| தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறுந்திரைப் பயணம் நன்மங்கலம் (சென்னை) (4th Shortfilm Screening Travel, Nanmangalam, Chennai) | ||
| ||
சென்னைக்கு மிக அருகில் கிராமம் போல் தோன்றினாலும், உண்மை அவ்வளவு தூரத்திற்கு நகரம் விரிந்துவிட்டது. நன்மங்கலம் கிராமம், நகர வாழ்க்கைக்கும் கிராம வாழ்க்கைகும் இடையில் ஒரு புதுவித வாழ்க்கை மேற்கொள்கிறது. வனத்துறையின் சீறிய கட்டுப்பாடுகளால் இன்னும் அந்த காடு பிழைத்திருக்கிறது. இன்னும் அப்பார்ட்மெண்டுகள், ஐடி பார்க்குகள், தனியார் நிறுவனங்கள் அபகரிக்கவில்லை என்று ஒரு பக்கம் மனது மகிழ்ந்தாலும் இன்னொரு பக்கம் எப்பொழுது தாரைவார்த்து கொடுக்கபடுமோ என்ற பயம் உள்ளது நிஜம். அந்த காடுகளின் நடுவே இயற்கையுடன் இயற்கையாக ஐக்கியம் ஆகிவிட, அதுனுடன் மழை பெய்ததால் உணடான தென்றல் காற்று, இறைச்சல் இல்லாத இயற்க்கையின் சத்தம் இதனிடியே வாழும் கிராம மக்கள் கொடுத்துவைத்த்வர்கள் தான். சொர்கம் மன்ணிலே தான் இருக்கிறது. ஒரு 30 வருடம் முன்பு சென்னை வாழ் மக்கள் எதிர்காலம் பற்றி நினைத்து பார்த்திருந்தால் கூவம் ஆற்றை இப்படி பாழ்படுத்தியிருக்கமாட்டார்கள். தங்களின் பிள்ளைகளுக்கே அவர்கள் விட்டு சென்றது துர்நாற்றம் வீசும் கூவம் தான். மக்கள் கொஞ்சம் யோசித்தால் நலம். இந்த இயற்கையுடன் இயற்கையாக இணைந்து சென்று கொண்டிருந்த நேரம் இருட்ட தொடங்கிவிட்டது. சரி இன்னும் குறும்படங்கள் திரையிடல் தான். நன்மங்கலம் கிராமத்தின் முக்கிய வீதியில் எப்பொழுதும் போல் நமக்கு முழு ஆத்ரவளிக்கும் சிறுவர் படையுடன் தான் நம்/...................... Read More.... http://thamizhstudio.com/shortfilm_guidance_screeningtravel_4.php |
Tuesday, November 23, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய நான்காவது குறுந்திரைப் பயணம் நன்மங்கலம் (சென்னை)
Tuesday, November 16, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது குறுந்திரைப் பயணம் நன்மங்கலம் (சென்னை)
| தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது குறுந்திரைப் பயணம் நன்மங்கலம் (சென்னை) | ||
| ||
ஆர்வமுள்ள நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த இடத்திற்கு வர விரும்பும் ஆர்வலர்கள், V 51 பேருந்தில் ஏறி வெள்ளக்கல்லு பேருந்து நிலையத்தில் இறங்கிய பின்னர் கீழ்க்கண்ட எண்களுக்கு அழைக்கவும். இந்த திரையிடலுக்கு வழிவகுத்த நண்பர் ஜெயகாந்தன், மற்றும் நன்மங்கலம் கிராம வார்ட் உறுப்பினர் திரு. சமாதானம் நல்லமுத்து ஆகியோருக்கு தமிழ் ஸ்டுடியோவின் மனமார்ந்த நன்றி. மேலும் இந்த மாதம் முதல் தமிழ் ஸ்டுடியோவின் குறுந்திரைப் பயணம் ஒருங்கிணைப்பாளராக கல்பாக்கம் கலையரசன் பொறுப்பேற்கிறார். உங்கள் கிராமத்தில் இதுப் போன்ற குறும்படத் திரையிடல்கள் நடைபெற வேண்டுமாயின் கீழ்க் கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும். மேலும் விபரங்களுக்கு | ||