நேரம்: காலை பத்து மணி முதல் மாலை ஐந்து மணி வரை
இச்சேவை முற்றிலும் இலவசம்
எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024
தொலைபேசி: 9840698236, 9894422268
Tuesday, December 29, 2009
குறும்பட ஆலோசனை
Wednesday, September 16, 2009
தங்க மீன்கள் முத்தமிடும் கால்கள்
தங்க மீன்கள் முத்தமிடும் கால்கள்
A Film by
Year --
Run time : --
“துடிக்கிற ஆட்டத்தை திரையிலே பார்த்திருக்கேன்,
விசில் அடிக்கிற கூட்டத்தில் தரையிலே ஆடிருக்கேன்”
- இளையராஜா “ நாயகனில்
திரைப்படங்களை திரையரங்குகளில் தான் மக்கள் காலகாலமாய் கண்டு களித்து வந்திருக்கின்றனர். இப்போது அந்த அனுபவமே ஒரு பழங்கதையாய் மாறிவிட்டது போலிருக்கிறது. வீட்டுக்கு வீடு வந்துவிட்ட சின்னத்திரை, திரைப்படம் பார்க்கும் அனுபவத்திற்கே ஒரு மாற்றத்தை கொண்டுவந்துவிட்டது. திரைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில், திரையில் பாய்ந்து வந்த புகைவண்டியை கண்டு பயந்து ரசிகர்கள் வெளியே ஓடினார்களாம். மௌனப்பட காலத்தில் ஒவ்வொரு ரீல் மாற்றும்போதும், நாட்டிய நிகழ்ச்சிகளும் மாஜிக் நிகழ்ச்சிகளும், திரைக்கதையை விளக்கிக் கூறும் கலைஞர்களின் உரை நிகழ்ச்சிகளும் நடைபெற்றனவாம். |
பின்னர் பேசும் படங்கள் வந்தபோது பெற்ற அனுபவங்கள் வேறு வகையானவை. சினிமாஸ்கோப், 70 எம் எம், 3டி, சினிரமா, ஸ்டீரியோபோனிக் ஒலி என்று புதுப்புது கண்டுபிடிப்புகள், ரசிகர்களை எப்போதும் வியப்பிலாழ்த்தி வந்திருக்கின்றன. தந்திரக்காட்சிகளும், இரட்டை வேடக்காட்சிகளும் இப்போது காணக்கிடைக்கும் டிஜிடல் சாகசங்களும் எப்போதும் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்துக்கொண்டேதான் இருக்கும்.
சின்னத்திரையின் ஆதிக்கத்திற்கு முன்னிருந்த அந்தக்காலத்தை நினைத்துப் பார்ப்போம். இப்போதைய கறுப்பு மார்க்கெட்டில் டிக்கட் விற்று காசு பார்க்கும் ரசிகர் மன்றங்கள் அப்போது இல்லை. முழு ஈடுபாட்டோடு கைக்காசை செலவழித்து தோரணம் கட்டி விழா எடுத்து அப்போதைய கதாநாயகர்களின் நிலையை உயர வைத்த அப்பாவிகள்தான் அப்போது இருந்தனர். பின்னர் அரசியல் உள்ளே புகுந்து ரசிகர் மன்றங்களை அதிகார பீட ஏணிகளாக மாற்றியது அனைவரும் அறிந்த கதைதான். இப்போது கூட, அரசியலில் நுழைய இருக்கும் ஒரு நடிகருக்கு, தினமும் ஒரு “நற்பணி மன்றம்” ஏற்படுத்திக் கொண்டுருக்கும், அரசியல் கனவில் திளைக்கும் புத்திசாலி இளைஞர்களை உங்களைச் சுற்றிலும் பார்க்கலாம். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை என்ற அரசியல் காஸ்ட்டியூமில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட இவர்களை, மாலை முரசிலோ, மலரிலோ கட்டாயம் பார்த்திருக்கலாம். அப்போது புதுத்திரைப்படம் திரையிடப்படும் திரையரங்கிற்கு வெளியே முதல் நாளிரவே நூற்றுக்கணக்கில் சைக்கிள்கள் வரிசையில் அணிவகுத்து நிற்கும். கோவைப் பகுதியில் சைக்கிள் டிக்கட் என்று ஒரு பிரிவே இருந்தது. பாட்டுப் புத்தகங்கள் விற்பனை கொடி கட்டி பறக்கும். கைகளால் வரையப்பட்ட பேனர்களையும், கட் அவுட்களையும் ஓவியக்கூடத்திற்கே சென்று பார்த்து மகிழ்ந்தினர் ரசிகர்கள். நிரம்பி வழியும் தியேட்டரில் படம் பார்ப்பதே உற்சாக அனுபவம். அதுவும் தரை டிக்கெட் என்று அழைக்கப்பட்ட கீழ் வகுப்பில் மகிழ்ச்சியும் ஆரவாரமும் கொடி கட்டிப் பறக்கும். முதலாளிகளே பிளாக்கில் டிக்ககெட் விற்கும் ஈனப்பிழைப்பும், டெலிபோன் புக்கிங் என்ற பெயரில் டிக்கெட்டிற்கு ஐந்து ரூபாய் கூட்டி விற்கும் கொள்ளையும் இருந்ததில்லை. சுத்தம் செய்யப்படாத கழிவறைகளும், காண்டீன் கொள்ளைகளும் உடைந்த நாற்காலிகளும், பழைய கார்பனில் மங்கலாக படம் காட்டும் தொழில் நுட்பமும் இருந்ததேயில்லை.
நல்ல, மற்றும் பிறமொழிப்படங்களை காட்டுவதற்காக சனி, ஞாயிறுகளில் காலைக்காட்சிகளும் இருந்தன. சில சமயம் குறைந்த கட்டண காட்சிகளும் இருந்தன. அப்போது தினசரி மூன்று காட்சிகள் தானே. சாந்தாராம், ராஜ்கபூர் படங்களையெல்லாம் இந்த காலைக்காட்சிகளில் தான் நிறைய ரசிகர்கள் பார்த்தனர். எழுபதுகளில் மாணவப் பருவத்தில் சத்யஜித்ராய் படங்களை காலைக்காட்சிகளில் சென்னை கிருஷ்ணவேணி தியேட்டரிலும், கலைவாணர் அரங்கிலும் நிறைய பார்த்திருக்கிறேன். |
கோவை ஸ்ரீபதி தியேட்டரிலும் சில மாதங்கள் தினமும் இன்டர் ஷோ என்ற பெயரில் இரவு 8 மணிக்கு ஐரோப்பிய திரைப்படங்களை திரையிட்டு த்ரூபோ, ஃபாஸ்பைண்டர், ஜானுஸ்ஸி, போன்ற மேதைகளை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தனர்.
ஃபிலிம் சொசைட்டிகள் என்று அழைக்கப்பட்ட திரைப்படக் கழகங்களை நிறைய நகரங்களில் அறிவு ஜீவிகள் உருவாக்கி நல்ல திரைப்படங்களை சிறய குழுக்களுக்கு திரையிட்டு விவாதங்களையும் நடத்தி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தலாயினர். மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் பரவலாக சினிமா ரசனையை உயர்த்திய இந்தக் குழுக்கள் பின்னர் தமிழகத்திலும் பரவினர். திரையரங்குகளில் திரையிட வசதியற்ற 16 எம் எம் படச்சுருளைக் கொண்டு தான் திரையிடல்கள் நடைபெறும். பெரும் பாலும் ஒரு சிறிய அறையிலோ, அரங்கிலோதான் இந்நிகழ்ச்சி நடைபெறும். காற்றோட்டமில்லாத அறைகள், அமர வசதியற்ற நாற்காலிகள், சப் டைட்டிலை மறைக்கும் முன்னால் அமர்த்திருக்கும் சக ஜீவிகளின் தலைகள், என்று இப்படியும் அரங்குகளை, தேடித் தேடி திரைப்படங்களை திரையிட்டனர். ஆனால் பொருளாதார ஆதரவற்றதனால் நிறைய கழகங்கள் காணமல் போயின. ஆனாலும் மறக்க இயலா அனுபவத்தையும் திரைப்பட...
To read more please click.. www.thamizhstudio.com
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 (இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009) )
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 (இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009) )
திருத்தரைப்பூண்டியை சேர்ந்த பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 A2 மாவட்டம் நடத்தும் 'படைப்பிலக்கிய போட்டி 2009-2010 க்கான குறும்படங்கள் வரவேற்கப்படுகின்றன.
பரிசுகள்:
ஐந்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு படத்துக்கும் ஐயாயிரம் வீதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
1. குறும்படங்கள் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு எடுக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். ஆவணப்படங்கள் போட்டிக்கு ஏற்புடையதல்ல.
2. குறும்படங்கள் முப்பது (30) நிமிடத்திற்கு மேற்படாத கால அளவு கொண்டிருத்தல் வேண்டும்.
3. குறும்படத்தின் இரண்டு சி.டி. க்களை அனுப்ப வேண்டும்.
4. போட்டிக்காக குறும்படத்தை அனுப்புகிறவர் எந்த உரிமையில் அதனை அனுப்புகிறார் என்பதை குறிப்பிட வேண்டும்.
5. தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது.
6. குறும்படங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி அக்டோபர் 31, 2009 (31-10-2009)
7. குறும்படங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
லயன் உத்தமசோழன்
மாவட்டத் தலைவர் - கலை இலக்கியம்
525, சத்யா இல்லம், மடப்புரம் - 614715
திருத்தரைப்பூண்டி
தொலைபேசி: 04369 223292
அலைப்பேசி: 9443343292
(நிபந்தனைகள் குறித்தோ, போட்டிக் குறித்தோ ஏதோனும் ஐயங்கள் இருப்பின் போட்டியை நடத்தும் அமைப்பினரை தொடர்பு கொள்ளவும். போட்டி தொடர்பாக தமிழ் ஸ்டுடியோ.காம் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.)
Sunday, September 6, 2009
ஈழம் தொடர்பான குறும்படங்கள் தேவை.
தொடர்புக்கு
சரவணகுமார்
43/6, பஜார் வீதி,
நெசபாக்கம், கே.கே நகர்.
சென்னை 600 078
செல் பேசி: (91) 98400 90898
மின்னஞ்சல்: savetamil@gmail.com
எங்களின் முந்தைய நிகழ்வுகள்
www.save-tamils.blogspot.com
Wednesday, September 2, 2009
தீபிகா சமூகத் தொடர்பு கல்வி மையம் நடத்தும் விழிப்புணர்வு விளம்பரப் படப் போட்டி (இறுதித் தேதி: 12-09-09 மாலை 5 மணிக்குள்.)
பரிசுகள்:
முதல் பரிசு: ரூபாய் 5000
இரண்டாம் பரிசு: ரூபாய் 3000
மூன்றாம் பரிசு: ரூபாய் 2000
போட்டி விதிமுறைகள்:
1. ஒருவர் எத்தனை விளம்பரப் படங்களை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் போட்டிக்காக ஒன்றை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.
2. படைப்புகள் 2D, 3D, கார்ட்டூன், அசையும் பிம்பங்களாக (Creative Animation) வும் இருக்கலாம்.
3. விளம்பர கால அளவு 60 வினாடிகள் மட்டுமே (பெயர், மற்ற விபரங்கள் உட்பட).
4. சிறந்த மூன்று விளம்பரப் படங்களுக்கு மேற்கண்ட மூன்று பரிசுத் தொகையும், போட்டியில் கலந்துக் கொள்ளும் அனைத்து படைப்புகளுக்கும் தீபிகாவின் சான்றிதல்களும் வழங்கப்படும்.
4. போட்டியில் கலந்துக் கொண்ட சிறந்தப் படைப்புகளை 19-09-09 அன்று தீபிகா அரங்கில் திரைட்டு, படைப்பாளிகளுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்படும். பரிசுத் தொகைகளும் அன்றே வழங்கப்படும்.
5. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
6. போட்டிக்காக அனுப்பப்பட்ட எந்தப் படைப்பையும் திருப்பி அனுப்ப இயலாது.
7. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த விளம்பரப் படங்களை சமூக நலன் கருதி, திரையரங்கு, தொலைகாட்சி ஆகியவற்றில் படைப்பாளியின் பெயர் மற்றும் விபரங்களுடன் ஒலிபரப்பு செய்ய முயற்சிகளின் மேற்கொள்ளப்படும்.
அனுப்ப வேண்டியவை:
1. படைப்பாளிகளின் பெயர் உள்ளிட்ட முழு விபரம், தொடர்பு முகவரி மற்றும் உடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய DBICA முகவரிக்கு நேரிலோ, அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம்.
2. படைப்புகளை DVD யாக அனுப்பி வைக்க வேண்டும்.
3. படைப்பு தொடர்பாக எந்தப் பிரச்சனை எழுந்தாலும், அதன் படைப்பாளியே முழுப் பொறுப்பேற்க வேண்டும். அதற்கான உறுதி மொழிக் கடிதத்தையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
4. படைப்புகள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: 12-09-09 மாலை 5 மணிக்குள்.
* படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குனர் - தீபிகா
45, லேண்டன்ஸ் சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை 600010
தொலைபேசி: ௦044 - 26423930 / 26651435
Wednesday, August 12, 2009
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் சிறப்பு குறும்பட வட்டம் - சிவகாசி
நாள்: சனிக்கிழமை (15-08-09)
இடம் : ஐஸ்வர்யா கல்யாண மண்டபம், புறவழி சாலை, சிவகாசி.
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை
சிறப்பு விருந்தினர்:
எழுத்தாளர் திரு. முருகேசப் பாண்டியன், என் இலக்கிய நண்பர்கள் எனும் இவரது நூல் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிராமத்து நினைவுகளை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருபவர்.
திரையிடப்படும் குறும்படங்கள்:
நானும் என் விக்கியும்
குண்டன்
கோத்தி
மேலும் சில உலகப் புகழ் பெற்ற குறும்படங்களும் திரையிடப்படும்.
திரையிடப்படும் உலகப்படம்.
ரஷோமான்
அனுமதி இலவசம். அனைவரும் வருக.
மேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:
9840698236, 9894422268
Monday, August 10, 2009
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம்.
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம்.
| கடந்த சனிக்கிழமை (08-08-2009) அன்று சென்னை எக்மோரிலுள்ள ஜீவன ஜோதி அரங்கில் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய பதினோராவது குறும்பட வட்டம் இனிதே நடைபெற்றது. விழா வழக்கம் போல் காலை பத்து மணிக்கே தொடங்கியது. இந்த மாதம் அரங்க நிர்வாகிகள் செய்த ஒரு சில தவறினால் காலை நிகழ்வில் உலகத் திரைப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெறவில்லை. |
பிறகு ஒருவாறு நண்பகல் ஒரு மணியளவில் சரி செய்யப்பட்டு இருந்த குறுகிய இடைவெளியில்இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய, "தக்கையின் மீது நான்கு கண்கள்" குறும்படம் திரையிடப்பட்டது. இது ச. கந்தசாமி அவர்களின் சிறுகதையிலிருந்து உருவாக்கப்பட்ட குறும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் குறும்பட வட்டம் வழக்கம் போல் சரியாக மூன்று மணியளவில் தொடங்கக்கபட்டது. இந்த மாதம் எழுபதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
முதல் பகுதி:
இலக்கியம் பகுதி நடைபெறாது என்று சென்ற மாதம் அறிவித்த போதிலும் பெரும்பாலான ஆர்வலர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்மாதமும் இலக்கியம் பகுதி நடைபெற்றது. இதில்பேராசிரியர் திரு. பெரியார்தாசன் அவர்கள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். பொதுவாக இலக்கியம், திரைப்படங்கள் என தனது பேச்சை தொடங்கினார்.
அதில் இருந்து சில துளிகள்:
| அது பச்சையப்பாக் கல்லூரியில் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம். கேள்வி இதுதான். அசோக வனத்தில் சீதா நிலையை விளக்குக? (கேள்வி சரியாக நினைவில் இல்லை. தவறு இருப்பின் வாசகர்கள் மன்னிக்கவும்) இதற்கு அனைவரும் அமைதியாக தேர்வு எழுதிக் கொண்டிக்க ஒரு மாணவன் மட்டுமே அமைதியாக இருந்தான். நான் இருமுறை சென்று அவனிடம் எழுது தம்பி என்று கூறிவிட்டு |
வந்தேன். அவன் அப்போதும் அமைதியாக இருந்தான். மூன்றாவது முறை நான் சென்று அவன் தாளை வாங்கிப் பார்த்தேன். அதில் எழுதி இருந்தான். வனத்தில் அனைத்து மலர்களும் சிரித்துக் கொண்டிருந்தன. ஒரு மலரை தவிர. என்று. அந்த மலர் சீதா. இதை எழுதியது இன்றையக் கவிப் பேரரசு வைரமுத்து. என்று முடித்தபோது அரங்கில் கரவொலி எழுந்தது.
அந்தக் காலத்தில் ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே நல்ல கவிஞனாக வந்தான். ஆனால் இன்று தடுக்கி விழுபவன் எல்லோருமே கவிஞனாக இருக்கிறான் என்று பெருமைப் பொங்க சொன்னார்.
சேசாச்சலம் என்கிற தன்னுடைய இயற்பெயர் எப்படி பெரியார்தாசன் என்று மாறியது என்பதையும் சுவைபடக் கூறினார். மேலும் இந்தக் காலத்தில் ஒருத் துறையில் வளர்ந்த ஒருவன் மற்ற யாரையும் அந்த துறையில் வளர விடுவது இல்லை என்று வருத்தப்பட்டார். மேலும் பல உண்மைகளையும் போட்டு உடைத்தார். அது சார்ந்த நம் பலரும் இணையதளத்தை படிப்பதால் அதனைத் தவிர்த்து விடுவோம்.
தொடர்ந்து நகைச்சுவைத் தெறிக்க பேசிய பெரியார்தாசன் அவர்கள் அரங்கில் இருந்த அனைவரையும் மெய்மறக்க செய்தார். முடிவில் தன்னிலை மறந்து ஒரு சிலர் அவர் காலில் விழுந்து வணங்கினர். அவர் பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது. அரங்கில் இருந்த ஒருவர் சிரித்து சிரித்து, இறுதியில் சிரிக்க முடியாமல் அழுதே விட்டார்.
| பின்னர் இந்த மாதம் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கப்பட்டது. இந்த மாதம் சிறந்த வலைப்பதிவருக்கான விருதை கோவையை சேர்ந்த உளவியல் பேராசிரியர் திரு. செல்வராஜ் அவர்கள் பெற்றுக் கொண்டார். தன்னுடைய வலைப்பதிவில் பல்வேறு விடயங்கள் குறித்து எழுதும் இவர் உளவியல் குறித்து எழுதிய ஒரு சிலக் கட்டுரைகள், மற்றும் புரட்சியாளர்கள் புத்தக அறிமுகம் யாவும் |
படிக்க படிக்க திகட்டாதவை. விருதைப் பெற்றுக் கொண்ட செல்வராஜ் அவர்கள் சில நிமிடங்கள் தன்னுடைய வலைப்பதிவு குறித்தும், கட்டுரைகள் குறித்தும் பேசி சென்றார். இவர் வலைப்பூ முகவரி: gestaltselvaraj.blogspot.com/
இரண்டாம் பகுதி:
இந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதிக்கு சென்னை தரமணி திரைப்படக் கல்லூரி நடிப்புத் துறை பேராசிரியர் திரு. அருணாச்சலம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நடிப்பு துறையில் பல நுணுக்கங்கள் பற்றி ஆர்வலர்களுக்கு விரிவாக சொல்லிக் கொடுத்தார். மேலும் திரைப்படங்களில் நடிப்பது குறித்தும், நடிகர்கள் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார்.
அதில் இருந்து சில துளிகள்:
| நடிப்பு என்பது சொல்லிக்கொடுத்து வருவதல்ல.. நடிப்புப் பயிற்சி ஒரு சில நுணுக்கங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் நீங்கள் இன்னும் சிறப்பாக நடிக்கலாம். ஆனால் வெறும் பயிற்சியை மட்டுமே வைத்துக் கொண்டு நீங்கள் மிக சிறந்த நடிகனாக வளர்ந்து விட முடியாது. ஆரம்பக் காலங்களில் நடிப்பில் பலவகை இருந்தது. |
வீதி நாடகம், மேடை நாடகம், தெருக்கூத்து என்று பல இருந்தது. இன்றும் அதன் நவீன வடிவமான சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என்று பலவித நடிப்புகள் வந்து விட்டன.
ஒவ்வொரு ஊடக நடிப்பும் வெவ்வோறு வகையில் வேறுபடும். உதாரணமாக மேடை நாடகத்தில் முதல் சில வரிசைகளில் அமர்ந்திருப்பவர்களுக்கு நடிகரின் நடிப்பு சரியாக சென்றடையும். ஆனால் கடைசி வரிசையில் அமர்ந்திருப்பவன் அதனை வேறுவிதமாக புரிந்துக் கொள்வான். "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே" என்பதை மேடையில் வசனமாக சொல்லும்போது முன் வரிசை ஆர்வலர்கள் சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். ஆனால் கடைசி வரிசை ரசிகனையும் சென்றடைய நடிப்பை வேறு விதமாக பயன்படுத்த வேண்டும். "ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே" என்று குரலை உயர்த்தி, உடல் மொழியால் நடித்துக் காட்ட வேண்டும்.
இந்தக் காலத்தில் ஒரு படத்தில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அந்த நடிகர்தான் மனதில் நிற்பாறேத் தவிர, அந்தக் கதாப்பாத்திரம் நம் மனதில் நிற்காது. ஆனால் அதில் யார் நடிக்கிறார்கள் என்பதைக் காட்டிலும் அது எண்ணக் கதாப்பாத்திரம் என்பதுதான் நம் மனதில் பதிய வேண்டும். அதனை யார் பதிய வைக்கிறார்களோ அவர்கள்தான் சிறந்த நடிகர்கள். என்று நடிப்பு பற்றி தனது சுவையான பேச்சைத் தொடர்ந்தார்.
மேலும், சிவாஜி கணேசன் மிக சிறந்த நடிகர்தான். அவர் செய்வது ஓவர் ஆக்ட் என்று யாராவது சொன்னால் அது பொய். ஒரு நடிகனிடமிருந்து போதுமான நடிப்பை வாங்க வேண்டியது ஒரு இயக்குனரின் பொறுப்பே தவிர இவ்வளவுதான் நடிக்க வேண்டும் என்று திட்டமிடுவது ஒரு நடிகனின் வேலையல்ல. என்றும் ஆணித்தரமாகக் கூறினார்.
| நடிப்பு என்பது சொல்லிக்கொடுத்து வருவதல்ல.. நடிப்புப் பயிற்சி ஒரு சில நுணுக்கங்களை உங்களுக்கு கற்றுக் கொடுக்கும். பயிற்சி எடுத்துக் கொண்டால் நீங்கள் இன்னும் சிறப்பாக நடிக்கலாம். ஆனால் வெறும் பயிற்சியை மட்டுமே வைத்துக் கொண்டு நீங்கள் மிக சிறந்த நடிகனாக வளர்ந்து விட முடியாது. ஆரம்பக் காலங்களில் நடிப்பில் பலவகை இருந்தது. |
நடிப்பு பற்றி ஒரு பயிற்சி வகுப்பையே நடத்திய அவர் இறுதியாக சில காட்சிகளை நடித்தும் காட்டினார். அதிலும் தன தாய் இறந்துக் கிடப்பதைக் கவனிக்காத ஒரு மகன் பின்னர் அதனைக் கவனிக்குபோது அவனுக்குள் ஏற்படும் உணர்வுகளை மிக தத்ரூபமாக நடித்துக் காட்டினார். மேடையில் அவர் ஏற்றிருந்த கதாப்பாத்திரம் அழ, அரங்கில் அமர்ந்திருந்த சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட ஆர்வலர்களில் கண்களிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது. ஒரு சிலர் எழுந்து சென்று வெளியில் அழுதே விட்டனர்.
பின்னர் வாசகர்கள் கேள்விகள் கேட்க அதற்கு அருணாச்சலம் விடையளித்தார். தொடர்ந்து பத்து மாதங்களாக நடைபெற்ற குறும்பட வட்டங்களில் ஆர்வலர்களை கேள்விகள் கேட்க சொன்னால், உங்கள் முதல் படம் எது? நீங்கள் ஏன் இந்து துறைக்கு வந்தீர்கள் என ஒரு நடிகையை தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு பேட்டி எடுப்பது போல் கேட்பார்கள். ஆனால் தொடர்ந்து பத்து மாதங்களாக, தொழில் நுட்பம் சார்ந்த கேள்விகளைக் கேளுங்கள், உங்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் உதவும் வகையில் கேள்விகளைக் கேளுங்கள் என்று நாங்கள் கேட்டுக் கொண்டே இருந்தோம். அதன் பலனை இந்த மாதம் அனுபவித்தோம். கேள்வி கேட்ட அனைவரும் கண்களில் ஒத்திக் கொள்வதுப் போல் கேள்விகள் கேட்டனர். மிக சிறந்த விவாத மேடையாக இந்த மாதம் அமைந்தது. நாங்கள் எதற்காக இந்த நிகழ்ச்சியை பல இடையூறுகளுக்கிடையில் நடத்துகிறோமோ, அதன் பலனை அனுபவித்தது போல் இருந்தது.
மூன்றாம் பகுதி
| இந்த மாதம் குறும்படத் திரையிடல் பகுதிக்கு திரைப்படக் கல்லூரியில் இயக்கத் துறை தலைவராக இருக்கும் திரு. ரவிராஜ்அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நான் விளம்பர இயக்கம் பிரிவில் பட்டயப் படிப்பு படிக்கும்போது எனக்கு பேராசிரியராக இருந்தவர் திரு. ரவிராஜ் அவர்கள். எனவே அவர்கள் இந்த மாதம் எங்கள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. |
இந்த மாதம் திரையிடல் பகுதியில் முதலாவதாக திரு. ராஜ்குமார் இயக்கிய "எனது நூலகத்தின் கதை" குறும்படமும் அடுத்ததாக திரு. ஸ்ரீராம் இயக்கிய "அதிர்ஷ்டம் ஐந்து கிலோ மீட்டரில்" குறும்படமும், மூன்றாவதாக திரு. சி.ஜெ. முத்துக்குமார் இயக்கிய "கோத்தி" குறும்படமும் திரையிடப்பட்டது.
இதில் எனது நூலகத்தின் கதை குறும்படம் நூல்கள் மேல் காதலாக இருக்கும் ஒருவனது உணர்வுகளை கவிதைகளாக படம் பிடித்திருக்கும் படம். அதிர்ஷ்டம் ஐந்து கிலோமீட்டரில் குறும்படம், நடத்திக் கேட்ட மனைவிக்கு கிடைக்கும் தண்டனையை கொஞ்சம் ஆச்சரியத்துடன் சொல்லி இருக்கும் படம். கோத்தி குறும்படம் அரவாணிகளின் துயரங்களை பதிவு செய்திருக்கும் படம்.
மூன்று படங்களின் நிறை குறைகள் பற்றி அதன் இயக்குனர்களுக்கு சுட்டிக்காட்டிய திரு. ரவிராஜ் அவர்கள், ஆர்வலர்களுக்கான ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் மூன்றுக் குறும்பட இயக்குனர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
இந்த மாதம் பேராசிரியர்கள் மாதமாகவே அமைந்து விட்டது. மூன்று சிறப்பு விருந்தினர்கள், சிறந்த வலைப்பதிவர் பெற்ற திரு. செல்வராஜ் என அனைவரும் பேராசிரியர்களாகவே இந்த மாதம் அமைந்து விட்டனர்.
தொடர்ந்து பதினோரு மாதங்கள் சோதனை அடிப்படையில் நடைபெற்ற குறும்பட வட்டம் அடுத்த மாதம் முறையாக தொடங்கப்படும். அதற்கான விழா அடுத்த மாதம் செப்டம்பர் பன்னிரண்டாம் தேதி காலையில் நடைபெறும். மாலை மூன்று மணியளவில் வழக்கம்போல் குறும்பட வட்டம் நடைபெறும்.
விருதுடன் ஸ்ரீராம் |
விருதுடன் முத்துக்குமார் |