தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது பௌர்ணமி இரவு. | ||
| ||
இரவு 08.30 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 01.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். இடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்) திரையிடப்படும் படங்கள்: தமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: உலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: பதேர் பாஞ்சாலி இந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள: http://www.imdb.com/title/tt0048473/ (குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.) முன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268 |
Friday, July 23, 2010
தமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் ஆறாவது பௌர்ணமி இரவு.
Tuesday, July 20, 2010
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய முதல் குறுந்திரைப் பயணம் (17-07-2010)
தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய முதல் குறுந்திரைப் பயணம் (17-07-2010) | ||||||
| ||||||
சென்னையில் கூட குறும்படங்கள் முடிந்த பின்னர் கைத் தட்டுங்கள் என்று சொன்ன பிறகுதான் கைத் தட்டுவார்கள். ஆனால் இந்தக் கிராம சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொரு குறும்பட முடிவிலும் கரகோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரையிடல் நிகழ்வு பத்து மணி வரை நடைபெற்றது. சுமார் பதினைந்து குறும்படங்கள் திரையிடப்பட்டது. சுமார் ஒன்பதரை மணியளவில் பெரியவர்கள் தங்கள் வீடு நோக்கி புறப்பட்டனர். சென்றவர்கள் மீண்டும் தங்கள் குழந்தைகளை அழைத்து செல்ல வந்திருந்தனர். ஆனால் சிறுவர்களோ, நீ போ.. நான் அப்புறமா வரேன்.. என்றுக் கூறி அனைத்துக் குறும்படங்களையும் பார்த்தப் பின்னரே வீட்டுக்கு சென்றனர். விடிந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் வயல்வெளிக்கு இரைக்கும் பம்ப் செட்டிலும், கிணற்றில் நீந்தியும் குளித்த அனுபவம் காலையில் கிடைத்தது. இந்த பம்ப் சேட்டை அடைவதற்கு நாங்க பயணப் பட்ட தூரம் குறைந்தது நான்கு கிலோ மீட்டர்கள் இருக்கும். ஆனால் பாதை முழுவது அரிதான பல பறவைகள் எங்களுடன் பயணப்பட்டது. ஏரி முழுவது வளந்திருந்த புல்வெளிகள், ஈச்சமரங்கள், தேனீக்கள், பெயர் தெரியாத பல பறவைகள் என அந்தப் பாதை கொடுத்த பரவசம் நடந்து சென்ற களைப்பை கலைந்தது. குறுந்திரைப் பயணத்தை முடித்துக் கொண்டு ஞாயிறு அன்று செஞ்சி புறப்படத் தயாரானோம். வேல்லிமேடுப் பேட்டை வந்து காலை உணவருந்த நல்ல உணவகம் தேடினோம். ஒரு சிறு உணவகம், ஒரு இட்லி 1.50 மட்டுமே. 600 ரூபாய் பில் வந்திருக்கும் என்று பார்த்தால் 65 ரூபாய் என்று வந்தது. நல்ல காலை உணவாக அமைந்தது. பரிமாரியப் பெண் தேவையறிந்து மிகப் பணிவாக பரிமாறினால். அந்த காலை உணவை இன்னும் ஒரு மாதத்திற்கு மாக்க இயலாது. செஞ்சி நோக்கி புறப்பட்டது மகிழுந்து. பள்ளிக் காலத்தில் ஆசிரியர்களின் அறிவினைக் கொண்டு சுற்றிப் பார்த்த இடம், விபரம் தெரிந்து முதல் முறையாக செல்வதால் உண்மையில் ஒரு பேரானந்தம். செஞ்சியில் முதலில் ராணிக் கோட்டையை சுற்றிப் பார்க்க சென்றோம். விரைவாக கோட்டையின் உச்சியைத் தொட்டுவிடலாம். ஆனால் படிகள் ஏறுவதற்குள் நெஞ்சு வெடித்துவிடும். அவ்வளவு செங்குத்தான படிகள். ஆனால் இராஜாக் கோட்டை உச்சியைத் தொட நேரமாகும். பயணம் இனிமையாக இருக்கும் என்று அங்கிருந்த பெண் ஒருவர் சொன்னார். கோட்டைகளில் கூட பெண்கள் யாரையும் நிம்மதியாக விடுவதில்லை. நல்ல நல்ல இடங்கள், பொது மக்கள் அதிகம் வராத சுற்றலாத் தளங்கள் அனைத்திலும் காதலர்களின் வருகையும், சில்மிசங்களும் எல்லையைத் தொடும். சித்தன்னவாசல், செஞ்சிக் கோட்டை, என நான் பார்த்த இடங்கள் அனைத்தும் அதற்கு விதிவிலக்கல்ல. சித்தன்ன வாசலில் அறிய ஓவியங்களுக்கிடையில் ரேவதி ஐ லவ் யு ...ராஜா என எழுதியிருக்கும் காதல் கிறுக்கன்கள் செத்தொழிந்தால்தான் இந்த இடங்கள் எல்லாம் உருப்படும். செஞ்சிக் கோட்டை முழுவதும் காதல் கதிதங்கள்.. வாசகங்கள்.. போதாக் குறைக்கு இலவசப் படம் காட்ட நிஜக் காதலர்கள்...இவர்களை காதலர்கள் என்று எப்படி சொல்ல.. 'காம'கோடிகள். பின்னர் ராஜா கோட்டையை பார்க்க புறப்பட்டோம். மாலை மூன்று மணி வரைதான் இராஜாக் கோட்டையை பார்க்க அனுமதி.. நாங்கள் சென்றது மாலை நான்கு.. எனவே கோட்டை ஏறாமல் மற்ற இடங்களைப் பார்த்துவிட்டு சென்னை நோக்கி புறப்பட்டோம். முதல் குறுந்திரைப் பயணம் வெற்றிகரமாக அமைய காரணமாயிருந்த நண்பர்கள் சிவக்குமார், மகிழுந்து கொடுத்து உதவிய பத்மநாபன், (உண்மையில் மகிழுந்து இல்லையென்றால் பயணம் இத்தகைய சிறப்பாக இருந்திருக்க வாய்ப்பில்லை.) உடன் வந்து உதவிப் புரிந்த விஜயக்குமார், இதயா, சதாசிவம், அனைவர்க்கும் இந்த தமிழ் ஸ்டுடியோ.காம் தன்னுடைய நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது. ------------------------------------------------------------------------------------------------------- காரணம்? அனைத்து தரப்பினரையும் குறும்படங்களின் பயன் சென்று சேரவேண்டும். பொது மக்கள் மத்தியில் குறும்படங்கள் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், என்பவையே இதன் பிரதான நோக்கமாக இருப்பினும், இதில் குறும்படங்களை வணிக அளவில் வெற்றி பெற செய்யும் நோக்கமும் அடங்கியிருக்கிறது. முதலில் பொது மக்களிடம் குறும்படங்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பின்னர் அவர்களே குறும்படங்களை தேடித் பார்க்கும் நிலை ஏற்படும். இதன் விளைவாக அந்தக் கிராமங்களில் உள்ள சிறியத் திரையரங்குகளில் குறும்படங்கள் திரையிடப்பட்டு அந்தக் கிராம மக்களிடம் சிறுத் தொகை வசூல் செய்யப்பட்டு, குறும்பட தயாரிப்பாளருக்கும், திரையரங்க உரியமையாளருக்கும் வழங்கப்படும். இத்திட்டம் எட்டாக்கனியாகவே இருந்தாலும் அதனை பரீட்ச்சார்த்த முறையில் செய்துப் பார்க்க தமிழ் ஸ்டுடியோ.காம் முனைந்துள்ளது. இதன்படி உங்கள் கிராமத்தில் குறும்படங்கள் திரையிட நீங்கள் விரும்பினால் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். 9840698236, 9894422268 குறுந்திரைப் பயணத்தின் முதல் கிராமமாக திண்டிவனத்தில் உள்ள புலியனூரில் எதிர்வரும் சனிக்கிழமை (17-07-2010) குறும்படங்கள் திரையிடப்படுகிறது. புலியனூர் செல்லும் வழி.. திண்டிவனம் --> செஞ்சி பேருந்து நிலையம் --> பேட்டை --> புலியனூர். புலியனூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் குறும்படங்கள் சனிக்கிழமை மாலை ஏழு மணி முதல் இரவு பத்து மணி வரை திரையிடப்படும். ஆர்வலர்கள் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விபரங்களுக்கு |