்த வித இலாப நோக்கமுமில்லாத, இந்த விற்பனைப் பிரிவு தமிழ் ஸ்டுடியோவின் அலுவலகம் அமைந்துள்ள கோடம்பாக்கம் பகுதியில் செயல்படவிருக்கிறது.
எனவே நீங்கள் எடுத்துள்ள குறும்படங்களின் கரு, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள், ஒரு குறும்படத்தின் விலை போன்ற விபரங்களை எழுதி, குறைந்த பட்சம் இருபது எண்ணிக்கையில் குறும்படங்களின் CD அல்லது DVD க்களை தமிழ் ஸ்டுடியோ அலுவலகத்தில் நேரில் கொடுத்துவிட்டு செல்லுங்கள். விற்கப்படும் ஒவ்வொரு CD அல்லது DVD க்கும் சார்ந்த எல்லா விபரங்களும் அந்தக் குறும்படத்தின் இயக்குனர் அல்லது தயாரிப்பாளருக்கு தெரிவிக்கப்படும். ஒவ்வொரு மாதத்தின் இறுதியிலும் (இறுதி சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை) விற்கப்பட்ட அனைத்து CD அல்லது DVD களுக்குமான தொகை அதன் உரிமையாளரிடம் சேர்ப்பிக்கப்படும்.
இதுபற்றிய மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 9840698236, 9894422268.
தொலைபேசியில் முன் அனுமதி பெற்று உங்கள் படங்களை தமிழ் ஸ்டுடியோ.காம் அலுவலகத்தில் சேர்க்கவும்.
அலுவலக முகவரி:
எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024
No comments:
Post a Comment