காகிதப் படகு - கருத்துப் பட்டறை 2011 - குழந்தை எழுத்தாளர்களுக்கான பயிற்சி |
Wednesday, July 6, 2011
Tuesday, July 5, 2011
அக்கினி நட்சத்திரம். - கலாப்ரியா
அக்கினி நட்சத்திரம்.
அன்று வழக்கத்திற்கு மாறாக, பெண்கள் கல்லூரி டவுண் பஸ்ஸில், பாளை பஸ் ஸ்டாண்ட் வரை போய்விட்டோம்.பொதுவாக ஜங்ஷனுடன் திரும்பி விடுவோம். இரண்டு காரணங்கள், ஒன்று நாங்கள் எங்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் அது, எதிர்த்திசையில், மேற்கே இருந்தது.இன்னொன்று ஜங்ஷனில் ’செக்கிங் இன்ஸ்பெக்டர் சாமி’ ஏறி விடுவார்.அன்று வழக்கத்திற்கு மாறாக செக்கிங் ஐயர், டவுணிலேயே ஏறி விட்டார். அவரேயும், ”என்ன தோழர் நீங்க வரலையா, சும்ம ஏறிக்குங்க..” என்று வேறு சொல்லிவிட்டார்.அவர் சின்ன வயதுக்கரர்தான். சமீபமாக நன்றாகப் பழக ஆரம்பித்திருந்தார். பெரிய காரணம் ஒன்றுமில்லை, அவர் “டாவடிக்கிற”(கணக்குப் பண்ணுகிற) பெண், எங்கள் தெருவில் இருந்தது.அவளிடம் அது பற்றி விளையாட்டாகப் பேசியபோது, ”நல்ல ஆளைச் சொன்னீங்க, முதல்ல அந்த ஆளைத் தினமும் குளிக்கச் சொல்லுங்கண்ணேன், ஒரே ’விவா’”..என்றாள். கக்கத்திலிருந்து கிளம்பும் விஷ வாயுவின் சுருக்கம் ’விவா’. ‘விவா’, ’ஹார்லிக்ஸ்’ எல்லாம், உடலில் கப்படிக்கிற ஆண்களைப்பற்றி பெண்கள் அகராதியின் கலைச் சொற்கள்.இதற்குப்பிறகு நாங்கள் உஷாராகி விட்டோம். எங்களுக்குள்ளேயே “மாப்பிள்ளை, இன்னக்கி விவா வா ஹார்லிக்ஸா...” என்று கேட்டுக்கொள்ளுவோம்.அப்பொழுது பாடி ஸ்பிரே எல்லாம் கிடையாது. “ மாப்பிள்ளை, ஒரு கட்டி லைஃப்பாய் சோப்பும், அரைக்கட்டி சாண்டல் சோப்பும், எடுத்துட்டு குறுக்குத்துறைக்குப் போய், நல்லாத் தேய்ச்சுக் கரைச்சுக் குளிச்சுட்டு வா....” என்று கிணடலடித்துக் கொள்ளுவோம்.இதையே போய் ஒரு பெண்ணிடமும் சொல்லிவிட, விஷயம் சற்றுப் பெரிதாகி விட்டது. மேற்படி கலைச்சொல்லை என்னிடம் சொன்ன அன்னம்மா, ”போங்கண்ணேன், உங்க கிட்ட சொன்னேன் பாருங்க ”என்று கோபித்துக் கொண்டாள். அன்று பாளை பஸ்ஸ்டாண்ட் வரை சென்று விட்டோம். பஸ்ஸ்டாண்ட், காலை பத்துமணி நேரப் பரபரப்பெல்லாம் அடங்கி அமைதியாய் இருந்தது. பஸ்ஸ்டாண்டின் வெளிப்புறத்துக் கடைக்குப் போனோம்.எதிரே கட்டபொம்மன் சிலை. பக்கத்துப் பள்ளியின் ஒரு பெண் தன் தந்தையுடன் குனிந்த தலை நிமிராமல் சென்றது. அப்போதுதான், அங்கே நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த அவன், சத்தமாகச் சொன்னான்..” ஐயா கூட, கமுக்கமா, இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமாங்கிற மாதிரி போறதைப் பாரேன்...”” ஏல எவனாவது கொடுத்த லெட்டரோட ஹெச். எம் கிட்ட மாட்டிக்கிட்டாளா....”என்றான். அவன் சொன்னது அந்த தந்தைக்கும் கேட்டு அவர் திரும்பினார். “ ஏல என்ன, ஐயா முறைக்காரே ..” என்று சிகரெட் புகையை அவரை நோக்கி ஊதினான்.அவரும் தலை குனிந்தபடி சென்றார். அதுதான் ஆறுமுகமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவனைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.பயங்கரமான கோபக்காரன் கம் பாசக்காரன் என்று.ஒரு முறை பார்த்தும் இருக்கிறேன். மடித்துக்கட்டிய வேட்டி, தொடை தெரிய ரொம்பவும் கட்டையாகவே இருந்தது. வெள்ளைச் சட்டை. ஏறு நெற்றி. கறுகறுவெனச் சுருண்ட முடி. தடித்த ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி.நல்ல சிகப்பு, என்பதை விட மஞ்சள் நிறம் எனலாம்.பனியன் போடாத மார்பு நன்றாய்த் தெரிகிற மாதிரி சட்டைப் பட்டனில் கீழ் இரண்டை மட்டுமே போட்டிருந்தான்.அவனைச் சுற்றி நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட என்னைப் போல ஒல்லியாய் ஒருவர். அவர் இருந்ததுதான் எனக்கு சற்று ஆசுவாசமாய் இருந்தது. நம்ம கூட சேத்தியா ஒரு ஆளு இருக்காரு என்கிற சமாதானம்.ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவிலை.என்னை அழைத்துச் சென்ற ராஜனிடம் ஆறுமுகம் கேட்டான்,” ஏல பொந்துக்கண்ணா இது யாரு, இந்த மூங்கில் கம்புக்குப் பின்னாலேயே ஒளிஞ்சுக்குவாரு போல இருக்கு...” என்று அந்த வெற்றிலை பாக்குக் கடை முன்னால் போட்டிருந்த வேனல்ப் பந்தலின் மூங்கில் காலைக் காண்பித்துச் சொன்னான்.அவன் நான் யார் என்று சொன்னான்.”ஓஹ் அவரு மகனா...எங்க ஐயாவுக்கு அவரு ஃப்ரெண்டுல்லா...”என்றான். ஒல்லியான ஆளிடம், ”சம்முவம் யார் தெரியுதா....”உத்தரவின்றி உள்ளே வா”படத்துக்கு முதல் நாளன்னிக்கி, நமக்குத் தராம இவருக்குத்தான் டிக்கெட்டைக் கொடுத்தான்.. அந்த மேனேஜர் ஞாவகமிருக்கா...” என்றான். ஸ்ரீதர் படத்திற்கு எப்போதுமே ஹைகிளாஸ் டிக்கெட்டிற்கு கூட்டம் இருக்கும்.நாங்கள் மூன்று டிக்கெட் சொல்லி வைத்திருந்தோம். அதை எங்களுக்குத் தரப் போகையில் ஆறுமுகம் வந்து மேனேஜரிடம் டிக்கெட் கேட்டார்..”டிக்கெட்டெல்லாம் ஆகிப்போச்செ என்றார்”அவர்.”இந்தா, பொறவு என்னத்தை கையில வச்சுருக்கேரு...” என்றான். ”இது இந்தத் தம்பி அப்பவே...முதலாளிகிட்ட சொன்னது..” என்றார்.”அவரை அடுத்த ஷோவுக்கு வரச்சொல்லும்வே ”என்று டிக்கெட்டைப் பிடுங்கினான்... நான், ”அண்னாச்சி.. முதலாளிகிட்ட சொல்லவா...” என்றேன். “முதலாளி புடுங்கிருவாரோ... நான் படம் பாக்கணும்....மேலெ போறேன் டிக்கெட்டை குடுத்து அனுப்பும்....” என்று பற்றவைக்க எடுத்த சிகரெட்டைக் கசக்கி அவர் மேல் எறியாத குறையாய் வீசிவிட்டு நகர்ந்தான். மேனேஜர், ”தம்பி நீங்க வேணும்ன்னா பெஞ்சு டிக்கெட்டுக் குப் போறீங்களா...”என்றார். சரி என்றேன். ஆனால் கூட வந்தவர்கள், ”அது எதுக்கு, அவரை பெஞ்சுக்குப் போகச் சொல்லட்டுமே” என்றார்கள்.மேனேஜர் அவர் குணம் உங்களுக்கு தெரியாது... முதலாளிக்கு ரொம்ப வேண்டியவரு...”என்றார். எங்கிருந்தோ முதலாளி இதைக் கவனித்திருக்க வேண்டும். இரண்டு குரூப்பையும் அனுப்ப ஏற்பாடு செய்து விட்டார். முழுப்படமும் அவனுக்கு அருகாமையில் அமர்ந்துதான் பார்த்தோம்.ஆனால் அப்படியொரு ரசாபாசம் நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. கோபமெல்லாம் போன இடமும் தெரியவில்லை. அப்புறம் பாளைக் கல்லூரி நண்பர்களிடம் விசாரித்தோம். அப்போதுதான் ஆறுமுகம் பற்றித் தெரிய வந்தது.அன்று முகத்தையும் சரியாகக் கவனித்திருக்கவில்லை.ஆறுமுகம். ஒரு பெரிய தொழில் அதிபரின் ’சின்னவீட்டு’ப்பையன்.அம்மாவின் செல்லமும், ஒருவகைப் புறக்கணிப்பும், அவனை பெரிய முரடனாக ஆக்கியிருந்தது.அவன் அம்மா அவனைச் சிறுவயதில் ஒரு பெண்பிள்ளை போலவே அலங்காரம் செய்து வளர்ப்பாளாம். நிறைய கடுக்கண், தோடு என்று போட்டதினால் காதில் அவனுக்கு பெரிய துவாரங்கள் இருக்கும்.அதை வைத்தே அவனை நண்பர்கள் வட்டத்தில் கேலி செய்வார்களாம். ஆனால் ‘சவத்துக்கு’ எப்ப கோவம் வருதூன்னே தெரியாது, ஒருதரம் காது துவாரம் பற்றி, ’பாம்படக் காது ’ என்று கிண்டலடிக்கையில், “ஆமா, பாக்கிறியால, இன்னும் ஒம்பது ஓட்டை இருக்கு...” என்று வேஷ்டியை நடுச் சந்தியில் வைத்து அவிழ்க்க முயன்று , அவனை சமாதானப்படுத்த பெரும் கஷ்டப்பட்டதாகச் சொல்வார்கள்.அவன் பிஎஸ்சிதான் முதலில் சேர்ந்தான்.லேபில் ஒரு பிஸிக்கல் பாலன்ஸ் சரியாக எடை காட்டவில்லை என்று லேப் அட்டெண்டரிடம் சொல்லியிருக்கிறான்.பொதுவாக இந்த பௌதிகத்தராசு என்கிற பிஸிக்கல் பாலன்ஸ் அட்டெண்டருக்கும் டெமான்ஸ்ட்ரேட்டருக்கும்தான் சரியாக நிறுக்கும்.நாம் பரிசோதனை செய்யும் போது சரியாகவே வராது. ஆனால் அட்டென்டர்,அவர் பல தலைமுறைகளைக் கண்டவர், “ஏதோ ஆடத்தெரியாத தேவ.... யாளுக்கு தெருக் கோணல்ன்னாளாம் ” என்று சொல்லி விட்டார் போலிருக்கிறது.. அவ்வளவுதான் தராசை அதன் கண்ணாடிப் பெட்டியோடு தூக்கி ஒரே போடு. ” கிழட்டுக் கூ... மவனே இதையே உன் தலையிலயே போட்டு உடைச்சிருப்பேன்...உங்க ஆத்தா செஞ்ச புண்ணியம் தப்பிச்சே..”என்று இறைந்து விட்டு சோதனைச் சாலையை விட்டே வெளியே வந்து விட்டானாம். அப்புறம் ஒரு வாரம் காலேஜ் பக்கமே போகவில்லை. அவனது அப்பா நேரில் வந்து அட்டெண்டரிடம் மன்னிப்புக் கேட்டாராம். பிரின்சிபாலைச் சமாதானம் செய்து பி.ஏ வில் சேர்த்தாராம். அவனது அப்பா பெரிய தொழிலதிபர். அவருக்கு பல நிறுவனங்களில் பங்கு உண்டு. பஸ் கம்பெனி, தியேட்டர், ஸ்பினிங்மில், ரைஸ்மில்., என்று அவரும் அவரது இரண்டு மூன்று சகோதரர்களும் பங்கு பெறாத நிறுவனங்களே கிடையாது. ஆனால் அவ்வளவு அமைதியானவர்.என் அப்பாவுக்கு நல்ல சினேகிதர்.முதலில் டவுண் மார்க்கெட்டையொட்டிய ஒரு தெருவில்த்தான் ஆறுமுகத்தின் அம்மாவும் அவனும் இருந்தார்கள்.அது ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டியாரின் பெரிய வீடு. ஊரில் வங்கிகளே வந்திராத ஒரு காலத்தில் அங்கே பெரிய லேவாதேவி நடக்குமாம். அந்தி கவிகிற இரவில் சில்லரை நாணயங்களைக் கொட்டி எண்ணுகிற சத்தம் மார்க்கெட் வரை கேட்கும் என்பார்கள்.அந்த வீட்டிற்கு நான் என் அப்பாவுடன் போயிருக்கிறேன்.எங்கள் வயலில் வேலை பார்க்கும் சமுசாரியின் மகனுக்கு, புதிதாகத் தொடங்கியுள்ள மில்லில் ஒரு வேலைக்குச் சொல்வதற்காகப் போனார் அப்பா. அந்தத் தெருவின் மறு கோடி வழியாக ஜி. நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’குப்போய் விடலாம். ஆறுமுகத்தின் அம்மாதான் வரவேற்றார்கள்.அவர்களை நான் ஏற்கெனவே எங்கள் உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து அடிக்கடிப் பார்ப்பேன். அது, உறவினரின் ’.சின்ன வீடு’..ஆறுமுகத்தின் அம்மா அப்படி லட்சுமிகரமாக இருப்பார்கள். இதெல்லாம் கூட்டிக் கழித்துப் பின்னர் புரிந்து கொண்ட விஷயம். ஆனால் ஆறுமுகத்தின் ஒல்லி நண்பர் சம்முவத்துக்கு என்னை நன்றாகத் தெரிந்திருக்கிறது. அவர் எஸ்.ஐ செலக்ஷனுக்கு தேர்வாகி இருந்தார்.அதனால்த்தான் என்னைப்போலவே அவர் ஒல்லி என்று நான் சமாதானமாகியது எவ்வளவு அபத்தம் என்று விளங்கியது.சம்முவம் ரொம்ப ஜாலியான பேர்வழி.அவர் கல்லூரிப் பெண்களையோ, ஸ்கூல் பிள்ளைகளையோ அவ்வளவு ரசிப்பதில்லை.”நமக்கு லைசன்ஸ் மாட்டிய அத்தைகள்தான் பிடிக்கும்” என்பார்.அதுக்கு அவர் சொல்லும் காரணம் ஒத்துக் கொள்ளும்படியாக இருக்கும். “பாருங்க பிரதர், இந்த ரசனை நம்ம ரத்தத்திலேயே சாவித்திரி, தேவிகா பத்மினின்னு குண்டு குண்டு அத்தைகளாகவே, ரீபட்டன் கிராக்கிகளாகவே பார்த்துப் பார்த்து ஊறிப்போயிருக்கு...” என்பார்.அவர் சொல்லுகிற அடல்ட்ஸ் ஒன்லி கதைகளுக்காகவே அவர் பிரசித்தம்.எனக்குத் தெரிந்த கதைகளில் அவர் சொன்னது இருபது கதைகளாகவாவது இருக்கும். நான் எப்போதாவது ஆறுமுகத்தைப் பார்ப்பேன். லேசாகச் சிரிப்பதுடன் சரி. நம்ம வாய் சும்ம இருக்காது. ஏற்கெனவே “நாளைக்கு வருகிற சண்டையை இன்னக்கே இழுத்துருவான்ப்பா... ” என்று ரொம்ப நல்ல பேர் எனக்கு.ரொம்ப நாள் கழித்து அவரை ஒரு பிரபலமான தனியார் கார் நிறுவனத்தில் சந்தித்தேன். அங்கே அவர் வேலை பார்த்தார். நான் அங்கே வேலைக்கு முயன்று கொண்டிருந்தேன்.அங்கே ஒரு யூனியன் தலைவர் கொஞ்சம் பழக்கம். அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.அங்கே யூனியனுக்கெல்லாம் வேலையில்லை. எல்லாம் சரியாக நடக்கும். ஆனாலும் பெயருக்கு ஒரு யூனியன் உண்டு.அப்போது ஆறுமுகம் அவர் அருகில்த்தான் இருந்தார்.”ப்ரதர் வாங்க..” என்று பேசிக்கொண்டிருந்தவர், திடீரென கொஞ்சம் இருங்க வந்திருதேன் என்று போய்விட்டார். அவர், அவரைக் காண்பித்து யூனியன் தோழர் கேட்டார், ”தம்பி எப்படி, வேலையெல்லாம் நல்லாப் பாக்காராம் ஆனால் பாதி நாள் வரமாட்டேங்காரு....” என்றார். அவரைப் பற்றிய மற்ற விஷயங்களைச் சொன்னேன். அவர் கொஞ்சம் அன்புக்கு ஏங்குகிற மாதிரியுள்ளவர் என்று. இப்படியான வார்த்தைகளிலெல்லாம் சொல்லவில்லை. ஒரு விதமாகச் சொன்னேன். தோழர், ”சரி உங்க கதைக்கும் அவர் அப்பாவையே சொல்லச் சொல்லுங்களேன்” என்றார்.அவர் அப்பாவிடம் சொல்ல என் அப்பா இல்லை, சமீபத்தில்தான் இறந்து போயிருந்தார்.அவர் இறந்து போன அனுதாபததை வைத்து இன்னொரு இடத்தில் முயற்சி நடந்தது.எத்தனை பேரிடம்தான் போய் அப்பா பெயரைச் சொல்லிக் கேட்பது. அவர் சாகும் போதும் அவருக்கு உகந்த விதமாக நான் நடந்து கொள்ளவில்லை, என்ற உறுத்தல் வேறு இருந்தது. நிரந்தரமாவதற்கு 50-50 வாய்ப்புள்ள ஒரு தற்காலிக வேலையை விட்டு விட்டு நான் மேற்படிப்பு படிக்கப் போகாமலிருந்தால் அவர் இன்னும் கொஞ்ச காலமென்ன, நீண்ட காலமே உயிரோடு இருந்திருப்பார். எப்படியோ ஒரு வேலை கிடைத்து, கல்யாணமும் பண்ணிக் கொண்டு ஊருடனான 29 வருட உறவை விட்டு குற்றாலம் பக்கம் வந்து சேர்ந்தேன். ஒரு சனிக்கிழமை மத்தியானம் லீவு. குற்றாலம் போகலாமே என்று தென்காசியில், பஸ்ஸுக்கு நின்று கொண்டிருந்தேன்.கூட்டம் நிறைய இருந்தது.நல்ல சீசன் வேறு. ஆறுமுகம் எதிரே வந்தார்.கொஞ்சம் அழுக்கான உடைகள், களையில்லாத முகம்.. சட்டைப்பை கிழிந்திருந்தது.அது தெரியாதபடி ஒரு கையால் பொத்திக் கொண்டிருந்தார். ”எங்க போறீங்க ப்ரதர், குற்றாலமா, எனக்கும் டிக்கெட் எடுங்க, யாரோ பணததைப் பாக்கெட் அடிச்சுட்டாங்க,” என்றார். எப்போ என்றேன் இப்பத்தான் என்றார்.போலிஸில் சொல்லுவோமா என்றேன். ”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்... உங்களால டிக்கெட் எடுக்க முடியுமா இல்லையா ,”என்றார்.அதற்கென்ன வாங்க போவோம் என்று பஸ்ஸுக்கு காத்திருந்தோம். நீங்க சிகரெட் பிடிப்பீங்கள்ளா, ரெண்டு சிகரெட் வாங்குங்க என்றார்.காபி சாப்பிடறீங்களா என்றேன். “ம்ஹூம், என்று தலையை ஆட்டியபடியே.. ”கேக்கறதை மட்டும் வாங்கித் தாங்க, குற்றாலம் வந்ததும் நம்ம பங்களா போய், காசு வாங்கி செட்டில் பண்ணிருதேன்...” என்றார்.ஆள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறார் போல, வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வானேன் என்று பேசாமல் இருந்தேன். ஆனாலும் ஆள் சற்று முதிர்ச்சியாய் இருப்பது போலுமிருந்தது. பார்த்து எட்டு ஒன்பது வருடமிருக்கும். அடிபிடியுடன் பஸ்ஸில் ஏறினோம். அவர் ரொம்ப ஜாக்கிரதையாய் என்னை ஒட்டியபடியே நின்றார்.இறங்கியதும் போக முயற்சித்த என்னை கையைப் பிடித்து இழுக்காத குறையாய், வாங்க பங்களாவுக்குப் போவோம் என்று அழைத்துக் கொண்டு போனார். அங்கே போனதும் வாட்ச் மேன் மாதிரியும் மேனேஜர் மாதிரியும் இருந்த ஒருவரிடம், ”எங்க ஐயா இருக்காராவே” என்றார். “முதலாளி நேற்றுப் போனவுக இன்னும் . வரலை ”என்றார். ”அப்படியே போகச் சொல்லீரும்... ”சரி யார் பெர்மிட்டாவது இருக்கா ”என்றார். அவர், ”ஹி ஹி சித்தப்பா வாங்கி வச்சது, சரக்கு இருக்கு” என்றார்.”பொறவு என்ன அதைக் கொண்டாரும், போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரும்....” என்றார். ”ப்ரதர் உக்காருங்க, நீங்க குளிக்கத்தானே போகணும்....”என்றார். நான் என் உறவினர் வீடு குற்றாலத்தில் இருப்பதைச் சொல்லவில்லை. “ஆமா, ஒரு குளியல் போட்ட்டுட்டுப் போகவேண்டியதுதான்” என்றேன் அதற்குள் அவர் எதையெல்லாமோ வாங்கி வந்திருந்தார். இங்கே இருக்கிறதை எடும் என்றார். அவர் தயங்கியபடியே, ”இல்லை சித்தப்பா வருவாங்க என்றார்.” ஒரு கெட்ட வார்த்தையை சத்தமாக உதிர்த்து விட்டு “ வே...அவன் யாரு எங்க அண்ணனா... அதான்வே ஒரிஜினல் வந்தா, சின்ன முதலாளி, மயிருன்னு கையைக் கட்டிக்கிட்டு நிப்பேரு...” எடுக்கேரா என்ன...” என்று மேஜையொன்றில் குத்தினார்.ஒரு அழகான ’ப்ளாக்நைட்’ விஸ்கி வந்தது. மடமடவென்று இரண்டு கிளாஸில் சரித்து என்னிடம் ஒன்றை நீட்டினார்... அவர் மடக்கென்று விழுங்கினார். நமக்கு எப்பவுமே கல்ப்புதான்....என்றார். நீங்க மெதுவா சாப்பிடுங்க என்றார்.எனக்கு இது என்னடா சிந்துபாத் தோளில் ஏறின கிழவன் கதையால்ல இருக்கு என்று தோன்றியது.ஆனால் விஸ்கி அழைத்தது. நான் ஒன்றை முடிப்பதற்குள் அவர் மூன்று தம்ளரை சரித்திருந்தார்.ஒரு துண்டை எடுத்து முக்காடு போலப் போட்டுக் கொண்டு...அங்கிருந்த பெரிய கண்ணாடி முன்னால் நின்றார். பொம்பளை மாதிரி இருக்கேனா...என்று கேட்டு விட்டு கொஞ்சம் பெண்ணைப் போல் பாவனை பண்ணினார். திடீரென, ”இப்படித்தான் எஙக அம்மா என்னைக் கெடுத்தா ப்ரதர்....” பிச்சைக்காரனாக்கூடப் பொறக்கலாம் வைப்பாட்டி மகனாப் பொறக்ககூடாது ..” என்று என் தோளில் அடித்துப் பிடித்துக் கொண்டார். “உங்க ஐயா, சாரி அப்பாவுக்கு எங்க ஐயா நல்ல ஃப்ரெண்டு தெரியுமா..” என்றார். ”உங்க ஐயா எப்படி... நான் தப்பாப் பேசினா மன்னிச்சுருங்க..” என்று குழற ஆரம்பித்தார்.தோளில் பிடி இறுகியது.அவருக்குள் எறியும் தீயின் வலிமை புரிந்தது.அதற்குள் வாசலில் கார் ஒன்று, நின்று போகும் சத்தம் கேட்டது. ”வாங்க ப்ரதர், ஒரிஜினல்ஸெல்லாம் வரும் நேரமாச்சு....” என்று சொல்லிவிட்டு எதிரே வந்த மேனேஜரிடம் “வேய் ஒரு ஆயிரம் ரூவா எடும். இங்க பாத்தேரா.. சட்டையெல்லாம் கிழிஞ்ச்ட்டு..” என்றார். அவர் ஒரு தாளை நீட்டி, ”இந்த வவுச்சரில் ஒரு கையெழுத்துப் போடுங்க...முதலாளி கேப்பாக..” என்றார். ”வவுச்சரா என்னவே இங்க என்ன பேங்கா, ஆஃபீஸா என்னவே நடக்கு.. ” சரி ரூவாயக் குடும் என்று தந்ததை வாங்கி கையில் சுருட்டிக் கொண்டே..கையெழுத்துப் போட்டார்.”.ப்ரதர் ஒரு சட்டை எடுக்கணூம் தேயளி இந்த ஊர்ல துண்டுதான் கிடைக்கும் சட்டை கிடைக்குமா தெரியலையே....”என்று தள்ளாடினார்.எனக்கு இன்னொரு தம்ளர் சாப்பிட ஆசையாய் இருந்தது.அதைப் புரிந்து கொண்ட மேனேஜர்..ஒரு தம்ளரில் கொஞ்சம் ஊற்றி தந்தார். நைசாக, ”சார் இதில ஒரு சாட்சிக் கையெழுத்துப் போடுங்களேன்” என்று அதே தாளை நீட்டினார். அதிலே எதுவுமே எழுதியிருக்கவில்லை. நான் மறுத்தேன். அதற்குள் அறுமுகம்.”என்னவே என் ஃப்ரென்டுகிட்ட என்ன மயிரு கையெழுத்து கேக்கேரு...” என்று தாளைப் பிடுங்கி கிழித்து எறிந்து விட்டு, என் தோளில் சாய்ந்தபடியே கிளம்பினார். எனக்கும் தப்பித்தோம்டா என்றிருந்தது. நன்றாய் இருட்டி விட்டது எட்டு மணி இருக்கும்.வழியில் ஒரு கடையில் ஒரு சட்டை எடுத்து விட்டு, மெயின் ஃபால்ஸை நோக்கிப் போனோம். அருவி பிரம்மாண்டமாய் மலை முழுமைக்கும் விழுந்து கொண்டிருந்தது. மின் வெளிச்சத்தில் அகலாமான வெள்ளைத் திரையாய் விரிந்து கொட்டிக் கொண்டிருந்தது. ”பாருங்க ப்ரதர்... இதுக்கு ஒரிஜினல் மகனும் வப்பாட்டி மகனும் ஒண்ணுதான்..” என்று சொல்லியபடியே என் மேல், சட்டை வேஷ்டியை எறிந்து விட்டு துண்டை உடுத்துக் கொண்டு, அருவிக்குள் கலந்தான்.அவனுக்குள் எரியும் தீயை அது அணைக்குமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அல்லது எனக்குள்ளிருந்த திரவம் கேட்டதோ என்னவோ. | |||||
Monday, July 4, 2011
அக்கினி நட்சத்திரம். - கலாப்ரியா
அன்று வழக்கத்திற்கு மாறாக, பெண்கள் கல்லூரி டவுண் பஸ்ஸில், பாளை பஸ் ஸ்டாண்ட் வரை போய்விட்டோம்.பொதுவாக ஜங்ஷனுடன் திரும்பி விடுவோம். இரண்டு காரணங்கள், ஒன்று நாங்கள் எங்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டும் அது, எதிர்த்திசையில், மேற்கே இருந்தது.இன்னொன்று ஜங்ஷனில் ’செக்கிங் இன்ஸ்பெக்டர் சாமி’ ஏறி விடுவார்.அன்று வழக்கத்திற்கு மாறாக செக்கிங் ஐயர், டவுணிலேயே ஏறி விட்டார். அவரேயும், ”என்ன தோழர் நீங்க வரலையா, சும்ம ஏறிக்குங்க..” என்று வேறு சொல்லிவிட்டார்.அவர் சின்ன வயதுக்கரர்தான். சமீபமாக நன்றாகப் பழக ஆரம்பித்திருந்தார். பெரிய காரணம் ஒன்றுமில்லை, அவர் “டாவடிக்கிற”(கணக்குப் பண்ணுகிற) பெண், எங்கள் தெருவில் இருந்தது.அவளிடம் அது பற்றி விளையாட்டாகப் பேசியபோது, ”நல்ல ஆளைச் சொன்னீங்க, முதல்ல அந்த ஆளைத் தினமும் குளிக்கச் சொல்லுங்கண்ணேன், ஒரே ’விவா’”..என்றாள். கக்கத்திலிருந்து கிளம்பும் விஷ வாயுவின் சுருக்கம் ’விவா’. ‘விவா’, ’ஹார்லிக்ஸ்’ எல்லாம், உடலில் கப்படிக்கிற ஆண்களைப்பற்றி பெண்கள் அகராதியின் கலைச் சொற்கள்.இதற்குப்பிறகு நாங்கள் உஷாராகி விட்டோம். எங்களுக்குள்ளேயே “மாப்பிள்ளை, இன்னக்கி விவா வா ஹார்லிக்ஸா...” என்று கேட்டுக்கொள்ளுவோம்.அப்பொழுது பாடி ஸ்பிரே எல்லாம் கிடையாது. “ மாப்பிள்ளை, ஒரு கட்டி லைஃப்பாய் சோப்பும், அரைக்கட்டி சாண்டல் சோப்பும், எடுத்துட்டு குறுக்குத்துறைக்குப் போய், நல்லாத் தேய்ச்சுக் கரைச்சுக் குளிச்சுட்டு வா....” என்று கிணடலடித்துக் கொள்ளுவோம்.இதையே போய் ஒரு பெண்ணிடமும் சொல்லிவிட, விஷயம் சற்றுப் பெரிதாகி விட்டது. மேற்படி கலைச்சொல்லை என்னிடம் சொன்ன அன்னம்மா, ”போங்கண்ணேன், உங்க கிட்ட சொன்னேன் பாருங்க ”என்று கோபித்துக் கொண்டாள்.
அன்று பாளை பஸ்ஸ்டாண்ட் வரை சென்று விட்டோம். பஸ்ஸ்டாண்ட், காலை பத்துமணி நேரப் பரபரப்பெல்லாம் அடங்கி அமைதியாய் இருந்தது. பஸ்ஸ்டாண்டின் வெளிப்புறத்துக் கடைக்குப் போனோம்.எதிரே கட்டபொம்மன் சிலை. பக்கத்துப் பள்ளியின் ஒரு பெண் தன் தந்தையுடன் குனிந்த தலை நிமிராமல் சென்றது. அப்போதுதான், அங்கே நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த அவன், சத்தமாகச் சொன்னான்..” ஐயா கூட, கமுக்கமா, இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமாங்கிற மாதிரி போறதைப் பாரேன்...”” ஏல எவனாவது கொடுத்த லெட்டரோட ஹெச். எம் கிட்ட மாட்டிக்கிட்டாளா....”என்றான். அவன் சொன்னது அந்த தந்தைக்கும் கேட்டு அவர் திரும்பினார். “ ஏல என்ன, ஐயா முறைக்காரே ..” என்று சிகரெட் புகையை அவரை நோக்கி ஊதினான்.அவரும் தலை குனிந்தபடி சென்றார். அதுதான் ஆறுமுகமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அவனைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.பயங்கரமான கோபக்காரன் கம் பாசக்காரன் என்று.ஒரு முறை பார்த்தும் இருக்கிறேன்.
மடித்துக்கட்டிய வேட்டி, தொடை தெரிய ரொம்பவும் கட்டையாகவே இருந்தது. வெள்ளைச் சட்டை. ஏறு நெற்றி. கறுகறுவெனச் சுருண்ட முடி. தடித்த ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி.நல்ல சிகப்பு, என்பதை விட மஞ்சள் நிறம் எனலாம்.பனியன் போடாத மார்பு நன்றாய்த் தெரிகிற மாதிரி சட்டைப் பட்டனில் கீழ் இரண்டை மட்டுமே போட்டிருந்தான்.அவனைச் சுற்றி நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட என்னைப் போல ஒல்லியாய் ஒருவர். அவர் இருந்ததுதான் எனக்கு சற்று ஆசுவாசமாய் இருந்தது. நம்ம கூட சேத்தியா ஒரு ஆளு இருக்காரு என்கிற சமாதானம்.ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவிலை.என்னை அழைத்துச் சென்ற ராஜனிடம் ஆறுமுகம் கேட்டான்,” ஏல பொந்துக்கண்ணா இது யாரு, இந்த மூங்கில் கம்புக்குப் பின்னாலேயே ஒளிஞ்சுக்குவாரு போல இருக்கு...” என்று அந்த வெற்றிலை பாக்குக் கடை முன்னால் போட்டிருந்த வேனல்ப் பந்தலின் மூங்கில் காலைக் காண்பித்துச் சொன்னான்.அவன் நான் யார் என்று சொன்னான்.”ஓஹ் அவரு மகனா...எங்க ஐயாவுக்கு அவரு ஃப்ரெண்டுல்லா...”என்றான். ஒல்லியான ஆளிடம், ”சம்முவம் யார் தெரியுதா....”உத்தரவின்றி உள்ளே வா”படத்துக்கு முதல் நாளன்னிக்கி, நமக்குத் தராம இவருக்குத்தான் டிக்கெட்டைக் கொடுத்தான்.. அந்த மேனேஜர் ஞாவகமிருக்கா...” என்றான். ஸ்ரீதர் படத்திற்கு எப்போதுமே ஹைகிளாஸ் டிக்கெட்டிற்கு கூட்டம் இருக்கும்.நாங்கள் மூன்று டிக்கெட் சொல்லி வைத்திருந்தோம். அதை எங்களுக்குத் தரப் போகையில் ஆறுமுகம் வந்து மேனேஜரிடம் டிக்கெட் கேட்டார்..”டிக்கெட்டெல்லாம் ஆகிப்போச்செ என்றார்”அவர்.”இந்தா, பொறவு என்னத்தை கையில வச்சுருக்கேரு...” என்றான். ”இது இந்தத் தம்பி அப்பவே...முதலாளிகிட்ட சொன்னது..” என்றார்.”அவரை அடுத்த ஷோவுக்கு வரச்சொல்லும்வே ”என்று டிக்கெட்டைப் பிடுங்கினான்... நான், ”அண்னாச்சி.. முதலாளிகிட்ட சொல்லவா...” என்றேன். “முதலாளி புடுங்கிருவாரோ... நான் படம் பாக்கணும்....மேலெ போறேன் டிக்கெட்டை குடுத்து அனுப்பும்....” என்று பற்றவைக்க எடுத்த சிகரெட்டைக் கசக்கி அவர் மேல் எறியாத குறையாய் வீசிவிட்டு நகர்ந்தான்.
மேனேஜர், ”தம்பி நீங்க வேணும்ன்னா பெஞ்சு டிக்கெட்டுக் குப் போறீங்களா...”என்றார். சரி என்றேன். ஆனால் கூட வந்தவர்கள், ”அது எதுக்கு, அவரை பெஞ்சுக்குப் போகச் சொல்லட்டுமே” என்றார்கள்.மேனேஜர் அவர் குணம் உங்களுக்கு தெரியாது... முதலாளிக்கு ரொம்ப வேண்டியவரு...”என்றார். எங்கிருந்தோ முதலாளி இதைக் கவனித்திருக்க வேண்டும். இரண்டு குரூப்பையும் அனுப்ப ஏற்பாடு செய்து விட்டார். முழுப்படமும் அவனுக்கு அருகாமையில் அமர்ந்துதான் பார்த்தோம்.ஆனால் அப்படியொரு ரசாபாசம் நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. கோபமெல்லாம் போன இடமும் தெரியவில்லை.
அப்புறம் பாளைக் கல்லூரி நண்பர்களிடம் விசாரித்தோம். அப்போதுதான் ஆறுமுகம் பற்றித் தெரிய வந்தது.அன்று முகத்தையும் சரியாகக் கவனித்திருக்கவில்லை.ஆறுமுகம். ஒரு பெரிய தொழில் அதிபரின் ’சின்னவீட்டு’ப்பையன்.அம்மாவின் செல்லமும், ஒருவகைப் புறக்கணிப்பும், அவனை பெரிய முரடனாக ஆக்கியிருந்தது.அவன் அம்மா அவனைச் சிறுவயதில் ஒரு பெண்பிள்ளை போலவே அலங்காரம் செய்து வளர்ப்பாளாம். நிறைய கடுக்கண், தோடு என்று போட்டதினால் காதில் அவனுக்கு பெரிய துவாரங்கள் இருக்கும்.அதை வைத்தே அவனை நண்பர்கள் வட்டத்தில் கேலி செய்வார்களாம். ஆனால் ‘சவத்துக்கு’ எப்ப கோவம் வருதூன்னே தெரியாது, ஒருதரம் காது துவாரம் பற்றி, ’பாம்படக் காது ’ கிண்டலடிக்கையில், “ஆமா, பாக்கிறியால, இன்னும் ஒம்பது ஓட்டை இருக்கு...” என்று வேஷ்டியை நடுச் சந்தியில் வைத்து அவிழ்க்க முயன்று , அவனை சமாதானப்படுத்த பெரும் கஷ்டப்பட்டதாகச் சொல்வார்கள்.அவன் பிஎஸ்சிதான் முதலில் சேர்ந்தான்.லேபில் ஒரு பிஸிக்கல் பாலன்ஸ் சரியாக எடை காட்டவில்லை என்று லேப் அட்டெண்டரிடம் சொல்லியிருக்கிறான்.பொதுவாக இந்த பௌதிகத்தராசு என்கிற பிஸிக்கல் பாலன்ஸ் அட்டெண்டருக்கும் டெமான்ஸ்ட்ரேட்டருக்கும்தான் சரியாக நிறுக்கும்.நாம் பரிசோதனை செய்யும் போது சரியாகவே வராது. ஆனால் அட்டென்டர்,அவர் பல தலைமுறைகளைக் கண்டவர், “ஏதோ ஆடத்தெரியாத தேவ.... யாளுக்கு தெருக் கோணல்ன்னாளாம் ” என்று சொல்லி விட்டார் போலிருக்கிறது.. அவ்வளவுதான் தராசை அதன் கண்ணாடிப் பெட்டியோடு தூக்கி ஒரே போடு. ” கிழட்டுக் கூ... மவனே இதையே உன் தலையிலயே போட்டு உடைச்சிருப்பேன்...உங்க ஆத்தா செஞ்ச புண்ணியம் தப்பிச்சே..”என்று இறைந்து விட்டு சோதனைச் சாலையை விட்டே வெளியே வந்து விட்டானாம்.
அப்புறம் ஒரு வாரம் காலேஜ் பக்கமே போகவில்லை. அவனது அப்பா நேரில் வந்து அட்டெண்டரிடம் மன்னிப்புக் கேட்டாராம். பிரின்சிபாலைச் சமாதானம் செய்து பி.ஏ வில் சேர்த்தாராம். அவனது அப்பா பெரிய தொழிலதிபர். அவருக்கு பல நிறுவனங்களில் பங்கு உண்டு. பஸ் கம்பெனி, தியேட்டர், ஸ்பினிங்மில், ரைஸ்மில்., என்று அவரும் அவரது இரண்டு மூன்று சகோதரர்களும் பங்கு பெறாத நிறுவனங்களே கிடையாது. ஆனால் அவ்வளவு அமைதியானவர்.என் அப்பாவுக்கு நல்ல சினேகிதர்.முதலில் டவுண் மார்க்கெட்டையொட்டிய ஒரு தெருவில்த்தான் ஆறுமுகத்தின் அம்மாவும் அவனும் இருந்தார்கள்.அது ஒரு நாட்டுக்கோட்டைச் செட்டியாரின் பெரிய வீடு. ஊரில் வங்கிகளே வந்திராத ஒரு காலத்தில் அங்கே பெரிய லேவாதேவி நடக்குமாம். அந்தி கவிகிற இரவில் சில்லரை நாணயங்களைக் கொட்டி எண்ணுகிற சத்தம் மர்க்கெட் வரை கேட்கும் என்பார்கள்.அந்த வீட்டிற்கு நான் என் அப்பாவுடன் போயிருக்கிறேன்.எங்கள் வயலில் வேலை பார்க்கும் சமுசாரியின் மகனுக்கு, புதிதாகத் தொடங்கியுள்ள மில்லில் ஒரு வேலைக்குச் சொல்வதற்காகப் போனார் அப்பா. அந்தத் தெருவின் மறு கோடி வழியாக ஜி. நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’குப்போய் விடலாம். ஆறுமுகத்தின் அம்மாதான் வரவேற்றார்கள்.அவர்களை நான் ஏற்கெனவே எங்கள் உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்து அடிக்கடிப் பார்ப்பேன். அது, உறவினரின் ’.சின்ன வீடு’..ஆறுமுகத்தின் அம்மா அப்படி லட்சுமிகரமாக இருப்பார்கள். இதெல்லாம் கூட்டிக் கழித்துப் பின்னர் புரிந்து கொண்ட விஷயம்.
ஆனால் ஆறுமுகத்தின் ஒல்லி நண்பர் சம்முவத்துக்கு என்னை நன்றாகத் தெரிந்திருக்கிறது. அவர் எஸ்.ஐ செலக்ஷனுக்கு தேர்வாகி இருந்தார்.அதனால்த்தான் என்னைப்போலவே அவர் ஒல்லி என்று நான் சமாதானமாகியது எவ்வளவு அபத்தம் என்று விளங்கியது.சம்முவம் ரொம்ப ஜாலியான பேர்வழி.அவர் கல்லூரிப் பெண்களையோ, ஸ்கூல் பிள்ளைகளையோ அவ்வளவு ரசிப்பதில்லை.”நமக்கு லைசன்ஸ் மாட்டிய அத்தைகள்தான் பிடிக்கும்” என்பார்.அதுக்கு அவர் சொல்லும் காரணம் ஒத்துக் கொள்ளும்படியாக இருக்கும். “பாருங்க பிரதர், இந்த ரசனை நம்ம ரத்தத்திலேயே சாவித்திரி, தேவிகா பத்மினின்னு குண்டு குண்டு அத்தைகளாகவே, ரீபட்டன் கிராக்கிகளாகவே பார்த்துப் பார்த்து ஊறிப்போயிருக்கு...” என்பார்.அவர் சொல்லுகிற அடல்ட்ஸ் ஒன்லி கதைகளுக்காகவே அவர் பிரசித்தம்.எனக்குத் தெரிந்த கதைகளில் அவர் சொன்னது இருபது கதைகளாகவாவது இருக்கும்.
நான் எப்போதாவது ஆறுமுகத்தைப் பார்ப்பேன். லேசாகச் சிரிப்பதுடன் சரி. நம்ம வாய் சும்ம இருக்காது. ஏற்கெனவே “நாளைக்கு வருகிற சண்டையை இன்னக்கே இழுத்துருவான்ப்பா... ” என்று ரொம்ப நல்ல பேர் எனக்கு.ரொம்ப நாள் கழித்து அவரை ஒரு பிரபலமான தனியார் கார் நிறுவனத்தில் சந்தித்தேன். அங்கே அவர் வேலை பார்த்தார். நான் அங்கே வேலைக்கு முயன்று கொண்டிருந்தேன்.அங்கே ஒரு யூனியன் தலைவர் கொஞ்சம் பழக்கம். அவரைப் பார்க்கப் போயிருந்தேன்.அங்கே யூனியனுக்கெல்லாம் வேலையில்லை. எல்லாம் சரியாக நடக்கும். ஆனாலும் பெயருக்கு ஒரு யூனியன் உண்டு.அப்போது ஆறுமுகம் அவர் அருகில்த்தான் இருந்தார்.”ப்ரதர் வாங்க..” என்று பேசிக்கொண்டிருந்தவர், திடீரென கொஞ்சம் இருங்க வந்திருதேன் என்று போய்விட்டார். அவர் போனதும் , யூனியன் தோழர் கேட்டார், ”தம்பி எப்படி, வேலையெல்லாம் நல்லாப் பாக்காராம் ஆனால் பாதி நாள் வரமாட்டேங்காரு....” என்றார். அவரைப் பற்றிய மற்ற விஷயங்களைச் சொன்னேன். அவர் கொஞ்சம் அன்புக்கு ஏங்குகிற மாதிரியுள்ளவர் என்று. இப்படியான வார்த்தைகளிலெல்லாம் சொல்லவில்லை. ஒரு விதமாகச் சொன்னேன். தோழர், ”சரி உங்க கதைக்கும் அவர் அப்பாவையே சொல்லச் சொல்லுங்களேன்” என்றார்.அவர் அப்பாவிடம் சொல்ல என் அப்பா இல்லை, சமீபத்தில்தான் இறந்து போயிருந்தார்.அவர் இறந்து போன அனுதாபததை வைத்து இன்னொரு இடத்தில் முயற்சி நடந்தது.எத்தனை பேரிடம்தான் போய் அப்பா பெயரைச் சொல்லிக் கேட்பது. அவர் சாகும் போதும் அவருக்கு உகந்த விதமாக நான் நடந்து கொள்ளவில்லை, என்ற உறுத்தல் வேறு இருந்தது. நிரந்தரமாவதற்கு 50-50 வாய்ப்புள்ள ஒரு தற்காலிக வேலையை விட்டு விட்டு நான் மேற்படிப்பு படிக்கப் போகாமலிருந்தால் அவர் இன்னும் கொஞ்ச காலமென்ன, நீண்ட காலமே உயிரோடு இருந்திருப்பார்.
எப்படியோ ஒரு வேலை கிடைத்து, கல்யாணமும் பண்ணிக் கொண்டு ஊருடனான 29 வருட உறவை விட்டு குற்றாலம் பக்கம் வந்து சேர்ந்தேன். ஒரு சனிக்கிழமை மத்தியானம் லீவு. குற்றாலம் போகலாமே என்று தென்காசியில், பஸ்ஸுக்கு நின்று கொண்டிருந்தேன்.கூட்டம் நிறைய இருந்தது.நல்ல சீசன் வேறு. ஆறுமுகம் எதிரே வந்தார்.கொஞ்சம் அழுக்கான உடைகள், களையில்லாத முகம்.. சட்டைப்பை கிழிந்திருந்தது.அது தெரியாதபடி ஒரு கையால் பொத்திக் கொண்டிருந்தார். ”எங்க போறீங்க ப்ரதர், குற்றாலமா, எனக்கும் டிக்கெட் எடுங்க, யாரோ பணததைப் பாக்கெட் அடிச்சுட்டாங்க,” என்றார். எப்போ என்றேன் இப்பத்தான் என்றார்.போலிஸில் சொல்லுவோமா என்றேன். ”அதெல்லாம் ஒன்றும் வேண்டாம்... உங்களால டிக்கெட் எடுக்க முடியுமா இல்லையா ,”என்றார்.அதற்கென்ன வாங்க போவோம் என்று பஸ்ஸுக்கு காத்திருந்தோம். நீங்க சிகரெட் பிடிப்பீங்கள்ளா, ரெண்டு சிகரெட் வாங்குங்க என்றார்.காபி சாப்பிடறீங்களா என்றேன். “ம்ஹூம், என்று தலையை ஆட்டியபடியே.. ”கேக்கறதை மட்டும் வாங்கித் தாங்க, குற்றாலம் வந்ததும் நம்ம பங்களா போய், காசு வாங்கி செட்டில் பண்ணிருதேன்...” என்றார்.ஆள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறார் போல, வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிக் கொள்வானேன் என்று பேசாமல் இருந்தேன். ஆனாலும் ஆள் சற்று முதிர்ச்சியாய் இருப்பது போலுமிருந்தது. பார்த்து எட்டு ஒன்பது வருடமிருக்கும்.
அடிபிடியுடன் பஸ்ஸில் ஏறினோம். அவர் ரொம்ப ஜாக்கிரதையாய் என்னை ஒட்டியபடியே நின்றார்.இறங்கியதும் போக முயற்சித்த என்னை கையைப் பிடித்து இழுக்காத குறையாய், வாங்க பங்களாவுக்குப் போவோம் என்று அழைத்துக் கொண்டு போனார். அங்கே போனதும் வாட்ச் மேன் மாதிரியும் மேனேஜர் மாதிரியும் இருந்த ஒருவரிடம், ”எங்க ஐயா இருக்காராவே” என்றார். “முதலாளி நேற்றுப் போனவுக இன்னும் . வரலை ”என்றார். ”அப்படியே போகச் சொல்லீரும்... ”சரி யார் பெர்மிட்டாவது இருக்கா ”என்றார். அவர், ”ஹி ஹி சித்தப்பா வாங்கி வச்சது, சரக்கு இருக்கு” என்றார்.”பொறவு என்ன அதைக் கொண்டாரும், போய் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரும்....” என்றார். ”ப்ரதர் உக்காருங்க, நீங்க குளிக்கத்தானே போகணும்....”என்றார். நான் என் உறவினர் வீடு குற்றாலத்தில் இருப்பதைச் சொல்லவில்லை. “ஆமா, ஒரு குளியல் போட்ட்டுட்டுப் போகவேண்டியதுதான்” என்றேன் அதற்குள் அவர் எதையெல்லாமோ வாங்கி வந்திருந்தார். இங்கே இருக்கிறதை எடும் என்றார். அவர் தயங்கியபடியே, ”இல்லை சித்தப்பா வருவாங்க என்றார்.” ஒரு கெட்ட வார்த்தையை சத்தமாக உதிர்த்து விட்டு “ வே...அவன் யாரு எங்க அண்ணனா... அதான்வே ஒரிஜினல் வந்தா, சின்ன முதலாளி, மயிருன்னு கையைக் கட்டிக்கிட்டு நிப்பேரு...” எடுக்கேரா என்ன...” என்று மேஜையொன்றில் குத்தினார்.ஒரு அழகான ’ப்ளாக்நைட்’ விஸ்கி வந்தது. மடமடவென்று இரண்டு கிளாஸில் சரித்து என்னிடம் ஒன்றை நீட்டினார்... அவர் மடக்கென்று விழுங்கினார். நமக்கு எப்பவுமே கல்ப்புதான்....என்றார். நீங்க மெதுவா சாப்பிடுங்க என்றார்.எனக்கு இது என்னடா சிந்துபாத் தோளில் ஏறின கிழவன் கதையால்ல இருக்கு என்று தோன்றியது.ஆனால் விஸ்கி அழைத்தது. நான் ஒன்றை முடிப்பதற்குள் அவர் மூன்று தம்ளரை சரித்திருந்தார்.ஒரு துண்டை எடுத்து முக்காடு போலப் போட்டுக் கொண்டு...அங்கிருந்த பெரிய கண்ணாடி முன்னால் நின்றார். பொம்பளை மாதிரி இருக்கேனா...என்று கேட்டு விட்டு கொஞ்சம் பெண்ணைப் போல் பாவனை பண்ணினார்.
திடீரென, ”இப்படித்தான் எஙக அம்மா என்னைக் கெடுத்தா ப்ரதர்....” பிச்சைக்காரனாக்கூடப் பொறக்கலாம் வைப்பாட்டி மகனாப் பொறக்ககூடாது ..” என்று என் தோளில் அடித்துப் பிடித்துக் கொண்டார். “உங்க ஐயா, சாரி அப்பாவுக்கு எங்க ஐயா நல்ல ஃப்ரெண்டு தெரியுமா..” என்றார். ”உங்க ஐயா எப்படி... நான் தப்பாப் பேசினா மன்னிச்சுருங்க..” என்று குழற ஆரம்பித்தார்.தோளில் பிடி இறுகியது.அவருக்குள் எறியும் தீயின் வலிமை புரிந்தது.அதற்குள் வாசலில் கார் ஒன்று, நின்று போகும் சத்தம் கேட்டது. ”வாங்க ப்ரதர், ஒரிஜினல்ஸெல்லாம் வரும் நேரமாச்சு....” என்று சொல்லிவிட்டு எதிரே வந்த மேனேஜரிடம் “வேய் ஒரு ஆயிரம் ரூவா எடும். இங்க பாத்தேரா.. சட்டையெல்லாம் கிழிஞ்ச்ட்டு..” என்றார். அவர் ஒரு தாளை நீட்டி, ”இந்த வவுச்சரில் ஒரு கையெழுத்துப் போடுங்க...முதலாளி கேப்பாக..” என்றார்.
”வவுச்சரா என்னவே இங்க என்ன பேங்கா, ஆஃபீஸா என்னவே நடக்கு.. ” சரி ரூவாயக் குடும் என்று தந்ததை வாங்கி கையில் சுருட்டிக் கொண்டே..கையெழுத்துப் போட்டார்.”.ப்ரதர் ஒரு சட்டை எடுக்கணூம் தேயளி இந்த ஊர்ல துண்டுதான் கிடைக்கும் சட்டை கிடைக்குமா தெரியலையே....”என்று தள்ளாடினார்.எனக்கு இன்னொரு தம்ளர் சாப்பிட ஆசையாய் இருந்தது.அதைப் புரிந்து கொண்ட மேனேஜர்..ஒரு தம்ளரில் கொஞ்சம் ஊற்றி தந்தார். நைசாக, ”சார் இதில ஒரு சாட்சிக் கையெழுத்துப் போடுங்களேன்” என்று அதே தாளை நீட்டினார். அதிலே எதுவுமே எழுதியிருக்கவில்லை. நான் மறுத்தேன். அதற்குள் அறுமுகம்.”என்னவே என் ஃப்ரென்டுகிட்ட என்ன மயிரு கையெழுத்து கேக்கேரு...” என்று தாளைப் பிடுங்கி கிழித்து எறிந்து விட்டு, என் தோளில் சாய்ந்தபடியே கிளம்பினார். எனக்கும் தப்பித்தோம்டா என்றிருந்தது.
நன்றாய் இருட்டி விட்டது எட்டு மணி இருக்கும்.வழியில் ஒரு கடையில் ஒரு சட்டை எடுத்து விட்டு, மெயின் ஃபால்ஸை நோக்கிப் போனோம். அருவி பிரம்மாண்டமாய் மலை முழுமைக்கும் விழுந்து கொண்டிருந்தது. மின் வெளிச்சத்தில் அகலாமான வெள்ளைத் திரையாய் விரிந்து கொட்டிக் கொண்டிருந்தது. ”பாருங்க ப்ரதர்... இதுக்கு ஒரிஜினல் மகனும் வப்பாட்டி மகனும் ஒண்ணுதான்..” என்று சொல்லியபடியே என் மேல், சட்டை வேஷ்டியை எறிந்து விட்டு துண்டை உடுத்துக் கொண்டு, அருவிக்குள் கலந்தான்.அவனுக்குள் எரியும் தீயை அது அணைக்குமா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அல்லது எனக்குள்ளிருந்த திரவம் கேட்டதோ என்னவோ.

Thursday, June 23, 2011
முகவரி - கலாப்ரியா
| முகவரி http://koodu.thamizhstudio.com/thodargal_7_24.php
கல்யாணி அண்ணன் வீட்டில் உட்கார்ந்து எல்லோரும் 88 சீட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். திடீரென்று யாருக்கோ அது போரடிக்க, கேரம் விளையாட முடிவெடுத்தார்கள்.எனக்கு கேரமும், கோலிக்காயும் சுத்தமாக வராது.மற்றதெல்லாமும் நன்றாக வரும் என்று அரத்தமில்லை. கேரம் விளையாடுவதைச் சுற்றி நின்று பார்த்துக் கொண்டிருந்த பார்வையாளர்களார்களில் ஒருவனாக இருந்தேன். திடீரென்று வண்ணதாசனின் அண்ணன் கணபதியண்ணன் சட்டை போட்டுக் கொண்டு கிளம்பினார்கள். அவர் எங்கள் விளையாட்டுக்களில் எல்லாம் கலந்து கொள்வதில்லை. அப்போது அவர் பி.ஏ படித்துக் கொண்டிருந்தார். “என்னாப்பா, ஒன்னைய ஆட்டைக்கி சேக்கலையா..” என்றார். நான் எழுந்து நின்று “எனக்கு கேரம் தெரியாது” என்று அசடு வழிந்தேன்..” எங்கூட வாரியா என்றார்கள்.சரி என்று கிளம்பினேன், “ வீட்டுக்குப் போய் சட்டை போட்டுட்டு வா” என்றார்கள். “யாரை, சின்னப்பயலையா கூட்டீட்டுப் போறீங்க.....” என்று யாரோ கிணடலடித்தார்கள்.நான் டிராயர் மட்டுமே போட்டிருந்ததேன். ஆறாம் வகுப்பு முழுப்பரீட்சை லீவு. என் வீடு ஏழு வீ டு தள்ளி யிருந்தது. அவரது வீடான அன்பகம். 21. E. என்றால் எங்கள் வீடு, குமரன் அகம் 28.வீட்டுக்குப் போகிற இடைவெளியில் அண்ணன் சொன்னார்கள்,” கீழ ரத வீதியில் தி.மு.க அலுவலகம் என்றிருக்கிறதாமே, அதன் கீழ்த்தான் ஒருவரைப் பார்க்கப் போகிறோம், அவர் ’தினமலர்’ நாளிதழ் ஓவியர் அருணா என்றார். ” ஆமா, வீரன் வேலுத்தம்பி சித்திரக்கதைக்கெல்லாம் படம் எல்லாம் போடுறாரே அவரா என்றேன். ஆமா அவரேதான். என்றார். அவர் கார்ட்டுனும் போடுவார். தினமலர் அப்போது தென் மாவட்டங்களில் அதிகம் விற்பனையாகும் பத்திரிக்கை. தினத்தந்தி மதுரையிலிருந்து வந்து கொண்டிருந்தது, அதில் கன்னித்தீவு கிடத்தட்ட எண்ணூறு “அத்தியாயம்” வந்திருந்தது. தினமலரில் தளவாய் வேலுத்தம்பி கதையான வீரன் வேலுத்தம்பி வந்து கொண்டிருந்தது.அதற்கு ஓவியர் அருணா.”ஏதோ இன்று பெரிய மனுஷ தரிசனம் போலிருக்கிறது” என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்குப்போய் சட்டையை மாட்டியபடியே வெளியே வந்தேன். அக்காவோ யாரோ “தொரை எங்க இன்னேரத்தில சட்டையை மாட்டீட்டிக் கிளம்புதாரு... என்றார்கள். “நான் கழக அலுவலகம் வரைக்கும் போய்விட்டு வாரேன்..” என்று நகர்ந்தேன்.அப்பா “ ஏல...” என்று சத்தமிடுவது தெருவில் இறங்கி விட்ட பின் கேட்டது. கீழரதவீதியில் அப்பர் கிளாப்டன் ஸ்கூலுக்கு அடுத்து வடபுறம் ”திராவிட முன்ன்ற்றக்கழக அலுவலகம்” என்று மாடியில் ஒரு போர்டு தொங்கும். உண்மையில் அங்கு எதுவும் அலுவலகம் இயங்கியதா என்றெல்லாம் தெரியாது.அதற்குக் கீழே ஒரு பழைய இரும்புக் கடை. உண்டு. ஒரு வேளை அவர் கட்சிக்காரராக இருந்திருக்கலாம். அங்கே போனதும் கணபதியண்ணன், ”போ, போய்க் கேளு, ஆர்ட்டிஸ்ட் அருணா இருக்காரா என்று” என்றார். நான் ஒருவரிடம் போய் “ஆர்ட்டிஸ்ட் அருணா இருக்காரா...” என்று கேட்டேன்.” நாந்தான் அருணா.. நீ யாருய்யா.. ”என்று அவர் கேட்கவும்.,அதே நேரத்தில் “ அவர்தான் அருணா..”என்று அண்ணான் சொல்லவும் சரியாய் இருந்தது.அதில் “ஏய் என்னத்தையும் அதிகப் பிரசிங்கித்தனமா சொல்லிராதப்பா..” என்ற ஜாக்கிரதை தொனித்தது. நான் அப்போதெல்லாம் (இப்பவும்தான்) அப்படி “அ.பி’’ தான்.அண்ணன் தன்னிடமுள்ள அவர் வரைந்த ஓவியங்களைக் கண்பித்துக் கொண்டிருந்தார். அவர்,சேவியர் கல்லூரி மேகசீனில் வரைந்திருந்த சரஸ்வதி கோட்டோவியமும் ஒன்று.அருணாஅதை வெகுவாகப் பாராட்டினார்.அதைத் தான் வைத்துக் கொள்ளலாமா என்றும் கேட்டார்.கணபதியண்ணன் மகிழ்ச்சியோடு சம்மத்தித்தார். அதில் ஒரு பாரதிதாசன் ஓவியமும் இருந்த நினைவு. அதையே நான் கோணல் மாணலாக வரைந்து ஸ்கூல் மேக்சீனுக்கு, பிற்காலத்தில்க் கொடுத்தேன்.ஸ்கூல் மேகசீனில் பாரதிதாசன் படத்தையெல்லாம் போடாத காலம் அது. இல்லையென்றாலும் போடக்கூடிய அளவு கொஞ்சங்கூட நன்றாகவும் இல்லை.அவர்கள் இருவரும் படத்தை ‘ப்ளாக்” எடுப்பது எப்படி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள்.” நீங்க இண்டியன் இங்கில் எதை வரைந்து எப்படிக் கசக்கிக் கொடுத்தாலும் அதை என்ன சைசில் வேண்டுமானாலும் ப்லாக் எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் விளக்கிக் கொண்டிருந்தார். நீங்கள் எந்த அளவிலிம் வரையலாம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்.மறுநாள் நான் முதல் வேலையாக எட்டணாவுக்கு இண்டியன் இங்க் என்கிற ப்ளாக் இங்க் பாட்டில் ஒன்றும் தொட்டு எழுதுகிற ’நிப்’ பேனாக்கட்டையொன்றும் வாங்கினேன். அன்பகத்தில் ப்ளாக் இங்க் கேக்கும் உண்டு. கணபதியண்ணனும். கல்யாணியண்ணனும் ப்ரஷ்ஷை தண்ணீரில் முக்கி அதில்த் தோய்த்து அருமையாக வரைவார்கள். எனக்கு ஒரு நாளும் ப்ரஷ்ஷால் வரையவோ எழுதவோ வந்ததே இல்லை.அந்த வருட சரஸ்வதி பூஜையன்று வந்த தினமலரில் அருணா ஒரு ‘கருத்துப்படம்’ போட்டிருந்தார். ஒரு சரஸ்வதி படம் போட்டு. கிழே “இன்று நாடெங்கும் சரஸ்வதி பூஜை கொண்டாடுகிறார்கள்”, என்ற “கருத்தையும்” போட்டிருந்தார்கள்.அது அப்படியே கணபதியண்ணன் வரைந்த படம். அவர்கள் வீட்டில் நான் கற்றுக் கொண்டவை எவ்வளவோ உண்டு. கணபதியண்ணன் மேஜைக்குள்ளும் சரி, கண்ணாடி ஸ்டாண்டிலும் சரி சாக்பீஸ் துண்டுகளுக்குப் பஞ்சமே இருக்காது. மாடியின் செங்கல் தரையிலும், முன் வெராந்தாவின் சிமெண்டுத்தரையிலும் கணப்தியண்ணன், விகடன், குமுதம் இதழ்களில் வருகிற படங்கள் வரைந்து தள்ளிக் கொண்டே இருப்பார்கள். அங்கே வாராத பத்திரிக்கைகளே கிடையாது.கண்ணன் என்றொரு பத்திரிக்கை, அதில் சுப்பு, ரமணி என்று ஒருவரே வரையும் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் வாண்டுமாமா, ’ஆர்.வி’ ஆகியோரின் சித்திரக்கதைகள், எல்லோருக்குமே, ரொம்பப் பிடிக்கும். விகடனில் அப்போது இதயனின் நடைபாதை என்றொரு தொடர் வந்து கொண்டிருந்தது.அதில் வருகிற கோபுலுவின் படங்களை அவர் அப்படியே எந்தச் சிரமுமில்லாமல் வரைவார். அவருக்கு குமுதத்தில் வருகிற ‘வர்ணம்’ என்பவரின் வாஷ் டிராயிங் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவருக்கு பாராட்டுக் கடிதங்கள் எழுதி பதிலெல்லாம் வரும். ஒரு போஸ்ட் கார்டில் வர்ணம் ஒரு பெண்ணின் தோள்ப்பட்டை வரையிலான படத்தை வரைந்து அனுப்பியிருந்தார். கணபதி என்கிற தன் பெயரைக்கூட அவர், ‘ ’வர்ணம்’, என்ன ஸ்டைலில் கையெழுத்துப் போடுவாரோ அதே போல், தன் படங்களின் கீழ்ப் போடுவார்.அவருக்கு சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டுமென்று பெரிய கனவு.ஏனோ அதை அவர்கள் வீட்டில் அனுமதிக்கவில்லை. லயோலாவில் எம்.ஏ சேர்ந்து படித்தார். அவருக்கு பி.பி ஸ்ரீனிவாஸ் குரலின் மீது அப்படியொரு காதல். “அன்புமனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா....” பாட்டு, எதிர் வீட்டு வானொலியில் ஒலி பரப்பினால் மாடியின் வெளிப்புறத்திற்கு வந்து நின்று கேட்பார்.பாட்டு முடியும் வரை பேசவும் மாட்டார். பேச அனுமதிக்கவும் மாட்டார்.பாசமலர் படத்தில் வருகிற “யார் யார் அவள் யாரோ.. “ பாட்டுக்காக என்னிடம் ஒரு அணா (ஆறு நயாபைசா) தந்து பாசமலர் பாட்டுப்புத்தகம் வாங்கி வரச் சொன்னார்.அப்போது பாடல்களில் ஹம்மிங் பிரபலமாகியிருந்த விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பொற்காலம்.ஓவியம் என்றில்லை அருமையான மரபுக் கவிஞர். நிறைய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஜிப்ரானை மொழி பெயர்த்திருக்கிறார்.சமீபத்தில் குறுந்தொகைப் பாடல்களை எளிமையான கவி வடிவத்தில் தந்திருக்கிறார் அவருடன் லயோலாவில் படித்த நாக வேணுகோபாலன் என்றொரு நண்பரை சமீபத்தில் டில்லி தமிழ்ச்சங்க கருத்தரங்கு ஒன்றில் சந்தித்தேன். இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது ஒருவர் அவராகவே வந்து, ”உங்களின் ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கட்டுரைகளை அந்திமழை ப்லாக்கில் படிக்கிறேன், ரொம்ப நன்றாக இருக்கிறது”, என்றார். ஒரு ரசிகரைச் சந்திக்கிற வழக்கமான கூச்சம் கலந்த சந்தோஷ ஆர்வத்துடன் மட்டுமே அவரை எதிர்கொண்டேன்.மிக ஒல்லியான உருவம். என்னை விட எட்டு வயது அதிகமிருக்கும்.ஃபுல் ஸூட்டிலிருந்தார்.”ரொம்ப நன்றி....” என்று கொஞ்சம் மட்டுமே பேசினேன். அவர் என்னை விடுவதாயில்லை.”அது சரி, கலாப்ரியா,என்னை யார் என்று கேட்கமாட்டீர்களா....” என்று பதிலுக்குக் கூட காத்திராமல்,” நான் உங்க கணபதியண்ணனோட கிளாஸ்மேட், லயோலாவில் நாங்க இரண்டு ரெண்டு பேரும் ஒன்னாப் படிச்சோம், இந்தாங்க, நேற்று உங்களைப் பார்த்ததுமே ஒரு வேலை செஞ்சேன், அண்ணன், காலேஜ் மேகசீனில் எழுதிய ஒரு கட்டுரையின் நகலை ஜெராக்ஸ் பண்ணிக் கொண்டாந்திருக்கேன்”, என்று ஒரு ஜெராக்ஸ் பிரதியையும் ஒரு ஃபோட்டோவின் ஜெராக்ஸையும் தந்தார். “ நீங்க எப்ப கணப்தியண்ணனைப் பார்ப்பீங்களோ, அப்ப கொடுங்க” என்றார்.அதைக் கொடுத்து விட்டு என்னைத்தன் சின்ன உருவத்தால் கட்டிப் பிடித்துக் கொண்டார். புகைப்படத்தில் அவர் ஒரு பத்தாம் வகுப்பு மாணவர் போல உயரமான கணபதியண்ணனின் அருகே நின்று கொண்டிருந்தார். ’ஆளுக்கொரு வீடு’ படத்தின் அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா.....’பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டு, ஓவியம், கவிதை என்று நிறையப் பேசிக் கொண்டிருந்தார்.அவர் மீதான மரியாதையை அதிகப் படுத்திக் கொண்டே இருந்தார். ஊருக்குப் போன பின் முதல் வேலையாக இதைக் கணபதியண்ணனுக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.டில்லிக் குளிர் விட்டவுடன் அந்த யோசனையும் மறைந்து போயிற்று. சென்ற வாரம் இன்னொரு பயணத்திற்காக, டில்லிக்கு கொண்டு சென்ற பெரிய சூட் கேஸை எடுத்த போது அதிலேயே தங்கி விட்ட அந்த ஜெராக்ஸ்`நகல் கண்ணில் பட்டது. பயணம் கிளம்புகிற அவசரம். இரண்டு வரி நலம் விசாரித்து, ஒரு கடிதம் எழுதி,ஜெராக்ஸை இணைத்து, நினைவில் இருந்த அவரது ஆதம்பாக்க முகவரியையும் வீட்டு ஃபோன் நம்பரையும் எழுதி, ஒரு நண்பரிடம் கொடுத்து “ எப்பா இதை ஒட்டி கூரியரில் சேர்த்து விடு..” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.முந்தா நாள் கணபதியண்ணனிடமிருந்து கடிதம் வந்தது. ”வேணு தந்தவைகளை அனுப்பி வைத்தற்கு ரொம்ப சந்தோஷம். அந்தக் கட்டுரை என்னிடம் கூட இல்லை. நீ முகவரி சரியாக எழுதவில்லை, ஃபோனில் விசாரித்து, கொண்டு வந்து தந்தார்கள் அவர்களுக்குப் புண்ணியம் சேரட்டும்...”. என்று வழக்கம் போல இன்லண்ட் லெட்டரின் ஒரு இடத்தைக் கூட மிச்சம் வைக்காமல், எழுதி, ஒரு ஓரத்தில் வீட்டின் தெளிவான முழு முகவரியையும், செல் பேசி எண்ணையும், ஈ மெயில் முகவரியும் எழுதி இருந்தார்கள். தமிழ் பேசும் எந்த மூலையிலும் என் முகவரியைத் தெரிந்த ஒன்றிரண்டு பேராவது இருக்கிறார்கள்...என்றால் அதற்கு கணபதியண்ணன்தான் காரணம்.. அவருக்கு எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன், ஒத்தி வைப்பதில் நாம்தான் கில்லாடிகளாயிற்றே... ஆனால் காலக்கணக்கன் எதையும் ஒத்தி வைப்பதேயில்லை. நேற்று மதியம் ஒரு ஃபோன்,. ”கணபதியண்ணன் மாரடைப்பில் திடீரென காலமானான், கோபால்..முக்கால் மணி நேரமாச்சாம்.... ” என்று கட்டுப்படுத்த முடியாத அழுகையுடனான குரலில் வண்ணதாசனிடமிருந்து. http://koodu.thamizhstudio.com/thodargal_7_24.php | |||
Monday, June 20, 2011
வலது புறம் செல்லவும் - 13 - இயக்குனர் அகத்தியன்
வலது புறம் செல்லவும் - 13
தாவீதின் குமாரன் சாலமோன் நீதி சொன்ன மண்ணிலே ஓர் குரல் ஒலித்தது. கடவுளின் கட்டளைக்கு எதிராக செயல்பட்டு உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்று சொன்ன ஜக்காரியாவை கல்லெறிந்து கொன்ற ஜெருசலேம் ஆலயத்தில் இருந்து அந்தக் குரல் ஒலித்தது. கொள்ளையடிக்கப்பட்டும், இடிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்த அந்த ஆலயம் அன்றைய தினம் சதுசேயர்களாலும் பரிசேயர்களாலும் வியாபாரத் தலமாக மாற்றப்பட்டிருந்தது. அவர் பேசினார்: "என் மக்களே துரோகத்துக்குப் பெயர்போன ஜெருசலேம் இது. எத்தனையோ தீர்க்கதரிசிகளுக்குத் துரோகம் செய்திருக்கிறது. உங்கள் கண்ணெதிரிலேயே யோவானைக் கொன்று புதைத்திருக்கிறது. ரோமானிய ஆட்சி, ஏரோதுவின் திறமையின்மை இவற்றைப் பயன்படுத்தி மதகுருமார்களும் பரிசேயர்களும் உங்களை நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட அங்கிகளையும் அதன் மேல் அழகிய வேலைப்பாடுகள் மிக்க மேலாடைகளையும் அணிந்துகொண்டு, வேதங்கள் எழுதப்பட்ட துணிகளை தலையிலும் கைளிலும் சுற்றிக்கொண்டு, ஆடம்பரமான விருந்துகளிலே முதலிடம் பிடித்துக்கொண்டு, கோவிலில் இவர்களுக்காக தனியிடம் ஒதுக்கிக்கொண்டு செல்வச் செழிப்பில் கொழிக்கிறார்கள். ஆலயத்துக்குள்ளே வியாபாரம். காணிக்கைப் பொருட்களை மக்கள் வெளியிலிருந்து கொண்டு வரக் கூடாது. ஆலயத்துக்குள்ளேதான் வாங்க வேண்டும். ஏன்? இதிலே அவர்கள் ஆதாயம் பார்க்கிறார்கள். கோவிலினுள் மக்கள் பயன்படுத்தும் நாணயம் செல்லாது. சீசரின் நாணயம் மட்டுமே செல்லும். காரணம் அப்பாவி மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நாணயம் மாற்றுவதிலும் கொள்ளை லாபம் அடிப்பதற்காக. கோவிலுக்குப் பத்தில் ஒரு பங்கு என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை மட்டும் சட்டப்படி வாங்கி விடுகிறார்கள். ஆனால், அதில் சொல்லப்பட்ட நீதி, நேர்மை, இரக்கம், முதலானவற்றைக் கடைபிடிக்கவே மாட்டார்கள். அவர்கள் போதிப்பார்கள். அதன்படி நடக்க மாட்டார்கள். அவர்கள் கடவுளை வணங்குவது உங்களை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்காக. எங்களை குரு என்று அழை, தந்தை என்று அழை என்று மதத்தின் பெயரால் உங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படி அவர்களை அழைக்காதீர்கள். உங்கள் குருவும் தந்தையும் வானகத்தில் இருக்கும் இறைவன் மட்டுமே. வெளித் தோற்றத்திலே அழகாக உடையுடுத்தி இருக்கும் அவர்களின் மனதிலே சுயநலமும், வன்முறையும் நிறைந்திருக்கின்றன. உள்ளே எலும்புகளாகவும் வெளியே அழகாகவும் இருக்கின்ற வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைதான் அவர்கள். இவ்வாறு நான் பேசுவதால் நான் சட்டங்களை அழிக்க வந்தவன் என்று நினைக்காதீர்கள். அவற்றை நிறைவேற்றவே வந்தேன். நீங்கள் சட்டம் சொல்வதை நிறைவேற்றுங்கள். ஆனால் அவர்கள் வாழ்கிற வாழ்க்கையை மேற்கொள்ளாதீர்கள். அது சட்டத்திற்கு புறம்பானது. தீர்க்கதரிசிகளை கொலை செய்துவிட்டு அவர்களின் வாரிசுகள் நாங்கள் என்று பெருமையடித்துக் கொள்ளும் கூட்டம் அது. அவர்களுக்குச் சொல்கிறேன். இந்த ஜெருசலேமில் இருந்து கொண்டு, இந்த ஆலயத்தின் பேரால் பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்றால் அது உங்களுக்கு மட்டுமல்ல. இந்த ஆலயத்துக்கும்தான். உங்கள் பாவங்களினால் இந்த திருக்கோவில் இடிந்து விழுந்து ஒரு கல் கூட அதனிடத்தில் இல்லாமல் போகும். இந்த உலகத்தைப் பாவங்களிலிருந்து விடுதலை செய்யவே நான் வந்திருக்கிறேன். நான் இந்த உலகத்திற்கு ஓர் ஒளியாய் வந்திருக்கிறேன். என்னை நம்பாதவர்களின் வாழ்க்கை இருளாகவே இருக்கும். உங்களில் யாராவது என் வார்த்தைகளைக் கேட்டு நடக்காவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று நான் சொல்ல மாட்டேன். நான் உங்களுக்குத் தண்டனை கொடுக்க வரவில்லை. விடுதலை கொடுக்கவே வந்திருக்கிறேன். நீங்கள் ஒளியைக் கையில் வைத்துக் கொண்டு இருளில் நடக்கிறீர்கள். உங்கள் ஒளி அணையாத ஒளி என்று நம்பிக்கை கொள்ளுங்கள். என்றும் அணையாத ஒளியாகிய கடவுளின் குழந்தைகள் நீங்கள். ஒருவருக்கொருவர் உண்மையாயிருங்கள். ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கை வையுங்கள். ஒருவரிடம் ஒருவர் அன்பு செலுத்துங்கள். இந்த மூன்றிலும் அன்பே உயர்ந்தது". புத்தர் அன்பைப் போதித்த சுமார் 600 வருடங்களுக்குப் பிறகு... ஒலித்த குரல் இது. பெத்லகேமில் ஒரு மாட்டுத் தொழுவத்திலே அந்த ஒளி பிறந்தது. அந்த ஒளியின் பெயர் இயேசு. "ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு" சகிப்புத் தன்மைக்கு இதைவிட அதிகமான வார்த்தை இன்று வரை பூமியில் இல்லை. "உன்னைப் போல் பிறரையும் நேசி" நாம் நம்மளை எப்படிப் பார்த்துப் பார்த்து நேசிக்கிறோம். நல்ல உடை, நல்ல சாப்பாடு, நல்ல பெர்ஃபியூம், நல்ல வண்டி, நல்ல அழகான சிவப்பான மனைவி வேண்டும். இப்படி நீ உன்னை எப்படி நேசிக்கிறாயோ அதுமாதிரி அடுத்தவனையும் நேசி. அன்பு காட்டுவதற்கு இதைவிட அதிகமான விளக்கம் இல்லை. இதற்கு அடுத்த நிலையில் உள்ளதுதான். "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே "உங்களில் தவறு செய்யாதவன் முதல் கல்லை அவள் மேல் எறியட்டும்" இதற்கு இணையான தீர்ப்பு இன்றுவரை இல்லை. "கடவுளே இவங்க பண்றது பாவம்னு கூடத் தெரியல. இவங்களை மன்னிச்சுடு" சகிப்புத் தன்மைக்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு உண்டா? காலங்காலமாக அடக்கு முறைக்கு ஆளான இனம் யூத இனம். எகிப்தை விட்டு வெளியேறி இடம் தேடி அலைந்து, அரசு கண்டு, அடக்கு முறைகளைச் சந்தித்து, நசுக்கப்பட்டு, இறுதியில் ரோமானியர்களின் ஆட்சியில் ஏரோது மன்னனின் அடக்கு முறையில் தங்களை மீட்டெடுக்க ஒரு தேவதூதன் வருவான் என்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் அந்த ஒளி பூமியில் பிறந்தது. தங்களைக் காக்க ஒருவன் கையில் ஆயுதம் ஏந்தி குதிரையில் வருவான் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த இனத்திற்கு ஒரு ஏழையின் வீட்டில் தச்சுத் தொழிலாளி மகனாகப் பிறந்து அன்பை ஆயுதமாக்கிய இயேசுவை அடையாளம் தெரியவில்லை. அதனால்தான் வழக்குகளைச் சந்தித்து, நாள் முழுவதும் சவுக்கடி வாங்கி, ஏளனப்படுத்தப்பட்டு, அவமானம் செய்யப்பட்டு, முற்களைத் தலையில் வைத்து அடித்து, சிலுவை சுமக்க வைத்து அழைத்துச் செல்லப்பட்டபோது அந்த மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்தது. நீ கடவுளின் குமாரன் என்றால் சிலுவையை விட்டு இறங்கி வா என்று கேலி பேசியது. மக்களுக்காகப் பேசுகிறான். மக்களாட்சி என்கிறான். யூதக் கொள்கையை எதிர்க்கிறான் என்று பயந்த அரசும், ஆலயக் கூட்டமும் யூதக் கொள்கைகளை எதிர்க்க இனி ஒருவன் பிறக்கவே கூடாது என்று வெறி கொண்டு அடித்தது. சவுக்கு வேறு. கசை வேறு. ஒரு கைப்பிடியின் கீழ் பத்து சிறு சிறு சங்கிலிகள் பிணைக்கப்பட்டு அதில் முழுவதிலும் தாறுமாறாக வெட்டப்பட்ட தகரத் துண்டுகள் இணைக்கப்பட்டது கசை. அந்தக் கசையால் வெறி கொண்டு அடித்தார்கள்.
யூதரில் பிறந்த ஒருவன் யூத அஸ்திவாரத்தையே அசைக்கிறான் என்ற வெறியில் கொடுக்கப்பட்ட தண்டனை என்றார் அந்த இயக்குனர். இயேசுவைப் பற்றிய செய்திகளை விவிலியத்தில்தான் தேட வேண்டி இருக்கிறது. எந்த வரலாற்றுப் பதிவும் இல்லை. பன்னிரெண்டு வயதுவரை வாழ்ந்த ஒரு சிறுவன் யூதேயாவிலேயோ, அந்த வட்டாரங்களிலேயோ எங்குமே இல்லாமல் போய் மக்களால் மறக்கப்பட்டு, பின் திடீரென்று தோன்றி, மாபெரும் புரட்சிகள் செய்து, பகுத்தறிவு பேசி, மறுபடியும் மறைந்து போன மனிதனை அன்றைய வரலாற்று ஆசிரியர்கள் சட்டை செய்யவில்லை என்பதுதான் உண்மை. அந்த புரட்சிக்காரன் கடவுளாக்கப்பட்டது, கடவுளின் விளையாட்டா, காலத்தின் தேவையா என்பதை நாம் அலசப் போவதில்லை. ஆனால் 12 வயதில் அறிவும் ஞானமும் ஊற்றெடுத்து ஆலயத்தின் நடுவே நின்று கொண்டு பெரிய பெரிய கேள்விகளுக்கெல்லாம் திகைக்கத் திகைக்கப் பதில் சொல்லி விட்டு, எங்கேயோ சுற்றி மீண்டும் வந்து, இரண்டு வருடங்களை அதிர வைத்து இஸ்ரவேலர் பூமியை இவனை அடக்காவிட்டால் சாம்ராஜ்யம் வீழ்ந்து போகும் என்று பயப்பட வைத்து, ஏரோது மன்னனையும் அவனது சகாக்களையும் உடனடியாக இயேசுவை தீர்க்க வேண்டும் என்று முடிவெடுக்க வைத்து, இயேசுவுக்கும், அவரின் இயக்கத் தோழர்களுக்கும் வலைவிரிக்க வைத்து, சிலுவை மரணத்தை சந்தித்து, பூமிப்படி உயிர்த்தெழுந்து, அவர்கள் சாம்ராஜ்யத்தில் இயேசு முடிந்து போனார். ஆனால் இயேசுவை மக்களிடம் கொண்டு போனவர். St. Paul. அவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் பிரச்சாரம். ஒரே ஒரு பால் ஒட்டுமொத்த ஐரோப்பிய தேசங்களையும் தன்பால் இழுத்தார். சீடர்கள் அதாவது தோழர்கள் பதினோரு பேரும் இடம் பெயர்ந்து விட்டார்கள். தோமா இந்தியாவுக்கு வந்து விட்டார். மற்றவர்கள் அண்டை நாடுகளுக்கெல்லாம் தோழனைப் பரப்பச் சென்று விட்டார்கள். பால், புனிதப்பால் உயிரோடு இருக்கும் வரை வீதி வீதியாகச் சென்றார். உங்களுக்காக, நீங்கள் பிச்சை எடுக்கக் கூடாது என்பதற்காக, நீங்கள் நோயோடு போராடக் கூடாது என்பதற்காக, நீங்கள் இரட்சிக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருவன் உயிர் நீத்தான். பால் எடுத்துக் கொண்டது மூன்று விஷயங்கள். எப்படியெல்லாம் பிச்சை எடுத்தீர்கள்? எப்படியெல்லாம் பிச்சை எடுக்குறீர்கள்? எப்படியெல்லாம் பிச்சை எடுக்கப் போகிறீர்கள்? பாமர ஜனங்களின் மனதை அசைத்தார். பேசினார். அறிவுப் பூர்வமாகப் பேசினார். நோயோடு போராடுகிறீர்கள். வறுமையோடு போராடுகிறீர்கள். இரட்சிப்பு யார் தருவார்? ஏன் தருவார்? யார் தந்தார்? எதற்காகத் தந்தார்? மீடியாக்கள் இல்லை. வாய்வழியாகப் பரப்புவதைத் தவிர வேறு ஊடகங்கள் இல்லை. ஆனால் அந்த வாய்வழிச் செய்திகள் கிரீக் வரை பரவி எதிரொலித்தது. மாபெரும் கிரேக்க மனிதர்கள் எல்லாம் வாழ்ந்த ஒரு மனிதனை - சற்று முன்பே வாழ்ந்த ஒரு மனிதனை - தீர்க்கதரிசி என்றும் இரட்சகன் என்றும் ஏற்று அவரைக் கடவுள் ஆக்கினார்கள். ஒரு புரட்சிக்காரன் செயின்ட் பாலால் கடவுள் ஆக்கப்பட்டார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாமனிதன் புரட்சிகரமாக சிந்தித்திருக்கிறான் என்பதற்கு நிறைய உதாரணங்கள் விவிலியம் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. ஒரு பரிசேயன் "நாங்கள் கடவுளுக்கு காணிக்கை கொடுப்பதா? அரசாங்கத்திற்கு வரி கொடுப்பதா?" என்று கேட்டபோது இயேசு, "இறைவனுக்குரியதை இறைவனுக்கும் அரசாங்கத்திற்குரியதை அரசாங்கத்திற்கும் கொடு" என்கிறார். ஒரு புரட்சிக்காரன் இறைவனுக்குரியது என்று சொன்னதை காணிக்கையாகவோ பலியாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. ஓரிடத்தில் "விசுவாசம் உள்ளவன் பாக்கியவான். பரலோக ராஜ்ஜியம் அவனுக்குரியது" என்கிறார். கடவுளை நம்பு, உண்மையாயிரு, அன்பு செய் அது போதும். ஆனால் அரசு செயல்பட வரி கொடு என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு முக்கியமான விஷயம். இயேசு எதையுமே அவர் சொன்ன ஒரு வார்த்தையைக்கூட எழுதி வைத்துவிட்டுப் போகவில்லை. கூடவே இருந்த சீடர்கள் கூட எந்த வார்த்தையையும் எழுதி வைக்கவில்லை. லூக், மார்க், மாத்யூ, ஜான், எபேசியர், எபிரேயர், கொரீந்தியர் போன்ற, அவருடன் முற்றிலும் தொடர்பில்லாத ஆசிரியர்களே விவிலியத்தை எழுதி இருக்கிறார்கள். ஒரு பார்வைக்காக நாம் சில யூகங்களுக்குள் போகலாம். புத்தருக்கு அரண்மனையின் ஆடம்பரம் மக்களைப் பற்றி யோசிக்க வைத்தது என்றால் இயேசுவுக்கு என்ன நிகழ்ந்திருக்கும். குழந்தை இயேசுவின் தந்தை யோசேப் தச்சுத் தொழிலாளி. தச்சர்கள் பரம்பரையில் வந்த நேர்த்தியான ஒரு தச்சர். பல கிருத்துவ மதக் காலண்டர்களில் நீங்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். தந்தையும் பாலகன் இயேசுவும் ஒரு வெட்டிய மரத்தை இருபுறமும் பிடித்து இழைத்துக் கொண்டிருப்பார்கள். நவீனத் தொழில்கள் அறிமுகம் இல்லாத அந்தக் காலத்தில், பாடசாலைகள் இல்லாத அந்த காலத்தில், மீனவன் மகனாகப் பிறந்தால் தோணியில் ஏற்றிக்கொண்டு தொழிலுக்குப் பழக்குவார்கள். அப்போதெல்லாம் படிப்பு என்பது யூத மதத்தின் வேதங்கள்தான். அதுவும் யூதக் கோவில்களில். தச்சுத் தொழிலும் அப்போது அப்படித்தான். ஏழு வயது முதலே சிறுவர்களை குலத் தொழிலில் ஈடுபடுத்துவது அக்கால வழக்கம். என் நினைவுக்கெட்டிய செய்தி ஒன்று. ராஜாஜி முதல்வராக இருந்த போது அரை நாள் குலத் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒரு சட்டம் வந்து பின் எதிர்ப்புகளால் திரும்பப் பெறப்பட்டது என நினைக்கிறேன். இப்போதும் நீங்கள் ஒரு காட்சியைக் காணலாம். ஒரு வீட்டில் ஒரு பெண் சமையல் வேலை செய்கிறாள் என்று வைத்துக் கொள்வோம். எப்போதாவது விடுமுறை நாட்களில் தங்கள் வீட்டுச் சிறுவர்களையோ சிறுமியையோ அழைத்து வருவார். அப்போது அந்தக் குழந்தை என்ன செய்யும்? அந்த வீட்டில் L.C.D, Digital T.V இருந்தால் அது ஆச்சர்யமாகப் பார்க்கும். கூடவே ஒரு ஏக்கம் பிறக்கும். கட்டில், மெத்தை, பொமரேனியன் நாய்க்குட்டி, ஊஞ்சல், உயர்ரக துணிமணிகள், என்று ஆச்சரியமும் ஏக்கமும் அந்தக் குழந்தைக்குப் பிறக்கும். அப்படியே சற்று பின்னோக்கிப் போகலாம். சுவர்களின் மேலே மூங்கில்களைப் பிணைத்து ஓலைகள் வேய்ந்து வீடுகள் கட்டுவது ஒருமுறை. கான்கிரீட் அல்லது தச்சு வேலை என்பது பணக்காரர்கள் இல்லங்கள் அமைக்கும் போதுதான் அக்காலங்களில் இடம் பெற்ற ஒன்று. தந்தையோடு கைவேலைக்குச் சென்ற இயேசு, மாளிகையின் படாடோபத்தையும் இழைத்து இழைத்து அமைக்கும் அலங்கார வேலைகளையும், அறை எங்கும் நிறைந்த தேக்குப் பொருட்களையும், சீனத்துக் களிமண் ஜாடிகளையும், பெல்ஜியம் கண்ணாடிப் பொருட்களையும் தங்கம் வெள்ளியால் இழைக்கப்பட்ட உள் வேலைகளையும் பார்த்து ஆச்சரியமும் ஏக்கமும் கூடவே வருத்தமும் அடைந்திருக்க வேண்டும். அந்தப் பாலகனுக்கு நாமும் நம்மோடு வாழ்பவர்களும் மழைக்காலங்களில் ஆலயங்களுக்குள் அல்லவா தஞ்சம் அடைய வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். தச்சு வேலைக்குச் செல்லும்போது களியோ, ரொட்டியோ எடுத்துச் சென்றிருக்க வேண்டும். அவர்களை வைத்துக்கொண்டே அறுசுவை உணவுகளை மாட மாளிகை வாசிகள் உண்டிருக்க வேண்டும். வளர்ப்புப் பிராணிகளுக்குக் கூட உயர்ந்த ரக உணவுகளை பரிசேயர்கள் கொடுத்திருக்க வேண்டும். அந்த நிகழ்வுகள் பாலகன் ஏசுவை சங்கடப்படுத்தி சிந்திக்க வைத்திருக்க வேண்டும். ஒருபுறம் உழைப்பும் வறுமையும் பசியும் மறுபுறம் அதற்கு நேர்மேறாக உழைப்பைப் பெறுபவர்களின் ஆடம்பர வாழ்க்கை. ஏன் அந்தப் பாலகனை உறுத்தி இருக்கக் கூடாது? அமெரிக்க மக்களிடையே விவிலியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த விவிலியம் வானொலி நாடகமாக 1947 ல் "The greatest story ever told" என்ற தலைப்பில் ஒலிபரப்பப்பட்டது. பின் புத்தகமாகவும், திரைப்படமாகவும், வந்தது. அந்தப் புத்தகத்தில் அதன் ஆசிரியர் Fulton Oursler விவரிக்கும் ஒரு காட்சி. இயேசு தனது 12 வயதில் ஆலயத்தில் நின்று கேள்விகள் கேட்டதாக விவிலியம் பதிவு செய்திருக்கிறது. நாசரேத்திலிருந்து ஜெருசலேம் செல்லும் அந்த பன்னிரெண்டு வயதுச் சிறுவன் பார்த்த காட்சிகளை அவர் விவரிக்கிறார். கடவுளை வணங்கச் செல்லும் மக்களுக்கு ஆலயத்துக்குள் எதற்குப் பணம். கடவுளுக்கு பலியிடும் புறாக்களையும், ஆட்டுக் குட்டிகளையும் மக்கள் ஆலயத்துக்குள் விற்பவர்களிடம்தான் வாங்க வேண்டும். அதுவும் 5 மடங்கு அதிக விலை கொடுத்து. இன்றும் நிறையக் காட்சிகள். அந்த 12 வயதுச் சிறுவனுக்கு மனதில் கேள்விகள் பிறந்தன. ஏன் உயிர்களைப் பலியிடுகிறார்கள்? இரத்தத்தினாலும் நறுமணப் புகையாலும்தான் இறைவன் மகிழ்ச்சியடைவார் என்று ஏன் எண்ணுகிறார்கள்? எதற்காக குருமார்களிடம் இருந்தே அவைகளை வாங்க வேண்டும்? அந்தப் பணத்தை குருமார்கள் என்ன செய்கிறார்கள்? இது கடவுளுக்கு எதிரான செயல் இல்லையா? இயேசுவுக்கு தான் கற்ற வேதத்தில் ஆமோஸ் தீர்க்கதரிசியின் வார்த்தைகள் ஞாபகத்திற்கு வந்தன. கடவுள் சொல்கிறார். "நான் உங்கள் மதத்தின் விழாக்களை வெறுக்கிறேன். என்னால் அவற்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நீங்கள் கொடுக்கும் பலிகளையும், தானியங்களையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். கூச்சலிடும் உங்கள் பாடல்களை நிறுத்துங்கள். உங்கள் வாத்தியங்களை இசைக்காதீர்கள். இவற்றுக்குப் பதிலாக நீதியையும், நேர்மையையும் வற்றாத ஜீவநதியாய் ஓடவிடுங்கள்" இப்படியெல்லாம் இயேசு சிந்தித்ததாகக் குறிப்பிடுகிறார். இன்னொரு யூகத்தையும் பார்த்து விடுவோம். 12 வயதுக்குப் பிறகு கிட்டத்தட்ட இயேசுவின் பணிக் காலத்தைப் பதிவு செய்கிறது விவிலியம். பதினெட்டு வருடங்கள் இயேசுவைப் பற்றி எந்தச் செய்தியும் இல்லை. 12 வது வயதில் சிறுவன் இயேசு எங்கே போனான். வீட்டைவிட்டு தானாகச் சென்றானா? நோக்கத்தின் அடிப்படையில் யாராவது அழைத்துச் சென்றார்களா? அல்லது கடத்திச் சென்றார்களா? அப்படி என்றால் அழைத்தோ அல்லது கடத்தியோ எங்கு கூட்டிச் சென்றார்கள்? அக்காலத்தில் 12 வயதில் வெகுதூரம் தனியே பயணிப்பதெல்லாம் 98 சதவிகிதம் சாத்தியம் இல்லாத விஷயம். இயலாத காரியம். நவீன போக்குவரத்து வசதிகள் அப்போது இல்லை. Transport என்ற அமைப்பே இல்லை. கடல் வழித் தடங்கள் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. நில மார்க்கமாகச் சென்றாலும் 12 வயதுச் சிறுவன் எந்த இலக்குமின்றி எங்குதான் எவ்வளவு நாள் பயணிக்க முடியும்? இங்கு ஒரு கேள்வி முளைக்கிறது. இயேசு பிறந்தபோது வானத்து நட்சத்திரம் வழிகாட்ட மூன்று பேர் குதிரைகளில் வந்து அந்த ஒளிக்கு பரிசளித்ததாக விவிலியம் பதிவு செய்திருக்கிறதே. அவர்கள் கீழ்த்திசை நாட்டிலிருந்து வந்ததாக செய்தி இருக்கிறதே. அவர்கள் மீண்டும் வந்து அழைத்துச் சென்றிருப்போர்களோ? வானுலகத்தை வணங்கி | ||
Tuesday, June 14, 2011
பரபரப்பே தூரிகையாய்..... - ஓவியர் ஜீவா
பரபரப்பே தூரிகையாய்.....
http://koodu.thamizhstudio.com/katturaigal_22.php
| ஓவியர் ஜீவா |
உசைன் மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடனேயே, கொஞ்ச நாட்களாக நின்றிருந்த சர்ச்சைகள் மீண்டும் கிளம்பிவிட்டன. பெரும்பாலும் அவர் வரைந்த நிர்வாண கடவுள்களின் ஓவியங்களும், அவர் மீதான எதிர்ப்புக்களுமே, அவர் மறைவின் முக்கிய தலைப்புக்களாக அலசப்பட்டன. அவர் ஓவியங்களின் தன்மை குறித்தோ, தரம் குறித்தோ, பாணி குறித்தோ எவரும் பேசியதாக பார்க்கவில்லை! தலைப்பு செய்திகளில் நம் நாட்டில் ஒரு கலைஞன் இடம் பெற வேண்டுமானால் சர்ச்சைகளுக்குள்ளாக வேண்டும் என்ற நியதியிலிருந்து தப்பவில்லை உசைன்! சர்ச்சைகளை உருவாக்கியதே புகழுக்கும் ஓவியங்களுக்கான பெரு விலைக்கும் இருக்குமோ என்ற சந்தேகம் அடிக்கடி எனக்கு வருவதுண்டு.
உசைனிடம் எனக்கு உள்ள ஒரு நெருக்கமான விஷயம், அவர் திரைப்பட பேனர் கட் அவுட் ஓவியராக வாழ்க்கையை தொடங்கினார் ; நானும் அவ்வாறே என்பதுதான்! பேனர்களில் பெரிதாக வரையும்போது தூரிகை தீற்றல்கள் வேகமாகவும் வலிமையாகவும் வெளிவரும் என்பது ஓவியர்கள் உணர்ந்த உண்மை! கடைசிவரை உசைனின் ஓவியங்களில் இந்த தன்மை இடம் பெற்றது. திரைப்பட பேனர்களின் பளிச்சிடும் கடும் வண்ணக்கலவை எப்போதும் அவரது ஓவியங்களில் இடம் பெற்றன. உசைனின் பயணம் நேர்த்தியாக திட்டமிட்டது போல் இயல்பாக ஆரம்பித்து தொடர்ந்தது. இலக்கியம், நாடகம், திரைப்பட சூழல்களில் முற்போக்கு கலைஞர்கள் இணைந்து சங்கம் அமைத்து பணியாற்றியதை போல ஓவியர்களும் அமைத்த முற்போக்கு ஓவியர் இயக்கத்தில் 1947ல் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்ற தொடங்கினார். இந்தியத் தன்மை மிகுதியாக இருந்த புகழ் பெற்ற வங்க ஓவிய பாணியிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு நவீன பாணியில் இயங்க ஆவல் கொண்டிருந்த ஓவியர்களுடன் உசைனும் இணைந்து பணியாற்ற தொடங்கினார். முற்றிலும் அரூபம் சார்ந்த பாணியில் பயணிக்காமல், உருவங்களை அழகுறச் சிதைத்து , இந்தியத்தன்மையும் மாறாமல் உருப்பெறத் தொடங்கின உசைனின் ஓவியங்கள்! தன் முதல் தனி ஓவியக் காட்சியை இந்தியாவில் கூட அமைக்காமல் ஜூரிச் நகரில் காட்சிக்கு வைத்தார். ஐரோப்பிய நாடுகளிலும் உசைனின் பெயர் பரவத் தொடங்கியது. ஓவியங்களின் விலையிலும் உசைன் மேல்நோக்கிய பயணம் மேற்கொண்டார். சமீப காலங்களில் கோடிகளில் விலை போயின அவரது ஓவியங்கள். ஒரு வருடம் முழுவதும் தினமும் ஒரு ஓவியம் வரைந்து கொடுக்க ஒரு தனியார் கலை அரங்கத்திற்கு ஒப்பந்தம் ஆனது என்று ஒரு செய்தி வெளியானது...ஒவ்வொரு ஓவியமும் ஒரு கோடி ரூபாய்க்கு!
உசைனின் ஓவியங்களில் அடிக்கடி தெரியும் வாய் பிளந்து பாயும் குதிரை வடிவங்கள்...அன்னை தெரசாவும், காப்பிய காட்சிகளும் அடிக்கடி காணக் கிடைக்கும். விநாயகரும் துர்கைகளும் கடவுளர்களும் கூட ஓவியங்களாய் இடம் பெறுவர். 'மாசே சாப்' என்ற அருந்ததிராய் கதாநாயகியாய் நடித்த படத்திற்கு, உசைன் போஸ்டர் டிசைன் கூட செய்திருக்கிறார். விளம்பர வெளிச்சத்தில் எப்போதும் இருக்கவேண்டும் எனபதில் உசைன் மிகவும் கவனமாக இருப்பார். மாதுரி தீட்சித் கதாநாயகியை நடித்த 'ஹம் ஆப்கே ஹை கவுன்' பெருவெற்றியை அடைந்தபோது, அவர் தன்னை மாதுரியின் தீவிர ரசிகராய் வெளிப்படுத்திக்கொண்டார். உசைன் இந்த படத்தை இத்தனை தடவை பார்த்தார், மாதுரியை இத்தனை ஓவியங்களாக படைத்தார் என்று தினமும் செய்திகள் வெளியாயின. பிறகு தபுவின் ரசிகராக கூட மாறினார் என்பது கேள்விப்பட்ட செய்தி! திரைப்படங்களின் மீது அவருக்கு அளவு கடந்த ரசனை. 'ஒரு ஓவியனின் பார்வையிலிருந்து' என்ற அவரது குறும்படம் திரைப்பட் விழாக்களில் விருதுகளை குவித்தது. மாதுரி மீது கொண்ட பற்று அவரை வைத்து 'கஜகாமினி' திரைப்படத்தை இயக்க தூண்டியது. அடுத்து தபு கதாநாயகியாக நடித்த 'மீனாக்ஷி - மூன்று நகரங்களின் கதை' வெளியானது...முதல் நாளே சில இஸ்லாமிய அமைப்பினர்...ஒரு பாடலில் குரானின் வசனங்கள் அப்படியே இடம் பெற்றன என்று சொல்லி ஆட்சேபிக்க, ஒரே நாளில் தியேட்டரை விட்டே தூக்கிவிட்டார் உசைன். பரபரப்புக்கும் உசைனுக்கும் உள்ள தொடர்பு சும்மாவா! அவரது உடை, தோற்றம், அனைத்தும் புகழ் பாதைக்கேற்ப வடித்துக்கொண்டார். செருப்பு அணியாமல் நடந்து 'வெறுங்கால் ஓவியர்' என்ற பட்டமும் கிடைத்தது.
கடவுள் வடிவங்களை நிர்வாணமாக வரைந்தார் என்ற பரபரப்புக்கு முன்பே அவருடைய புகழ் பெற்ற செயல் இந்திரா காந்தியை 'துர்கா'வாக வரைந்ததுதான். நாடே அவசர நிலையின் கொடுங்கோல் ஆட்சியில் பொருமிக்கொண்டிருந்தபோது...அனைவரும் இந்திரா காந்தியை சபித்துக்கொண்டிருந்தபோது, பிற கலைஞர்கள் அமைதி காத்துக்கொண்டிருந்தபோது, உசைன் கொடிய சர்வாதிகாரியை வீரக் கடவுளாக உருவகப்படுத்தி போற்றி பாடினார்! பரபரப்பின் உச்ச கட்டம் அவர் இந்து கடவுளர்களையும் பாரத தாயையும் ஆடையின்றி வரைந்தபோது கிளம்பியது. குறிப்பாக இந்து அமைப்பினர் கடும் கோபமுற்றனர். அவரது கண்காட்சிகள் தாக்கப்பட்டன. ஓவியங்கள் கிழித்தெறியப்பட்டன. நாடெங்கும் கலை சுதந்திரம் பற்றிய விவாதங்கள் கடுமையாக கிளம்பின. கலைஞர்களே இரு பிரிவாக மாறி கலை சுதந்திரம் பற்றிய விவாதங்களில் கடுமையாக விவாதித்தனர்.சல்மான் ருஷ்டிக்கும், தஸ்லிமாவுக்கும் , டேனிஷ் கார்ட்டூன் கலைஞர்களுக்கும் நேர்ந்த கதி இப்போது உசைனுக்கு நேர்ந்தது. வேற்று மதத்தை சேர்ந்த அவர் தன் கடவுள்களை அப்படி வரைவாரா என்று கோபக்குரல்கள் கிளம்பின. நாடெங்கும் நூற்றுக்கணக்கான வழக்குகள் அவர் மீது பாய்ந்தன. வெளிநாட்டுக்கு சென்ற அவர் இந்தியா திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. தொண்ணூறு வயது கடந்த நிலையில் வெளிநாட்டிலேயே மறைந்து அங்கேயே புதைந்தும் போனார் இந்த மகத்தான கலைஞர்! அவரை பற்றி விவாதிப்பவர்கள் அவருடைய பிற ஓவியங்களை பார்த்திருப்பார்களா, ரசித்திருப்பார்களா என்ற வினா எப்போதும் எனக்குண்டு.
....காத்திருப்போம் மீண்டும் ஒரு உசைன் பிறப்பதற்கு!!!!
- ஓவியர் ஜீவா
http://koodu.thamizhstudio.com/katturaigal_22.php