தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 31வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009) | |||||||||||||||||||||
நாள்: சனிக்கிழமை (09-04-2011)
முதல் பகுதி: (3 மணி) கலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல் இரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல் இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கிள் ரவிஷங்கரன் அவர்கள் பங்கேற்று ஒளிப்பதிவு தொடர்பான முக்கியமான வழிகாட்டலை நடத்துகிறார். ஆர்வலர்கள் ஒளிப்பதிவு தொடர்பான தங்களின் அனைத்து விதமான ஐயங்களையும் கேட்டு தெளிவுப் பெறலாம். இவர் திருட்டுப் பயலே, வியாபாரி போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். மூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல் இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.
மூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்: மூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் படத்தொகுப்பாளர் பி. லெனின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். நான்கு குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். லெனின் அவர்கள்தான் தமிழின் முதலில் குறும்பட வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவர் இயக்கிய நாக் அவுட் குறும்படம்தான் தமிழில் குறும்படங்களுக்கான களம் அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையல்ல. மேலும், திரைப்படத் துறையில் வெற்றிகரமான படத்தொகுப்பாளராக பணியாற்றியவர். காதலன் திரைப்படத்திற்கு படத்தொகுப்பிற்காக வி.டி. விஜயனுடன் இணைந்து தேசிய விருது பெற்றவர். மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற: http://thamizhstudio.com/shortfilm_guidance_kv_31.php |
Wednesday, April 6, 2011
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 31வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment