தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவு | ||
| ||
இரவு 7.15 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் முப்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்) இந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார். இவர் ஒளிப்பதிவு செய்த "ஆயிஷா" திரைப்படம் லண்டன் மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. மேலும் தேசிய விருது பெற்ற "ஜானகி விஸ்வநாதன்" இயக்கிய "கனவு மெய்ப்பட வேண்டும்" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விருதுகளும் பெற்றுள்ளார். திரையிடப்படும் படங்கள்: தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: முதலாவதாக 'ஆழத்தாக்கம்' என்கிற குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படத்தின் இயக்குனர் திரு. பைசல் அவர்கள். உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: Huozhe (1994) in english To Live இயக்கம்: Zhang Ymou இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0110081/ (குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.) முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268 |
Monday, May 24, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment