தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 16 வது குறும்பட வட்டம். (பதிவு எண்: 475/2009)
நாள்: சனிக்கிழமை (09-01-2010)
இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.
நேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)
முதல் பகுதி: (3 PM-4 PM) - விழிப்புணர்வு -
இந்த மாதம் இலக்கியம் பகுதிக்கு பதிலாக, ஐந்தாவது தூண் அமைப்பினரின் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்தான வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெறும்.
அடுத்த மாதம் இலக்கியம் பகுதி நடைபெறும்.. இலக்கிய ஆர்வலர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், திருமிகு பிரியா அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் உள்ளிட்ட பல்வேறுபட்ட தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார். இயக்கம் குறித்தான நுணுக்கங்களையும் வாசகர்களுக்கு பயிற்றுவிப்பார். வாசகர்களும் இயக்கம் மற்றும் இதத் தொழில்நுட்பத் துறை சார்ந்த தங்கள் ஐயங்களை அவரிடம் கேட்டு விடைப் பெற்றுக் கொள்ளலாம்.
பிரியா அவர்கள் "கண்ட நாள் முதல்", "கண்ணாமூச்சி ஏனடா" போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மணிரத்னம் அவர்களிடம் உதவியாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்
இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்
குறும்படத்தின் பெயர் | இயக்குனர் பெயர் | கால அளவு |
வணங்குகிறேன் தாயே | தேவன் | 15 நிமிடங்கள் |
நிழல்களின் நீட்ச்சியாய் | சக்தி பாரதி | 15 நிமிடங்கள் |
வாக்குமூலம் | சுப்பு | 30 நிமிடங்கள் |
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:
இந்தப் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. ராஜேஷ் யாதவ் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.
ராஜேஷ் யாதவ் அவர்கள் "ராமன் தேடிய சீதை", "பொக்கிஷம்" ஆகியத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஆவார்.
மறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
No comments:
Post a Comment